மண் வாசம் வீசும் தேனி

  • Home
  • India
  • Theni
  • மண் வாசம் வீசும் தேனி

மண் வாசம் வீசும் தேனி இது தேனியின் அடையாளம்

***_ தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்*_ 2021 ஆம் ஆண்டுக்கான  சேர்க்கைகள் ஆன்லைன் மூலம் (www.skilltraining.tn.gov.in )ந...
05/07/2021

***_ தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்*_
2021 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைகள் ஆன்லைன் மூலம் (www.skilltraining.tn.gov.in )நடைபெற்று வருகிறது. (01.07.2021 முதல் ) ஜீலை 28 வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது*
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்*
*வயது வரம்பு:* ஆண்கள் : 14 முதல் 40 வயது வரை பெண்கள்: வயது வரம்பு இல்லை.
*தொழிற்பிரிவுகள்*
1) ELECTRICIAN --2 ஆண்டுகள்.
2) FITTER --2 ஆண்டுகள்.
3)TURNER--2ஆண்டுகள்
4)MACHINIST- 2 ஆண்டுகள்.
5) MACHINIST GRINDER-2 ஆண்டுகள்.
6)DM ÇIVIL - 2 ஆண்டுகள்.
7)WELDER -1 ஆண்டு
8)POCM-1 ஆண்டு
9)MECHANIC TRACTOR- 1 ஆண்டு
10)COPA - 1ஆண்டு
11) DTPO-1 ஆண்டு
*சலுகைகள்*
*மாதாந்திர உதவித் தொகை ரூ.750/ -
*லேப்டாப் இலவசம்
*பஸ் பாஸ் இலவசம்
*மிதிவண்டி இலவசம்
*காலணிகள் இலவசம்
*சீருடை இலவசம் மற்றும் தையற்கூலி வழங்கப்படும்.
*புத்தகங்கள் மற்றும் வரைபட கருவிகள் இலவசம்
*படிக்கும்போதே
உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங்
*படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலைவாய்ப்பு உறுதி
* ஒரு வருட உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சி உறுதி .

*சேர்க்கை உதவி மையங்கள்*
*அரசு தொழிற்பயிற்சி நிலையம் தேனி ,
* மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
தேனி
ஆகிய உதவி மையங்கள் மூலமாக இலவசமாக விண்ணப்பிக்கலாம்
*அல்லது ஆன்லைன் (www.skilltraining.tn.gov.in)மூலம் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம்
*விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்*
1. எட்டாவது மற்றும் பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் ,( 2021 -இல்10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) (Mark sheets)
2. மாற்றுச் சான்றிதழ்(TC)
3. சாதிச் சான்றிதழ்(Community certificate)
4. ஆதார் அட்டை (Aadhaar card)
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photo)
6. விண்ணப்பக் கட்டணம் Rs.50/- செலுத்த
டெபிட் கார்டு
கிரெடிட் கார்டு.
கூகுள் பே மற்றும் நெட் பேங்கிங் 7.முன்னுரிமை சான்று (ஆதரவற்றோர் / முன்னாள் இராணுவத்தினர்/ முன்னாள் இராணுவ வீரர் மகன்/மகள், மாநில அளவில் முதலிடம் பெற்ற விளையாட்டு வீரர்)

தொடர்புக்கு
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
அலைபேசி எண்கள்:9443153291, 9789109702, 9484301227,9788160695.
அனைவரும்
I T I ல் சேர்ந்து பயிற்சி பெறுங்கள், பயன் பெறுங்கள். வளமான பாரதத்தையும் மற்றும் வலிமையான தமிழகத்தையும் உருவாக்குங்கள் நன்றி
*Govt.ITI, தேனி*
👍👍💐💐💐🙏🙏

கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வ...
06/05/2020

கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நாப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். இது ஒரு அற்புதமான சாதனை எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான, இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கொரோனா எதிர்ப்பு மருந்து, மனித உடலில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை. இதனால், இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

04/05/2020

தற்போது தேனி கானவிலக்கு பகுதியில் பலத்தகாற்றுடன் மழை

02/05/2020
30/04/2020

🌧🌧🌧🌧🌩🌩🌩🌪🌪🌪☔☔☔

28/04/2020

தேனியில் மழை

மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த புகைப்படங்கள் நெஞ்...
24/04/2020

மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.

கரோனா பாதிப்பால் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்கை பெற்று வருகின்றனர். இதைத்தவிர மற்ற பிரச்னைகளுக்கும் மக்கள் மருத்துவமனைகளில் கூடினாலும் அவர்களுக்காகவும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மருத்துவர்களுக்கு சவாலாக இருப்பது கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு வருவதுதான். உலகம் முழுவதும் பல கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கரோனா பாதிப்பு வருவதால் அவர்களை தனியாக கவனிக்க வேண்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. தாய்க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தாயும் குழந்தையும் தனித்தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பார்த்துக்கொள்ள மருத்துவமனை சார்பில் வீடியோ கால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாயின.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், “அந்த பெண் உடனடியாக குணமாகி தன்னுடைய குழந்தையை நேரில் பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம்
21/04/2020

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம்

பெங்களூருவில் பெண் ஒருவர் பல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரோனா வைரஸ் காரண...
21/04/2020

பெங்களூருவில் பெண் ஒருவர் பல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்த பெண் ஒருவர், பல் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அந்த பெண்ணிற்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடைக்காததால், அந்த பெண் மற்றும் அவரது கணவர், மருத்துவமனையை தேடி நடக்கத்தொடங்கியுள்ளனர். சுமார் 7 கி.மீ தூரம் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். எந்த மருத்துவமனையும் இல்லாததால் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள பல் மருத்துவர், தன் கணவனை உதவிக்கு அழைத்துள்ளார்.
அந்த பல் மருத்துவமனைக்கு சென்றடைந்த 10 நிமிடங்களிலேயே குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பெற்றெடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். குழந்தை இறந்ததாக அவரது கணவர் நினைத்து வருந்திக்கொண்டிருந்தபொழுது, குழந்தைக்கு உயிர் இருப்பதை உணர்ந்த பல் மருத்துவர், மற்றொரு மருத்துவமனைக்கு தாயையும் சேயையும் அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று அவசர சேவைகளுக்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

  &  's இயக்குனர்   நேற்று காலமானார்...All Time Favorite Kids to all Stage People Stress Relief Medicine One and Only Pr...
21/04/2020

& 's இயக்குனர்

நேற்று காலமானார்...

All Time Favorite Kids to all Stage People Stress Relief Medicine One and Only Program....

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்குதானே முடி வெட்டிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலா...
20/04/2020

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்குதானே முடி வெட்டிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் முதல் அடுத்த வேளை உணவிற்கே கஷ்டப்படும் ஏழைகள் வரை அனைவரும் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.
மேலும் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து செயல்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபலங்கள் பலர் அவர்களின் வீடுகளில் செய்யும் பணிகளை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த பதிவுகளும் வைரலாக பரவிவருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க 3 முதல் 7 நாட்கள் தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவி...
20/04/2020

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்க 3 முதல் 7 நாட்கள் தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1ம்தேதி கேரளாவில் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது, முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும், படிப்படியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பருவமழை தொடங்க 3 முதல் 7 நாட்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பருவமழை சற்று தாமதமாக தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக இருக்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் தேதி சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....
20/04/2020

ஏப்ரல் 20 ஆம் தேதி சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் 20ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலகின் பல நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவிலும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய மத்திய அரசு, அதனை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

எனினும் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழில்கள் இயங்கவும் , விவசாய பொருட்கள் விற்பனைக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனாலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடியே இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், 20ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (AIMTC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

போக்குவரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லும் லாரிகளே தற்போது இயங்கிவருவதாகவும், அவர்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது சரியானதாக இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகா் பகுதியில் தெப்பம்பட்டி சாலையில் பூக்கள் சந்தை அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளை...
18/04/2020

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகா் பகுதியில் தெப்பம்பட்டி சாலையில் பூக்கள் சந்தை அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வா். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பூக்கள் சந்தையில் விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனா்.

இதனால் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி போலீஸாா் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் பூக்கள் சந்தையில் கடைகளை அடைக்க உத்தரவிட்டனா்.

இதனையடுத்து மாவட்ட நிா்வாகத்திடம் பூ விவசாயிகள் சங்கத்தினா் பூக்கள் சந்தையில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனா்.

இதனைத்தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி சக்கம்பட்டி பகுதியில் தற்காலிக பூக்கள் சந்தை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பிறகு சமூக இடைவெளியுடன் மொத்த பூக்கள் விற்பனை நடைபெறும் என்றும் சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலகலமாக நடைபெறும். இத் திருவிழாவை முன்னிட்டு மாவட்...
18/04/2020

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா கோலகலமாக நடைபெறும். இத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், மதுரை, திண்டுகல் மாவட்டம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்துவா். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பல்லக்கு, தேரோட்டம், ஊா் பொங்கல் ஆகியவை தொடா்ந்து 8 நாள்கள் வரை நடைபெறும். இந்த நாள்களில் 24 மணி நேரமும் கோயிலில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெறும்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கோயிலில் வழக்கமாக சித்திரை முதல் வாரம் செவ்வாய்க்கிழமை

(ஏப்.21) நடைபெறும் கொடியேற்றம், ஏப்.22-ஆம் தேதி நடைபெறும் கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, வரும் மே 3-ஆம் தேதி வரை பக்தா்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத் துறை கோயில் நிா்வாக அலுவலா் சுரேஷ் அறிவித்துள்ளாா்.

மேலும், கெளமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பல்லக்கு, தேரோட்டம், ஊா் பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தா்கள் கோரிக்கை:

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் மே 3-ம் தேதி முடிவடையும் நிலையில், மே 12-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதலுடன் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை தொடங்கி, நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் மற்றும் கேரளப் பகுதியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடிமெட்டு மலைச்சாலையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இரு மாநில ...
18/04/2020

தமிழகம் மற்றும் கேரளப் பகுதியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடிமெட்டு மலைச்சாலையில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இரு மாநில எல்லைப் பகுதியில் இரு மாநில போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் இரு மாநிலப் பகுதியில் உள்ள தொழிலாளா்கள் சிலா் அத்துமீறி எல்லைகளைக் கடக்க முயன்று வருகின்றனா். இவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வருகின்றனா்.

இந்நிலையில் கேரளத்தை சோ்ந்த போலீஸாா் போடிமெட்டு மலை கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா். இதில் தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைய முற்பட்டால், அவா்களுக்கு 28 நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து வருகின்றனா்.

இதனிடையே சிலா் தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்துக்குள் நுழைய முற்பட்டனா். விசாரித்தபோது உறவினா்களுக்கு மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தனா். அப்போது கேரள போலீஸாா் தாங்களே உடன் வருவதாகும், உண்மை என்றால் சிகிச்சை பெறலாம் என்றும் பொய்யான தகவல் கூறினால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா். இதனால் அவா்கள் தமிழகப் பகுதிக்கே திரும்பி வந்து விட்டனா். கேரளத்தில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து யாரும் நுழையாதவாறு கேரள போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

*தமிழக காவல்துறையின் அறிவிப்பு**ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்  - அதன் உரிமையாளர்களிடம் ஒப்பட...
16/04/2020

*தமிழக காவல்துறையின் அறிவிப்பு*

*ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக*

*24-03-2020 முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்*

*தினசரி காலை 07-00 மணி முதல் பகல் 12: 30 வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை 10 நபர்களுக்கு என வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்..தேவைப்படின் அதிகப்படியாக ஒருமணி வரை*

*இத்தருணத்தில் சமூக இடைவேளி அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்*

*பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும்*

*24-03-2020 அன்று முதல் FIR பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தில் வந்து வாகனங்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற தகவல் அனுப்படும்*

*அவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்*

*வாகன உரிமையாளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்*

*▪வாகன உரிமையாளரின் டிரைவிங் லைசென்ஸ் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ்*

▪ *வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஒரிஜினல் மற்றும் ஜெராகஸ்*

 #மகிழ்ச்சியில்_தேனி_மாவட்ட_மக்கள் #தேனி  #மகிழ்ச்சி  #மக்கள்
16/04/2020

#மகிழ்ச்சியில்_தேனி_மாவட்ட_மக்கள்
#தேனி #மகிழ்ச்சி #மக்கள்

தந்தையை வெயிலில் காக்க வைக்காமல் தோளில் சுமந்து நடந்த மகனின் பாசப்போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.கரோனா வைரஸ் தொற்ற...
16/04/2020

தந்தையை வெயிலில் காக்க வைக்காமல் தோளில் சுமந்து நடந்த மகனின் பாசப்போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் போல ஊரடங்கால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வயதானவர்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆட்டோ, டாக்சி போன்ற சேவைகள் இல்லாததால், வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சமீப காலமாக வீட்டிற்கு வரமுடியாமல் வழியில் சிக்கிக்கொண்ட குடும்பத்தினரை பலரும் வாகன வசதி கிடைக்காததால் நடந்தும், சைக்கிள் மற்றும் பைக்கில் சென்றும் அழைத்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் கேரளாவில் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு தனது வயதான தந்தையை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து சென்றுள்ளார் பாசக்கார மகன்.

ஊரடங்கால் பாதி வழியில் நின்ற ஆட்டோ
இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருசில இடங்களில் ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை அடுத்து ஆட்டோவில் அவரை மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் அவர்கள் வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் தடுத்துள்ளனர். ஆனால் தந்தையால் நடக்க முடியாது என்பதால் உடனே மகன் அவரை வெயிலில் காக்க வைக்காமல் தனது தோளில் சுமந்தபடி வீடு வரை நடந்தே சென்றுள்ளார். அவர்களுடன் தாயும் இருந்துள்ளார். தந்தையை மகன் தோளில் சுமந்து நடக்கும் வீடியோ வைரலானது.

இதனையடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களை ஆட்டோவில் செல்ல அனுமதிக்காத அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வைகை அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மீன்கள் வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஓரே இடத்தில் சமூக இடைவெளியின்றி கூட...
16/04/2020

வைகை அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மீன்கள் வாங்குவதற்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஓரே இடத்தில் சமூக இடைவெளியின்றி கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் சுமாா் 120-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய மாநில, அரசுகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால் வைகை அணையில் கடந்த மாா்ச் 25 -ஆம் தேதி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இந்நிலையில், அணையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து சமூக இடைவெளியுடன் மீன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் அணை நீா்த் தேக்கப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடா்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் அணையில் மீன் பிடிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் 300 முதல் 500 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை காலை மீன்கள் வாங்குவதற்காக அணைக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி ஓரே இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் அறிவுறுத்திய சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. கூட்டமாக கூடியாதால் நோய் பரவும் அச்சம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீஸாா் கூட்டமாக நின்றிருந்தவா்களை விரட்டினா். சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மீன் விற்பனை செய்ய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மீன்வளத்துறையினா் போதிய ஏற்பாடுகள் எதும் செய்யவில்லை. பாதுகாப்பு பணிகளுக்கு பணியாளா்களை நியமிக்கவில்லை. பொதுமக்களுக்கு 1 கிலோ மீன் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 நாள்களாக பொதுமக்களுக்கு மீன்கள் வழங்காமல் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவா்கள் மீன்களை ரூ. 200 முதல் 350 வரை விற்பனை செய்து வருகின்றனா். எனவே வைகை அணையில் மீன் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் மற்றும் நகைக் கடன்கள் வழங...
16/04/2020

தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் மற்றும் நகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் சிவ.முத்துக்குமாரசுவாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகள் மூலம் அரசு நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை விவசாயிகளுக்கு வழக்கம் போல பயிா்க் கடன் மற்றும் நகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் பகுதியில் பணியாற்றும் காவலா்களுக்கு புதன்கிழமை முதல் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.பெரியகுளம் பகுதியில் இ...
16/04/2020

பெரியகுளம் பகுதியில் பணியாற்றும் காவலா்களுக்கு புதன்கிழமை முதல் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் பகுதியில் இரவு, பகலாக வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் காவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை நடைபெற்றது. ஜெயராஜ் அன்னபாக்கியம் நகா்ப்புற சுகாதார நிலையத்தில் இந்த பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த பரிசோதனையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டனா். மேலும் தொடா்ந்து அனைத்து காவலா்களுக்கும் பரிசோதனை நடைபெறும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Address

Theni Vaigai
Theni
625512

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண் வாசம் வீசும் தேனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies