தமிழ் letter

தமிழ் letter Our Channel discusses the Current Political Trends, Social Issues, Sports, Entertainment and all the interesting news feeded with Truth... Truth and Truth Only
(1)

யாழ்ப்பாணம் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் சிறுமி பிரியங்கா ( ஏ.எல்.றமீஸ்)உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிகமாக பார்க்கின்...
02/12/2024

யாழ்ப்பாணம் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் சிறுமி பிரியங்கா

( ஏ.எல்.றமீஸ்)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிகமாக பார்க்கின்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கி உள்ளார் யாழ்ப்பாணம் கொக்குவில் மண்ணைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரியங்கா.

பிரபல பின்னணி பாடகர்களான மனோ.சித்ரா இசையமைப்பாளர் டீ.இமான் ஆகியோர் நடுவர்களாக வீற்றிருக்கும் நிலையில் முதல் சுற்றிலே நடுவர்களையும் பார்வையாளர்களையும் வியக்க வைத்துள்ளார் பிரியங்கா.

சிறுமி பிரியங்காவின் இனிமையான குரலும் பாடும் திறமையும் எல்லோரையும் இரசிக்க வைத்துள்ளது.

பிரியங்கா இறுதிச் சுற்று வரை பயணிக்க வேண்டுமென உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.!(எஸ். சினீஸ் கான்)கல...
02/12/2024

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.!

(எஸ். சினீஸ் கான்)

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி நிகழ்ச்சியில் நித்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் முஹம்மட் ஹரிஸ் முஹம்மட் ஹின்சான், நிஹால் அஹமட் சிப்னி அஹமட் ஆகியோர் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சியில் பங்குபற்றி முறையே வெண்கலப்பதக்கம், திறமைச் சன்றிதழைப் பெற்றிருந்தனர்.

இதனை பாராட்டி கெளரவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிஷாட் பதியுடீன் அவர்களின் அம்பாறை விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் அழைப்பின்பேரில் இம்மாணவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) நிந்தவூரில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது இவர்களை பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர் ஏ. ஹலீம் அஹ்மத் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்து ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர்களுக்கும், நிந்தவூர் மண் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற விழா ஆரம்பமானது....===================================(சர்ஜுன் லாபீர்)நானி...
02/12/2024

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற விழா ஆரம்பமானது....
===================================
(சர்ஜுன் லாபீர்)

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம்
கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும்
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 203 வது கொடியேற்று விழா இன்று (02) ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் புதிய தலைவர் அல்ஹாஜ் எம். ஐ அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .

கொடியேற்று தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை காணமுடிந்தது

இந் நிகழ்வில் , கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம்,கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பதில் பொறுப்பதிகாரி எம்.எல் ரபீக், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ் ,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள்,பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் வேட்பாளராக பொறியியலாளர் சிறாஜ்ஜூதீன் பெரும் கல்வியாளர்களை தாங்கி நிற்கும் அக்கரைப்பற்ற...
02/12/2024

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் வேட்பாளராக பொறியியலாளர் சிறாஜ்ஜூதீன்

பெரும் கல்வியாளர்களை தாங்கி நிற்கும் அக்கரைப்பற்று மண்ணில் சிறந்த பன்முக ஆளுமைமிக்கவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று வழிநடாத்த வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

அந்த அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேயர் வேட்பாளராக பொறியியலாளர் சிறாஜ்ஜூதீன் அவர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.

02/12/2024

அக்கரைப்பற்று இசங்கணிச்சிமை - மக்கள் போராட்டம்

தியாகத்துடன் பணியாற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்   - ஏபி பதூர்தீன் புகழாரம் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வ...
01/12/2024

தியாகத்துடன் பணியாற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் - ஏபி பதூர்தீன் புகழாரம்

அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் நீரில் மூழ்கியிருந்தது.

இதன் மூலம் இப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில்
வெள்ளப் பெருக்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கும் ஏனைய பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நேரடியாக களத்தில் நின்று பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது என முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் ஏபி பதூர்தீன் தெரிவித்தார்.

எம்.எஸ் தௌபீக் களத்தில்; நிவாரணம் வழங்கிவைப்பு..!!வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா அண்ணல் நகர் கிராம சேவகர் பிரிவுக்...
01/12/2024

எம்.எஸ் தௌபீக் களத்தில்; நிவாரணம் வழங்கிவைப்பு..!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா அண்ணல் நகர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் இன்று (01) வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிவைத்தார்.

மாவடிப்பள்ளி பெரும் துக்கத்தில் கலந்து கொண்ட  ரிஷாத் பதியுதீன் அரபுக் கல்லூரி மாணவர்களின் உயிர் இழப்பு நாடு பூராகவும் பெ...
01/12/2024

மாவடிப்பள்ளி பெரும் துக்கத்தில் கலந்து கொண்ட ரிஷாத் பதியுதீன்

அரபுக் கல்லூரி மாணவர்களின் உயிர் இழப்பு நாடு பூராகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தது.

இந் நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று ஜனாஸா வீடுகளுக்கு சென்று துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்

அரசாங்கத்துக்கு ஆதரவு - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்க...
01/12/2024

அரசாங்கத்துக்கு ஆதரவு - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும், இது நாட்டுக்கு மிகவும் நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருவதாகவும் அது சாதகமான அறிகுறி எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனு இரத்துஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்த...
01/12/2024

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனு இரத்து

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நாங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தோம்." - என்றார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏனைய கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க மற்றும் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்படி, 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்தப்பட்டால், பதிவு செய்யப்பட்ட சுமார் 4 இலட்சம் வாக்காளர்களுக்குப் பெரும் அநீதி ஏற்படும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிக்கு அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி...
30/11/2024

புதிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிக்கு அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி S.R.ஹசந்தி அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி S.R.ஹசந்தி அம்மையார் சேவை மூப்பு அடிப்படையில் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளராக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்

பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அம்மணி, SLEAS-I விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்று, கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

நிரந்தர கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அம்மணி, அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பதவியையும் வகிப்பார்

இவர் எதிர்வரும் திங்கட்கிழமை (02.12.2024) கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார்.

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!நமது பிராந்தியத்தில் அன்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் ச...
30/11/2024

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

நமது பிராந்தியத்தில் அன்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் அவர்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா.அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பனிப்பாளர் றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது. வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான காரணமாக, குடியிருப்பு கானிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.

அதே போல வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

விவசாயிகளின் வயல்கானி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஆட்சியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகின்றது. அதே போல அரச அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு ஒத்துளைப்பு வழங்கி சிக்கனமான முறையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துளைப்பு வழங்கினாலே ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியுமெனக் கூறியிருந்தார்.

இதன்போது தனது வேண்டுகோளையேற்று, நிந்தவூர் பிரதான வீதி ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்ததையடுத்து விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலமை பொறியியலாளர் அலியார் அவர்களுக்கும் தடைப்பட்டிருந்த நிந்தவூர் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக ஒலுவில் பிரதேச இணைப்பிலிருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கறைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களுக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் நன்றிக் தெரிவிக்கப்பட்டன

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனி...
29/11/2024

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றிய போது அவரது சேவை அளப்பரியதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 02-12-2024 ஆம் திகதிக்கு பிறகு அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ...
29/11/2024

நமது நாட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை நீக்கக் கூடிய வகையில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்!!!

கே எ ஹமீட்

சபாநாயகரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

மக்களின் ஆணையினைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் நமது நாட்டிற்கும், நமது பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தி கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதம் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் தடை விதிக்க முடிந்தது என பாராளுமன்ற செயலாளர் தெரிவித்தார். மக்களின் ஆணையினைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு நமது நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான புதிய சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானத்தை மேற்கொள்ள நமது பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பத்தாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 162 உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசை முகப்படுத்தல் செயலமர்வு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டு வந்து கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிலிருந்து நீக்க முடியாத நிலைமை ஏற்படுமாயின் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியின் விசேட ஜனாதிபதி குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“வேதாந்தி” சேகு இஸ்ஸதீனின் மறைவு; சிறுபான்மை அரசியல் பரப்பில் பெரும் இடைவெளி – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ...
28/11/2024

“வேதாந்தி” சேகு இஸ்ஸதீனின் மறைவு; சிறுபான்மை அரசியல் பரப்பில் பெரும் இடைவெளி – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!


ஊடகப்பிரிவு-

முஸ்லிம் விடுதலை அரசியலில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு நிகராக மிகப் பிரதான பாத்திரம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட இலக்கியவாதியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில்,

“இறைவனின் அழைப்பை மறுக்கும் சக்தி எந்தவொரு ஆன்மாக்களுக்கும் இல்லை. எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்கள் சென்ற வழியில், என்றோ ஒருநாள் நாமும் செல்வதற்கான இறை நியதியுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்.

இருந்தபோதும், அன்னாரது இழப்பு இந்தச் சூழலில் ஏற்பட்டிருப்பது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களை ஆட்டம் காணச் செய்திருக்கும் என நான் கருதுகின்றேன். இருந்தாலும், அன்னாரின் சமூக விடுதலை தூது, தத்துவங்களை எடுத்துச் செல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லில் தலைமைகளுக்கும் உண்டு என எண்ணுகின்றேன்.

சிலகாலம் எமது கட்சியுடனும் இணங்கிச் செயற்பட்ட இவர், எனது தனிப்பட்ட நெருக்கத்துக்கும் ஆளாகியவர். எமது கட்சியின் அரசியல் பாதையை வெகுவாகப் பாராட்டியவர். இவரது வழிகாட்டல்கள் ஒருகாலத்தில் எமது கட்சிக்கு பெரும் தைரியம் ஊட்டியது.

தேசிய அரசியலில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நல்ல பல அரசியல் தத்துவங்களையும் வியூகங்களையும் வகுத்துக்கொள்வதற்கு, அன்னார் இல்லாதுள்ளமை, எமக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன்! அன்னாரின் சமூகப் பணிகளை பொருந்திக்கொள்ள வேண்டும் எனவும் பிழைகளைப் பொறுத்துக்கொண்டு மறுமையில், நல்லதொரு நிலைக்கு அன்னாரை உயர்த்த வேண்டுமெனவும் பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

--

அட்டாளைச்சேனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  AL.ஹனீஸ் தலைமையில் மூன்றாவது நாளாகவும்சமைத்த உணவு வழங்கல்...!!!(ற...
28/11/2024

அட்டாளைச்சேனையில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு AL.ஹனீஸ் தலைமையில் மூன்றாவது நாளாகவும்
சமைத்த உணவு வழங்கல்...!!!

(றியாஸ் இஸ்மாயில்)

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் உள்ளனர்.

இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவினை வழங்கும் வேலைத்திட்டம் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுத் துள்ளது.

குறித்த உணவானது அட்டாளைச்சேனை SMI நிறுவனத்தின் வளாகத்தில் சமைக்கப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனவந்தர்களின் உதவியுடன் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் சமைக்கப்படும் இந்த உணவானது பிரதேச செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கிராம உத்தியோகத்தர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிவாசல் தலைவரும் விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ் தெரிவித்தார்.

இதில் சில குறைபாடுகள் வந்த போதும்
எதிர்வரும் தினங்களில் இக்குறைபாடு கள் சீர் செய்யப்பட்டுஉணவு விநியோகம் சரியாக நடைபெறும் என இதன் போது தலைவர் AL.ஹனீஸ் தெரிவித்தார்.

28/11/2024
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையில் மாவீரர் நினைவேந்தல் பலத்த கனமழைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல் ந...
27/11/2024

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையில் மாவீரர் நினைவேந்தல்

பலத்த கனமழைக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் புதன்கிழமை (27) நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பொதுசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாகவும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீர்ர் நினைவாலயம் முன்பாகவும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

Address

NO 132 Central Road Addalaichenai 15
Akkaraipattu
32350

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் letter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ் letter:

Videos

Share

Category