Comedy News Tamil

Comedy News Tamil Hit the Follow button enjoy more fun😎

🤣💯✅️
29/12/2024

🤣💯✅️

Save nature 🌳 🏡🌴
29/12/2024

Save nature 🌳 🏡🌴

அத வேற ஞாபகபடுத்துட்டீங்க.. நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி 🥺😭
27/12/2024

அத வேற ஞாபகபடுத்துட்டீங்க.. நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி 🥺😭

ரொம்ப தேங்க்ஸ் ப்பா.. என்ன யார்னே உனக்கு தெரியாது இருந்தாலும் லிப்ட் கேட்டவுடனே பைக்க நிறுத்தி ஏத்திகிட்ட""இட்ஸ் ஓ.கே......
25/12/2024

ரொம்ப தேங்க்ஸ் ப்பா.. என்ன யார்னே உனக்கு தெரியாது இருந்தாலும் லிப்ட் கேட்டவுடனே பைக்க நிறுத்தி ஏத்திகிட்ட"

"இட்ஸ் ஓ.கே..."

"ஆனாலும் நீ ரொம்ப ஸ்மார்ட்ப்பா இவ்ளோ பெரிய உதவிய பண்ணிட்டு இட்ஸ் ஓ.கேன்னு சிம்ளா சொல்ற..."
..................

"ப்பா உனக்கு சொந்த ஊரு எது...?"

"இதே ஊருதான்..."

"கல்யாண மாயிடுச்சா...?"

"ம்..."

"புள்ள குட்டிங்க எத்தன...?"

"ரெண்டு..."

"ரெண்டா கஷ்டம்தான்..."
............

"உனக்கு என்ன ராசி"

"மீனம்"

"மீனமா...? ஏழரை யாச்சே ரொம்ப கஷ்டமாச்சே... எப்படிப்பா சமாளிக்கிற...?"

கஷ்டம் தான்

"வண்டி எத்தன குடுக்குது...?"

"நாப்பது ..."

"என்ன.. நாப்பது தானா...? எழுபது எண்பது கொடுக்கும்னு கேள்விபட்டேனே...?

"அதெல்லாம் 100cc பைக்குங்க... இது ccகூட அவ்வளவுதான் கொடுக்கும்..."

"அதான் மைலேஜ் கம்மியா கொடுக்குதே பின்ன ஏன் இத வாங்குன...?"

இந்த இஞ்சின் ரொம்ப சுமூத்ங்க... அதுவுமில்லாம எவ்வளவு வேகமா போனாலும் பிரேக் அடிச்சா நச்சின்னு அடிச்ச எடத்துலயே நிக்கும்..."

" வண்டி அடிக்கடி குலுங்குதே பயமோ...?

"பயமா... சே...சே... நான் எப்படி வண்டி ஓட்டுவேன்னு எங்க பக்கத்து வீட்டு அங்கிள கேட்டுப்பாருங்க அவரு சொல்லுவாரு...."

"அப்படியா...?"

"ஆமா... அவரு வண்டி பின்னாடி ஏறி ஒக்காரும் போது 73 கிலோ இருந்தாரு திரும்பி வீட்டுக்கு வரும்போது 77 கிலோ ஆயிட்டாரு..."

"அப்படியா... ஆச்சர்யமா இருக்கே...?"

"ஆமா... அவர் கால்ல போட்ட மாவு கட்டு மட்டும் நாலுகிலோ வெயிட்டு..."

"நீ.... என்னப்பா சொல்ற...?"

"நம்பிக்கை இல்லன்னா எங்க எதிர்த்த வீட்டு மாமிய கேட்டுப் பாருங்க..."

"என்ன அவங்களுக்கும் உன் வண்டில போய்ட்டு திரும்பி வரும் போது வெயிட் ஏறிடுச்சா...?"

"இல்ல குறஞ்சிடுச்சி.."

"கொறஞ்சிடுச்சா...?"

"ஆமா.... அவங்களோட ஒரு கையையே எடுக்க வேண்டியதாப் போச்சி..."
.................

"சார்...."
.........

"சார்.."
...

"குதிச்சி ஓடிட்டார் போல.... கொய்யால லிப்ட் கேட்டோமா ஏறி ஒக்காந்தோமா நம்ம எடம் வந்தவுடனே எறங்குனோமான்னு இல்லாம தொன தொனன்னு வண்டிய ஓட்டுறப்ப டிஸ்ட்ரப் பண்ணிகிட்டு... மவனே இனி யார்ட்டயாவது லிப்ட் கேப்ப..?
Comedy News Tamil fans

Kubeereeerr 😄😬🤣
24/12/2024

Kubeereeerr 😄😬🤣

Athe 😄
22/12/2024

Athe 😄

20/12/2024
14/12/2024

தாம்பத்தியம் என்பது...
*வேலையிலிருந்து வந்ததும் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, மாற்றி மாற்றி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு, கூடவே மொபைலில் முகநூலிலும் உலாவிக்கொண்டே சாப்பிடுவது அனேக ஆண்களின் வழக்கமாகி விட்டது..!*
*மனைவி வந்து கேட்பாள்:* *"என்ன சாப்பிட்றீங்க?* *இட்லியா..?* *தோசையா என ..?”* *கணவனின் மனம் விரும்பும் தோசையை ...* *ஆனால் அவன் சொல்லுவான் “எது வேணாலும் பரவால என ..!.” அவள் தோசை வார்ப்பாள்*.
*அவள் மறுபடி வந்து கேட்பாள்: “தோசைக்கு சட்னி செய்யவா, இல்ல மத்தியானம் வெச்ச சாம்பாரே போதுமா என ..?”*
*அவன் மனம் நினைக்கும் ‘காரசட்னியையும், சாம்பாரையும் கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என ..!’*
*ஆனால் அவன் சொல்லுவான்: “சாம்பாரே போதும் என..!*
*அவள் சுட சுட தோசையும் , சாம்பாரோடு, காரசட்னியும் செய்து எடுத்துக்கொண்டு வருவாள்..!*
*கடைசி தோசைக்கு பொடி, எண்ணைய் இருந்தால் நன்றாக இருக்குமே..!’ என்று மனதில் தோன்றினாலும், ‘எதுக்கு ஒரு தோசை சாப்பிடுவதற்கு ஏகப்பட்ட வேலை..?’ என்று அவன் நினைத்துக்கொண்டே சாப்பிட்டால்........*
*அவள் பொடியையும் எண்ணையையும் எடுத்துக்கொண்டு வருவாள்...!*
*கணவனின் உரைக்காத மௌன சொற்களையும் உணரும் சக்தி சிறந்த தாம்பத்யத்துக்கு சிறப்பாக மனைவிக்கு உண்டு..*
*ஏராளமான ஆண்கள் மனைவியிடம் அன்பை வெளிக்காட்டியதில்லை. உடல்நலன், மனநலன், உணவு, மாத்திரைகள், எல்லாம் அவனுக்கு தோதாய் நடக்க அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான்.*
*மனைவியின் உடல்நலம், மனநலம், உணவு, சந்தோஷம், துக்கம் எல்லாம் அவளுக்கு அவள்தான் துணை ஆறுதல்... கணவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.*
*அவன் வாழ்நாள் முழுதும், அவன் தேவைகள் பார்த்துக் கொள்ளப்படும்; அவன் குணக்குறைகள் மன்னிக்கப்படும் என்று வாழும் ஆண்கள் அதற்கு அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லாததை என்னவென்று சொல்லுவது.* ,
*ஆண்களுக்கு பணிவிடை செய்யவென்று படைக்கப்பட்டவள் அல்ல பெண்.. ஆனாலும் செய்கிறாள்.*
*ஆண்களுக்கு குழந்தை பெற்றெடுக்க என படைக்கப்பட்டவள் அல்ல பெண்... ஆனாலும் தாயாகிறாள் ஏன்?...*
*ஏனென்றாள் அவள் மனித குலத்திற்கு தேவையான அத்தனை தகுதிகளுடன் படைக்கப்பட்ட ஒரு உயிருள்ள கடவுள்... அதனால்தான் பெண்களை தெய்வம் என்கிறார்கள். அந்த தெய்வம் தான் இன்று ஆண்களையும் இவ் உலகையும் குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் வழி நடத்துகிறது.

நீ தேடிக் கொண்டிருப்பாய் உன் நினைவுகள் மீண்டஅதிகாலையில் தெரியும் உனக்கு நான் வருவேன் என்று கொஞ்சம் என்னை துலாவிக்கொண்டே ...
11/12/2024

நீ தேடிக் கொண்டிருப்பாய்
உன் நினைவுகள் மீண்ட
அதிகாலையில்

தெரியும் உனக்கு
நான் வருவேன் என்று

கொஞ்சம் என்னை துலாவிக்கொண்டே
இருடா

ஒற்றைக்கோப்பையும்
புன்னகையுமாய்
வந்து நிற்கிறேன்
உனக்கான பிரியங்கள் சுமந்து

உன் கண் முன்
நான் வரும்
ஒவ்வொரு நாளும்
எனக்கும் ஆக சிறந்த
வரமாய் இருடா

இவள் உனக்கே உனக்கானவள் தானடா!
Comedy News Tamil fans

நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம்..அவையோநம்மைக் கீழிருந்து மேலாக தூக்கி விடுகின்றன!✅🟢🔴C2cComedy News Tamil
10/12/2024

நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம்..

அவையோ
நம்மைக் கீழிருந்து மேலாக தூக்கி விடுகின்றன!

✅🟢🔴
C2c
Comedy News Tamil

திண்டுக்கல் பிரியாணி மசாலாவின் ரகசியம் .....மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள் ....1- kg....பட்டை   - 10 gramகிராம்பு  - 2...
07/12/2024

திண்டுக்கல் பிரியாணி மசாலாவின் ரகசியம் .....

மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள் ....

1- kg....

பட்டை - 10 gram
கிராம்பு - 2 gram
ஏலக்காய் - 10 gram....

இவ்வளவுதாங்க இதை நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு கிலோ பிரியாணிக்கு போதுமானது .....

திண்டுக்கல் பிரியாணி என்றால் மணமும் கலரும் தான் .....

கலருக்காக .....

மராட்டி மொக்கு - 5 gram
கல்பாசி - 2 gram

பிரியாணிக்கு தேவையான பொருட்கள் .....

வெங்காயம் - 1/4 kilo

இஞ்சி - 100 gram

பூண்டு - 100 gram

மிளகாய்த்தூள் - 10 gram

மல்லித்தூள் - 10 gram

தயிர் - 150 gram

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

ரீஃபைண்ட் ஆயில் - 150 ml

நெய் - 50 ml

குறிப்பு .....

பிரியாணி நன்றாக கொதி வந்த பிறகு தான் மல்லி பொடியை போட வேண்டும் ...

இவ்வளவுதாங்க இந்த பிரியாணியின் ரகசியம் ....

படத்தில் உள்ள பொருட்களை எல்லாம் பயன்படுத்த தேவையே இல்லை ...

நான் சொன்னபடி மசாலா பொடி செய்து பிரியாணி செய்தால் அட்டகாசமான திண்டுக்கல் பிரியாணியை நீங்களும் வீட்டிலேயே செய்யலாம் .....
C2c
Comedy News Tamil

Address

Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when Comedy News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share