Rks தமிழ்

Rks தமிழ் செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!(எஸ். சினீஸ் கான்)...
23/12/2024

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் இன்று (23) கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி நகர சபை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார், திட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம். திலகரத்னே, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏனைய அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எஸ்.எம். அஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தனர்.

முதல் கட்டமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்...
20/12/2024

கடற்றொழிலுக்கு சென்று தமிழ் நாட்டில் கரையொதுங்கிய வட கிழக்கு மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகரிடம் கோரிக்கை!

கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை கப்பலடி மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக இயந்திர படகில் கடலுக்கு சென்ற மீனவர்களும் பருத்தித்துறை மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 05 மீனவர்களும் தமிழ் நாட்டில் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி கரையொதுங்கினர்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.ஆர்.நிஸ்பர் என்பவர் காணாமல் போயுள்ளார். இம்மீனவர்களில் அட்டாளைச்சேனையிலிருந்து சென்ற இர்பான் எனும் மீனவர் சென்னை உயர்ஸ்தானிகத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை மீனவர் துறையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 05 மீனவர்களான அட்டாளைச்சேனை சேர்ந்த எம்.எப்.முஸ்தகீன், வடமாகாணத்தை சேர்ந்த என்.குனபாலசிங்கம், ஏ.இராதாகிருஸ்னன்
, எம்.பிரமசிறி ஆகியோர் சென்ற ஜுலை மாதம் 07ம் திகதி தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் கரையொதுங்கி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 05 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினனர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

ஶ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் நானும் திரு டக்லஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருந்த போது அவர்களை சந்தித்து வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 05 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருமாறு வேண்கோள் விடுத்தோம். சின்ன பாலமுனையை சேர்ந்த இர்பான் என்ற மீனவர் மாத்திரம் சென்னை உயர்ஸ்தானிகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 04 மீனவர்கள் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மீனவர்கள் 05 பேரையும் தமது நாட்டிற்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உல்லே, திருக்கோவில், ஒலுவில்,
அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்தன. இவ்வள்ளங்கள், இயந்திரங்களுக்கான நஷ்டயீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கடந்த 06 மாத காலமாக கடற்றொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 05 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
அம்பாறை மாவட்ட மீனவர்களினது படகுகள், இயந்திரங்கள் தொடர்பாக கல்முனை கடற்றொழில் பணிப்பாளரின் அறிக்கை கிடைத்ததும் நஷ்டயீடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும்.-அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் MLAM ஹிஸ்புல...
19/12/2024

அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும்.

-அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் MLAM ஹிஸ்புல்லாஹ்-

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முழக்கம் அப்துல் மஜீட் அவர்களுடைய மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

அவரின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியிலே மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களோடு இனைந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் கட்சியின் ஒவ்வொரு தேர்தல்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் , மாகாண சபை உறுப்பினர்களை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் சென்று தனது கம்பீர குரலிலே முழங்கி கட்சியின் கொள்கைகளை விளக்கி , கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர் இதனால் தான் அவருக்கு முழக்கம் மஜீத் என்ற பட்டத்தையும் மறைந்த தலைவர் அஷ்ரப் சேர் வழங்கியிருந்தார்கள்.

தற்போதைய கட்சியின் தலைவர் சட்ட முதுமாணி ரஊப் ஹக்கீம் அவர்களோடும் விசுவாசமாக கட்சியின் வளர்ச்சிக்காக அன்று தொடக்கம் இறுதி மூச்சுவரைக்கும் பாடுபட்டார்கள்.
எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக வாழ்ந்தவர். அவரின் இழப்பு முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கும் , கட்சியின் போராளிகளுக்கும் பேரிழப்பாகும்.

அவரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்பதோடு அவரின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்திற்கு அல்லாஹ் மன அமைதியினையும் பொறுமையினையும் வழங்குவானாக ! மேலும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9 மணிக்கு கல்முனையில் இடம் பெறவுள்ளது. முடியுமானவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்தயாசீன் பாவா நிஸார் அவர்கள்தேசிய கணக்காய்வு அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.வாழ்த்துக்கள்.
18/12/2024

அக்கரைப்பற்றைச் சேர்ந்த
யாசீன் பாவா நிஸார் அவர்கள்
தேசிய கணக்காய்வு அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வாழ்த்துக்கள்.

தில்லை ஆறு -  சம்புக்களப்பை  ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்...
15/12/2024

தில்லை ஆறு - சம்புக்களப்பை ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை.

கே எ ஹமீட்

கல்லோயா திட்டத்தினால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடி வேம்பு , திருக்கோவில், பிரதேசங்களில் அமைந்துள்ள 8500 ஏக்கர் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளம் ஏற்படும் எல்லாக்
காலங்களிலும் மேற்படி பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக வங்கித் திட்டத்தில் தில்லை ஆறு - சம்புக் களப்பை ஆழமாக்கி அகலமாக்க 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எனவே இவ் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், விவசாய அமைப்புகள் எல்லோரும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளனர். எனவே இப்பிரதேச மக்களின் நன்மை கருதி விரைவாக இவ் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டதில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடமும் ,இவ் வருடமும் ஏற்பட்ட வெள்ளத்தினால் விவசாயிகளுக்கு தொடர்ந்து பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளம் ஓடுவதற்கு தடையாக இருக்கும் அணைக்கட்டுக்கள், பிரதான வாய்க்கால்கள் புனரமைக்கபடவேண்டும் எனவும்
சம்மாந்துறை தொப்பியங்கொட (RB Bund) புனரமைக்கப்படாமல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தீகவாபி - களியோடை வீதி ,தீகவாபி - பாலமுனை வீதிகளுக்கு 250 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைப்பு செய்யும் செயற்பாடுகள் பிரயோசனமற்றதாக மாறிவிடும்.

எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு எதிர் காலத்தில் நிரந்தர தீர்வுகளுக்கு திட்டமிட்டு செயற்படவேண்டும். இல்லையென்றால் அரசின் பெருந்தொகையான பணம் வருடா வருடம் வீண் விரயம் செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதேவேளை பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள துவ்வை ஆறு அணைக்கட்டு ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சேதமடைவதால் பசறிச்சேனை கிராமமே வெள்ளத்தில் மூழ்குவதுடன் அப் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பொத்துவில் துவ்வை ஆறு அணைக்கட்டை விசேட அபிவிருத்தி திட்டத்தில் சேர்த்து புனரமைக்க வேண்டும்.

இதே வேளை ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களின் ஆயிரக்கணக்கான விவசாய காணிகளுக்கும் நீர்ப்பாசனம் கிடைக்கும். எனவே ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் நிதி இல்லையென்றால் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான ஏற்பாடுகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

இவ் வருடம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 300 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பிய விடயம் மிகவும் கவலைக்குரியதாகும்.

கல்முனை, சம்மாந்துறை ,அக்கரைப்பற்று கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 11 பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக அப் பாடசாலைகளின் அதிபர்கள் ,அபிவிருத்திச் சங்க குழுக்கள் என்னை சந்தித்து இவ்விடயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடமும் நிதிப் பற்றாக்குறை நிலவும் இக் காலகட்டத்தில் மத்திய அரசினால் பாடசாலை அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டமை கவலைக்குரிய விடயமாகவும்.

எனவே அடுத்த வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் போது இப்பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை மக்களுக்கு கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் நிதி உதவி(எஸ்.எம்.அறூ...
15/12/2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை மக்களுக்கு கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் நிதி உதவி

(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ள அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் 85 பேருக்கு கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் சுமார் 42 இலட்சம் ரூபா நிதி நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வழிகாட்டலில் கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட நிதித் தொகையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனைக் கிளையின் ஒருங்கிணைப்பிலும் அதன் தலைவர் யூ.எல்.நியாஸி தலைமையிலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எல்.எம்.லமீர் ஹாபீழ் (அல் -ஹாஸிமி) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். ஹனீஸ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனைக் கிளையின் செயலாளர் நஸீர்,கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் அல் -ஹாஜ் ஏ.எச்.எம்.நஸார், பொருளாளர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.இஸாம் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபா வீதம் பணத்தினை நிகழ்வில் கலந்து கொழும்பு பெட்டா பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனைக் கிளையின் முக்கியஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்..

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு : பிரதம அதிதியாக MLAM ஹிஸ்புல்லாஹ் எம்.பி...!!!(எஸ். சினீஸ் கான்)...
14/12/2024

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு : பிரதம அதிதியாக MLAM ஹிஸ்புல்லாஹ் எம்.பி...!!!

(எஸ். சினீஸ் கான்)

காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு நேற்று (13) நடைபெற்றது.

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் பொறியியலாளர் சப்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மொஹமட் சாலி நழீம் - சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்ஸ்ரீ லங்கா முஸ்லிம்...
03/12/2024

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மொஹமட் சாலி நழீம்

- சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நழீம் சபாநாயகர் முன்னிலையில் இன்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அதுவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நழீமின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.

அதற்கமைய அவர் இன்று பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்கு முன்னர் இவர் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு தலைவர் ரிஷாட், தாஹிம் எம்.பி விஜயம்…!மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நி...
03/12/2024

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு தலைவர் ரிஷாட், தாஹிம் எம்.பி விஜயம்…!

மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அன்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கங்களை நிர்வாகத்தினர் மற்றும் உஷ்தாத்மார்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

“சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் - ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து!(எஸ். சினீஸ் கான்)கல்வி அமை...
02/12/2024

“சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூருக்கு தேசியமட்ட பதக்கம் - ரிஷாட், தாஹிர் எம்.பி வாழ்த்து!

(எஸ். சினீஸ் கான்)

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி நிகழ்ச்சியில் நித்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முஹம்மட் ஹரிஸ் முஹம்மட் ஹின்சான், நிஹால் அஹமட் சிப்னி அஹமட் ஆகியோர் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சியில் பங்குபற்றி முறையே வெண்கலப்பதக்கம், திறமைச் சன்றிதழைப் பெற்றிருந்தனர்.

இதனை பாராட்டி கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிஷாட் பதியுடீன் அவர்களின் அம்பாறை விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாணவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) நிந்தவூரில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹ்மத் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர்களுக்கும், நிந்தவூர் மண் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்படும் ''சாய்ந்தமருது ஜ...
29/11/2024

மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்படும் ''சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை"யின் சகோதரர்களில் அஸ்வர் அப்துல் சலாம் மிக முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முதலை ஆபத்தினை எடுத்து கூறிய போதிலும் அவர் கூறிய வார்த்தை " என்னைப் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் முன்னிருத்தி செயற்படுகிறேன், நான் இந்த பணியில் மரணித்தாலும் பரவாயில்லை இறை திருப்தியுடன் செல்கின்றேன்" என்று கூறி விட்டு ஜனாஸாக்களை நீரில் தேடி மீட்கும் பணிக்கு புறப்பட்டு இதுவரை ஏழு ஜனாஸாக்களை இவரின் குழுவினரின் ஒத்துழைப்புடன் இவர் மீட்டெடுத்து உள்ளார்.

களத்தில் கடந்த மூன்று நாட்களாக குழுவினரை தலைமை தாங்கி மீட்பு பணியில் அரும்பாடு பட்ட ஒருவர்..

இன்னும் ஒரு மத்ரஸா மாணவனின் ஜனாஸா மீட்கப்பட வேண்டியுள்ளது.

இன்று (29) சுபஹ் தொழுகையின் பின்னர் குறித்த ஜனாஸாவை தேடும் முயற்சியில் இவரும் இவரின் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சகோதரர் அஸ்வரினதும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சகோதரர்களினதும் இந்த நல்ல காரியத்தை பொருந்தி கொள்ளட்டும்....

கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில் நீர்நிலைகளிலிருந...
29/11/2024

கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.

இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில் நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு நீர் ஆவியாகும் என பாருங்கள்.

இதை கட்டுப்படுத்த இரண்டு மூன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம் தாமரையை நீரிலிருந்து அகற்றுவது வழக்கம். அதே நேரத்தில் AG11 எனும் அங்கக திரவத்தை தாமரையின் மீது தெளித்தால் 10-15 நாட்களில் செடிகள் காய்ந்துவிடும். அதன்பிறகு அதை எடுப்பது எளிது.

நீரிலிருந்து வெளியே எடுத்த தாமரைச்செடிகளின் தண்டு பகுதிகள் பச்சையாக இருக்கும். அதன்மீது மீண்டும் ஒருமுறை AG11. திரவம் தெளித்து காய வைக்க வேண்டும். பிறகு அவைகளை திட்டு திட்டாக அடுக்கி வைத்து மண்புழுக்களை விட்டு மண்புழு உரமாக மாற்ற வேண்டும். அது பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உரமாக மாறும்.

பிறகு அந்த நீர்நிலைகளில் நுவால்கி நுண்ணூட்ட திரவத்தை தெளித்தால் ஆகாயத்தாமரைச் செடிகள் வளராது. மாறாக டை ஆட்டம் (Diatom) எனும் கண்ணுக்கு தெரியா பாசிகளை வளர்க்கும். அது மீனுக்கு உணவாகும்.

நீர்நிலைகளில் எவ்வளவு கழிவுநீர் உள்ளே வந்தாலும் வருடத்திற்கு நான்கு முறை நுவால்கி திரவத்தை தெளித்தால் நீர்நிலைகளில் தாமரை வளராது. நீர்நிலைகளும் சுத்த மாக்கப்படும்.

அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்கான கள விஜயம்.மருதமுனை பிரதேசத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்...
27/11/2024

அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்கான கள விஜயம்.

மருதமுனை பிரதேசத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலமைகளை அறிந்து கொள்வதற்காக கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (27) மேற் கொண்டிருந்தார்.

இதன்போது மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தமையினால் இடைத்தங்கள் முகாம்களில் தங்கி இருந்த மக்களை நேரடியாக பார்வையிட்டு கிராம சேவகர்கள் ஊடாக முறையான பதிவுகளை மேற்கோண்டு அவர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கண்கானித்ததுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.

அனர்த்தப் பணி ; களத்தில் தாஹிர் எம்.பி..!(எஸ். சினீஸ் கான்)ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள பாலம் வெள்ள நீரினால் ப...
27/11/2024

அனர்த்தப் பணி ; களத்தில் தாஹிர் எம்.பி..!

(எஸ். சினீஸ் கான்)

ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி உடைந்த சம்பவமொன்று நேற்று நள்ளிரவு இடம்பெற்றிருந்தது.

குறித்த வீதியின் பொதுப்போக்குவரத்து தடைப்பட்டிருப்பதனால் மாற்றீடாக தற்காலிக பாலம் அமைப்பது தொடர்பாகவும், அத்தியாவசிய பணியாளர்கள் பயணிப்பதற்காக தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார்.

நேற்று கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய சீரற்ற வாநிலையினால் அதிகம் பாதிப்புற்ற இடங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக உரிய அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

தாஹிர் எம்.பி யின் குழுவினர் களத்தில்..!நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டு...
26/11/2024

தாஹிர் எம்.பி யின் குழுவினர் களத்தில்..!

நிந்தவூர் பிரதேசத்தில் மழை நீர் வடிந்தோடச் செய்யும் பணிகள் துரிதப்படுத்துப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேசத்தில் நீர் வடிந்தோட முடியாமல் அடைப்பட்டு கிடந்த வடிகான்களை துப்பரவு செய்யும் பணி இன்று காலையிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த நடவடிக்கைள் நிந்தவூர் பிரதேச சபையின் JCB இயந்திரம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுடைய ஆளணியினரின் உதவியுடனும் அவரது பிரதிநிதிகள் குழுவினரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உருவாகும் அழிவைஏற்படுத்த வல்லபேராபத்து. அவதானமாக இருப்போம்......இன்று (23.11.2024) அதிகால...
23/11/2024

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உருவாகும் அழிவைஏற்படுத்த
வல்லபேராபத்து. அவதானமாக இருப்போம்......

இன்று (23.11.2024) அதிகாலை 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு.

நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இது எதிர்வரும் 24.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் 25.11.2024 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். இது 26.11.2024 அன்று புயலாக ( மிதமான வலுக்கொண்ட புயலாக) மாற்றமடையும்.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இது கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்வரும் 26.11.2024 க்கு பின்னரே கணிக்கலாம். தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி - கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் எதிர்வரும் 25ம் திகதி இரவு அல்லது 26ம் திகதி கிழக்கு கடற்பகுதி க்கு(அம்பாறைக்கு அண்மித்து) பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 24.11.2024 முதல் தீவிரமடையும். குறிப்பாக எதிர்வரும் 25.11.2024 முதல் 28.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரையான 48 மணி நேரத்தில் 350 மி.மீ. இனை விட உயர்வான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

25.11.2024 முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். 26,27 மற்றும் 28ம் திகதிகளில் காற்றின் வேகம் கடற்பகுதிகளில் 70 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரை வீசக் கூடும். உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேற் குறிப்பிட்ட கடற் பகுதிகளில் பல நாட் கலங்களில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரை திரும்புவது அவசியம்.

பொதுவாக சாதாரண சந்தர்ப்பங்களில் அதிக கனமழை கிடைத்தாலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் புயல் போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும் கன மழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில்;

1. கரையோரப் பகுதிகளில் புயல் காற்று காரணமாக உயர்வான அலைகளின் விளைவால் நிலப்பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும்.
2. புயலின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நிலப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீர் வடிந்து கடலை சென்றடையாது.
3. வேகமான காற்றோடு கூடிய மழை என்பதனால் மழையின் பாதிப்பு உயர்வாக இருக்கும்.
4. நிலம் ஏலவே நிரம்பியுள்ளமையால் மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு 10. மி.மீ. உம் நிலத்தின் மேலேயே தேங்கி நிற்கும்.
மேற் குறிப்பிட்ட காரணிகள் காரணமாக எதிர்வு கூறப்பட்டுள்ள புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே.....

இந்த புயல் தொடர்பான முன்னறிவிப்பினை சாதரணமாக கருத வேண்டாம்.

இந்த நிமிடம் வரை சகல மாதிரிகளும்(கிட்டத்தட்ட 19 மாதிரிகள்) இந்த புயல் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழை வீழ்ச்சியையும், வேகமான காற்றையும், அதீத கடற் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றே வெளிப்படுத்துகின்றன.

ஆகவே ஒரு புயலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். ஒரு அனர்த்தத்துக்காக எம்மை தயார்ப்படுத்தி அந்த அனர்த்தம் நிகழாது விட்டால், அதனால் எமக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் நாம் தயாராக இல்லாமல் அனர்த்தம் ஒன்று நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மோசமானதாக இருக்கும். ஆகவே எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம்.

வடக்கு ,கிழக்கு தென் மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல் அவசியம்.

எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக உயரம் கொண்ட கடலலைகள் காரணமாக கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உள்வருகை தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மற்றும் காலி மாவட்ட கரையோர மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

கனமழை காரணமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என்ற விடயத்தை அனைத்து மக்களுக்கும் அறிவித்தல் வேண்டும். குறிப்பாக 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக விழிப்போடு இருத்தல் அவசியம்.

மிக வேகமான காற்றினால் பாதிக்கக்கூடிய மரங்கள், கட்டிடங்கள் என்பன போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.

-நாகமுத்து பிரதீபராஜா-

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் - அஷ்ரப் தாஹிர் MP10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிப...
22/11/2024

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் - அஷ்ரப் தாஹிர் MP

10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அரச கொள்கை பிரகடன உரையில் நாட்டினுடைய அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையினை இல்லாதொழிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு திட்டங்களை முன்வைத்ததுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவினையும் வேண்டியிருந்தார். எனவே நாட்டினை கட்டியெழுப்பும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக் தயார் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

தனது முதலாவது பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்துவிட்டு நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தமைக்காக கட்சியின் தலைமை, கட்சி மத்திய குழு, மாவட்ட மத்திய குழு, சக வேட்பாளர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிப்பதுடன் கடந்த காலங்களிலும் நீங்கள் வழங்கிய பதவிகளை நியாயமாக நேர்மையாக செய்தவன் என்ற வகையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் நேர்மையாகவும் நியாயமாகவும் மக்கள் விரும்புகின்ற வகையில் செயற்படுவதுன் அபிவிருத்தி மற்றும் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், கட்சியின் வளர்ச்சியின் அதிக கவனம் செலுத்துவதுடன் கட்சியின் வளர்ச்சிக்கும் முழுமையாக பங்காற்ற இருப்பதாகவும் திகாமடுல்ல மாவட்டத்தின் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை இரண்டாக அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, ...
09/11/2024

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

182/3 2/3 Common Road Akkaraipattu/16
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rks தமிழ்:

Share