Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு

27/12/2024

M BROTHORS mall opening ceremony
Varipathanchenai Irakkamam

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நாச்சாரம், பாபுஜி நகர் சரஸ்வதி காலனியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28). இவர் ஹப்சிகுடாவில் உ...
27/12/2024

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நாச்சாரம், பாபுஜி நகர் சரஸ்வதி காலனியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28). இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக வேலை செய்து வந்தார்.



இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டி.ஜி.பி. அலுவலகத்தில் வேலை செய்யும் பொலிஸார் அனில் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.



அனிலின் மனைவி அனிதாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதாராவ் ரூ.15 லட்சம் வாங்கினார்.



கடந்த செப்டம்பர் மாதம் வரை அனிதாவுக்கு வேலை வாங்கி தரவில்லை. சங்கீதா ராவ் தலைமறைவாகி விட்டார்.



இதையடுத்து அனில் அவரது மனைவி அனிதா, அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் தந்தை வாங்கிய பணத்தைக் கேட்டு தீப்திக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.



இதுகுறித்து பொலிஸில் புகார் செய்தனர். மேலும் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அனில் தீப்தியிடம் பணம் கேட்டு தினமும் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.



எனது சாவுக்கு அனில், அவரது மனைவி அனிதா, அவரது தந்தை சோமைய சைதுலு ஆகியோர் தான் காரணம். தினமும் பணத்தைக் கேட்டு எனது வாழ்க்கையை சீரழித்து விட்டனர்.



எனது சாவுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் என தீப்தி கண்ணீர் மல்க செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.



பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக பதிவிட்ட செல்பி வீடியோ காட்சிகளை பொலிஸில் கொடுத்து புகார் செய்தனர்.



பொலிஸார் அனில், அனிதா, அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம் இந்தியாவுடையதா? திருகோணமலையில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் ம...
27/12/2024

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம் இந்தியாவுடையதா?

திருகோணமலையில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் மீனவர்களால் இந்த ஆளில்லா விமானம் இனங்காணப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டு கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானத்தில் "ஷிக்ரா" மற்றும் "டார்கெட்" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் அனாட்ரோன் Anadrone சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இதே போன்ற ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் இந்தியாவின் செயட்பட்டு வருகின்ற நிறுவனம் என்பதோடு குறித்த நிறுவன உற்பத்திக்கு சமமமான ஆளில்லா விமானமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 0032 என்ற அடையாளத்தைக் இந்த விமானம் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது.


அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்புமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் ...
27/12/2024

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிய போதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சடலம் அழுகிய நிலையில், காணப்படுவதுடன் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக சடலத்தினை பார்வையிட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

விமானத்திற்குள் இலங்கையர் உயிரிழப்பு - ஈராக்கில் அவசரமாக தரையிறக்கம்டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்...
27/12/2024

விமானத்திற்குள் இலங்கையர் உயிரிழப்பு - ஈராக்கில் அவசரமாக தரையிறக்கம்

டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த மேற்படி பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன, ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவரது மகனுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.

உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா உதவித்தொகை அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்க...
27/12/2024

அஸ்வெசும திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா உதவித்தொகை

அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும். கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார தாக்கத்தினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுடன் அவதானத்துக்குரிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதற்கமைய அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் பாடசாலை தவணையை முன்னிட்டு பாடசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றுக் கொள்வதற்கு 6000 ரூபா வழங்கப்படும்.

அதேபோல் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்குள் உள்ளடங்காத ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கும் இந்த 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாதனி வழங்குவதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறை இந்த திட்டத்திலும் செயற்படுத்தப்படும். கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கட்டாயம் பகிர்ந்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே காணவில்லை     2024-12-24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெலிமடை   பிரதேசத்துக...
27/12/2024

கட்டாயம் பகிர்ந்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே

காணவில்லை

2024-12-24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெலிமடை பிரதேசத்துக்குற்பட்ட அலுகொள்ள எனும் கிராமதை சேர்ந்த 14 வயது மாணவியினை காணவில்லை.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மேலதிக வகுப்புக்கு சென்று இதுவரைக்கும் வீடு திரும்ப வில்லை இவர் தொடர்பான தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கவும்

0752018113
0779124460
ஏனைய குழுமங்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து இவரை கண்டு பிடிக்க உதவுங்கள்.

🛑இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள தாயும், மகளும்இலங்கையில் இருந்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது மகளும் நாடு கடத்தப்...
26/12/2024

🛑இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள தாயும், மகளும்

இலங்கையில் இருந்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது மகளும் நாடு கடத்தப்படவுள்ளனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதிகள் சிலர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட கைதிகளில் ரஷ்ய பெண் ஒருவரும் அவரது 4 வயது மகளும் அடங்குவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பெண்ணுக்கு களுத்துறை நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலிசர குடிவரவு தடுப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்ட மகளும் பெண்ணும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இரண்டு ரஷ்ய பிரஜைகளும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று சம்மாந்துறை பொலிஸாரினால்  முற்றுகை; ஒருவர் கைது!சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் Thu, Dec 26...
26/12/2024

கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகை; ஒருவர் கைது!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Thu, Dec 26 - 2024

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, தம்பிநாயக புரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு பின்னால் காணப்படும் வயல் வெளியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று புதன்கிழமை (25) அதிகாலை 02.15 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தையும், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 8,750 மில்லி லிட்டர் கசிப்பு, 30,000 மில்லி லிட்டர் கோடா, கேஸ் சிலிண்டர் 1, கேஸ் அடுப்பு 1, 20 லீட்டர் கொள்கலன் 2, டங்கர் 1, இரும்பு பரள் 1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன. சுமார் ரூபாய் ஒரு லட்சத்திற்கு அதிக பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் அசோக்க, சார்ஜன் அனுர, பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, மதுசான் ஆகிய குழுவினரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வும் குருதிக்கொடையும் !நூருல் ஹுதா உமர் சமூக நல...
26/12/2024

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வும் குருதிக்கொடையும் !

நூருல் ஹுதா உமர்

சமூக நல விடயங்களில், மனிதாபிமான ரீதியாக சிறப்பாக இயங்கும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சுனாமி அனர்த்த தினத்தின் இருபதாவது நினைவு முன்னிட்டு ஏற்பாடு செய்த சுனாமி நினைவு தின நிகழ்வும், குருதிக்கொடையும் இன்று (26) வியாழக்கிழமை மாளிகைக்காடு மத்தி தோணா வீதியில் அமைந்துள்ள ஜனாஸா நலன்புரி அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற்றது.

சுனாமியில் மரணித்த ஸுஹதாக்களை நினைவு கூர்ந்து நடைபெறும் இந்த இரத்த தான முகாமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

இந்த இருபதாவது சுனாமி நினைவு தின குர்ஆன் தமாம், துஆ பிரார்த்தனை, விசேட சொற்பொழிவு, குருதிக்கொடை நிகழ்வில் உலமாக்கள், காரைதீவு பிரதேச செயலக அரச அதிகாரிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

*සුනාමියට අදට වසර 20* 2004 වසරේදී හම්බන්තොට දී සුනාමි රළ පහරට හසුවූ අම්පාර 35 මාතර Leedway Travels බස් රථය.....සුනාමියට ...
26/12/2024

*සුනාමියට අදට වසර 20*

2004 වසරේදී හම්බන්තොට දී සුනාමි රළ පහරට හසුවූ
අම්පාර 35 මාතර Leedway Travels බස් රථය.....

සුනාමියට හසුවූ බස් රථයේ සිටි මගීන් 40 දෙනෙකු පමණ (හිමිකරුද ඇතුළුව) ජීවිතක්ෂයට පත්වී ඇති අතර රියදුරා දිවි බේරා ගෙන ඇත.

GZ - 6371

උපුටාගැනීම අන්තර්ජාලයෙන්

සජීවී පුවත් වාර්තාකරණයේ පුරෝගාමී TodayCeylon වෙනුවෙන්

බංඩාර බැමිණිවත්ත

       எதிர்வரும் புது வருடத்தினை முன்னிட்டு M.BROTHER'S தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய கிளை ஒன்றினைM BROTHERS...
26/12/2024




எதிர்வரும் புது வருடத்தினை முன்னிட்டு M.BROTHER'S தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய கிளை ஒன்றினைM BROTHERS MALL என்ற புதிய பரிணாமத்துடன் நாளைய தினம் (2024-12-27) வெகு விமர்சியாக திறந்து வைக்கப்பட உள்ளது.

எனவே தனது வாடிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றார்கள் M BROTHERS நிறுவனத்தினர்.

*නත්තල් සැමරුම වෙනුවෙන් දිගාමඩුල්ල " අමරැස් කලා සංසදය විසින් ඉදිරිපත් කල ප්‍රසාංගික මියැසිය "නත්තල් සැමරුම වෙනුවෙන් දිගා...
26/12/2024

*නත්තල් සැමරුම වෙනුවෙන් දිගාමඩුල්ල " අමරැස් කලා සංසදය විසින් ඉදිරිපත් කල ප්‍රසාංගික මියැසිය "
නත්තල් සැමරුම වෙනුවෙන් දිගාමඩුල්ල අමරැස් කලා සංසදය විසින් අද දින අම්පාර නගර මධ්‍යයයේ ඉදිරිපත් කල සංගීත වැඩසටහන ඉතා වින්දනීය ලෙසත් ප්‍රසාංගික ලෙසත් පැවති අතර මේ සදහා එම සංසදයේ සියලුම සමාජික සාමාජිකාවන් තම තමන්ගේ දක්ෂතා ඉදිරිපත් කිරීම කැපී පෙනුනි.

ඒ වගේම මෙහිදී සංගීතය සපයනු ලැබුවේ අමරැස් කලා සංසදයේ සමාජිකයන්ගෙන් සැදුම් ලත් දක්ෂ වාද්‍ය වෘන්දයක් වීමද කැපී පෙනෙන අංගයක් විය.

ඒ වගේම දෙරණ 60 + වැඩසටහනේ ගීත ගායනා කල ආදරණීය ගායන ශිල්පිනියක් වන ශිරාණි රණසිංහ මහත්මියගේ සංකල්පයකට අනුව කලා හැකියාව ඇති අය හට යම් අවස්ථාවක් ලබා දීමේ පරම පිවිතුරු අරමුණ ඇතිව මෙම අමරැස් කලා සංසදය ආරම්භ කර ඇත.

තවත් විශේෂ කරුණක් නම් මෙම අමරැස් කලා සංසදයේ වාදක කණ්ඩායමේ තබ්ලාව වාදනය කරන ශිල්පියාගේ දෙඇස් නොපෙනීමයි.එය තම කලා හැකියාවට කිසිම බාධාවක් නොවන බව සියලුම දෙනාට පසක් වූ කරුණකි.

තවදුරටත් අමරැස් කලා සංසදයේ සාමාජිකත්වය ලබා ගැනීමට කැමති ඔබ හට ඒ සදහා අවස්ථාව ලබා දිය හැකි බව අමරැස් කලා සංසදය පවසයි. ඔ සදහා මෙම අංකය ට +94 71 775 5616 ඇමතීමෙන් වැඩි විස්තර දැන ගැනීමට හැක.

අද දින මෙම කාර්ය සාර්ථක කර ගැනීම සදහා ප්‍රදේශයේ පොලිස්. අධ්‍යාපන.සෞඛ්‍ය වැනි අංශ වල විශේෂ ආරාධිතයන්කිහිප දෙනෙකු සහභාගී විය. ඒ අතර විශ්‍රාමික පොලිස් අධිකාරි ජයන්ත රත්නායක මැතිතුමාද විය.

දවස පුරාම පැවති මෙම වින්දනීය වැඩසටහන ඉතාම සාර්ථකව නිමාවට පත්වූ බව වාර්තා කරමි.

සජීවී පුවත් වාර්තාකරණයේ පුරෝගාමී TodayCeylon වෙනුවෙන්

බංඩාර බැමිණිවත්ත

25/12/2024

கிழை திறப்பு விழா நேரலை

✅ & ..!

⭕️ On, December 25, 2024

🌐Varipathanchenai

நினைவிருக்கின்றதா ?அழகாக இருந்த இடங்களை அலங்கோலப்படுத்திய 20 விருடப் பூர்த்தி 2024.12.26.
25/12/2024

நினைவிருக்கின்றதா ?

அழகாக இருந்த இடங்களை
அலங்கோலப்படுத்திய 20 விருடப் பூர்த்தி 2024.12.26.

அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஸ்யாவின் குரொஸ்னி நகருக்கு பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் நா...
25/12/2024

அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவிலிருந்து ரஸ்யாவின் குரொஸ்னி நகருக்கு பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் கஜகஸ்தானில் நாட்டில் விபத்துக்குள்ளானது, அதில் 72 பேர் இருந்தனர்.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் இயக்கும் இந்த விமானம், கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனமான டெங்கிரிநியூஸ் தெரிவித்துள்ளது.

விமானத்தில் 67 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

விமானம் முதலில் க்ரோஸ்னியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் மகச்ச்கலாவிற்கும் பின்னர் அக்தாவ்விற்கும் திருப்பி விடப்பட்டது என்று க்ரோஸ்னி விமான நிலைய பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் எம்ப்ரேயர் E190AR என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கு முன், விமானம் அக்தாவ் விமான நிலையத்தின் மீது வட்டமிட்டு அவசரமாக தரையிறங்கக் கோரியது.

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் மட்டுமே எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய வானிலை 2024.12.25நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல்,  தென், ஊவா மற்...
25/12/2024

இன்றைய வானிலை
2024.12.25

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்
***************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

பேருவலை தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான அத்துடன் முல்லைத்தீவு தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.

24/12/2024

ஒரு மாகாணத்தில் மாத்திரம் 7,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். 0 Dsa December 24, 2024  இலங்கையின் தென் மாகாணத்தில் சுமார் 7,00...

Address

294/A Ampara Road Irakkamam
Ampara
32450

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Videos

Share