உலகில் மிகப்பெரிய யானைப் படையைக் கொண்டு உலகையே தன் வசமாக்கிய சோழ மன்னர்களால் ஆழப் பட்ட பகுதி தான் இந்த தஞ்சை மாவட்டம் இம் மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று தான் இந்த பேராவூரணி
பேராவூரணி வட்டத்தில் 85 பெருங் கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்குப் பேராவூரணியே மையமாக இருப்பதால் வணிக முக்கியத்துவம் மிகுந்து காணப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னந் தோட்டங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கும். அதனா
ல் இளநீர், தேங்காய், கொப்பரை, மட்டை, போன்றவற்றின் துணைத் தொழில்களாக, கீற்று முடைவது, மட்டையிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரை, காயவைத்து தேங்காய் எண்ணெய் ஆட்டுவது போன்ற தொழில்கள் பேராவூரணியைச் சுற்றி நடைபெறுகிறது. தேங்காய் பவுடர் செய்யும் தொழிற்சாலை உள்ளது. குழல் விளக்கில் உபயோகப்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சோக் என்கின்ற சாதனத்தை 'ஓபல்' என்ற பெயரில் தயாரிக்கும் எலட்ரோஸ்டிரீக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் இயங்கி வருகிறது. மீன் பிடி வலை செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது.