07/08/2022
. இறைவன்
இறைவன் மனிதர்களுடன் நேரடியாக உரையாடுவதில்லை காரணம் இறைவன் நேரடியாக மனிதனுடன் உரையாடினால் அவன் நடுநிலை தவறியவன் ஆகிவிடுவான் தவிர அவன் பலஹீனனும் ஆகிவிடுவான்
இறைவன் மனிதனுடன் உரையாடி மனிதனின் தயவுடன் தான் அவன் விரும்பியதை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளவனும் அல்ல
இறைவனே அனைத்து படைப்புக்களுக்கும் அதன் வழி அனைத்து இயக்கங்களுக்கும் பொறுப்பாளி அவன் ஒண்றும் அப்பாவியல்ல அவனால் திட்டமிடப்படாத எவையும் இந்த பிரபஞ்சத்திலேயே இடம்பெறுவதில்லை
மனிதன் ஒருவனை ஒருவன் சோதிக்கின்றான் என்றால் அவனை இவனுக்கும் இவனை அவனுக்கும் தெரியாது அதனால் நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளவே சோதிக்கின்றான் என்று அர்த்தமாகிவிடும் இறைவன் மனிதனை சொதித்து அறிந்து பொறுப்புக்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளவனல்ல
இந்த இயற்கையை இறைவன் முரன்பாடுகள் நிறைந்த தாகவே படைத்திருந்தாலும் இறைவன் நடுநிலையானவன் அவன் யார் பின்னும் சென்று ஒருவரை ஒருவருக்கு அடிமையாக்கி ஒருவனையும் அவன் சார்ந்த சுயநல தேவைகளையும் அவனுடைய மொழியின கலாச்சாரத்தை உயர்வாக்கி மற்றவர்களை அவனுக்கு அடிபணிய வைப்பவனுமல்ல
ஆனாலும் மனிதர்கள் இந்த இயற்கையை தமது அறிவு ஞானத்துள் கொண்டுவந்து இறைவன் போலவே பேசியுள்ளார்கள் உதாரணம் பஹவத்ஹீதை உண்மையில் மிகுந்த ஆழமான அறிவியல் உண்மைகள் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை
வேதங்கள் அரசர்களைக்கூட கட்டுப்படுத்தும் அரசியல் அமைப்புக்கள் மற்றும் சிவில் சட்டங்கள் தவிர இன்ன பல அறிவியல்கள் அடங்கியுள்ள அற்புதம் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது
மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆன்மாக்களைத்தான் சாட்சியாக வைத்து அனைத்து காரியங்களையும் செய்து வந்தனர் அவர்களையே இறைவனாகவும் போற்றினார்கள் என்பதே மிகப்பெரிய உண்மைகள் ஆகும்