GREEN Tv Media Channel

GREEN Tv Media Channel தனித்துவமான சுதந்திரமான ஊடகம் - Like & share our GREEN Tv page

பொங்கல் கொண்டாட்டம் அணிதிரளும் மக்கள் கூட்டம்.தம்பிலுவில் மத்திய சந்தை.
13/01/2025

பொங்கல் கொண்டாட்டம் அணிதிரளும் மக்கள் கூட்டம்.
தம்பிலுவில் மத்திய சந்தை.

13/01/2025

காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வெள்ள அபாயம்

( முஹம்மத் மர்ஷாத் )

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் மழை அதிகரித்த போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் சாத்தியம் காணப்படுகின்றது. இந்த இடத்தில் கடந்த வருடம் வெள்ளநீர் அதிகரித்ததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுனர்.

இக்காலப்பகுதியில் காரைதீவு தொடக்கம் மாவடிப்பள்ளி புதிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் கடந்த காலங்களில் அவலங்களை எதிர் கொண்டதுடன் மரணங்களும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமன்றி பாம்பு, முதலை,ஆமை போன்ற ஆபத்தான உயிரினங்களின் தொல்லைகளாலும் மக்கள் அல்லல் படுவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மழை அதிகரிக்கின்ற போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.

13/01/2025

🔴: BROADCASTING...
68 ஆவது சஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்த பாராயணமும், பயான் நிகழ்வும்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக...

Ash Sheik : - எஸ்.அப்துல் ஹாதி ( நழீமி )

Day : - 1️⃣1️⃣

தலைப்பு : - மரணசாசனம் ( வஸிய்யத் ) கூறல்

#அதிகம்_பகிருங்கள்.

Hot News.ஒலுவில் ஆத்தியடிக்கட்டில் நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது..இப்போது களத்தில் அங்கு ...
13/01/2025

Hot News.
ஒலுவில் ஆத்தியடிக்கட்டில் நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என அறிய முடிகிறது..

இப்போது களத்தில் அங்கு நான்..

விபரங்களை விரைவில் தருகிறேன்..

Sulaiman Raafi - Dip.in.Jour (SEUSL)
13.01.2025 | 2.50pm

12/01/2025

🔴: BROADCASTING...
68 ஆவது சஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்த பாராயணமும், பயான் நிகழ்வும்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக...

Ash Sheik : - என்.ரி.சர்ஜுன் ( றஹ்மானி )

Day : - 10

தலைப்பு : - அடமானம் வைத்தல் , அன்பளிப்பு வழங்கல் , சாட்சிகள் வைத்து உடன்படிக்கை செய்தல் , பிணக்குகளை தீர்த்தல் போன்றவற்றின் சட்டங்களும் சிறப்புகளும்.

#அதிகம்_பகிருங்கள்.

 #சர்வதேசசெய்திகள் | கலிஃபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ.. பலி எண்ணிக்கை உயர்வுGREEN Tv Media Ch...
12/01/2025

#சர்வதேசசெய்திகள் | கலிஃபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ.. பலி எண்ணிக்கை உயர்வு

GREEN Tv Media Channel | |

12/01/2025

#இது_காஸா_அல்ல_அமெரிக்கா

■எரிந்தது சுமார் 2000 ஏக்கர்
■18,800 வீடுகள் முற்றாக நாசம்,
■ 57 பில்லியன் டாலர் இழப்பு ,
■ 17,000 ஏக்கருக்கும் மேலான பிரதேசம் சாம்பல் படலத்தால் மூடப்பட்டுள்ளது.
■அநேக ஹாலிவூட் நடிகர்களின் வீடுகளும், மற்றும் பைடனின் மகன் அன்டன் பைடனின் வீடும் கமலா ஹாரிசின் வீடும் எரிந்து சாம்பலாகியது.
■ தீயினால் ஏற்படும் சேதத்துக்கான காப்புறுதி மறுக்கப்பட்டுள்ளது.

தீயின் எதிரி தண்ணீர். அதுவும் பனிக்கட்டி என்றால் ஜென்ம விரோதம்.ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. மேற்கில் பனிப்பொழியும் ...
11/01/2025

தீயின் எதிரி தண்ணீர். அதுவும் பனிக்கட்டி என்றால் ஜென்ம விரோதம்.

ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. மேற்கில் பனிப்பொழியும் சூறாவளியால் மக்கள் அல்லோலகல்லோலம். நகரங்கள் முடக்கம். அதன் கிழக்குப் பிரதேசத்தில் தீக்காற்று ஊரையே எரித்துக் கொண்டிருக்கிறது.

நன்றி : - களம் TV

11/01/2025

🔴: BROADCASTING...
68 ஆவது சஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்த பாராயணமும், பயான் நிகழ்வும்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக...

Ash Sheik : - எஸ்.எம்.அபுல் காசிம் (அஸ்ஹரி)

தலைப்பு : - கடன் வழங்குதல் , அதனை நிறைவேற்றுதல் , மற்றும் கண்டெடுக்கபட்ட , அனியாயமாக அபகரிக்கப்பட்ட பொருட்களின் சட்ட திட்டங்களும்.

#அதிகம்_பகிருங்கள்.

ஒரு சமூகத்தின் இருப்பும் எழுச்சியும் அதன் கல்வியிலேயே தங்கியுள்ளன. சிதறிய சிறுபான்மையாக சிதறுண்டு வாழும் இலங்கை முஸ்லிம்...
11/01/2025

ஒரு சமூகத்தின் இருப்பும் எழுச்சியும் அதன் கல்வியிலேயே தங்கியுள்ளன. சிதறிய சிறுபான்மையாக சிதறுண்டு வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அதன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியை மேற்கொள்வது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
அதுவும் ஒரே பல்கலைக்கழகத்தில் வித்தியாசமான துறைகளில் ஒரே ஆண்டில் தமது கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்ட இந்த மாணவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது மாத்திரமன்றி இவர்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் மிகப்பெரும் அறிவுச்சொத்தாக விளங்குகின்றார்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்கள் அனைவரையும் மனமார வாழ்த்துவதோடு இவர்களது சேவை நாட்டுக்கும் சமூகத்துக்கும் நாடு கடந்தும் அவசியப்படுகின்றது என்பதை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

இவர்கள் அனைவரது வளர்ச்சியிலும் பங்காற்றிய பெற்றார்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள், தோழர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நிறைவான கூலியை வழங்குவானாக!

இறுதியாக, ஒரு நிமிடம் ...

இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்பாக எதிர்கொள்கின்ற மிக முக்கிய சவால் "துறைசார்ந்த மனித வளப் பற்றாக்குறை" ஆகும். இன்றைய உலகம் துறைபோகக் கற்ற கல்விமான்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் தேவையை வேண்டி நிற்கின்றது. மார்க்க துறையில் மாத்திரமன்றி பொருளாதாரம், சமூகம், குடும்பம், அரசியல், தொழிநுட்பம் என மனித வாழ்வுடன் தொடர்புடைய எல்லா துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற மனித ஆளுமைகள் தேவைப்படுகின்றனர்.
முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் தலைமை சிந்திக்க வேண்டிய முக்கிய புள்ளி இதுவாகும். சீனப் பெருஞ்சுவரை கட்டி எதிரிகளிடமிருந்து தம் நாட்டைக் காக்கலாம் என்று கனவு கண்ட மக்கள் அதன் வாயிற்காவலனை தேசப்பற்று மிக்க, நேர்மையான ஆளுமையாக, மாவீரனாக உருவாக்க மறந்துவிட்டார்கள். தொடர்ந்தும் சீனா வரலாற்றில் எதிரிகளால் தாக்கப்பட்டது. பௌதிக பலம், வளம் அனைத்திலும் உயர்ந்த வளம் மனித வளம் அதனை முகாமை செய்வது இன்றியமையாததாகும்.

நபியவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் செய்த சமூக மாற்றத்தின் மையப்புள்ளி சிறந்த ஆளுமைப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்கியமையாகும். இதுவே சமூக மாற்றத்தின் முக்கிய துரும்பாகும். இன்றைய இளைஞர்களே நாளைய ஆளுமைகள். அறிவே எமது பலம். மனித வளத்தை மிகச்சரியாக இனம் கண்டு, வளப்படுத்தி, தரப்படுத்தி நாடும் சமூகமும் பயன்பெற வழி செய்வோம். அவ்வாறு உருவான எமது வளங்களை நாட்டில் தக்க வைத்துக்கொள்ளவும் சமூகப் பணிகளில் பயன்படுத்தவும் நாம் தயாரா?

இத்தகைய அறிவாளுமைகளை உருவாக்குவதற்கான எத்தகைய செயற்திட்டங்களை நாம் வைத்திருக்கின்றோம்?

எமது பொருளாதார வளங்களில் எத்தனை வீதத்தை மனித வளங்களை முகாமை செய்யவும் வழிப்படுத்தவும் (Insan Management) பயன்படுத்துகின்றோம்?

சிந்திப்போம்... செயற்படுவோம்...

Ashker Aroos
PhD Student, IIUM, Malaysia.

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு.*இன்று 09.01.2025 வெள்ளி கிழமை அக்கரைப்பற்று பழைய சினமா வீதியை சேர்ந்த A....
10/01/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு.*

இன்று 09.01.2025 வெள்ளி கிழமை அக்கரைப்பற்று பழைய சினமா வீதியை சேர்ந்த A.L. மஸ்ஹூர் அவர்களின் சாரதி *அனுமதிப்பத்திரம்*, வாகண ஆண்டு லைசன், ATM 🏧 card , இன்சுரன்ஸ் , தேசிய அடையாள அட்டை என்பவற்றை இன்று *அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆ பள்ளிவாயலில்* வைத்து **முச்சக்கரவண்டியின்**லாக்கரை* உடைத்து களவாடி சென்றுள்ளனர் எனவே இந்த ஆவணங்களை எங்கும் கண்டால் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

Contact No : - 0770500227 , 0704077379

10/01/2025

🔴: BROADCASTING...
68 ஆவது சஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்த பாராயணமும், பயான் நிகழ்வும்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக...

Ash Sheik : - முஆரிப் (சித்தீகி)

Day : - 08

தலைப்பு : - இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல்களும் தடுக்கப்பட்ட வியாபார முறைகளும்.

#அதிகம்_பகிருங்கள்.

10/01/2025

🔴: BROADCASTING...
ஜும்ஆ தின விஷேட நேரலை
அக்கரைப்பற்று காதரிய்யா பள்ளிவாசலில் இருந்து

Ash Sheik : - ஏ.எல்.எம்.ஐயூப்( யூஸுபி )

அதிகம் பகிருங்கள்.

♦️:ஸகாத் நெல் சேகரிப்பு தொடர்பான ஊடக சந்திப்பு ஏற்பாடு - அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்புகைப்படங்கள்:-Dheenul Islam Media L...
09/01/2025

♦️:ஸகாத் நெல் சேகரிப்பு தொடர்பான ஊடக சந்திப்பு

ஏற்பாடு - அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்

புகைப்படங்கள்:-
Dheenul Islam Media

Live : -
https://www.facebook.com/share/v/1AYBWuzaBy/

09/01/2025

ஸக்காத் நெல் சேகரிப்பு தொடர்பான ஊடக சந்திப்பு

09/01/2025

🔴: BROADCASTING...
68 ஆவது சஹீஹுல் புஹாரி ஹதீஸ் கிரந்த பாராயணமும், பயான் நிகழ்வும்.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து நேரடியாக...

Ash Sheik : - றாஸுக் (மன்பயீ)

தலைப்பு : - நோன்பின் சிறப்புக்கள் உம் அதன் பயன்களும்

#அதிகம்_பகிருங்கள்.

08/01/2025

Address

MJC Road
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when GREEN Tv Media Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category