G19 AMBUR

G19 AMBUR Welcome to G19Ambur on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.
(6)

படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻
16/08/2024

படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻

EV Royal Inn A/C Rooms Ambur For Booking 955 1277 955Luxury for All
16/07/2024

EV Royal Inn A/C Rooms Ambur
For Booking 955 1277 955
Luxury for All

வாணியம்பாடி தனியார் பள்ளி  பேருந்து திடீர் தீ பற்றி விபத்து.பேருந்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம...
12/01/2024

வாணியம்பாடி தனியார் பள்ளி பேருந்து திடீர் தீ பற்றி விபத்து.
பேருந்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

வாணியம்பாடி,ஜன.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை அழைத்து வர, போக பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து 44 மாணவர்களுடன் பேருந்து ஒன்று வெள்ளக்குட்டை கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் வந்த போது பேருந்தில் புகை வர தொடங்கியது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் கோவிந்தராஜ் உடனடியாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி அவசர அவசரமாக மாணவர்களை பேருந்து விட்டு கீழே இறக்கி உள்ளார்.

இதனிடையில் பேருந்து திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென எரியத் தொடங்கியதால் உடனடியாக ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதும் தீ பரவி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுனர் விரைந்து செயல்பட்டதால் மாணவர்கள் காயம்யின்றி உயிர் தப்பினர்.

PC : Noorul Ameen

ஆம்பூர் அருகே காப்பு காட்டு  பகுதியில் அழுகிய நிலையில் யானை சடலமாக மீட்பு. வனத்துறையினர் விசாரணை.வாணியம்பாடி,செப்.10- தி...
08/09/2023

ஆம்பூர் அருகே காப்பு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் யானை சடலமாக மீட்பு. வனத்துறையினர் விசாரணை.

வாணியம்பாடி,செப்.10- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லை, துருகம் காப்பு காட்டு, மாடு ஊட்டல் வனப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக ஆந்திர வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் உதவி வன அலுவலர் வினோத்(பொறுப்பு )
தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், இளவரசன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் காப்பு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த யானையை சுமார் 2 மணி நேரமாக உடற்கூறாய்வு செய்த பின்னர் காப்பு காட்டில் குழிதோண்டி புதைத்தனர்.

சம்பவம் குறித்து ஆம்பூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து யானை மர்மமான முறையில் இறந்து இருப்பதை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால்  காலமானார்ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭
08/09/2023

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭

🔥🔥🔥
30/08/2023

🔥🔥🔥

வாணியம்பாடி அருகே அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத...
28/08/2023

வாணியம்பாடி அருகே அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,ஆக.26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கம் தலைமையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அறிவித்தபடி தமிழக அரசு ஊழியர்களின் சிபிஎஸ் ஒழிப்புத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரியும், தவறும் பட்சத்தில் அடுத்த மாதம் சென்னையில் 72 மணி நேரம் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிபிஎஸ் இயக்கத்தின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

போராட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமு, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சற்குணகுமார், வட்ட பொறுப்பாளர் பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எனக்கும் விளையாட்டுகளுக்கும்  பல கிலோமீட்டர்கள்  தூரம்.  கிரிக்கெட், கால்பந்து பற்றியெல்லாம் பகிர்ந்ததுமில்லை, கருத்து ச...
27/08/2023

எனக்கும் விளையாட்டுகளுக்கும் பல கிலோமீட்டர்கள் தூரம்.
கிரிக்கெட், கால்பந்து பற்றியெல்லாம் பகிர்ந்ததுமில்லை, கருத்து சொன்னதுமில்லை !
ஆனால் இந்த சிறுவன் அடைந்திருக்கும் உயரம் என்னை பிரமிக்க வைக்கிறது. பலர் இப்படி ஒரு நிகழ்வு நடக்காததுபோலவே கண்டும் காணாமல் இருக்கும்போது நாமாவது வாழ்த்துவோம்.
நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்த இளம் தமிழனே , மேலும் வளர்க !

🥰🥰🥰11 ஆண்டுகளுக்கு முன்பு புதியதலைமுறை இதழுக்காக பிரக்ஞானந்தாவை பேட்டிகண்டேன். அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அ...
26/08/2023

🥰🥰🥰

11 ஆண்டுகளுக்கு முன்பு புதியதலைமுறை இதழுக்காக பிரக்ஞானந்தாவை பேட்டிகண்டேன். அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான். பேட்டி முழுக்க அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார்.

அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார். இந்தப்படத்திலும் அந்த அம்மாவின் ஆர்வத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்தவரின் தொடக்ககாலம் அது.

அவனுடைய அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு முழுவதுமாக அவனை சதுரங்கத்துக்கு ஒப்புகொடுத்தார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த பையனை மேலும் மேலும் முன்னேற்ற ஒவ்வொரு சர்வதேச போட்டிக்கும் ஸ்பான்சருக்காக அலைந்து திரிந்த அந்த அன்னையின் அலைச்சலைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அத்தனை அலைச்சல்களிலும் ஒருநாளும் மனதை தளரவிடாது விடாப்பிடியாக இருந்தார். எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருந்தார்.

இன்று மகன் மிக பெரிய உயரத்தை எட்டி இருக்கிறான். இரண்டாமிடம் என்றாலும் பிரக்யானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த #அம்மாவின் #உதிரமும் #உழைப்பும் #இருக்கிறது.

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது  மினி லாரி மோதி விபத்து. தாய் மகன் ஆகிய இருவர் பலி.வாணியம்பாடி,ஆக.5- வேலூர் மாவட்...
06/08/2023

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து. தாய் மகன் ஆகிய இருவர் பலி.

வாணியம்பாடி,ஆக.5- வேலூர் மாவட்டம் பல்லலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மனைவி சரிதா மற்றும் மகனுடன் சொந்த ஊரான பல்லலகுப்பம் பகுதியில் வசித்து வரும் நிலையில் சரிதா ஆம்பூர் அருகே உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று தொழிற்சாலை விடுமுறை என்பதால் ஒடுகத்தூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு தனது மகன் காமேஷை உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒடுகத்தூர் சாலை, குருவராஜபாளையம் பகுதியில் இருந்து மாதனூர் நோக்கி தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரிதா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த காமேஷை என்பவரை பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே காமேஷ் சிகிச்சை பலன்யின்றி பலியானார்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் மகன் இருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் பாரம்பரிய உணவு, கலாச்சாரம்,முன்னோர் பண்பாடு, அறம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஆம்பூரில் நற்பொருள் குவியமாக இயங்கி வருகிறு...
04/08/2023

நம் பாரம்பரிய உணவு, கலாச்சாரம்,முன்னோர் பண்பாடு, அறம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஆம்பூரில் நற்பொருள் குவியமாக இயங்கி வருகிறுது நல் அமுது இயற்கையகம். அத்துடன் குழந்தைகளுக்கான நிலாச்சோறு சிறுவர் நூலகம் & கதைக்களம், மரபு விதைகளுக்கான வங்கி, பாரம்பரிய மர பொம்மைகளுக்கான பாவை பொம்மைகள், பாலாறுவனம்: சமூக அமைப்பு போன்றவையும் நல் அமுதுவில் இணைகிறது.

இயற்கை சார்ந்த வாழ்வியலே அறம் சார்ந்த வாழ்வியல்..
வளமான ஆரோக்கியமான அடுத்த சந்ததிகளை உருவாக்குவோம் வாருங்கள்.இது அடுத்த தலைமுறைக்கான மையம்.

நிலாச்சோறு சிறுவர் நூலகம் & கதைக்களம் திறப்பு விழா.
நாள்: ஆகஸ்ட் - 5 - 2023, சனிக்கிழமை, நேரம் : காலை: 11.11 AM

உலக தாய்பால் வாரவிழாவையொட்டி பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச ஆலோசனை நிகழ்வு
நாள்: ஆகஸ்ட் - 6 - 2023, ஞாயிற்றுக் கிழமை, நேரம் - மாலை : 6PM to 7 PM

இடம் : நல் அமுது இயற்கையகம் , 34, S.K ரோடு,( பழைய நூலகம் எதிரில்), ஆம்பூர்.

அனைவரும் வருக நல் ஆதரவு தருக...அனுமதி இலவசம்

பெங்களூர் அருகே லாரியுடன் 2 ஆயிரம் கிலோ தக்காளி கடத்தி சென்று சென்னையில் விற்ற வாணியம்பாடி பகுதியை சேர்ந்த டீல் பாஸ்கர் ...
24/07/2023

பெங்களூர் அருகே லாரியுடன் 2 ஆயிரம் கிலோ தக்காளி கடத்தி சென்று சென்னையில் விற்ற வாணியம்பாடி பகுதியை சேர்ந்த டீல் பாஸ்கர் மற்றும் அவரது கள்ள காதலி கைது. தப்பி தலைமுறையாக உள்ள மூன்று பேரை போலீசார் தேடி வரகின்றனர்.

வாணியம்பாடி, ஜூலை.24- நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெண்கள் தக்காளி வாங்கி சாம்பாருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கே பார்த்தாலும் தக்காளிக்கான தேவை அதிகமாகவுள்ளது.விவசாயிகளிடம் இருந்து தக்காளி வாங்கும் இடைதரர்கள் விற்பனையாளர்களுக்கு அதிகம் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவை சேர்ந்த விவசாய போரலிங்கப்பா, தனது நிலத்தில் பயிர் செய்திருந்த 2 ஆயிரம் கிலோ தக்காளியை கோலார் நகரில் உள்ள தக்காளி சந்தைக்கு பிக்கப் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது அவரது பிக்கப் வாகனம் யஷ்வந்த் பூரில் உள்ள ஆர்.எம்.சி யார்டு அருகில் அதிகாலை வந்தபோது, பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் மினி லாரியை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் பிக்கப் வாகன ஒட்டுநரை வெளியில் இழுத்து தாக்கினர். அதை பார்த்து விவசாயி போரலிங்ப்பா வெளியில் வந்தபோது, அவரையும் தாக்கிய கும்பல், தன்னிடம் பணமில்லை என்று விவசாயி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கும்பல், பிக்கப் வாகனத்தில் தக்காளி இருப்பதை பார்த்ததும் அந்த லாரி ஒட்டுநரை தாக்கி விட்டு லாரியை கடத்தி சென்றனர்.

சம்பவம் குறித்து பிக்கப் வாகன ஓட்டுனர் ஆர்.எம்.சி யார்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிக்கப் வாகனத்தை கடத்தி சென்றது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியதை தொடர்ந்து, இதனை தொடர்ந்து கடந்த 8 நாட்களுக்கு முன்பு கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த டீல் பாஸ்கரின் கள்ள காதலியான சஞ்ஜிதா கைது செப்பப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் அதிகாலை வாணியம்பாடிடை சேர்ந்த பாஸ்கர என்கின்ற டீல் பாஸ்கர் என்பவரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தக்காளி இருந்த பிக்கப் வாகனத்தை கடத்தி சென்னைக்கு கொண்டு சென்று அதில் இருந்த தக்காளியை ரூ. 2 லட்சம் வரை விற்பனை செய்தபின், வாகனத்தை மீண்டும் பெங்களூரு கொண்டுவந்து விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஆர்.எம்.சி யார்ட் போலீசார் தப்பி தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

https://www.facebook.com/100064439391465/posts/671585904999383/?mibextid=cr9u03
24/07/2023

https://www.facebook.com/100064439391465/posts/671585904999383/?mibextid=cr9u03

♻️திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகைகள் அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டதாக 02 புகார் மனு பெறப்பட்டது.

♻️ ஆம்பூர் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு இத்திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட எதிரி சபீர் அஹ்மத் வயது 45, என்பவரை கைது செய்தும், எதிரியிடமிருந்து ரூபாய்.1,35,000/- மதிப்பிலான சுமார் 6.75 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

♻️ சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையினரை *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் IPS.,* அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

11/07/2023

உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்களா இந்த ஆபத்து உங்களையும் நெருக்க வாய்ப்பு இருக்கிறது கவனமாக #பாருங்கள் #பகிருங்கள்

11/07/2023

நாமும் மனது வைத்தால் நமது நகரத்தை சொர்க்கமாக மாற்றலாம் அதற்கு முதலில் நாம் மாற வேண்டும்

ஆம்பூர் அருகே பனங்காட்டேரி கிராமத்தின்வனப்பகுதியில் சுற்றி திரியும் டஸ்கர் என்னும் ஒற்றை யானை..
10/07/2023

ஆம்பூர் அருகே பனங்காட்டேரி கிராமத்தின்
வனப்பகுதியில் சுற்றி திரியும் டஸ்கர் என்னும் ஒற்றை யானை..

09/07/2023

🔥🔥💐💐💐😲

Address

Tiruppattur
635802

Alerts

Be the first to know and let us send you an email when G19 AMBUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G19 AMBUR:

Videos

Share

Category

G19News

Welcome to G19News on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.