Elayirampannai

  • Home
  • Elayirampannai

Elayirampannai ஏழாயிரம்பண்ணை பொதுமக்களின் சேவைக்காக

(Non Governmental Organisation)

அவசியம் பாருங்கள்  நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..பெரும்பாலும்...
28/09/2024

அவசியம் பாருங்கள்



நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

நன்றி 🙏🙏🙏

16/07/2024

ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தி சாதனை படைத்துள்ளது தமிழக திமுக அரசு

500 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நபர்கள் தற்போது 1500 ரூபாய் வரை செலுத்த வைத்த பெருமை திரு ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக நன்றி.

மேலும் ஆளும் அரசுக்கு வாக்களித்து அவர்கள் மின்கட்டண உயர்வு பால் கட்டணம் உயர்வு பேருந்து கட்டணம் உயர்வு பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு போன்ற பல்வேறு கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை இன்ப அதிர்ச்சி ஆழ்த்திட திமுகவுக்கு வாக்களிக்கவும்

20/05/2024

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக திடீர் வெள்ள அபாயம் உள்ளது எனவே பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வேண்டாம் -TNSDMA

19/05/2024

விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கன முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் -TNSDMA

09/05/2024

இந்தியாவில் 1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்துக்களின் மக்கள் தொகை என்பது 8 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும், முஸ்லிம்களின் மக்கள்தொகை 43 சதவீதம் வரையும், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது 5.38 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகளவில் மக்கள்தொகை அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. நம் நாடு 2வது இடத்தில் உள்ளது. நம் நாட்டின் மக்கள்தொகை என்பது தற்போது 140 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள்தொகையில் சீனாவை விட இந்தியா முந்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தியா தான் மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை. இந்நிலையில் தான் பிரதமருக்கான பொருளாதார ஆலோசசனை குழு (Economic Advisory Council to the Prime minister அல்லது EAC-PM) சார்பில் மக்கள்தொகை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 167 நாடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

குறிப்பாக நம் நாட்டில் 1950 முதல் 2015ம் ஆண்டுக்கு இடையே மக்கள்தொகை நிலவரம் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 1950ம் ஆண்டை ஒப்பிடும்போது 2015ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை என்பது சரிந்துள்ளது எனவும், அதேவேளையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அதன்படி கடந்த 1950-2015 வரையிலான காலக்கட்டத்தில் நம் நாட்டில் இந்து மக்கள்தொகை என்பது 7.8 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த 1950ல் இந்திய மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்த நிலையில் 2015ல் இந்துக்களின் எண்ணிக்கை 78 சதவீதமாக சரிந்துள்ளது.
அதேவேளையில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது. ஆனாலும் ஜெயின் மற்றும் பார்சிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 1950-2015 இடைப்பட்ட காலத்தில் 43.15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி 1950ல் இந்திய மக்கள்தொகையில் 9.48 சதவீதம் பேர் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால் 2015ல் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 43.15 சதவீத வளர்ச்சியாகும்.

அதேபோல் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 5.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீக்கியர்களின் எண்ணிக்கை 6.58 சதவீதமும், பவுத்தர்களின் எண்ணிக்கை சிறிதளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம் அண்டை நாடான பாகிஸ்தான், வங்கசேத்தில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அங்கு முஸ்லிம்களின் மக்கள்தொகை என்பது அதிகரித்துள்ளது.

னால் இந்தியாவை பொறுத்தமட்டில் பெரும்பான்மை சமூகமாக உள்ள இந்துக்களின் மக்கள்தொகை 8 சதவீதம் வரை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி நேபாளம் நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளன. அங்கும் இந்துக்களின் மக்கள்தொகை என்பது 3.6 சதவீதம் வரை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் Crew Module ன் airdrop சோதனையை இஸ்ரோ ஏப்ரல் 24 ஆம் தேதி நடத்த உள்ளது...
18/04/2024

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் Crew Module ன் airdrop சோதனையை இஸ்ரோ ஏப்ரல் 24 ஆம் தேதி நடத்த உள்ளது.

🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳

10/04/2024

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என குழப்பமாக உள்ளதா???!!!

அப்போது பொதுமக்கள் செய்ய வேண்டியது தங்களின் பகுதியில் இருக்கும் முன்னாள் ராணுவம் அல்லது தற்போதைய ராணுவத்தில் பணியாற்றும் நபர்களிடம் கேட்டு நமது நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய கட்சியான பாரதியா ஜனதா கட்சி முக்கியமா அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் திமுக கட்சி முக்கியமா என்பதை மட்டும் கேளுங்கள்

அவர்கள் தெளிவாக கூறுவார்கள் நாட்டிற்கு யார் தலைமையிலான ஆட்சி முக்கியம் என

எந்த ஒரு ஆட்சி அமைந்தாலும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் நடுநிலைமையுடன் தான் செயல்படுவார்கள் ஆகவே தான் அவர்களின் கருத்து பெரும்பாலும் நேர்மையாக இருக்கும் அதன் அடிப்படையில் இந்த தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

10/04/2024

121 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசும் 121 மொழிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உள்ளது .இந்தியாவில் 19,500 க்கும் மேற்பட்ட மொழிகள் அல்லது பேச்சுவழக்குகள் தாய்மொழியாகப் பேசப்படுகின்றன என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பகுப்பாய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் அதிகம் பேசப்படும் மொழிகள் மற்றும் பேசுபவர்களைக் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்தால் மட்டுமே இந்தியாவின் தற்போதைய நிலை தெரியவரும்.

இந்தி

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி. இது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் காட்டிலும் 2011ஆம் ஆண்டில் இந்தியைத் தாய்மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில், 41.03% மக்கள் இந்தியைத் தாய் மொழியாகப் பேசினார்கள், 2011 இல் அது 43.63% ஆக அதிகரித்தது.

மாண்டரின், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு, உலகில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி இந்தி. 2011 கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 52, 83, 47,193 இந்தி பேசுகின்றனர். உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இது பேசப்படுகிறது.

இந்தி சமஸ்கிருத மொழியின் வழித்தோன்றல் மற்றும் அரபு, போர்த்துகீசியம், ஆங்கிலம், பாரசீகம் மற்றும் துருக்கி மொழிகளால் தாக்கம் பெற்றது. இந்தியில் பேசப்படும் மொழிகளில் அவாதி, பிரஜ் மற்றும் காதி பாஷா ஆகியவை அடங்கும். தட்சமா அர்த்ததாசம், தத்பவ், தேசஜ், விதேஷி என இந்தி வார்த்தை ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பெங்காலி

இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் பேசப்படும் மொழி பெங்காலி, இது 9.72 கோடி குடிமக்களால் பேசப்படுகிறது. பெங்காலி என்பது தெற்காசியாவில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-ஆரிய மொழியாகும். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் இது மிகவும் முக்கியமான மொழியாகும்.

வங்காள மொழியானது தொடக்கத்தில் பழைய இந்தோ-ஆரியர்களின் மதச்சார்பற்ற மொழியாக இருந்தது மற்றும் பாரசீக மற்றும் அரபு மொழிகளால் தாக்கம் பெற்றது. இந்த மொழி வெவ்வேறு மாநிலங்களில் மாறுபடுகிறது, குறிப்பாக பயன்பாடு, உச்சரிப்பு, வார்த்தைகள் மற்றும் ஒலிப்பு வடிவத்தில். இந்தியாவில் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் திரிபுராவில் பெங்காலி மொழி அதிகம் பேசப்படுகிறது. இந்த மொழி மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் கனடாவிலும் பேசப்படுகிறது.

மராத்தி

2011 ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நம் நாட்டில் மொத்தம் 8.30 கோடி மக்கள் மராத்தி பேசுகின்றனர். மராத்தி என்பது இந்தோ-ஆரிய மொழியாகும், இது கோவா மற்றும் மகாராஷ்டிரா உட்பட நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழியாகப் பேசப்படுகிறது. மராத்தியில் சுமார் 42 வெவ்வேறு பேச்சுவழக்குகள் பேசப்படுகின்றன.

தெலுங்கு

இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக பேசப்படும் ஒரு மொழி தெலுங்கு. இந்த மொழி முக்கியமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யானம் மாநிலங்களில் பேசப்படுகிறது. தெலுங்கின் மற்ற பேச்சுவழக்குகளில் பெராட், வடகா, டோமரா, சலவாரி, நெல்லூர், காம்டாவோ மற்றும் கமதி ஆகியவை அடங்கும். அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெலுங்கு மொழி பேசப்படுகிறது.

தமிழ்

தமிழ் மொழியின் வேர்கள் தென் மாநில மொழியுடன் தொடர்புடையவை. இருப்பினும், இது சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அலுவல மொழியாக இருப்பதுடன், இந்தியாவிலும் பரவலாக பேசப்படும் மொழியாகவும் இருக்கிறது. நாட்டில் 6.90 கோடி பேர் தமிழ் பேசுகின்றனர். உலகில் இப்போதும் பேசப்படும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் அறியப்படுகிறது. அதன் இலக்கிய பாரம்பரியம் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மையானது.

குஜராத்தி

குஜராத்தி இந்தியாவில் 5.54 கோடி மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழியாகும். இது வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ள குஜராத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். குஜராத்தி மொழி சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது.

உருது

இந்தியாவில் கிட்டதட்ட 5.07 கோடி உருது மொழி பேசுபவர்கள் உள்ளனர். உருது மொழியும் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். இது மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகாரப்பூர்வ மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உருது உள்ளது.

கன்னடம்

தமிழைப் போலவே கன்னடமும் தென் மாநில மொழியாகும். இது இந்தியாவில் 4.37 கோடி மக்களால் பேசப்படுகிறது. இந்த மொழி இந்தியாவிற்கு வெளியே ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற இடங்களிலும் பேசப்படுகிறது. இந்த பேச்சாளர்களில் பலர் புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்களாகவும் உள்ளனர். கன்னடத்தில் சுமார் 20 வெவ்வேறு பேச்சுவழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒடியா

ஒடியா இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும், பெரும்பாலும் இந்த மொழியை பேசுபவர்கள் ஒடிசா மாநிலத்தில் மையமாக உள்ளனர். இந்த மொழியை நாடு முழுவதும் 3.75 கோடி பேர் பேசுகின்றனர்.

மலையாளம்

இந்தியாவில் சுமார் 3.48 கோடி பேர் மலையாளம் பேசுகிறார்கள், இது கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த மொழியின் வேர்களும் தமிழ் மொழியிலிருந்து வந்தவை.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கீழ் உள்ள வனத்துறை இரண்டு வயதான கிளி ஜோதிடர்களை கைது செய்தது . இதனைத் தொடர்ந்து திமுக தல...
09/04/2024

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கீழ் உள்ள வனத்துறை இரண்டு வயதான கிளி ஜோதிடர்களை கைது செய்தது . இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆட்சியின் மீது பல்வேறு கட்சியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு கைது செய்யப்பட்ட அந்த இரு சோதிடர்களையும் வனத்துறை எச்சரிக்கை செய்து அவர்களை விடுவித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றது.

அப்பாவி ஏழை எளிய மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் இந்த அராஜக போக்கினை ஆளும் ஆட்சியாளர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் பொதுமக்கள் வாக்கு என்றும் உரிமையை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு தக்க பதில் வழங்குவார்கள்....

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் ...
09/04/2024

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர்

07/04/2024

ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக கட்சியினர் வாக்கு சேகரிக்க வந்தால் ஏழாயிரம்பண்ணையில் எப்போது மதுக்கடைவையை மூடுவீர்கள் என பொதுமக்கள் கேள்வி கேட்கவும். ...

எப்படியும் வரும் தேர்தல் முடிந்த பின்பு மது கடைகள் மூடப்படும் என பொய் கூறத்தான் செய்வார்கள்...

மதுக்கடைகளை அகற்றுவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கு நன்கு யோசித்து வாக்களிக்கவும்...

05/04/2024
03/04/2024

நல்லவேளை இந்த அடிமைகள் தமிழ்நாட்டில் மட்டும் இருப்பதால் தமிழகத்தோடு முடிந்தது முட்டாள் கூட்டம் இல்லை என்றால் அமெரிக்காவில் இருக்கும் சிலையே இவர்களின் தாத்தா வைத்தது தான் என பொய் கூறி ஓட்டு கேட்பார்கள்

தத்திக் குடும்பம்

03/04/2024

உள்ளூரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் மதுரை பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது என பதில் கூறினால் எப்படி இருக்கும் பதில் கூறியவன் முட்டாள் போல் தான் தோன்றும்

அது போல் தான் தமிழ்நாட்டில் மது ஒழிப்பை பற்றி பேசினால் உத்தரபிரதேசத்தில் மது ஒழிப்பு இல்லை டெல்லியில் மது ஒழிப்பு இல்லை என முன்னுக்கு பின் முரணான பதிலை கொடுத்து திராவிட முட்டாள் ஆட்சிக்கு முட்டு கொடுக்கின்றனர் முட்டாள் மனிதர்கள் இது போன்ற முட்டாள் மனிதர்களால் தான் தமிழகம் உருப்படாமல் போகிறது

கொஞ்சமாவது யோசித்து பேசவும் ஊபி அடிமைகளே...

 #ஆம்ஆத்மி கட்சி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தை RTI அறிக்கை அம்பலப்படுத்தியது.  ‼️  #அரவிந்த்கேஜ்ரிவால் வீட்டில் பிள...
02/04/2024

#ஆம்ஆத்மி கட்சி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தை RTI அறிக்கை அம்பலப்படுத்தியது. ‼️

#அரவிந்த்கேஜ்ரிவால் வீட்டில் பிளம்பிங் செலவு 29 கோடி!! தங்கக் குழாய்களைப் பயன்படுத்தினால் கூட எந்த வீட்டிற்கும் 29 கோடி ரூபாய் பில் வர வாய்ப்பில்லை.

29 கோடியில் எந்த ஒரு சிறிய நகரத்திலும் சுமார் 100 வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு கொடுக்க முடியும்.

#ஊழல்கெஜ்ரிவால்

பின்குறிப்பு: திமுக கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது

02/04/2024

திமுக, அதிமுக இந்த இரண்டில்எந்த கட்சி மதுக்கடைகளை மூடும் என மக்கள் நம்புகின்றனர்

கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் திமுக அதிமுக கட்சி இதுவரை மதுக்கடைகளை மூடவில்லை குறிப்பாக ஏழாயிரம் பணியில் இரண்டு மது கடைகள் மூலம் இன்றும் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

மேற்கண்ட கட்சிகளே அல்லது தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கும் மது கடைகள் மூடப்படும் என நீங்கள் நம்புகிறீர்களோ அந்த கட்சிக்கு தாங்கள் வாக்களிக்கவும் .

வாக்களிப்பது கட்டாயம் அல்ல ஒவ்வொரு ஆனால் நாட்டின் நன்மைக்காக வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை

02/04/2024

பொதுமக்கள் எக்கேடு கெட்டால் என்ன என நினைத்துக் கொண்டு திராவிட ஆட்சியாளர்கள் மதுக்கடைகளை மூட மறுக்கின்றனர்

குறிப்பாக நமது கிராம சுற்று வட்டார பகுதியில் இறக்கும் நபர்களின் வயது பெரும்பாலும் 30 முதல் 50 குள்ளாகவே இருக்கிறது பெரும்பாலும் இயற்கையாக நோய்வாய் பட்டு இறப்பது கிடையாது அதிகம் குடிகினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் உடல் சம்பந்தமான பிரச்சினைகளாலும் கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்சினையினாலும் இறக்கின்றனர் இதற்கு யார் பொறுப்பு?

திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் இந்த நபர்களின் இல்லத்தில் ஒரு துயர சம்பவம் நேரிட்டால் அப்போது புரியும் இவர்களின் திராவிட ஆதரவு நிலைப்பாடு

பணம் இருப்பவன் உடல் உறுப்புகளை மாற்றி பல நாட்கள் வாழ முடியும் பணம் இல்லாத ஏழைகள் என்ன செய்ய முடியும் .

தற்போதையாலும் *முக அரசால் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள மது கடைகளை முழுவதுமாக மூட முடியும் என வாக்குறுதி கொடுக்க முடியுமா அப்படி கொடுக்கும் பட்சத்தில் இந்த கட்சிக்கு ஆதரவாக முட்டுக் கொடுக்கும் நபர்கள் உண்மையில் நல்ல மனிதர்கள் அதை விடுத்து வெட்டி வாய்க்கொழுப்பாக பேசிக் கொண்டிருப்பது தங்கள் படித்த படிப்புகளுக்கு ஒன்றும் அழகல்ல தாங்கள் படிக்காமல் உள்ளூரில் கால்நடைகளை மேய்ப்பதே சிறந்தது

இவ்விரு கட்சிகளும் மதுக்கடைகளை மூடி கல்லு கடைகளை திறந்து விவசாயிகளுக்கு நன்மை செய்வார்கள் என நம்புவது தண்ணீரில் கவிதை எழ...
02/04/2024

இவ்விரு கட்சிகளும் மதுக்கடைகளை மூடி கல்லு கடைகளை திறந்து விவசாயிகளுக்கு நன்மை செய்வார்கள் என நம்புவது தண்ணீரில் கவிதை எழுதுவது போல் தான்

சிந்தித்து வாக்களிக்கவும்...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Elayirampannai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elayirampannai:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share