இன்று செய்திகளை உடனுக்குடன் வழங்குவதற்கு ஏராளமான ஊடகங்கள் உள்ளன. ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னணியில் மறைந்திருக்கும் பல்வேறு கோணங்களின் அடிப்படையிலான உண்மைகளை, விரிவான தரவுகளுடன் தருவதற்கானவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதிவிரைவு ஊடகக் காலத்தில், பொறுமையோடும் நிதானத்தோடும் செய்திக்கட்டுரைகளையும் காணொளிகளையும் வழங்கும் வழக்கம் குறைந்துவிட்டது. ’நிருபன் ஊடகக் குழுமம்’ ஒருங்கிணைக்கும் இணையத்
தள ஊடகங்கள் அந்தக் குறையைப் போக்குபவையாக இருக்குமென்பதோடு, வெறுப்பையும் பகைமையையும் பரப்புவதை விடுத்து, எல்லாத் தரப்பு இயக்கங்கள் மற்றும் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் விதைக்கும் வகையிலான, கண்ணியம் மிகு கட்டுரைகளையும் காணொளிகளையும் உங்கள் முன் வைக்கும். அரசியல், வரலாறு, சினிமா, தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளிலும் இவ்வூடகக் குழுமம் செயலாற்றும். ஊடகத்தின் நிறுவனர் பிரின்ஸ் கமல் 2004-2005 காலக்கட்டத்தில் ஆனந்த விகடன் நிறுவனத்தால் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தால் இதழியல் துறைக்குக் கொண்டுவரப்பட்டவர். தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ் வெளியீடுகளில் உதவி ஆசிரியராகவும் நிருபராகவும் இருந்து பல்வேறு கட்டுரைகளைத் தீட்டியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் அத்தொலைக்காட்சியில் ‘ஃபெலிக்ஸ் கமல்ராஜ்’ என்ற பெயரில் செய்தியாளராக, உதவி ஆசிரியராக, ’சினிமா 360’ எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியவர்.