Villupuram Smart City

Villupuram Smart City Exploring Glory Of Villupuram Smart City Villupuram Fast Turns Out To Be An Well Developed,Cultured City. Villupuram also has a major train station.
(9)

Let Be The First To Get Updated About Our Smart City...

Viluppuram (Also Villupuram) (Tamil: விழுப்புரம்) is a municipality in Villupuram District, in the Indian state of Tamil Nadu. It serves as the headquarters of Villupuram District, the second largest district in the State. National Highway No. 45, from Chennai to Dindigul via Tiruchirapalli, goes through the town. The town's main source of i

ncome is agriculture. Its literacy rate was low until the early 1980s, but has since improved constantly and is currently about 75%.

இன்று உளுந்தூர்பேட்டை அருகே மிகவும் பழமை வாய்ந்த திருநாவலூர் அருள்மிகு ஸ்ரீ செனான்மணி அம்பாள் சமேத ஸ்ரீ பக்தஜனேசுவரர் தி...
21/11/2024

இன்று உளுந்தூர்பேட்டை அருகே மிகவும் பழமை வாய்ந்த திருநாவலூர் அருள்மிகு ஸ்ரீ செனான்மணி அம்பாள் சமேத ஸ்ரீ பக்தஜனேசுவரர் திருக்கோவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதி மஹா கும்பாபிஷேகம் காலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது...

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...

16/11/2024

தற்போது விழுப்புரத்தில் கனமழை...

நேற்று இரவு 🌟  விழுப்புரம் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ❤️ திருக்கோவிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி முன்...
16/11/2024

நேற்று இரவு 🌟 விழுப்புரம் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ❤️ திருக்கோவிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அப்போது மூலவர் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்...

தற்பொழுது 😔 விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் அரசு பேருந்தும் - வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் ...
10/11/2024

தற்பொழுது 😔 விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் அரசு பேருந்தும் - வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் 🥲 காயம்.பொதுமக்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.....

என்ன ✨ ஒரு ரம்யமான ♥️ அழகான காட்சி...இந்த கோவில் எங்கு உள்ளது என்று தெரிகிறதா மக்களே ?
06/11/2024

என்ன ✨ ஒரு ரம்யமான ♥️ அழகான காட்சி...

இந்த கோவில் எங்கு உள்ளது என்று தெரிகிறதா மக்களே ?

மக்களே இந்த பிரபலமான கடையில் நீங்கள் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் உண்டா ? இருந்தால் கமெண்ட் செய்யவும் ...
05/11/2024

மக்களே இந்த பிரபலமான கடையில் நீங்கள் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் உண்டா ?

இருந்தால் கமெண்ட் செய்யவும் ...

இன்று விழுப்புரம் அரசூரில் பிரசித்தி பெற்ற மகா ⚜️ வாராஹி அம்மன் 🔱 திருக்கோவிலில் வாராஹி அம்மனுக்கு ராகு கால பூஜையில் இன்...
03/11/2024

இன்று விழுப்புரம் அரசூரில் பிரசித்தி பெற்ற மகா ⚜️ வாராஹி அம்மன் 🔱 திருக்கோவிலில் வாராஹி அம்மனுக்கு ராகு கால பூஜையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தீபம் 🔥 ஏற்றி வழிபட்டார்கள்...

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு  விழுப்புரம் மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் தி...
02/11/2024

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவப்பெருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்...

கேதார கௌரி விருதம் என்றால் என்ன தெரிந்தால் கூறவும்?பொதுமக்கள் தீபாவளிக்கு  நோன்பு விரதம் இருக்கிறார்கள் ...கணவனும் மனைவி...
01/11/2024

கேதார கௌரி விருதம் என்றால் என்ன தெரிந்தால் கூறவும்?

பொதுமக்கள் தீபாவளிக்கு நோன்பு விரதம் இருக்கிறார்கள் ...
கணவனும் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்பதற்காக இதுபோன்ற பூஜை பொருட்களை வாங்கி விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள்....

பட்டாசு ஒளியில் ஜொலித்த விழுப்புரம் மாநகரம்.. இரவு நேர வானத்தை வண்ணத்தில் குளிக்க வைத்த வாண வெடிகள்.. வியக்க வைக்கும் ட்...
01/11/2024

பட்டாசு ஒளியில் ஜொலித்த விழுப்புரம் மாநகரம்.. இரவு நேர வானத்தை வண்ணத்தில் குளிக்க வைத்த வாண வெடிகள்.. வியக்க வைக்கும் ட்ரோன் காட்சி..


29/10/2024

மக்களே நாளைய மறுநாள் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் இன்றைய ரயிலில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது...

நாளைய மறுநாள் தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது.ஆனால் தற்போது அனைத்து ரயிலிலும் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.இதில் ஆண்கள் , பெண்கள் என ரயில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள்...

இதன் காரணமாக பொதுமக்கள் ரயில் வரும்போது மிகக் கவனத்துடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்...

தீபாவளி பண்டிகை ஒட்டி நாளை கல்வி நிலையங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு....
29/10/2024

தீபாவளி பண்டிகை ஒட்டி நாளை கல்வி நிலையங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு....

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளவு செய்யும் முற்படும் பொழுது .பெரும்பாலும் அந்த அளவுகள...
29/10/2024

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளவு செய்யும் முற்படும் பொழுது .

பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்...

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 48960 சதுர அடி.

1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter) = 1.190 குழி

1 குழி = 9 சதுர அடி

1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி

1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி = ஒரு மா

20 மா = ஒரு வேலி

3.5 மா = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர் = ஒரு வேலி

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

தற்பொழுது விழுப்புரம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி மா...
22/10/2024

தற்பொழுது விழுப்புரம் ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி மாணவி கவிநிஷா (19) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் - போலீஸ் விசாரணை!

நண்பருடன் பைக்கில் சென்றபோது விபத்து நடந்துள்ளது. - படுகாயம் அடைந்த சிபிராஜ் மருத்துவமனையில் அனுமதி...

தயவுசெய்து வெளியில் செல்லும் பொழுது தலைக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்...

நம்ம விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மக்கள் நாயகன் - Saran Kumar ❤️🔥 க்கு நமது விழுப்புரம் மாவட்டம் மக்கள் சார்...
20/10/2024

நம்ம விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த மக்கள் நாயகன் - Saran Kumar ❤️🔥 க்கு நமது விழுப்புரம் மாவட்டம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்....

நம்ம ஊரு விழுப்புரத்தை சேர்ந்த சகோதரர் திரு.வீரபாண்டி அவர்களுக்கு நம்ம குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம...
20/10/2024

நம்ம ஊரு விழுப்புரத்தை சேர்ந்த சகோதரர் திரு.வீரபாண்டி அவர்களுக்கு நம்ம குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....

என்ன ஒரு அழகான காட்சி....இது எந்த ரயில் நிலையம் என்று தெரிந்தால் கூறவும்....
18/10/2024

என்ன ஒரு அழகான காட்சி....

இது எந்த ரயில் நிலையம் என்று தெரிந்தால் கூறவும்....

மக்களே... மழையின் காரணமாக  இரு சக்கர வாகனத்தில் செல்போர் 🥲 🙏🏻 மிக கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்...தயவுசெய்து ...
15/10/2024

மக்களே... மழையின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்போர் 🥲 🙏🏻 மிக கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

தயவுசெய்து வெளியில் செல்லும் பொழுது தலைக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்...

Address

Villupuram
605602

Telephone

+919597969970

Website

Alerts

Be the first to know and let us send you an email when Villupuram Smart City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Villupuram Smart City:

Share