Vsk Dakshin Tamilnadu

Vsk Dakshin Tamilnadu for Patriotism தேசபக்தி
(13)

21/06/2024

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிழக்கு லடாக்கில் பாரத ராணுவ வீரர்கள் யோகாசனம் செய்தனர்

21/06/2024

அருணாச்சல பிரதேசத்தில் எல்ஏசி அருகே பாரத ராணுவ வீரர்கள் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்

21/06/2024

சீன எல்லைப் பகுதியானபாங்காங் த்சோ ஏரியின் அருகில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிய பாரத ராணுவம்

21/06/2024

ஜம்மு & காஷ்மீரில் செனாப் ஆற்றில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை கடக்கும் முதல் ரயில்

ஜம்மு - காஷ்மீரில், செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் மீது, சங்கல்தான் - ரியாசி இடையே ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

21/06/2024

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது

21/06/2024

🔴நேரலை: International Yoga day 2024 Tamil Version

21/06/2024

🔴நேரலை: சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில், பூஜனிய  சந்நியாசி ஜகஜீவன் ஜி மகராஜ் சரஸ்வதி சிஷீ மந்திர் பள்ளியில் நடைபெற்ற கார்த்யகர்த்தா...
20/06/2024

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில், பூஜனிய சந்நியாசி ஜகஜீவன் ஜி மகராஜ் சரஸ்வதி சிஷீ மந்திர் பள்ளியில் நடைபெற்ற கார்த்யகர்த்தா விகாஸ் வர்க 1 முகாமில் பரமபூஜினிய டாக்டர் மோகன் பகவத் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

சிஎஸ்ஐஎஸ் (CSIS) புத்தக வெளியீட்டு விழா சிஎஸ்ஐஎஸ் (CSIS) (centre for south indian studies) என்னும் அமைப்பானது “மெட்ராஸின...
20/06/2024

சிஎஸ்ஐஎஸ் (CSIS) புத்தக வெளியீட்டு விழா

சிஎஸ்ஐஎஸ் (CSIS) (centre for south indian studies) என்னும் அமைப்பானது “மெட்ராஸின் முதல் பூர்வீக குரல்: காசுலூ லக்‌ஷ்மிநரசு செட்டி” என்ற புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த திரு.குமரேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை முன் நின்று நடத்தினர். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது :-

நாட்டின் சுதந்திரத்திற்காகத் தனது 25ஆவது வயதில் இன்னுயிரை ஈந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இந்த இடத்தில் அவருக்கு என் மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டில் நமது தாய்வழி கல்வி நிலையங்களை மூடிவிட்டனர். இதன் காரணமாகவே நாம் கல்வி கற்க முடியாத சூழல் உருவானது. அப்போது வள்ளலார் தான் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நமது நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார். அவரது சேவையை மறக்க முடியாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகே சாதி என்பது இந்தியாவிற்குள் நுழைந்தது. நமது கல்வி முறையையும் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர். “1823ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அளிக்கப்பட்டு நமது தாய் வழிக் கல்வி ஆராயப்பட்டது. அப்போதே ஜாதி, மத, பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மெட்ராஸ் மாகாணத்தில் பல மொழி பேசுவோர் இருந்தனர். இதனால் தமிழ், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என தனித்தனியாக ஒவ்வொரு தரப்பினருக்கு ஏற்றார் போலக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இதற்கான ஆதாரம் எல்லாம் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1820களில் நம் சமூகத்தில் இருந்த கல்வி முறையில் மாணவர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கல்வி முறை சிறப்பாக இருந்தது பாடத்தில் மொழி, இசை, ஓவியம் என்று பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த கல்வி முறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தனர்.

மேலும், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு நமது நாட்டில் சாதிகள் இல்லை. பிராமண, சத்திரிய, வைஷ்ணவ, சூத்திர என 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன. இதை இங்குத் தவிர முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆனால் அப்போது நமது நாட்டில் சாதி இல்லை.

கல்வி கற்றுத் தருவதை புண்ணியம் எனக் கருதப்பட்டது. இதனால் கல்வி கற்பிப்பதை அன்று அவர்கள் வணிகமாகக் கருதவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த பிரமாணர்களால் கல்வி கற்றுத் தரப்பட்டது. ஆசிரியர்களுக்கு வாழத் தேவையான உதவிகள் மட்டுமே சமூகத்தால் செய்து தரப்பட்டன. சிறப்பாக இருந்த நம் கல்விமுறையை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்து திட்டமிட்டு அழித்தார்கள். 1823ஆம் ஆண்டிலேயே நமது 630 பள்ளிகள், 69 கல்லூரி தரத்திலான பள்ளிகள் இருந்துள்ளன” என்றார். மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள்: மேலும், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் வாய்ப்பை பாடமாக்குவேன் என்ற அவர், 20ஆம் நூற்றாண்டில் இருந்தே சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்வு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக என்ன தியாகங்கள் செய்தனர் என்பது பலரால் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும் அவர் பேசினார்.

19/06/2024
நாளந்தா பல்கலைக்கழகம் மீட்டுருவாக்கம்முகமது பக்தியான் கில்ஜி படையெடுப்பால் இடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான நாளந்தா பல்...
19/06/2024

நாளந்தா பல்கலைக்கழகம் மீட்டுருவாக்கம்

முகமது பக்தியான் கில்ஜி படையெடுப்பால் இடிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தை பாரத அரசாங்கம் மீட்டுருவாக்கம் செய்துள்ளது பீகார் மாநிலம் ராஜ் கிரில் உள்ள நாளாந்த பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பாரத பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.

அந்நியர்கள் படையெடுப்பால் இடிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் யுனெஸ்கோ பிரதான சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே நவீன வசதிகள் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது

நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பாரத பிரதமர் மோடி.பாட்னா:  பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கல...
19/06/2024

நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பாரத பிரதமர் மோடி.

பாட்னா: பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1700 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை இன்று( ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள், பல்கலை., பேராசிரியர் அபய் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்கலை., பேராசியர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் அவர், பல்கலை., வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளந்தா பல்கலை., நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

19/06/2024

ஹர ஹர மஹாதேவ் #शंखनाद #சங்குஒலி

19/06/2024

சத்ரபதி சிவாஜி ஒரு சகாப்தம் || ஹிந்து சாம்ராஜ்ய தினம்

19/06/2024

ஹிந்து சாம்ராஜ்ய தினம்

'தி பர்ஸ்ட் வாய்ஸ் ஆப் மெட்ராஸ்' காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி' புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள...
18/06/2024

'தி பர்ஸ்ட் வாய்ஸ் ஆப் மெட்ராஸ்' காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி' புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் உரை

கோரக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பதசஞ்சலன்: உத்திரப் பிரதேசம் (வடக்கு மண்டலம்) ஆர்.எஸ்.எஸ். கார்யகர்தா விகாஸ் வர்க (முதல் வருடம்...
16/06/2024

கோரக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பதசஞ்சலன்:

உத்திரப் பிரதேசம் (வடக்கு மண்டலம்) ஆர்.எஸ்.எஸ். கார்யகர்தா விகாஸ் வர்க (முதல் வருடம்) கோரக்பூரில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயிற்சி முகாமிற்கு வந்துள்ள ஸ்வயம்சேவகர் களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத் அணிவகுப்பு ஊர்வலத்தை பார்வையிடுகிறார்.

10/06/2024
 ே_சுப்பிரமணியஐயர்   திருச்சி, வரகனேரியில் ஜூன் 3, 1881ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பி.ஏ. ப...
02/06/2024

ே_சுப்பிரமணியஐயர்

திருச்சி, வரகனேரியில் ஜூன் 3, 1881ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பி.ஏ. பட்டம் பெற்றார். மாகாணத்தில் முதல் மாணவராகத் தேறினார். சென்னையில் சட்டம் படித்து சென்னை ஜில்லா கோர்ட்டில் வக்கீல் தொழில் புரிந்தார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1907-ல் லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. ரகசியமாக நடத்தி வந்த
அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.

ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார்.

பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.

அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்று தமிழ் மொழி செழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார்.

1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.

இங்கு நன்னெறி, அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய வற்றுடன் உடல் வலிவூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை.

இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு.

சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக் கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும் தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார்.

#சான்றோர்தினம்

 #அஹில்யாபாய்ஹோல்கர்   மே 31, 1725 அகமத் நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர். அகில்யாபாயி...
30/05/2024

#அஹில்யாபாய்ஹோல்கர்

மே 31, 1725 அகமத் நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர். அகில்யாபாயின் கணவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார்.

தன்னுடைய அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார்.

துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார்.
அகில்யாபாய் கட்டிடக்கலை நுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இந்தோர், மகேசுவர் பகுதிகளில் பல கோயில்களை நிறுவினார். இவருடைய ஆட்சிப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கோயில்கள், தர்மசாலை எனப்படும் ஓய்வு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கினார்.

இந்துக்களின் முக்கிய தளமான குஜராத்திலுள்ள துவாரகை முதல், கங்கை நதிக்கரையிலுள்ள காசி விசுவநாதர் கோயில் வரையிலும், உஜ்ஜையின், நாசிக், விஷ்ணுபாத் கோயில், கயா மற்றும் பாராலி பைஜ்னாத் ஆகிய மகாராட்டிரப் பகுதியிலும் கோயில்களை கட்டினார். சோமநாதபுரத்தில் பாழடைந்த சிவன் கோயிலை மீண்டும் கட்டி குடமுழுக்கு செய்தார்.

கங்கை நீரை பாரதத்தின் அனைத்துக் கோவில்களுக்கு மாதந்தோறும் அபிஷேகத்திற்கு அனுப்பி வைத்தார். பல கோவில்களை மீட்டெடுத்தவர்.

இந்திய அரசு அஹில்யாபாய் ஹோல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது. 1999-ம் ஆண்டு இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது.

#சான்றோர்தினம்

சிவயோகசுவாமி  மே 29, 1872 இல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற்...
29/05/2024

சிவயோகசுவாமி

மே 29, 1872 இல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம்.

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.

தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர மரங்களை நடுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.

குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார்.

இலங்கையின் அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலித்து வந்தார்.
டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடத்தினார்.

1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா வந்தார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

மார்ச் 1964ஆம் ஆண்டு யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.

#சான்றோர்தினம்

 #டென்சிங்    இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இமயத்தை இந்துக்கள் கடவுளின் வீடு என்று வழிபடுகிறார்கள்.பல...
29/05/2024

#டென்சிங்

இந்தியாவை சுற்றி இயற்கை அமைத்த அரண் தான் இமயமலை. இமயத்தை இந்துக்கள் கடவுளின் வீடு என்று வழிபடுகிறார்கள்.

பல வருடமாக உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை அடைவது மிக பெரிய சவாலாக இருந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்கள் இந்த சவாலை சந்திப்பதற்காக முயன்று கொண்டிருந்தனர்.

1953 ஆண்டு மே மாதம் 29 தேதி டார்ஜலிங்கை சேர்ந்த டென்சிங் நார்கேயும், எட்மண்ட் ஹிலாரி என்று நியூசிலாந்து வீரரும் எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.

இன்று வரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்டின் உச்சியை 1200க்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள்.

எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக நானூறு பேருக்கும் அதிகமானோர் உதவியிருக்கிறார்கள். மலையேற்ற குழுவிலே நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். மலையின் ஒவ்வொரு தளத்திலும் கேம்ப் அமைக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு சமைக்கவும், சுமைகளை துக்கி வரவும் மருத்துவம் செய்யவும் வழிகாட்டுவதும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் துணை வருவார்கள்.

ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்கு குறைந்த பட்சம் ஆகும் செலவு 75000 டாலர். இந்திய மதிப்பில் நாற்பது லட்ச ரூபாய். பணமிருந்தால் மட்டும் மலையேறிவிட முடியாது. இதற்காக நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காக காத்திருப்பவரிகள் பட்டியலே இரண்டாயிரத்திற்கும் மேலாக உள்ளது
இவ்வளவு சிரமங்களை தாண்டி மலையேறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த
டென்சிங், சிறுவயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பதின்வயதில் இவர் திருட்டுதனமாக மலையேறத் துவங்கினார். அத்தோடு பிரிட்டீஷ் மலையேற்ற குழுவோடு கூலியாக வேலை செய்து கொண்டு இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு ஏறியிருக்கிறார்.

ஷெர்பா எனும் பழங்குடியின மக்கள் மிகுந்த தைரியசாலிகள் மற்றும் அசராத உழைப்பாளிகள். ஆகவே டென்சிங்கும் பயமற்றவராக இருந்தார்.

தனது சுய முயற்சியால் மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங், ஹிலாரியுடன் இணைந்து 1953 ஆண்டு எவரெஸ்ட் பயணத்தை மேற்கொண்டார்.

மலையேற்றத்திற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே போதாது கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவைப்படும். உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்து விடுவதோடு மிகப்பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்ககூடியது. அது போன்ற நிமிசங்களில் தான் தனியே மலையேறவில்லை என்றும் தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாக குறிப்பிடுகிறார்.

#சான்றோர்தினம்

 #தருமபுரம்_ப_சுவாமிநாதன்    மே 29, 1923 நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலிய...
28/05/2024

#தருமபுரம்_ப_சுவாமிநாதன்

மே 29, 1923 நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அம்மாள் தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால். தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்" பட்டத்தைப் பெற்றார்.

மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார்.

1952 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர். யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்.

1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து விலகி சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன.

பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் தந்துள்ளனர்.

#சான்றோர்தினம்

Address

Tiruchirappalli

Telephone

+916379155805

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vsk Dakshin Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vsk Dakshin Tamilnadu:

Videos

Share

Category


Other Media in Tiruchirappalli

Show All