25/01/2025
நாலுமாவடியில் மாநில கபடிப் போட்டி: கரூா், ஈரோடு கல்லூரி அணிகள் சாம்பியன்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் விளையாட்டுத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தமிழர் திருநாள் 8 வது ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நாலுமாவடி காமராஜர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து தொடங்கி வைக்தார். இப்போட்டியானது சர்வதேச தரத்தில் மேட் தளத்தில் நடந்தது. போட்டிகளில் தமிழகத்தின் தலைசிறந்த 14 ஆண்கள் கல்லூரி அணிகளும், 9 பெண்கள் கல்லூரி அணிகளும் பங்கேற்றன. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணியும், கடலூர் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரி அணியும் மோதின.
இதில் கரூர் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச்சென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஈரோடு _ கோபிச்செட்டிப்பாளையம் பி.கே.ஆர். கல்லூரி அணியும், சேலம் சக்தி கைலாச கல்லூரி அணியும் மோதின. இதில் ஈரோடு பி.கே.ஆர். கல்லூரி அணி வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஆண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் மற்றும் ரெடீமர்ஸ் கோப்பையை வழங்கினார். 2 வது இடத்தை பிடித்த கடலூர் எம்ஜிஆர் அரசுகலை கல்லூரி அணிக்கு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3 வது இடத்தை பிடித்த சென்னை புது கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கினார்.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2 வது இடத்தை பிடித்த சேலம் சக்தி கைலாச கல்லூரி அணிக்கு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3 வது இடத்தை பிடித்த கரூர் சேரன் உடற்கல்வியல் கல்லூரி, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி அணிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் 6 சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் போட்டியை காண வருகை தந்த பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 35 அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கவுதமன், திருவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரியுஸ், காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமை ஆசிரியர் திருநீலகண்டன், நாசரேத் மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் பாண்டிகுமார், உதவி மேலாளர் ஆனந்தபாலாஜி, ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய், குரும்பூர் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் மணத்தி கணேசன், எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெப குழுவினர் செய்திருந்தனர்.
+++++---------++++++----------++++++---------++++++
தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள (Chendur Times) இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/Cgj0fJmhVtQDA7zvHHFVGz