Basic_tamizha_official

Basic_tamizha_official Youtube channel : BASIC TAMIZHA

https://youtu.be/norFSpFcZIs
08/10/2022

https://youtu.be/norFSpFcZIs

இந்த சேனலில் நீங்கள் காணக்கூடிய வீடியோக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவுசெய்து இந்த சேனலை"SUBSCRIBE"-செய்துவிட...

29/09/2022

*பொன்முடி எபெக்ட்*
நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என டிக்கெட் கேட்டு நடத்துநரிடம் சண்டையிடும் மூதாட்டி

21/09/2022

மதுரை பல்கலைநகர் அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அந்த பால் பாக்கெட்டில் 'ஈ' ஒன்று இறந்து கிடந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த பால் பாக்கெட்டை அந்த டெப்போவில் அவர் திரும்பக் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து அந்த டெப்போவிற்கு வந்த அதிகாரிகள் இது குறித்து படங்களைச் சமூகவலைதளங்களில் பதியாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளனர். அதற்கு முன்பே இந்த வீடியோ மதுரை பகுதியில் வெளியாகி வைரலாகிடுச்சு.

#தமிழ் #ஆவின்

18/08/2022

#நெல்லை #நெல்லைகண்ணன் நெல்லை மண்ணின் பேச்சாற்றல் இமயம் சரிந்தது..‌!புகழ் பெற்ற பேச்சாளர், காமராஜர் அவர்களின் விசுவாசி.ஐயா.திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

17/08/2022

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசரமாக செல்லும் 108 ஆம்புலன்ஸ்யின் அவல நிலை தனியார் பேருந்துகள் அட்டகாசம்....

08/04/2022

கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள பஜாஜ் பைக் ஷோரூம் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான வாகனம் பொருட்கள் எரிந்து நாசம்

கரூர் தீயணைப்புத்துறை 2 வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்

08/04/2022

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மினி பேருந்து ஒன்று தராசுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அடிக்கடி பழுதாகி நின்று சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த இளைஞர் தாராசுரம் மார்கெட் நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார். இந்நிலையில்,
மினி பேருந்து எலுமிச்சங்காய் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞர் பேருந்தை நிறுத்தி, பட்டாகத்தியுடன் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரையும், நடத்துனரையும் வெட்டுவது போல் மிரட்டி அவர்களை தாக்கியுள்ளார்.

இது பேருந்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் கும்பகோணத்தை சேர்ந்த ஹரி என்பது தெரியவந்துள்ளது.

06/03/2022

மேலூர் 17வயது சிறுமி யோகலெட்சுமி கூட்டு பாலியல் பலாத்கார மரணத்திற்கு

நீதி கேட்டு திண்டுக்கல் மாநகரில் போராடிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

#தமிழ்

02/03/2022

நெல்லை மாநகராட்சி பதவி ஏற்பு விழா நேரலை

15/02/2022

#தேமுதிக 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நேதாஜிபாலமுருகன் என்பவர் பொது மக்களுக்கு இலவசமாக துணி தைத்து கொடுத்தும், அயன் செய்தும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டும் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். விதவிதமாக பணி செய்து வாக்கு கேட்ட நேதாஜி பாலமுருகனிடம் வாக்காளர் ஒருவர் உங்கள் சின்னம் பம்பரம் தானே போட்டு விடுகிறேன் என்று கூறியதால் அதிர்ச்சியடைந்தார்.

              நெல்லை மாநகராட்சி அரசு பள்ளியில், அதுவும் ஒரே பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசுப...
29/01/2022



நெல்லை மாநகராட்சி அரசு பள்ளியில், அதுவும் ஒரே பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசுப்பள்ளிக்கான 7.5 ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது . இதில் கலந்துகொண்ட திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் அரசுப்பள்ளியில் பயின்று, நீட் தேர்வு எழுதி, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். நெல்லை டவுனில் செயல்படும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 4,363 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் 90 சதவிகித மாணவிகள் பொருளாதார அளவில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.


இந்தப் பின்னணியில் பயின்று அரசு பள்ளியிலேயே நடத்தப்பட்ட நீட் தேர்விலும் வெற்றிபெற்று இன்று மருத்துவ கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய மூவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவையிலுள்ள பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரிக்கும், அப்ரின் பாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து கல்லணை அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் நாச்சியார் ஆனந்தபைரவி, ‘’கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பயிற்சியை தொடங்கி விட்டோம். கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மட்டும் 32 மாணவிகள் கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு பயின்று வந்தனர். இன்றைய மருத்துவ கலந்தாய்வில் ஏழு பேர் அரசுப் பள்ளிக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். இது பள்ளி மாணவிகளுக்கும், நீட் தேர்வு பயிற்சியை தடையின்றி வழங்கிய ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றி. மாணவிகளுக்கு தேவையான அரசின் இலவச பயிற்சி கொடுக்கும் உதவியை மட்டுமே நாங்கள் செய்தோம். மாணவிகளின் ஒத்துழைப்பும், நீட் பயிற்சி ஆசிரியரின் அர்ப்பணிப்பும்தான் இந்த வெற்றிக்கு காரணம் ’’எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியும், மாணவிகளின் சுய ஆர்வமுமே காரணம் என்கிறார் நீட் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பு ஆசிரியர் வராகி. கடந்த ஆண்டும் இதே கல்லணை அரசு பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகள் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த முறை எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், நம்பிக்கையையும் அடுத்த கட்டத்திற்கான தைரியத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது என்றார்.

24/01/2022


*நடிச்சுகிட்டு திறிகிறான் பறப்பய!*

புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி வட்டார கல்வி அலுவலத்தில்... உள்ளே நுழைந்த ஆசிரியை தனக்கு ஊக்கதொகை வழங்காததை கேட்டு சென்றபோது, அலுவலகத்தில் உள்ள கண்ணி மற்றும் அரசு கோப்புகளை கீழே தள்ளியும், கல்வி அமைச்சரை அவதூறக பேசியும், வட்டார கல்வி அலுவலரை நடிச்சுகிட்டு திரியிறான் பறப்பய என்றும் ஜாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித்துறையை ஆசிரியை மீது உடனடியாக பணியிடை நீக்க நடவடிக்கையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும்,புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் விடுலைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது .

ஆசிரியர் பெயர்- தைலம்மை
உதவி ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மனமேல்குடி

22/01/2022



*மும்பை : Tardeo பகுதியில் 20 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து, 7 பேர் உயிரிழப்பு 15 பேர் காயம்*

22/01/2022

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாகப் பேசினாலோ, சத்தமாகப் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்கப்படும்..

இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது.

நள்ளிரவில் சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் சத்தமாக பேசக்கூடாது..

-ரயில்வே அறிவிப்பு.

20/01/2022

⚔️

நெல்லை டவுணில் தற்போது தெப்பதிருவிழா நடைபெறுகிறது

20/01/2022



நெல்லை டவுனில் நகை கடை சூறையாடல் என தகவல் விசாரித்து கொள்ளவும்

20/01/2022

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனையானது நடைபெறுகிறது.

Address

MOC Complex, High Ground
Tirunelveli
627011

Alerts

Be the first to know and let us send you an email when Basic_tamizha_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basic_tamizha_official:

Videos

Share