20/08/2023
நல்லாத்தானே இருந்தான் ஏன் தற்கொலை செய்தான்.
இந்த ஒரு வார்த்தையுடன் ஒரு தற்கொலையை செய்தியாக கடந்துவிட முடியாது. தற்கொலை செய்வது, கோழைத்தனம், அனைத்துக்கும் தீர்வு இருக்கு என்று சொல்வது சரிதான்.
ஆனால் எவர்? அவன் உயிருடன் இருக்கையில், அவனுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பதிலும், அவனுக்கு தேவையானதை நிறைவேற்றுவதிலும் பங்காற்றினீர்கள், என்றால் விடை பூச்சியம்.
மாறாக அவனுக்கான பிரச்சினைகளை கூட்டுவதிலும் தற்கொலை செய் என்று தூண்டுவதனையும் இந்த சமுதாயம் செய்கின்றது.
பசிப்பவனுக்கு சோறு கொடுக்க தயக்கம் காட்டுபவர்கள், படுப்பதற்கு தலையாணை கொடுத்து பயனில்லை. பசி போனால் தான் தூக்கம் வரும்.
80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் ஒரு மாம்பழம் வாங்கினவனும்,சாப்பிட இல்லாமல் தற்கொலை செய்தவனும் இங்கு தான் உள்ளார்கள்.
தற்கொலை வரையில் செல்ல துணிபவன், குறிப்பிட்ட செயலில் புனிதமாகவும், இதய சுத்தியுடனும் இருந்து இருப்பான். அதில் நேர்மை இருந்து இருக்கும். காதலோ, பணத்தேவையோ, வாழ்க்கையின் எதிர்பார்ப்போ, உறவுகளின் பிரிவோ, வேலை கிடைக்காமையே, தனக்கான சுதந்திரமோ என்னவாகவும் அது இருக்கலாம்.
தற்கொலை வரையில் செல்பவன் தனக்கான பிரச்சினையில் அல்லது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு எல்லை வரையில் சென்று இருப்பான்.
என்னடா இது உலகம் என்று இயலாத நிலையில் தற்கொலையை ஒரு வழியாக தெரிவு செய்திருப்பான்.
இருக்கும் வரையில் அவனவனின் இயலுமையை கொண்டாடுவதற்கு எமது சமுதாயம் தயாராகவில்லை. அப்படியிருக்கையில் இறந்த பின்னரா அனுதாபங்களும் விளக்கங்களும் தேவையற்றவை.
இந்த உலகில் சரிந்து போனவனை தூக்கி விடவேண்டும் ஏன் என்றால் அவன் மீண்டும் சரியாத வகையில் பல எண்ணங்களையும் செயல்களையும் செய்வான். சரிந்தவனே தற்கொலையை தேர்ந்தெடுப்பான். அவனது வாழ்க்கையின் பிரச்சினையை தீர்த்தால் அவன் இந்த உலகுக்கு முன்னோடியாவான்.
எமது சமூகத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளது. காரணம் தேடினால் ஐயோ பாவங்கள், கை கொடுத்து காப்பாற்றி அவர்களையும் வாழ வைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம்.
கிளிநொச்சியில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் இன்று தற்கொலை. முதலிடம் பெற்றால் பிரச்சினையிருக்காது என்று இல்லை. அவனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கல. அதுக்காக அவன் செய்ததை நியாயப்படுத்தல.
இருக்கும் போதே வாழ விடுங்கள். செத்த பின் கண்ணீர் வடித்தோ, இரங்கல் சொல்லியோ, வேதனைப்பட்டோ, solution தேடி இருக்கலாம் என்றோ சொல்லியோ எந்த பயனும் இல்லை. இருக்கும் ஒரு வாழ்க்கையில் எல்லோரும் நல்லா வாழ்ந்திட்டு போகட்டுமே.....
Copy true story