Tirunelveli Pasanga La

Tirunelveli Pasanga La Tirunelveli Pasanga la ... tirunelveli gethu pasanga

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண மர்மத்தில் புதிய 'ட்விஸ்ட்'...கப்பல், விமானங்களை கபளீகரம் செய்...
21/12/2024

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண மர்மத்தில் புதிய 'ட்விஸ்ட்'...

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர்.

பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன் வைத்தனர். இதனால், அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அந்த கூற்றின் விபரங்களையும், அதைத்தொடர்ந்து இப்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய கூற்றையும் இந்த செய்தியில் காணலாம்.
🤔
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட கூற்றுப்படி, பெர்முடா முக்கோண கடல்பகுதியில் அடியில் ராட்சத பள்ளங்கள் இருப்பதாக நார்வே நாட்டை சேர்ந்த ஆர்டிக் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். நார்வே நாட்டையொட்டிய, வட மத்திய பாரன்ட் கடல்பகுதியில் இந்த ராட்சத பள்ளங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சில பள்ளங்கள் 800 மீட்டர் நீளமும், 150 அடி ஆழமும் கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் அபரிமிதமான மீத்தேன் படிமங்கள் நிறைந்துள்ளன. இந்தநிலையில், பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருக்கும் ராட்சத பள்ளங்கள் வழியாக அந்த மீத்தேன் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அந்த கசிவின்போது பள்ளங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், கடல் நீரின் அடர்த்தியை குறைத்து கப்பல்கள் மிதக்க முடியாத நிலையை ஏற்பட செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த பள்ளங்களிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு காரணமாகவும், அபரிதமான வெப்பம் காரணமாகவும் அந்த பகுதியில் செல்லும் விமானங்களும், கப்பல்களும் விபத்தில் சிக்குவதாக தெரிவித்திருந்தனர். இந்த ராட்சத பள்ளங்களிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு காரணமாக கப்பல்கள் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொண்டாலும், விமானங்கள் மாயமாவது குறித்த குழப்பம் நீடித்தது.

இந்த நிலையில், கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாவதற்கான புதிய காரணத்தை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொலராடோ பல்கலைகழகத்தின் வானியல் செயற்கைகோள் ஆய்வாளரான ஸ்டீவ் மில்லர் கூறுகையில்,' பொதுவாக மேகங்கள் சீரற்ற வடிவத்திலேயே படர்ந்திருக்கும். ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் விந்தையான வடிவத்தில் மேகங்கள் காணப்படுகின்றன.

அறுங்கோண வடிவத்தில் காணப்படும் இந்த மேகங்கள் பெர்முடா முக்கோண பகுதியின் மேற்கு பகுதியில் படர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 30 கிமீ முதல் 90 கிமீ பரப்பளவில் இந்த மேகங்கள் காணப்படுகின்றன. இந்த அறுங்கோண வடிவ மேகங்களுக்கு கீழே கடல் பகுதியில் மணிக்கு 170 மைல், அதாவது மணிக்கு 273 கிமீ வேகத்தில் தீவிர சூறாவளிகள் ஏற்படுகின்றன. இந்த சூறாவளி காற்றானது சீராக இல்லாமல், கடல் மட்டத்திலிருந்து காற்று பந்துகள் போன்று உருவாகி அந்த பகுதியில் தீவிரமாக வீசுகின்றன.

இந்த காற்று பந்துகளானது கடல் மட்டத்திலிருந்து மேல் எழும்பி மீண்டும் கீழ் நோக்கி திரும்புகின்றன. அப்போது 45 அடி வரை பெரும் நீர் சுழற்சி ஏற்பட்டு ராட்சத கடல் அலைகள் உருவாகின்றன. மேலும், அந்த காற்று பந்துகளானது, வெடிகுண்டுகள் போல உருவாகி, அந்த பகுதியில் செல்லும் கப்பல் மற்றும் விமானங்கள் நிலைகுலைந்து கடலில் வீழ்ந்துவிடுகின்றன.

அறுங்கோண மேகத்திற்கு கீழ் இருக்கும் பகுதிகளை செயற்கைகோள் மூலமாக ஆய்வு செய்தபோது இந்த தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். காற்று பந்துகள்தான் வெடிகுண்டுகள் போல மாறி, கப்பல், விமானங்களை தாக்குவதாகவும் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த கூற்றை ராண்ட் செர்வனி என்ற வானியல் ஆய்வாளரும் ஆமோதித்துள்ளார். இது உண்மையான காரணமா அல்லது இதுவும் நூற்றாண்டு காலமாக பெர்முடா முக்கோணத்தின் மீது வைக்கப்படும் வெற்று கூற்றாக மாறிவிடுமா என்பதை உறுதிப்படுத்த அடுத்த கூற்று வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

🛥

வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி[வடக்கு புளோரிடா] மற்றும் போர்டோ ரிகா தீவு பகுதிகளுக்கு இடையிலான முக்கோண வடிவிலான கடல் பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைக்கின்றனர். இது 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்ட அபாயகரமான பகுதி.

இந்த கடல் பகுதியை கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதுவரையில் 40 கப்பல்களும், 20 விமானங்களும் இந்த பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. எனவே, இதனை சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அதீத காந்த விசை காரணமாக, விமானங்களும், கப்பல்களும் கவர்ந்து உள்ளிழுக்கப்படுவதாக இதுவரை கருதப்பட்டு வருகிறது. வேறு சிலர் அந்த பகுதியில் ஏற்படும் சூறாவளி காரணமாக கப்பல்கள் காணாமல் போவதாக கூறுகின்றனர். ஆனால், யாருமே ஊர்ஜிதமான முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு மர்ம கடல் பிரதேசமாக இருக்கிறது பெர்முடா முக்கோணம்.

வரலாற்றில் பெர்முடா முக்கோணத்தில் பதிவான முதல் விபத்து 1908ம் ஆண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1918ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சொந்தமாக யுஎஸ்எஸ் சைக்கிளோப்ஸ் என்ற கப்பல் இந்த பகுதியில் காணாமல் போனது. இந்த கப்பலில் பயணித்த 306 பேரின் கதி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. எவ்வித தடயமும் சிக்கவில்லை.

கடந்த 1950ல் இருந்து 1975ம் ஆண்டு வரை 428 கப்பல்களும், படகுகளும் இந்த பகுதியில் மாயமாகிவிட்டதாக ஒரு தகவல் கூறி, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. 1945ம் ஆண்டில் பெர்முடா முக்கோண பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தை தேடுவதற்கு அனுப்பப்பட்ட குழுவினர் சென்ற விமானமும் மாயமானது. இதுபோன்று, பெர்முடா முக்கோணத்தை ஆய்வு சென்ற குழுவினரின் கப்பலும் மாயமானது. இந்த பகுதியில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால்தான் விமானங்களும், கப்பல்களும் மூழ்குவதாக கருதப்படுகிறது.

பெர்முடா முக்கோணத்தின் வழியாக சென்று கடந்த ஒரு சிலரும், அந்த பகுதியில் திடீர் ஒளிக்கீற்றுகள் தென்பட்டதாகவும், திசைக்காட்டி கருவிகள் செயல் இழுந்து போவதாகவும் கூறியிருக்கின்றனர். இது விஞ்ஞானிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே தவிர, உருப்படியான முடிவுக்கு வர முடியவில்லை.

கடந்த ஒரு நூற்றாண்டில் ஆயிரம் உயிர்களை காவு வாங்கி அமைதி காத்து வரும் பெர்முடா முக்கோணம் பற்றி விரிவான ஆய்வுகளும் தொடர்ந்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இப்போது கூறப்பட்டுள்ள கூற்றுதான் இறுதியானதா அல்லது வேறு காரணங்களுடன் ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது தொடர்கதையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையைப் பயன்படுத்தி ஆற்றின் அடியில் மூழ்கும் அசீரியப் படைவீரரின் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு  ப...
20/12/2024

ஊதப்பட்ட ஆட்டுத்தோல் பையைப் பயன்படுத்தி ஆற்றின் அடியில் மூழ்கும் அசீரியப் படைவீரரின் 3,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு
பிரிட்டிஷ் பழங்கால அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அஸ்வினின் இன்று திடீர் முடிவுக்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது .இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் ஏதோ ஒரு வ...
19/12/2024

அஸ்வினின் இன்று திடீர் முடிவுக்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது .

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் இந்த திடீர் முடிவை அஸ்வின் எடுக்கத்தக்க விதத்தில் தாக்கம் செலுத்தி இருக்கிறார்.

கிரிக்கெட்டை ஆழமான அறிவோடு நோக்குவீர்களாக இருந்தால் அவரை அடையாளப்படுத்தலாம் 🤝

யார் என்று கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள் பார்க்கலாம் 👇

என்னையா நடக்குது நம்ம ஊர்ல.. கேரள மாநில மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி வந்தது எப்படி??🥺
17/12/2024

என்னையா நடக்குது நம்ம ஊர்ல.. கேரள மாநில மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி வந்தது எப்படி??🥺

என்னையா நடக்குது நம்ம ஊர்ல.. கேரள மாநில மருத்துவ கழிவு திருநெல்வேலி வந்தது எப்படி??🥺
17/12/2024

என்னையா நடக்குது நம்ம ஊர்ல.. கேரள மாநில மருத்துவ கழிவு திருநெல்வேலி வந்தது எப்படி??🥺

தேங்கி நிற்கும் மழைநீரை மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு..
15/12/2024

தேங்கி நிற்கும் மழைநீரை மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு..

குந்தாணி என்பது நாம்   உரலில் நெல்லு கம்பு சோளம் போன்ற தானியங்களை  போட்டு  குத்தும்போது உரலுக்கு மேலே குத்தும் போது தானி...
14/12/2024

குந்தாணி என்பது நாம் உரலில் நெல்லு கம்பு சோளம் போன்ற தானியங்களை போட்டு குத்தும்போது உரலுக்கு மேலே குத்தும் போது தானியங்கள் சிதறாமல் இருக்கு ஓர் அகன்ற உரலை விட கொஞ்சம் வாயகன்ற மரத்தால் அல்லது மண்ணால் ஆன பாதுகாப்பு கவசம் குந்தாணி பண்டைய காலங்களில் மக்கள் அதிகம் உபயோகித்த பயன்பாட்டில் இருந்த ஓர் உன்னதமான அரிய பொருளே குந்தாணி

ஆனால் கொஞ்சம் குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்றும் அழைத்தனர் ஏன் அப்படின்னா உரலை விட அகன்ற வடிவில் இருப்பதால் உரல் உடுக்கை வடிவமாக இருக்கும் உரல் பெரும்பாலும் கல் கொண்டே செதுக்கினார்கள் மரத்தாலும் செய்வாங்க உரல்

இதில் குத்திய அரிசி போட்டு மாவும் இடிப்பார்கள் இதனுடன் பனங் கருப்பட்டி நன்கு காய்ச்சிய பாகு பதத்தில் சேர்த்து அரிசி மாவுடன் செய்வதே பச்சைமாவு

நன்றாக வறுத்த எள் பனங்கருப்பட்டி கொண்டு உரலில் இடித்தால் பத்து வீடு தள்ளி மணக்கும்முங்க
கோயில் விழாக்கள் பண்டிகைகள் என்றால் அன்றைய கிராமத்து வீடுகளில் விடிய விடிய உரலில் நெல் அரிசி குத்தும் வேலை அதிகம் இருக்கும்

இன்றும் புதிய வீடுகள் கட்டுபவர்கள் அம்மி ஆட்டுக்கல் உரல் அனைத்தும் வைக்கிறாங்க வீட்டுக்கு வெளியில்

ஒருகாலத்தில் மழைமாணி இது தானுங்க
உரல் அளவு மழை நீர் நிரம்பினால் ஓர் உழவு இரண்டு உழவு என்றும் அரை உரல் நிரம்பினால் அரை உழவு மழை என்றும் கணிப்பார்கள் ஊர் பெருசுகள்

கிராமத்தில் ஒரு பழமொழி இருக்குமுங்க முறை பெண்களை இப்படித்தாணுங்க சொல்லுவோம்

மாமன் புள்ளை மந்தாணி

அத்தை புள்ளை குந்தாணி

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த உரலும் குந்தாணியும் உலக்கையும் இப்போது எங்கே என்று தேட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய காலத்து மக்கள்

என்ன இருந்தாலும் நமக்கு சோறு முக்கியம் இல்லீங்களா அதற்கு தானுங்க கீழே உள்ள புகைப்படம்

அபிநயம் சொந்தங்களே தெரிந்து கொள்ளுங்கள்,🙏🌳🌹😄🤣😄😭🌹🌹🌳🙏🙏

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க...
14/12/2024

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,
அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார்.

குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை.

மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது".

இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான்.

முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.
"இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், உன் வேலை பறி போய் விடும்"
என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான்,
"933005 கனடியன் டாலர்

அதிர்ச்சியடைந்த முதலாளி,
"அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.

"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால்,

நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்
படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்
பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,
தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார்,
"ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன்,
ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்".

இப்படித்தான் இருக்கிறது...😁😁😁😂😂

பனைஓலை கொளுகட்டை...💚தென்மாவட்ட மக்களுக்கு  மட்டுமே இதன் அருமை தெரியும்..
13/12/2024

பனைஓலை கொளுகட்டை...💚
தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..

குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!  |   |   |
13/12/2024

குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

| | |

எவ்வளவு அழகான நாட்கள்.மறக்க முடியாதவை. காலியான தீப்பெட்டியில் அடைத்து வைத்து,புல் இலை எல்லாம் போட்டு தினமும் அதை திறந்து...
13/12/2024

எவ்வளவு அழகான நாட்கள்.மறக்க முடியாதவை. காலியான தீப்பெட்டியில் அடைத்து வைத்து,புல் இலை எல்லாம் போட்டு தினமும் அதை திறந்து குட்டி போட்டுதானு பார்க்கிறது. குறிப்பிட்ட சில செடிகளில் அதிகம் காணப்படும் எனவே அதை தேடி ஓடுறது.ஐந்து பைசா கொடுத்து யாரிடமாவது இன்னொரு பூச்சி வாங்கி பெட்டியில் அடைத்துவிட்டு
என்னுடையது குட்டி போட்டிருச்சுனு ச சொல்லி சந்தோசப்பட்ட நாட்கள் மறக்க முடியாதவை...

நெல்லை Rain🥰
13/12/2024

நெல்லை Rain🥰

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் டி.குகேஷ்!
13/12/2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் டி.குகேஷ்!

இந்தியாவை காப்பாத்தனும்ன்னா சச்சினோட 241 பாத்து கத்துகிட்டு வாங்க.. கோலிக்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ...
12/12/2024

இந்தியாவை காப்பாத்தனும்ன்னா சச்சினோட 241 பாத்து கத்துகிட்டு வாங்க.. கோலிக்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரை வெல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்திய நியூசிலாந்து தொடர் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் இத்தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இரண்டாவது போட்டியில் மீண்டும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

சச்சின் போல:
குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசும் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக அவுட்டாகி வருகிறார். இந்நிலையில் அதை தவிர்க்க 2004 சிட்னி போட்டியில் சச்சின் 241* ரன்கள் குவித்த ஆட்டத்தை பார்த்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ஆலோசனை தெரிவித்துள்ளார். இப்போதைய விராட் கோலி போல அந்தத் தொடரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் சச்சின் தொடர்ந்து அவுட்டானார்.

அதனால் தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்காமலேயே வைராக்கியத்துடன் விளையாடிய சச்சின் ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டு 241* ரன்கள் குவித்தார். எனவே இப்போது இந்தியாவை காப்பாற்ற விராட் கோலி அதே போன்ற ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டுமென்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு”

கில்கிறிஸ்ட் ஆலோசனை:
“சில நேரங்களில் எதிரணி பவுலர் அல்லது திறனுக்கு எதிராக போராடுவதை விட உங்களுடைய காதுகளுக்கு இடையே போராடுவதே பெரிய போட்டியாக இருக்கும். விராட் எந்த உணர்வையும் துரத்த பரிந்துரைக்கவில்லை. ஆனால் சிட்னியில் சச்சின் செய்ததை அவர் முயற்சிக்க வேண்டும். அதற்காக அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் வரும் பந்துகளை நாம் துரத்த போவதில்லை. நீ என்னிடம் வா, பொறுமையாக விளையாடு என்ற வகையில் பேட்டிங் செய்ய வேண்டும்”

“அதை மனதளவில் செய்வதற்கான அனுபவம் அவரிடம் இருக்கிறது. அவர் அண்டர்-19, ஐபிஎல் அளவில் இருந்த எதிர்பார்ப்புகளை தாண்டி தான் தற்போது நட்சத்திரமாக வந்துள்ளார். அதனால் என்னுடைய அணிக்காக பொறுமையுடன் விளையாட வேண்டிய நிலை வந்துள்ளது என்று அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ள வேண்டும். அப்படி நீண்ட நேரம் விராட் கோலி விளையாடினால் அசத்துவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று கூறினார்.

இந்த ஹோட்டல் உரிமையாளரை வாழ்த்தலாமே 👏🏼👏🏼👏🏼
12/12/2024

இந்த ஹோட்டல் உரிமையாளரை வாழ்த்தலாமே 👏🏼👏🏼👏🏼

பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு! இது ஊட்டச்சத்து மந்திரம்...
11/12/2024

பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு! இது ஊட்டச்சத்து மந்திரம்...

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!...
10/12/2024

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!

நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்....

இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?

ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது..

இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..

ஆனால் உண்மையில் அறிவியலுக்காக..

Address

Tirunelveli
Tirunelveli
627001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli Pasanga La posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirunelveli Pasanga La:

Videos

Share