Mohamed Sherif

  • Home
  • Mohamed Sherif

Mohamed Sherif நீ ஊமையாய் இருக்கும்வரை, உலகம் செவிடாய் தான் இருக்கும்

04/12/2024

#மேட்டுப்பாளையம் மீண்டும் ஒரு சாத்தான்குளமா..?

மேட்டுப்பாளையம் 21 வயது முஸ்லிம் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்.

மகனை சிறுநீரகம் பாதிக்கப்படும் அளவிற்கு காவல் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் தாக்கியிருப்பதாக தாய் கண்ணீர் மல்க பேட்டி.

உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை நிரந்தர பணி நீக்கம் செய்வதோடு

கோவை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் காவல்துறையின் அராஜகத்தை மாண்புமிகு Chief Minister of Tamil Nadu கட்டுப்படுத்த வேண்டும்.

02/12/2024

🚨PLEASE SHARE&HELP🚨
#யாசர் உயிர் காப்போம்.
கோவை, உக்கடம் அருகில் ஜி.எம் நகரில் உள்ள யாசர் அரஃபாதின் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து டயாலிசிஸ் மூலமாகத்தான் உயிர் வாழ்கிரார். இதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விற்று தற்பொழுது வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவத்திற்கு கூட பணம் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு 12 லட்சம் ரூபாய் (கோவை ஜெம் ஹாஸ்பிடல், எஸ்டிமேட்) தேவை உள்ளது. வாழ்வாதாரத்திற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் இவரின் அறுவை சிகிச்சைக்காக உதவுங்கள். உங்களால் முடிகிற சிறிதோ பெரிதோ ஆன தொகைகளை கீழுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து காப்பாற்றுங்கள்.
POST DATE 01-12-2024
G PAY , PHONE PAY
👉 8122848050(ABUTHAHIR)
👉 7395944728(YASAR ARAFATH)
👉 8015947581(SAL SABILA)
G PAY, PHONE PAY மூலம் பணம் அனுப்ப ஏதேனும் தடை ஏற்பட்டால் சிரமம் பார்க்காமல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR CODE உபயோகித்தோ வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தவோ கேட்டுக்கொள்கிறோம்.
ABUTHAHIR AKBAR ALI
A/C :23510100019471
IFSC : FDRL0002351
BRANCH: SUNDARAPURAM
COIMBATORE

G PAY, PHONE PAY மூலம் பணம் அனுப்ப ஏதேனும் தடை ஏற்பட்டால் சிரமம் பார்க்காமல்🙏🏻🙏🏻🙏🏻 இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR CODE உபயோகித்தோ அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ பணம் செலுத்த கேட்டுக்கொள்கிறோம்.

அஜ்மீர் தர்ஹாவில் ஆய்வுக்கு அனுமதியாம். ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருந்தால் நீதிமன்றத்தை தன் கையில் வைத்திருப்பார்கள்...
29/11/2024

அஜ்மீர் தர்ஹாவில் ஆய்வுக்கு அனுமதியாம்.

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருந்தால் நீதிமன்றத்தை தன் கையில் வைத்திருப்பார்கள் பார்ப்பனர்கள் என்று பெரியார் சொன்னதில் சிறு மாற்றம்.

ஆட்சி அதிகாரமும் , நீதி துறையும் தன் கையில் இருந்தால் பார்ப்பனியம் பரத நாட்டியம் ஆடும் என்பதற்கு இந்திய தேசத்தில் நடைபெறும் பள்ளிவாசலிலும் தர்ஹாவிலும் நடக்கும் ஆய்வுகளே சாட்சி.

இதிலிருந்து அனைத்து பள்ளிவாசலையும் , தர்ஹாகளையும் பாதுகாக்க , இந்திய வீதிகளை நீதிக்கான மன்றங்களாக மாற்றுவோம்.

அறவழி போராட்டத்தை முன்னெடுத்து , அதிலே 750 உயிர்களை கொடுத்து , ஒராண்டுகால போராட்டத்திற்கு பிறகு மூன்று வேளான் சட்டங்களை பின் வாங்க வைத்த விவசாய தோழர்களின் போராட்ட வடிவமே சான்று.

தொடர் போராட்டங்களும் , அதனூடே அர்ப்பணிப்புகளும் , அநீதிகளை அழித்து, அசத்தியங்களை ஒழித்து , உண்மையை உரக்கச் சொல்வோம்.

சத்தியத்திற்கு சான்று பகர்வோம்.

25/11/2024

உத்தர பிரதேசம் மாநிலம் சம்பல் சாஹி ஜமா மஸ்ஜித் காக்கும் போராட்டத்தில் போலீஸ் சுட்டதில் இஸ்லாமிய இளைஞர்கள் 3-பேர் உயிரிழந்தனர். தற்போது உபி பாசிச காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் ஷஹீதானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு.


உரிமைகளை இழந்தோம்..உடமைகளை இழந்தோம்..உயிர்களையும் இழக்கின்றோம்..ஆனால் கிடைக்கின்ற பெயரோ முஸ்லிம்கள் தீவிரவாதி என்று என்ன...
25/11/2024

உரிமைகளை இழந்தோம்..
உடமைகளை இழந்தோம்..
உயிர்களையும் இழக்கின்றோம்..

ஆனால் கிடைக்கின்ற பெயரோ முஸ்லிம்கள் தீவிரவாதி என்று என்னடா உங்க நியாயம்..

25/11/2024

காவல்துறை உதவியுடன் துப்பாக்கி சூடு நடத்தி முஸ்லிம்களை கொன்று விட்டு ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் பள்ளிவாசலை அளவிட செல்லும் கலவர கும்பல் அந்த நீதிமன்ற பணியாளனை பாருங்கள் இவனெல்லாம் சரியான தகவலையா நீதிமன்றத்துக்கு கொடுப்பான்..?

இந்தியாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டால் அவன் தேசபக்தியுடையோன்..

அல்லாஹ் அக்பர் என்றும் ஆசாதி எனவும் கோஷமிட்டால் அவன் தீவிரவாதி..

மதச்சார்பற்ற இந்தியா
அனைத்து மதத்தினர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் இந்தியா வெறும் புத்தகத்தில் மட்டும்தான் உள்ளது..

மதங்களை கடந்து மனிதம் போற்றும் இந்தியாவை எதிர்பார்த்தவனாக..

வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்தியாவை எதிர்பார்த்தவனாக.

25/11/2024

சட்டங்கள் சமாதிகளாக்கப்படுகின்றன. போராளிகள் ஷஹீதாக்கப்படுகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஷாஹி மஸ்ஜித் சர்வேக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

ஷாஹி மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய ஆட்சியின் போது கட்டப்பட்டது. சம்பல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் மசூதியை 'வரலாற்று நினைவுச்சின்னம்' என்று பதிவு செய்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை, சம்பல் நீதிமன்றம் ஷாஹி மசூதியை ஆய்வு செய்ய அட்வகேட் கமிஷனரை பணித்தது. எதிர் தரப்பைக் கேட்கக்கூட நீதிமன்றம் தயாராக இல்லை. இந்த மசூதி முன்பு ஹரிஹரன் கோவிலாக இருந்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மனுதாரர்களில் ஒருவரான ஷங்கர் ஜெயின் வாரணாசி - மதுரா மசூதி வழக்குகளிலும் மனுதாரர் ஆவார். மனுவை சமர்ப்பித்த மூன்றே மணி நேரத்தில் சர்வே நடத்த நீதிமன்றம் அனுமதி! சுப்ரீம் கோர்ட்டில் உள்ள உ.பி. அரசின் வழக்கறிஞர்தான் புகாரை தயாரித்துள்ளார்! புகார் அளிக்கப்பட்ட அன்றே சர்வே செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி, அன்று மாலையே கணக்கெடுப்பு துவங்குகிறது! இதுதான் சட்டத்தின் ஆட்சியா? சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன? இது நியாயமா? 1991 வழிபாட்டு இல்லங்கள் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் பிறகு எதற்கு கணம் கோர்ட்டார் அவர்களே..?

சம்பலில் முஸ்லிம் சமூகம் நடத்திய போராட்டம் நியாயமான போராட்டம். அந்த எதிர்ப்புக்கு நாங்கள் எல்லா வகையிலும் ஆதரவாக நிற்கிறோம். அப்பட்டமாக சட்டத்தை மீறி நீதிமன்றமும், அரசும், அதிகாரிகளும் அநியாயக்காரர்களுக்கு துணை நிற்கும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் என்ன செய்வார்கள்? நாட்டில் உள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை ஒவ்வொன்றாக தோண்டி ஆய்வு செய்ய ஆரம்பித்தால், 1991 வழிபாட்டு இல்லங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு என்ன மரியாதை உள்ளது? நீதி மறுக்கப்பட்ட மக்கள் நம்பியிருக்கும் நீதிமன்றங்களே, சட்ட விரோதத்தை அதிவேகமாக வழிநடத்தி வருவதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

சம்பல் பிரச்னையில் நாட்டின் எதிர்க்கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் தலையிட வேண்டும். ராகுல் காந்தி தலைமையிலான குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்ல வேண்டும்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அரசு மற்றும் காவல்துறையினரால் முஸ்லிம்களுக்கு எதிராக மேலும் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைப் பாதுகாக்கவும், அதன் இணக்கத்தை உறுதிப்படுத்தவும் உச்ச நீதிமன்றத்தின் மீது கடமை உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக தலையிட வேண்டும்.

கொல்லப்பட்டவர்கள் இந்துத்துவ அரச பயங்கரவாதத்தின் தியாகிகள். நீதி கேட்டு வீதியில் இறங்கி முழக்கமிட்டவர்கள். அவர்களுக்காக கண்ணீருடன் கண்ணியத்துடன் பிரார்த்தனை செய்கிறேன்.

மைக் டைசன் தோல்வி 58 வயசுல 27 வயசு பையன் கூட 8 ரவுண்டு நிற்பதெல்லாம் பெரிய விஷயம்..!!தோற்றாலும் 2 கோடி டாலர்களை வென்றார்...
16/11/2024

மைக் டைசன் தோல்வி

58 வயசுல 27 வயசு பையன் கூட 8 ரவுண்டு நிற்பதெல்லாம் பெரிய விஷயம்..!!

தோற்றாலும் 2 கோடி டாலர்களை வென்றார் lion is always lion...

miketyson..🔥

NewsJ ஊடகத்தில் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை வரைந்து ருகிறார்கள், அவரின் தோற்றம் பாருங்க ? தாடி வைத்திருக்கிறார் மீ...
14/11/2024

NewsJ ஊடகத்தில் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை வரைந்து ருகிறார்கள், அவரின் தோற்றம் பாருங்க ? தாடி வைத்திருக்கிறார் மீசை இல்லை. முஸ்லிமாக தோற்றத்தை கொடுக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழ் பத்திரிகையில் சினிமாவில் ரவுடி என்றால் கைலி கட்டி இருப்பான், கழுத்தில் கட்ச்சிப் இருக்கும் கருப்பாக இருப்பான் என்று சித்திரம் இருக்கும் தற்போது அது இஸ்லாமிய கலாச்சார தோற்றத்துக்கு வந்திருக்கிறது. அமைச்சர் மா.சுப்பரமணியம் கூட முதலில் வடமாநிலத்தவர் தான் குத்தினார் என்று வெறுப்பை உமிழ்ந்தார்.

இஸ்லாமபோபியா இயல்பாகி கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/share/p/qhcUsNhwNrX2tKzs/

கிண்டி மருத்துவமனை விவகாரம் - தாயின் விளக்கம் ....2023 ஜனவரி 10ம் தேதியில் இருந்து கிண்டி அரசு மருத்துவமனையில் பாலாஜி தா...
13/11/2024

கிண்டி மருத்துவமனை விவகாரம் - தாயின் விளக்கம் ....

2023 ஜனவரி 10ம் தேதியில் இருந்து கிண்டி அரசு மருத்துவமனையில் பாலாஜி தான் எனக்கு சிகிச்சை அளித்தார் .... 7 மாதங்கள் அங்கு சிகிச்சை பெற்றேன் .... சிகிச்சைக்கு செல்லும் போது ஏதேனும் சந்தேகம் கேட்டால் ஆங்கிலத்தில் திட்டுவார் .... ஏதாவது கேட்டால் நோட்டை தூக்கி அடிப்பார் ....

தாய் பாசத்தில் தான் என் மகன் இப்படி செய்துவிட்டான் ....

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாயார் பேட்டி ....

விக்னேஷ் செய்தது குற்றம் தான் .... மாற்றுக் கருத்தில்லை .... தண்டிக்கப்படனும் தான் .... ஆனால் இந்த மருத்துவர் பாலாஜி ???, அவர் செய்தது ???.

இப்படியான மனநிலைல தான் பெரும்பாலான டாக்டர்கள் இருக்கிறார்கள் .... நோட்டை தூக்கி அடிப்பானாமா !!!, கைய உடைக்கனும்னு சொல்லுவேன் ....

10/11/2024

தயவு செய்து அனுமதி கொடுங்க CM சார்! | முஸ்லீம் என்பதால் அனுமதி மறுப்பு

பாதுஷா மொய்தீன் - +91 93608 71605

M. K. Stalin DMK ITWing Piyush Manush

09/11/2024
வேலைக்கு வந்த சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற சைக்கோ நாய்கள்.இந்த கேடுகெட்ட  சைக்கோ நாய்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு...
04/11/2024

வேலைக்கு வந்த சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற சைக்கோ நாய்கள்.

இந்த கேடுகெட்ட சைக்கோ நாய்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..

01/11/2024

மருத்துவ உதவி தேவை..
அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

31/10/2024

"ஜெய் ஸ்ரீ ராம் போலேகா தோ கானா மிலேகா" .

இந்த சனாதான வாதிகள் ஏழைகளுக்கும் பசித்தோருக்கும் உணவளிப்பதில்லை.

மாறாக அவர்கள் வெறுப்பு, மதவெறி, வகுப்புவாதத்தை ஊட்டுகிறார்கள்.

சனாதானவாதிகளின் மலிவான, மோசமான, கேவலமான, கீழ்த்தரமான, இரக்கமற்ற, இழிவான, முட்டாள்தனமான பயங்கரவாதம் இது.

மருத்துவமனை வாசலில் வரியவர்களுக்கு உணவு தரும் இந்த சனாதான சங்கி ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் சோறு கொடுப்பானாம்.

இந்த நாட்டில் உடைத்தெறியப்பட வேண்டியது மத வெறி , இன வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் உடைத்தெறிந்தாலே ஊழல் அரசியல்வாதிகள் நம்மை வைத்து செய்யும் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி.

தமிழ் சினிமாவில் ஹபீபி அனைத்து தரப்பு மக்களையும் தன் வசப்படுத்தும் என நம்புகிறேன்..சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா...
25/10/2024

தமிழ் சினிமாவில் ஹபீபி அனைத்து தரப்பு மக்களையும் தன் வசப்படுத்தும் என நம்புகிறேன்..

சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக மட்டும் பார்த்த மக்களே மறக்காம ஹபீபி ரிலீஸ் ஆச்சுனா பார்த்துடுங்க..

தமிழ் சினிமாவின் மைல்கல் #ஹபீபி.
தமிழ்த் திரை மொழியில் இதுவரை பேசப்படாத வாழ்வியலை பேசி இருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் எதிர்மறையாக மட்டுமே சித்தரித்துப் பழகிய சினிமாக்களுக்கு மத்தியில், முஸ்லிம்களைப் பற்றி நேர்மறையாகப் பேசும் சித்திரம் ஹபீபி.

ஹபீபி கட்டாயம் வெல்லும்.
தமிழ்த் திரை உலகுக்கு புதிய வழியை சொல்லும்.






வாழ்த்துகள் தோழர்
#ஹபீபி ❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Sherif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share