29/12/2022
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே ....
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும்,
மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும்
சம்பவம் நடந்த தெருவுக்கு சென்று
ஏற்கனவே பிரச்சனையாக இருந்த கோயிலுக்குள்
தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்துள்ளார்கள்
மேலும் அந்தப் பகுதியில் டீ கடையில் இரட்டை குவளை முறை உள்ளது என்று அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்
இது மட்டுமே
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் செய்த மிகப்பெரிய சாதனையாக அனைவரும் வாழ்த்துகின்றனர் நாமும் வாழ்த்துவோம் ...
*பொதுவாகவே* தாழ்த்தப்பட்ட மக்கள் குறைவாகவும்
மற்ற சாதியினர் அதிகமாகவும் வாழக்கூடிய
வசிக்கக்கூடிய பகுதிகளில் சில அற்ப சாதி வெறியர்கள்
அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக வைத்துக் கொண்டிருப்பது வழக்கமாகி உள்ளது
இது அங்குள்ள
காவல் துறையினருக்கும்,
வருவாய்த் துறையினருக்கும்
அங்குள்ள ஊராட்சியின் தொடர்புடைய ஊரக வளர்ச்சித் துறையினருக்கும் தெரிந்தது தான் நடக்கிறது.
ஆனால்
அரசால்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படக் கூடிய நிதிகள்
சலுகைகள்
பெரும்பாலானவற்றை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு,----
பயன்படுத்துவதற்கு
அனுமதிப்பதில்லை
-- கொடுப்பதில்லை
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு வரக்கூடிய சாலைகளின் நிதிகள் ஒதுக்கப்பட்டு
அது
அந்த நிதி வந்த பிறகு சாதியவாதிகளால்
தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்காத
வேறு இடத்திற்கு மாற்றப்படும்
அப்படி நடந்த செயல்கள் பல இடங்களில் எடுத்துக்காட்டாக கூற முடியும்
#.சமுதாய மண்டபங்கள்
#,குடிநீர் தொட்டி
#,டிரான்ஸ்பார்மர்
உள்ளிட்டவைகள் தாழ்த்தப்பட்ட மக்களை சுட்டிக்காட்டி நிதி பெறப்பட்டு வேலைகள் நடைபெறும் நேரத்தில்
*90%* இடங்களில்
தெருவுக்கு அப்பால்
இடங்களை தேர்வு செய்து வேலைகள் முடிந்த பிறகு அத முழுவதையும் தாழ்த்தப்பட்டவர்களை அல்லாதவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு
அதிலும் சாதியத்துவம் பார்க்கப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியாளர்கள் தெரிந்தும் கண்டுகொள்ளாதது ஏன் ?
#.சுடுகாடு மற்றும் சுடுகாடு சுற்றுச்சுவர்கள்
கட்ட
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று பெறப்பட்டு
அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லாதவர்கள்
பயன்படுத்திக் கொள்கிறார்கள்
இதை அறிந்த அரசும் ஆட்சியாளர்களும்
அதை சார்ந்த அதிகாரிகளும் காவல்துறையினரும்
புகார் அனுப்பியும்
தெரிந்தும் கண்டு கொள்வதில்லை
#,மத்திய மாநில அரசுகளால்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படக்கூடிய வீடுகளையும் கழிவறைகளையும்
அம்மக்களுக்கு கட்டிக் கொடுக்காமல்
சாதி வெறியோடு
பல வீடுகளை
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு தலித்தள்ளாதவர்கள்
பயன்படுத்துகின்றன
பயன்படுத்தி உள்ளனர்
இதை
முதல்வர் கவனம் உட்பட மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் கொடுத்தும்
இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை
தாழ்த்தப்பட்ட மக்கள் ஓலை குடிசையிலே வாழ்ந்து வருகின்றனர்
#.தாட்கோ லோன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று கூறி
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்பித்து பயன்பெற அழைப்புகள்
விளம்பரங்கள் மூலம் வரப்படுகின்றன
ஆனால் எந்த வங்கியிலும்
சாதிய நோக்கத்தோடு செயல்படும் வங்கி அதிகாரிகள்
95 சதவீத பேருக்கு
நமக்கு கடன் கொடுக்க முன்வருவதில்லை
கொடுப்பதில்லை
இதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனம் கொள்வதே இல்லை
#.ரேஷன் கடைகளில் ஏழையளிய மக்கள்
ஒரே நேரத்தில் எல்லா பொருள்களும் மொத்தமாக வாங்க முடிவதில்லை
கொடுக்கப்படுவதில்லை
அலைக்களிக்கப்படுகின்றனர்
இது தெரிந்தும்
வட்ட வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்டு கொள்வதில்லை
#,நிலங்கள் இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்களில்
முதலாளிகளின்
நிலங்களை வைத்து
*வருவாய்த்துறை இடம் சான்றிதழ்* பெற்று
பல வங்கிகளில்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வங்கி கடன் பெற்றுக் கொண்டு அதை கட்டாமல்
இருந்து வருகின்றனர்
அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேறு எங்கும் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்
இது
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
வருவாய்த்துறை
வங்கிகள் செய்கின்ற துரோகம் ஆகும்
சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டுகளை தொட்டிருக்கக் கூடிய நாம் இன்னும்
#,சாலை கேட்டு
#,குடிநீர் கேட்டு #,தெருவிளக்கு கேட்டு
#, மனை பட்டா கேட்டு
#,வீடுகள் கேட்டு
#, கழிவறைகள் கேட்டு
#,வங்கிக் கடன் கேட்டு
#,நல்ல அரிசி கேட்டு
போராடிக் கொண்டிருக்கிறோம்
#,மழை புயல் போன்ற பேரிடர் காலங்களில் இன்னும் நாம் பள்ளிக்கூடத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்
பல வகைகளில் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்
நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்
இன்றளவும்
அடிப்படை வசதிகளை கேட்டும்
அரசுகள் வழங்கக்கூடிய சலுகைகளை கேட்டும்
போராடக்கூடிய மக்கள் மீது
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்களுடைய உத்தரவுகளின் பெயரில்
பல தாழ்த்தப்பட்ட மக்களின் போராளிகள் மீது பொய் வழக்குகள் ஒவ்வொரு
காவல் நிலையத்திலும் பதியப்பட்டுதான் வருகின்றன
மேலும் மேலும் போராடிக் கொண்டே இருந்தால் போராளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்டவைகளும் பாய்கின்றன
இவைகள் அனைத்தும் அங்கு இருக்கக்கூடிய சாதியவாதிகளின் திட்டமிட்ட செயல்களால் நடைபெற கூடியவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது
ஆனால்
புதுக்கோட்டை மாவட்டத்தில்
சாதிய பிரச்சனைகள் மேலும் பரவி விடக்கூடாது
தமிழ்நாடு முழுவதும்
இது போராட்டமாக மாறிவிடக்கூடாது
அப்படி எல்லா இடத்திலும் போராட்டமாக மாறினால்
மலம் கலக்கப்பட்ட குடிநீர் டேங்கை உடைத்து விட்டு
வேறு டேங்க் கட்ட வேண்டும்
அந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும்
அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு
குடிநீர் டேங்க் கட்டும் வரை
தினமும்
வாகனம் மூலம் குடிநீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்
இது சில மாதங்கள் தொடரும் என்று
தெரிந்து கொண்டு அதிகாரிகள்
திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைய வைத்து
*ஒன்றை மறைக்க*
ஒன்றை செய்து
பத்திரிக்கை ஊடக செய்திகள் மூலம்
திசை திருப்பி அனைவருடை வாழ்த்தையும் பெற்றுள்ளனர்...
இருந்தாலும் நாமும் வாழ்த்துவோம்......
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும்
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தெருக்களிலும்
என்னென்ன பிரச்சனைகள் உள்ளது
குறிப்பாக *சாதி மத* மோதல்கள் உள்ளதா என்பதை விரல் நுனியில் பட்டியில் வைத்திருப்பார்கள்
மாவட்டத்தில் சாதி வெறியர்கள் யார்
மதவெறியர்கள் யார்
மிகப்பெரிய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் யார்
கஞ்சா விற்ப்பவர்கள்
சாராயம் விற்பவர்கள்
ரவுடிகள் யார்
வழிப்பறி செய்பவர்கள் யார்
என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய மாவட்ட நிர்வாகங்கள்
பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்தாமல்
ஒரு பிரச்சனை ஏற்பட்ட பிறகு கூட்டு சேர்ந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தங்களை காட்டிக் கொள்கின்றனர்
இருந்தாலும் நாம் வாழ்த்துவோம்......?
நாம் ஒவ்வொருவரும் வாழ்த்துவதற்கும் விமர்சிப்பதற்கும் மட்டுமே இல்லாமல்
நம்மளால் முடிந்தவரை
சாதி மதம் பாராமல்
மக்களுக்கு தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க
தொடர்ந்து போராடுவோம்
தேவைப்படும் போது அதையும் தாண்டி
சட்ட ரீதியாக போராடுவோம்.......
சிந்திப்போம்!
ஒன்று கூடுவோம்!!
செயல்படுவோம்!!!