15/12/2024
🩸:அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தினந்தோறும் அனுமதிக்கப்படும் நோயாளிகளில், இரத்தம் தேவையாக உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் கொடுப்பதற்காக அவ்வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தம் கடும் தட்டுப்பாடாக உள்ளது.
வைத்தியசாலை இரத்த வங்கியினர் பெரும் சங்கடத்திற்குள் உள்ளாகியுள்ளார்கள். இரத்தம் தேவையாக உள்ள நோயாளிகள் நமது உறவுகளாகத்தான் பெரும்பாலும் உள்ளார்கள்.
அன்பானவர்களே, இளைஞர்களே, யுவதிகளே, விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகளே, ஏனைய பொது அமைப்புக்களே எம் அனைவருக்கும் இந்த விடயத்தில் கடமைப்பாடு உள்ளது.
04 மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் வழங்க முடியும். முடியுமானவர்கள் இறைவனுக்காக " எமது பிற சகோதரனின் உயிரை காப்பாற்றும்" இந்த நல்ல விடயத்தில் இணைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி திறந்து இருக்கும் இரத்த வங்கிக்கு சென்று உங்கள் இரத்தங்களை வழங்குங்கள். அது எம்மை சுத்தப்படுத்தி பிறர் உயிரை காப்பாற்ற உதவும்.
குறிப்பு : இந்த விடயத்தை முடியுமான வரை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த Share செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த வட்சப் குழுமங்களுக்கு Share செய்யுங்கள்.
றிஸ்வான் சாலிஹு
(ஊடகவியலாளர்)
0770526840