Piraimedai Tamil Fortnightly - பிறைமேடை மாதமிருமுறை

  • Home
  • India
  • Tamizhagam
  • Piraimedai Tamil Fortnightly - பிறைமேடை மாதமிருமுறை

Piraimedai Tamil Fortnightly  - பிறைமேடை மாதமிருமுறை PIRAIMEDAI TAMIL FORTNIGHTLY MAGAZINE - பிறைமேடை மாதமிருமுறை

11/03/2023

#முஸ்லிம் #ஆயுள் #சிறைவாசிகள் விடுதலை :

IUML பவள விழா தேசிய மாநாட்டில் கோரிக்கை

வக்பு நிலம் 300 ஏக்கரை இந்து சகோதரர் பயன்படுத்த அனுமதித்த வக்பு வாரியம்:வக்பு சொத்து மீட்பை மதசாயம் பூசி அரசியல் லாபம் த...
16/09/2022

வக்பு நிலம் 300 ஏக்கரை இந்து சகோதரர் பயன்படுத்த அனுமதித்த வக்பு வாரியம்:

வக்பு சொத்து மீட்பை
மதசாயம் பூசி அரசியல் லாபம் தேடுவதா?

தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி பேட்டி

வக்பு சொத்துக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. ஆக்கிரமிப்புகளில் இருந்து அவைகளை மீட்க முயலும் போது அதற்கு மதசாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுவதா? என கேள்வி எழுப்பிய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்பி ), திருநெல்வேலி மாவட்டத்தில் வக்பு நிலம் 300 ஏக்கரை இந்து சமய சகோதரர் பயன்படுத்த வக்பு வாரியம் அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டி இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இல்லையா? என குறிப்பிட்டார்.

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை உள்ளிட்ட சில கிராமங்களின் வக்பு சொத்து தொடர்பாக எழுந்துள்ள விவகாரங்களுக்கு பதிலளித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ( முன்னாள் எம்பி )
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு வக்பு வாரியம் என்பது வக்பு நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய மசூதிகள், தர்காக்கள், மத்ரஸாக்கள் போன்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்வதும், அந்த நிறுவனங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துக்களை பாதுகாப்பதிலும் முழு கவனம் செலுத்தக்கூடிய அரசு சார்ந்த துறையாகும்.

வக்பு சொத்துக்கள் என்பது முன்பிருந்த நல்லவர்கள், இப்போதுள்ள கண்ணியமானவர்கள் பொதுமக்கள் நன்மைக்காக இறைவன் பெயரால் அர்ப்பணிக்கிறோம் எனச்சொல்லி வக்பு நிறுவனங்களின் பெயரில் அர்ப்பணித்திருக்கிறார்கள்.

வக்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த 1954 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அர்ப்பணிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை முறையாக அரசாங்கத்திற்குரிய அங்கீகரிக் கப்பட்ட சர்வேயர்கள் (நில அளவையாளர்கள்) வைத்து அளவீடு செய்து பதிவேடுகளில் ஏற்றி இருக்கிறார்கள்.

எந்தந்த ஊரில், எந்தந்த அளவிளான சொத்துக்கள், எந்தெந்த வகையிலான சொத்துக்கள் என்பதை எல்லாம் அளவீடு செய்து அரசு இந்த பதிவை உருவாக்கி இருக்கிறது. அந்த பதிவு தான் வக்பு வாரியத்தில் இருக்கிறது.
1954க்குப் பிறகு புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட வக்பு சொத்துக்களும் அவ்வப்போது இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நடைமுறையில் உள்ள தொடர்ச்சியான ஒன்று.

வக்பு சொத்துக்களில் சில இடங்களில் பெரும் பகுதியாகவும், சில இடங்களில் ஓரளவு சிறு பகுதியாகவும் தவறான ஆவணங்களைத் தந்து விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களாகவும் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
எனவே வக்புக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களையும், தவறான ஆவணங்கள் தரப்பட்டு பதிவு அல்லது விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு வக்பு வாரியத்திற்கு இருக்கக்கூடிய தார்மீக கடமை.

அரசும் இந்த ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களையும், இது போன்று அபகரிக்கப்பட்ட சொத்துக்களையும் மீட்டெடுத்து வக்பினுடைய நேரடி ஆளுகைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வந்துள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வக்பு விவரங்கள்:

அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஒரு முடிவு எடுத்தோம். வக்புக்கு சொந்தமான நிலங்கள், மற்றுமுள்ள சொத்துக்கள் இவைகளுடைய சர்வே எண்கள் என்ன என்பதை எல்லாம் சேகரித்து, அவைகளை அந்தந்த பகுதியிலேயே இருக்கக்கூடிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி இந்தந்த சொத்துக்களை இனியாரும் விற்கவோ வாங்கவோ அல்லது ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளவோ முடியாது; காரணம் இது அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பதிவேட்டில் வக்பு வாரியத்தில் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பதிவு விளக்கங்கள் என்ற முறையில் மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, வக்பு சொத்துக்களை வாங்க, விற்க, மாற்ற முடியாது என்பதற்கு ஏற்பாடுகளை செய்தோம். அது இப்போது நடைமுறையில் இருக்கிறது.

வக்பு சொத்துக்களை எந்தனையோ பேர் வாங்கியுள்ளனர். அவர்கள் தெரிந்து வாங்கியதல்ல, தெரியாமல் வாங்கியிருப்பார்கள். ஒருவர் வாங்கி அவர் அடுத்தவருக்கு விற்றிருப்பார். அவர் இன்னொருவருக்கு விற்றிருப்பார்; அவர் நான்காம் நபருக்கு விற்றிருப்பார் என்கிற நிலையில் இனிமேல் அந்த சொத்து ஐந்தாம் நபருக்கு விற்க முடியாது என்ற நிலையில் வருகிறது என்றால் அந்த சொத்தை வாங்கி வைத்திருப்பவர் மீது எந்த குற்றமும் கிடையாது. அவருக்கு தெரியாமல் நடந்தது அது.

ஆனாலும் அது வக்பு சொத்து என்பதனை அரசு பதிவில் எப்படி வக்பு வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறதோ அதனை மீண்டும் எத்தகைய பதிவும் ஆகாமல் பார்த்து, அதற்குப்பிறகு அதனை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அந்த சொத்துக்களின் விவரங்களை அனுப்பியுள்ளோம்.

அப்படி வக்பு வாரிய பதிவில் இருந்து எடுத்து அனுப்பப்பட்ட விவரங்களில் மிகச்சில சொத்துக்கள் கிராமத்தின் பெயரில் இத்தனை ஏக்கர்கள் உள்ளன என்பதை 1954 அரசு ஆவணப்படியான விவரத்தை அனுப்பினோம். வக்பு வாரியத்தில் இருக்கக்கூடிய பதிவுகளின் அடிப்படையில் தான் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. தனிப்பட்ட சர்வே எண் உள்ள சொத்துக்களை பற்றிய வினாக்கள் வந்தால் நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஆவணங்கள் நம்மிடத்தில் உள்ளன.

ஆனால் ஒரு கிராமம் என்று வருகிற போது ஒரு ஏரியா பரந்த பரப்பளவாக இருக்கும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட சர்வே எண்கள் விவரங்கள் காட்டப்படக்கூடிய ஆவணங்கள் அரசு ஆவண காப்பகத்தில் தான் இருக்கின்றன.

திருச்செந்துறை கிராமத்தின்
389.03 ஏக்கர் நிலம்:

இதில் திருச்சிக்கு அருகாமையில் உள்ள சில கிராமங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமாக திருச்செந்துறையும் ஒன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் 389.03 ஏக்கர் வக்பு இடம் என்று 1954ல் அரசு நில அளவீடு அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட விவரத்தை அனுப்பி இருந்தோம். ஆனால் இந்த 389.03 ஏக்கர் அளவுள்ள பகுதியில் மற்ற விவரங்கள் ஆவண காப்பகத்தில் உள்ள பதிவு புத்தகத்தில் இருப்பதால் அவைகளை எடுத்து குறிப்புகளோடு மீண்டும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கு சில நாட்கள் அவகாசமாகலாம்.
இப்போது ஆட்சேபனை என்று வரக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சர்வே எண்ணிற்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வந்தவர்கள் அவைகளை கேட்டுவிட்டு சரி என்று திரும்பியிருக்கிறார்கள். இது அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு கிராமமாக இருக்கிற காரணத்தால் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லவேண்டும் என்றால் ஆவண காப்பகத்தில் இருந்து பெற்றுத்தான் பதில் சொல்ல இயலும். அதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை என்பதால், இப்போதைக்கு கிராம பெயரில் சர்வே எண் இல்லாத பகுதிகளை பத்திரப்பதிவு எப்போதும் போல் தொடரலாம்; ஆவண காப்பகத்தில் இருந்து ஆதாரங்களை பெற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மீண்டும் தகவல் தருகிறோம் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

கிராமத்தை பொருத்தவரையிலும் எங்களால் விற்க முடியவில்லை, வாங்க முடியவில்லை பதிவு செய்யமுடியவில்லை என்ற குறைபாடுகளுக்கு தகுந்த தீர்வாக தற்காலிக ஏற்பாடாக இடைகால தளர்ச்சி காட்டியுள்ளோம்.
அதனால் அந்த கிராமத்தில் உள்ள 389.03 ஏக்கர் நில பரப்பளவு வக்பு நிலம் இல்லை என்ற அர்த்தம் அல்ல; வக்பு சொத்துக்கள் என்று குறிப்பிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டவை இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன. அதில் எந்த சமரசமும் கிடையாது.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகுந்த அக்கறையோடு பெருந்தனக்காரர்கள், சான்றோர் பெருமக்கள், பொதுமக்களுக்காக வாரி வழங்கி இருக்கக்கூடிய வக்பு சொத்துக்களை அபகரிப்பில் இருந்தும், ஆக்கிரமிப்புக்களிலிருந்தும், தனியாரிடத்தில் இருந்தும் சட்டரீதியாக மீட்டெடுத்து அவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக ஆக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் வக்பு சொத்துக்கள் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும்.

பொதுமக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்றல்ல. முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, இந்துக்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, கிறிஸ்தவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்ல. ஒட்டு மொத்தமாக பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு என்பது முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தல்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை மாத்திரம் அல்ல, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்கள்
மீட்பு என்பதே எம் இலக்கு:

ஏற்கனவே சில பகுதிகளில் இருந்த ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து விட்டோம். இன்னும் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து, ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் என்பதே இல்லை; அவை எல்லாம் மீட்டெடுக்கப்பட்டு விட்டன என்ற நிலை வரவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கிராமம் என்ற அளவில் உள்ள வக்பு சொத்துக்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அந்த கிராமங்களில் இந்துக்கள் வாழ்கிறார்கள், முஸ்லிம்கள் அறவே இல்லை, அப்படியானால் வக்புக்கு உரிய சொத்து இது கிடையாது என்றெல்லாம் கூட சில கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
வக்பு சொத்துக்களை பொறுத்தவரை பொதுபயன்பாட்டிற்காக இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்பதால் இவைகளில் யார் வாழ்கிறார்கள், யார் அவைகளை பயன்டுத்திக்கொண்டிருக்கிறார்கள் என பார்க்கக்கூடாது. இன்னமும் சொல்லப்போனால் வக்பு சொத்துக்களில் கோயில்கள் கட்ட இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் குளங்கள் கட்ட இடம் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் பாதுகாக்கப்பட்ட வக்ப் ஆவணங்களில் காணப்படுகின்றன.

பிரச்சனைகளை உருவாக்கவே மதரீதியாக பார்க்கிறார்கள்:

இந்துக்கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என்ற எல்லா வழிபாட்டுத்தளங்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். இதனை மதரீதியான கண்கொண்டு பார்ப்பது என்பது நல்ல மனிதாபிமான முறையும் அல்ல. மதரீதியாக பார்த்து தர்மம் செய்வதில் என்னபலன் இருக்கிறது? தர்மம் செய்பவர்கள் மதரீதியிலான கண்கொண்டு பார்ப்பதில்லை. ஆனால் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் உருவாக்க நினைப்பவர்கள் மத ரீதியிலான கண்கொண்டு இவைகளை பார்ப்பது துரதிருஷ்டவசமான சூழ்நிலை. அதை பார்க்கிற போது வேதனையாக உள்ளது.

இன்னும் உங்கள் புரிதலுக்காகச் சொல்கிறேன். சில வக்புகளில் நிறைய கடைகள் உள்ளன. அவைகளில் முக்கால் வாசி கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இருக்கிறார்கள். இதில் முஸ்லிம் அல்லாதவர்கள் தொழில் செய்யக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களுக்கு எதிரான வழக்கு வக்பு வாரியத்திற்கு வந்தாலும், இந்து சமய சகோதரரின் நிலைப்பாடு நியாயமானதாக இருக்குமேயானால் அந்த மஸ்ஜித் நிர்வாகம் சொல்லும் குற்றச்சாட்டை நாம் ஏற்பது இல்லை. இந்து சமுதாய சகோதரர் தொடர்ந்து அந்த கடையை நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பை தான் வக்பு வாரியம் சொல்கிறது. அதனால் இது மஸ்ஜிதுகளுக்கு எதிரான வக்பு வாரியம் என்று யாரும் கூறிவிடமுடியாது.

வக்பின் ஒரு கடையை முஸ்லிம் ஒருவர் நடத்துகிற போது பிரச்சனை ஏற்பட்டு மஸ்ஜித் நிர்வாகம் அவருக்கு எதிராக புகார் அளித்தால், அதை விசாரிக்கும் போது கடைநடத்துபவர் மீது நியாயம் இருந்தால் அவர் தொடர்ந்து கடை நடத்த உத்தரவிட்டுகிறோம். மஸ்ஜித் நிர்வாகத்தின் புகாரை நிராகரிக்கிறோம். இது முஸ்லிம் என்பதற்கான தீர்ப்பு அல்ல.
எனவே நாம் நடைமுறையில் பார்க்கக்கூடிய பார்வை என்பது மதரீதியான பார்வை அல்ல என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன். வக்பு வாரியத்தின் கண்காணிப்பில் உள்ள சொத்துக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரியவை.

வக்பு நோக்கங்களை நிறைவேற்றுவது நம் கடமை:

ஒவ்வொரு வக்பு சொத்தும் எந்தெந்த நோக்கங்களுக்காக வக்பு செய்யப்பட்டுள்ளதோ, எந்தெந்த பயன்பாட்டிற்கு உரியவை என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்களை அந்தந்த வக்பு நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டியது கடமை. அதை மீற முடியாது. அதற்காக வக்பு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே இப்போது கிராமம் என்கிற அளவில் நாங்கள் சொல்லியிருக்கக்கூடிய வக்புகளுக்கான தகவல்களை, ஆவண காப்பகத்தில் இருந்து பெற்று தனித்தனியாக தருவதற்கு அவகாசம் தேவை என்கிற காரணத்தால் அந்த கிராமப்புறத்திலே இருக்கக்கூடிய வக்பு சொத்துக்களுக்கு கால அவகாசம் அளித்து, முன்பிருந்த நிலை தொடரலாம் என்று கூறியிருக்கிறோம். அது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை; அதற்காக இதிலிருந்து பின் வாங்கிவிட்டோம் என அர்த்தமல்ல.

வக்பு சொத்துக்கள் இவைதான் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசு நில அளவையாளர்களால் அளக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிய விவரங்களிலிருந்து வக்பு வாரியம் ஒரு போதும் பின் வாங்காது. ஏனென்றால் அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவுகள்.

எனவே இப்போதைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப முழுமையான விவரங்கள் வருகிற வரை இந்த இடைக்கால நிலை தொடரும்.

இதனால் யாருக்கும் வெற்றி அல்லது தோல்வி என்று பேசப்படும் பேச்சு அழகானது அல்ல. ஒட்டு மொத்த மக்களின் பயன்பாட்டிற்கே பணி செய்கிறோம்.

வக்பு வாரியத்தில் குடியிருப்போர் வெளியேற வேண்டுமா?

வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கிறார்கள் அல்லது விற்கிறார்கள் என்று வக்பு வாரிய கவனத்திற்கு வரும்போதெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் அல்லது அந்தந்த வக்பு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்த வக்பு சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளையும் இப்போது கணினி மயமான வசதிகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறோம். எனவே அப்போது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது நியாயமா? எனக்கேட்கிறீர்கள். அது நியாயம் இல்லை தான். அதற்காக இப்போதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது சரியானது அல்ல.

ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை நாம் கண்டறிந்து மீட்கும் போது அதில் வீடு கட்டி வாழ்பவர்களை உடனடியாக வக்பு வாரியத்திற்கு அதை ஒப்படைத்து விட்டு வெளியேறி விடுங்கள் என சொல்லப்போவதில்லை. அதை விற்க முடியாது. வக்பு சொத்து என உறுதியானதும் அந்த வக்பு நிர்ணயிக்கும் நிலவாடகை அளித்து அதில் தொடர்ந்து அவர்கள் குடியிருக்கலாம்.

வக்பு வாரியத்தின் வருமானத்திற்காக ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்படுவதில்லை. வக்பு சொத்துக்கள் அந்தந்த வக்பு நிறுவனங்களுக்கே சொந்தமானவை. அதன் வருமானத்திலிருந்து சிறு சகாய தொகையே வக்பு வாரியத்திற்கு தரப்படுகிறது. வக்பு சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. மேற்பார்வை செய்வது மட்டுமே.

வக்பு நிலம் என்று சொல்லி இந்துக்களை வெளியேற்ற வக்பு வாரியம் முயற்சிக்கிறது என்பதே முறையற்ற பிரச்சாரம். யாராக இருந்தாலும் மதரீதியாக இதை அணுகுவதே தவறானது. முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஒரு கிராமத்தின் மீது இது போன்று செய்தால் அது முஸ்லிம்களுக்கு எதிரானது என சொல்ல முடியுமா? முஸ்லிம்கள் எத்தனையோ பேரிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தானே என அவைகளை விட்டுவிடவில்லை.

எனவே இது போன்ற பிரச்சனைகள் வருகிற போது உடனே அவைகளை கையில் எடுத்துக்கொண்டு மதரீதியிலான முலாம் பூசுபவர்கள் தான் இப்படி பேசுவார்கள். பொதுநலன் பேசக்கூடியவர்கள், எல்லா மதத்தவரும் சமம் என கருதுபவர்கள், நல்லிணக்கம் காக்கக்கூடியவர்கள் இப்படிப்பட்ட பேச்சை பேசமாட்டார்கள்.

இந்து சமய பெருமக்கள் பயன்பாட்டில் வக்பு சொத்துக்கள் :

வக்பு வாரிய கண்காணிப்பில் இருக்கின்ற எத்தனையோ சொத்துக்கள் இந்து சமய பெருமக்கள் பலரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அது வக்பு சொத்து என்பதனால் ஒரு முஸ்லிம் அதை அத்துமீறி அபகரிக்கமுடியாது. அப்படி செய்தால் அந்த முஸ்லிம் செய்வது அநீதி என வக்பு வாரியம் தீர்ப்பளிக்கும்.

திருச்செந்துறை கிராமத்தில் 389.03 ஏக்கர் என்பது அரசின் நில அளவை சர்வேயாளர்களால் பதிவு செய்யப்பட்ட பதிவு. அதை இல்லை என்று சொல்லமுடியுமா?

அப்படியானால் அதை அரசு தவறாக பதிந்துள்ளதா? அது முஸ்லிம்கள் செய்த பதிவல்ல. வக்பு வாரியத்தில் புரபார்மா அறிக்கை என்ற ஆவணத்தில் உள்ளது. புரபார்மா அறிக்கை என்பது ஓரிரு பக்கங்கள் தான் இருக்கும். 389 ஏக்கருக்கான விவரங்கள் பல பக்கங்கள் என்பதால் அவை ஆவண காப்பகத்தில் இருக்கும்.

எனவே புரபார்மா அறிக்கைபடி அனைத்து சொத்து விவரங்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது போல் திருச்செந்துறை கிராம விவரமும் அனுப்பப்பட்டது. முழு விவரங்கள் ஆவண காப்பகத்தில் இருந்து பெறப்பட்டு அனுப்பப்படும். அது வரை தற்காலிகமாக இது ஒத்தி வைக்கப்படுகிறது.

வக்பு சொத்துக்கள் மக்களின் பயன்பாட்டிற்கு என்பதற்காக அதில் திரையரங்கோ, ஒழுக்க மாண்புகளை கேள்விக்குறியாக்கும் விடுதிகளோ கட்ட முடியாது. பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் தேவைப்பட்டால் வணிக வளாகங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கலாம். அதற்கு யாரும் முன்வரலாம்.

இந்து சமய சகோதரருக்கு 300 ஏக்கர் வக்பு நிலம் பயன்படுத்த அனுமதி:

வக்பு இடத்தில் கல்லூரியோ, மருத்துவ மனையோ கட்ட இந்து, கிருஸ்தவ சமுதாய சகோதரர்கள் முன்வந்தால் நாங்கள் வரவேற்போம். சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி வக்பு வாரிய கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான அனுமதி தரப்படும்.

இன்று தமிழ்நாடு வக்பு வாரிய கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளி அருகில் வக்புக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை ஒரு இந்து சமய சகோதரர் பயன்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்ய விரும்புவதாக அளித்த மனுவை ஏற்று அதற்கு அனுமதி அளித்துள்ளோம்.

வக்பு சொத்துக்களை கண்காணிக்கும் அரசு சார்ந்த துறை தான் வக்பு வாரியம். வக்பு சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை அல்ல.
நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் 1995ல் இயற்றப்பட்டு 2013 ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அமலில் உள்ளதைத்தான் தமிழ்நாடு வக்பு வாரியம் நடைமுறைப்படுத்துகிறது. இதிலிருந்து அது விலகிச்சென்றால் உச்சநீதிமன்றம் வரை எடுத்துச்செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுகிறது.

எனவே வக்பு சொத்துக்களில் குடியிருப்போர் சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களோடு பேசி எத்தகையசமரசம் செய்கிறார்களோ அதை வக்பு வாரியத்திற்கு தெரிவித்தால் வக்பு சட்டப்படி எது சரியோ அதனை வக்பு வாரியம் செயல்படுத்தும்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து இந்துக்களுக்கு எதிராக வக்பு வாரியம் செயல்படுகிறது என அறியாத மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பவர்களை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இவ்வாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

இந்த பேட்டியின் போது வாரிய உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் எம்.கே.கான் , சைய்யத் ரேஹான், செய்யது அலி அக்பர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநர்கள் செயல்படாதபோது நீதிமன்றம் தலையிடும்என உறுதி செய்திருக்கிறார்கள் நீதிபதிகள். மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின...
18/05/2022

ஆளுநர்கள் செயல்படாதபோது நீதிமன்றம் தலையிடும்
என உறுதி செய்திருக்கிறார்கள் நீதிபதிகள். மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

மாநில அரசின் கொள்கையில், முடிவுகளில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என மாண்புமிகு நீதியரசரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி

- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

#பேரறிவாளன்

14/05/2022

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

லண்டன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஒலித்த தமிழ் குரல்

பிரிட்டன் தலைநகர் லண்டனின் புகழ்மிக்க கிங்ஸ்டன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மே 13, 2022 அன்று டுவிக்கென் ஹம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போது பட்டம்பெற்ற 500 பேரில் மிக அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களில் ஒருவர் சித்தீக் அஹமது. அவ்விழாவில் உரையாற்ற விண்ணப்பித்த 323 பேரில் இவர்மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விழாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழங்கி தமிழின் பெருமையை பறைசாற்றினர்.

இவர் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் M.அப்துல் ரஹ்மான் Ex MP அவர்களின் இளைய புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்

இலங்கையில் வாடும் மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 லட்சம் நிதியுதவிஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பே...
14/05/2022

இலங்கையில் வாடும் மக்களுக்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 லட்சம் நிதியுதவி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தமிழக முதல்வரிடம் நேரில் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் 14.5.2022 சனிக்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex MLA சந்தித்து இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ 5 லட்சம் காசோலையை மாண்புமிகு முதல்வரிடம் நேரில் வழங்கினர்.

மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், ஊடகவியாளர் சாகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

#இலங்கை

தமிழ்நாடு வக்பு வாரிய இஃப்தார் நிகழ்வுசென்னை Clarion Hotel அரங்கத்தில் 27.04.2022 புதன் மாலை தமிழ்நாடு வக்பு வாரிய இஃப்த...
27/04/2022

தமிழ்நாடு வக்பு வாரிய இஃப்தார் நிகழ்வு

சென்னை Clarion Hotel அரங்கத்தில் 27.04.2022 புதன் மாலை தமிழ்நாடு வக்பு வாரிய இஃப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான், அரசு முதன்மை செயலாளர் திரு. A. கார்த்திக் IAS , மாண்புமிகு நீதியரசர்கள் K.N. பாஷா,
G.M.. அக்பர் அலி, மாண்புமிகு வாரிய உறுப்பினர்கள், வாரிய முதன்மை செயல் அலுவலர் அ.ப. ரஃபிஉல்லா மற்றும் வக்பு வாரிய மூத்த அலுவலர்கள், வாரிய வழக்கறிஞர் குழுமத்தின் தலைவர் ஹாஜா முகைதீன் சிஸ்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சமூகத்தின் கல்வி மேம்பாட்டில் தனி அக்கறையுடன் தமிழ்நாடு வக்பு வாரியம் சில திட்டங்களை வரையறை செய்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்த இஃப்தார் சந்திப்பு நிகழ்வு பயனுள்ளதாக அமைந்திருந்தது என தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

#தமிழ்நாடு #வக்பு #வாரியம் |

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லைமருத்துவம் மற்றும் மக்கள...
27/04/2022

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில்
உயிர்ச்சேதம் ஏதும் இல்லை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மின்கசிவால் இன்று காலை 11 மணி அளவில் நரம்பியல் பிரிவு கட்டிடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளையும், தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்து பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன், “தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை; தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் உள்பட 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது- மாண்புமிகு முதல்வர் மு.க. #ஸ்டாலின் #துணைவேந்தர்கள் நியமனத்தி...
26/04/2022

மாநில அரசுக்குத்தான்
துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது

- மாண்புமிகு முதல்வர் மு.க. #ஸ்டாலின்

#துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு உயர்கல்வியில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது. #பிரதமர் மோடியின் குஜராத்தைப் போல், தமிழகத்திலும் து.வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமுன்வடிவை நிறைவேற்றியுள்ளோம்!

 #மணிமண்டபங்கள் மக்களுக்காக பயன்படட்டும்மணிமண்டபங்களை கொசுக்கள், வவ்வால்கள் ஆதிக்கத்திலிருந்து மீட்டு  #நூலகங்கள் அமைத்த...
25/04/2022

#மணிமண்டபங்கள் மக்களுக்காக பயன்படட்டும்

மணிமண்டபங்களை கொசுக்கள், வவ்வால்கள் ஆதிக்கத்திலிருந்து மீட்டு #நூலகங்கள் அமைத்து, நூல் வெளியீடு, கருத்தரங்கம், பயிலரங்கம் மூலம் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன்படுத்தச் செய்ய #தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

- மாநிலச் செயலாளர் காயல் மகபூப் வேண்டுகோள்

இரு நிகழ்வுகள் ; இரு வேறு நிலைகள்ராணுவத்தின் பலத்த பாதுகாப்பில் இந்தியப் பிரதமர் - காஷ்மீர் நிகழ்வில்...மக்களின் அன்பு அ...
24/04/2022

இரு நிகழ்வுகள் ; இரு வேறு நிலைகள்

ராணுவத்தின் பலத்த பாதுகாப்பில்
இந்தியப் பிரதமர் - காஷ்மீர் நிகழ்வில்...

மக்களின் அன்பு அரவணைப்பில்
தமிழக முதல்வர் - #இஃப்தார் நிகழ்வில்...

இது தான் "திராவிட மாடல் ஆட்சி" என மக்கள் புகழாரம்

#இஃப்தார் #திமுகஇஃப்தார்

ஏழை முஸ்லிம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம்!டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் குடியிருப்புகளை உச்சநீதிமன்ற தடையையும் மீறி புல...
23/04/2022

ஏழை முஸ்லிம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம்!

டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் குடியிருப்புகளை உச்சநீதிமன்ற தடையையும் மீறி புல்டோசர்கள் மூலம் தகர்த்ததோடு, அவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட கிடைக்கவிடாமல் தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்.

- நேரில் பார்வையிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பிக்கள் உள்ளிட்ட குழுவினர் பேட்டி

#ஜஹாங்கீர்புரி

04/04/2022

வக்பு வாரிய தீர்ப்பு அதன் தலைவரின் தனிப்பட்ட முடிவு அல்ல;

அவதூறு விமர்சனங்களால் நாங்கள் நிதானம் இழந்துவிடமாட்டோம்!

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்

“அப்ஸலுல் உலமா” M.அப்துல் ரஹ்மான் M.A., Ex MP., கடையநல்லூரில் உணர்ச்சி உரை

26/03/2022

நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களை கண்ணியப்படுத்துவோம்! -

#தமிழ்நாடு #வக்பு #வாரிய #தலைவர்
M.அப்துல் ரஹ்மான் M.A., Ex MP., பட்டமளிப்பு விழா பேரூரை

 #தமிழ்நாடு  #வக்பு  #வாரிய சிஇஓ பரிதா பானு பணி இடமாற்றம்...
17/03/2022

#தமிழ்நாடு #வக்பு #வாரிய சிஇஓ பரிதா பானு பணி இடமாற்றம்...

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் அனைத்து சமுதாயத்தினரும்திருப்தியடையும் நிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்குவார...
29/11/2021

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் அனைத்து சமுதாயத்தினரும்
திருப்தியடையும் நிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்குவார் என நம்புவோம்

திருச்சியில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பேட்டி

திருச்சி, நவ.28
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் திருச்சி தென்னூர் ஹைரோடு பெரிய பள்ளிவாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்லாண்டு காலமாக சிறைவாசத்தில் இருக்கும் சுமார் 700 ஆயுள் கைதிகளை உரிய பரிசீலனைக்குப் பிறகு விடுதலை செய்ய ஆவன செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். கருணை உள்ளத்தோடு கூடிய அவரது இந்த அறிவிப்பை தமிழக மக்கள் பெருமனதோடு வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி விடுதலை செய்யப்படுபவர்களுள் பல்லாண்டு காலம் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்க கூடிய முஸ்லிம் சிறைவாசிகளும் உள்ளடங்கி இருப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு சமுதாய மக்களுக்கு இருந்து வருகிறது.

ஆனால் எந்தெந்தப் பிரிவின் கீழ் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்; யார் யாரெல்லாம் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்ற பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்பொழுது ஆயுள் கைதிகளாக இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் ஒருவர் கூட வெளியே வர முடியாத நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இது தமிழக அரசுக்கோ, தமிழக முதல்வருக்கோ எதிராகச் சொல்லப்படும் கருத்து அல்ல. அந்த அரசாணையின் வாசகம் அப்படியான புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும், தமிழக முதல்வர் அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்யும் வகையிலும் விடுதலை அறிவிப்புகள் இருக்கும் என்று அந்த வாசகத்தின் இறுதிப் பகுதி அமைந்திருக்கிறது.
இது ஆழமாக சிந்தையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எனவே யாரும் எந்த வகையிலும் நம்பிக்கை இழந்து விட வேண்டிய அவசியமில்லை. அவரவரது புரிதலுக்கு ஏற்ப சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் தவறான கருத்துக்களைப் பரப்பி விமர்சனத்தில் ஈடுபடவும் அவசியமில்லை.

தமிழக முதல்வர் அவர்களைப் பொருத்த வரை அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதற்கொண்டு மாநிலத்தில் உள்ள மக்களை சாதி, மதம், இனம், சமுதாயம் என பாகுபாடுகள் எதுவும் பாராமல் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடிய நிலையில்தான் அவரது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மாறாமல் அமைந்திருக்கின்றன. அப்படிப் பட்ட அவருக்கு மாநிலத்தின் அனைத்து சமுதாயத்தினரும், அனைத்து மதத்தினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஒன்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லி இந்தப் பேட்டியை நிறைவு செய்கிறேன்.

சிறைவாசிகள் விடுதலையில் கலைஞர் செயல்படுத்திய முன்னுதாரணம்

கோவை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறைவாசிகள் யாருமே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று தவறான கருத்துபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியல்ல! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஆயுள் சிறைவாசிகள் பலரது தண்டனைக் காலத்தை கடந்த 2009ஆம் ஆண்டு பத்தாண்டுகள் குறைத்து, அதன் அடிப்படையில் விடுதலை செய்த வரலாறு உண்டு. அவரது இந்த நடவடிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அவரது தனயனாக சீரிய நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல்லாண்டு காலம் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை கருணை உள்ளத்தோடு விடுதலை செய்து, தனது நடவடிக்கை சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது; பாரபட்சம் அற்றது என்ற நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்; வழங்க வேண்டும் என்றும் பணிவுடன் கோருகிறோம்.

இதே கோரிக்கையை வாசகங் களாக உள்ளடக்கி, சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பெருந்தகை அவர்களும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை இத் தருணத்தில் மேற்கோள்காட்டுவது மிகப் பொருத்தம் என்று நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

#முஸ்லிம்சிறைவாசிகள் #ஆயுள்சிறைவாசிகள்

வக்ஃப் சொத்துக்களை அபகரித்து விற்று நெருப்பைத் தின்னாதீர்! M.அப்துல் ரஹ்மான் M.A., Ex MP., எச்சரிக்கைபொறுப்புகள் வரும் ப...
09/10/2021

வக்ஃப் சொத்துக்களை அபகரித்து
விற்று நெருப்பைத் தின்னாதீர்!
M.அப்துல் ரஹ்மான் M.A., Ex MP., எச்சரிக்கை

பொறுப்புகள் வரும் போகும். அதை நான் பதவி என்ற வார்த்தையில் பயன்படுத்துவது இல்லை. பொறுப்பை அல்லது பதவியை தேடிச்செல்வது பெருமானார் முஹம்மது நபி (ஸல்) காட்டிய வழியும் அல்ல. அல்லாஹ் நாடினால் அந்த பொறுப்பு நம்மிடம் சாட்டப்படும். வழங்கப்படும் அல்ல. அந்த பொறுப்புக்கு உரியவராக இருந்து பணி செய்வது நம்முடைய கடமை.

கண்ணியமான மரியாதைக்குரியவர்கள் யார்? பெரிய பட்டம், பதவி, செல்வம், செழிப்பு, பணக்காரர்கள், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி இவை அனைத்தும் நம் கண்களுக்கு தெரியக்கூடிய அலங்காரங்கள். ஆனால் குர்ஆன் இப்படி பேசுகிறது. நீங்கள் இவைகள் தாம் மரியாதைக்குரியதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்; அது தவறு. மரியாதை தரப்பட வேண்டும், அது வேறு விஷயம். ஆனால் எல்லா மரியாதைக்கும் உயர்ந்த மரியாதை ஒன்று உள்ளது.

‘‘ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ’’

அரபி தெரிந்தவர்களுக்கு தெரியும். அக்ரம் என்றால் கண்ணியத்தின் சூப்பர்லேடிவ் டிகிரி. கரீம் என்பது அந்த வார்த்தை. கபீர் என்ற வார்த்தை பெரியது. அக்பர் என்றால் மிகப்பெரியது. அல்லாஹ்வை நாம் கபீர் என்று சொல்வதில்லை. அல்லாஹூ அக்பர் என்றால் சூப்பர்லேட்டிவ் டிகிரி. அது போல கரீம் என்ற வார்த்தையின் சூப்பர்லேட்டிவ் டிகிரி அக்ரம். ‘இன்ன அக்ரமுக்கும்’ உங்களிடத்திலே யார் மிகமிக கண்ணியத்திற்குரியவர்கள் மரியாதைக்குரியவர்கள், ‘இந்தல்லாஹி அத்காக்கும்’ எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு வாழவேண்டும். அவ்வளவு தான். அரைவரியில் அல்லாஹ் டிக்லர் செய்கிறான் கண்ணியத்திற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் யார் என்று!
எனவே நமக்கு கிடைத்திருக்கக்கூடிய பொறுப்பு என்பது அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு செயல்படுத்தக்கூடிய பொறுப்பு.

கிடைக்கக்கூடிய பதவிகளை வைத்துக்கொண்டு உலக ஆசாபாசத்திற்கு இணங்கி எத்தனை லட்சங்கள் எத்தனை கோடிகள் என்று இறங்குவோமேயானால் பார்ப்பதற்கு வேண்டுமானால் கோடிகள் இருக்கலாம்; ஆனால் பார்ப்பதும் உண்பதும் உறங்குவதும் ஹராமான வாழ்க்கையாகவே தொடரும் என்ற அச்சம் இருக்க வேண்டும். அப்படி ஹராமாக ஈட்டப்படக்கூடிய பணங்கள் செல்வங்கள் கூட உங்களோடு போகவில்லை, இஹ்லாசாக வாழக்கூடிய உங்கள் பெற்றோர்களுக்கும் ஊட்டப்படுகிறது என்றால் உங்களோடு இருப்பவர்களுக்கு நஞ்சை ஊட்டினால் எவ்வளவு பெரிய கொடூரமோ அதற்கு சமமானது. ஹராமாக அல்லாஹ்விற்கு பொருத்தமில்லாத செல்வத்தை பெற்றோர்களுக்கும் மனைவிகளுக்கும் பிள்ளைகளக்கும் கொடுப்பது நஞ்சூட்டப்படும் உவமைகளுக்கு சமம். இதை ஒரு மனிதன் உணர்ந்துவிட்டால் எதை செய்தாலும் ஹலாலாஹ செய்யவேண்டும் என்ற அச்சப்பாடு இருக்கும்.

வக்பு வாரிய தலைவர் பதவியைக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. நம்முடைய சமுதாயத்தில் வக்பு வாரியத்தை பற்றி தவறான கண்ணோட்டம் நிறைய இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் தவறு என்று சொல்லி விடவும் முடியாது. குற்றச்சாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை எல்லாம் உள் வாங்கி சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நேர்மையாக நீதமாக செல்வது இந்த காலகட்டத்தில் கடினமானது தான். ஆனாலும் வக்பு வாரிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படை தன்மையோடு இருக்கும்.
வக்பு வாரியம் என்பது இடத்தினுடைய சொந்தக்காரர் அல்ல, சொந்தக்காரர் இந்த சமுதாயத்துக்காக இறைவனின் பெயரில் அர்பணித்திருக்கிறார். அவர் வக்பு செய்த இடம் அவர் பிள்ளைகளுக்கா என்றால் இல்லை. அவர் தன் பிள்ளைகளுக்கு போக இந்த சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும் என்று வக்பு செய்கிறார். அது போன்ற இடங்களில் நிறைய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை சில பேர் திருடி விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஹராமானது. அதை லேசாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதை செய்வதன் மூலம் நெருப்பை தின்கிறார்கள். யார் அப்படி செய்கிறார்களோ அவர்களுக்கு சொல்கிறேன். அவர்கள் விழுங்குவது நெருப்பு. பார்ப்பதற்கு பணமாக இருக்கலாம். போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து, போலி பட்டாக்கள் தயார் செய்து அதை விற்று சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு நாளாக தப்பித்து கொண்டிருக்கிறார்கள். இனி தப்பிப்பது கஷ்டம். நான் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று கவலைப்படுவது கிடையாது. நான் கவலை படுவதெல்லாம் அல்லாஹ் நாளை மறுமையில் கேட்பானே என்று தான்!

அல்லாஹ்வுடைய சொத்தை விற்று தின்று கொண்டிருக்கிறார்கள் சிலர். அல்லாஹ்வுடைய சொத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் சிலர். அவர்களுக்கு மவுத் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்களா? அல்லாஹ் அவர்களை கேள்வி கேட்க மாட்டான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்களா? யாரை ஏமாற்ற இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று பலபேர் சமுதாயத்தில் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சீர் படுத்த வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மஸ்ஜித்களில் நிர்வாக சீர்கேடுகள், போட்டி, பொறாமை, சண்டை அடிதடி இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மஸ்ஜிதுகளை நிர்வாகம் செய்வதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று நம்பில் பலபேர் மறந்தே போய்விட்டார்கள். ஒவ்வொரு பொறுப்புக்களுக்கும் கல்வி தகுதி உள்ளதை போன்று மஸ்ஜித்களை நிர்வகிக்கும் தகுதியாக என்ன என்று குர்ஆன் பேசுகிறது. அல்லாஹ்
சொல்லித்தருகிறான்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ

‘‘இன்னமா எஹ்முரு மஸாஜிதல்லாஹி மன் ஆமன பில்லாஹி வல்யவ்மில் ஆகிரி வஅகாமஸ் ஸலாத்த வஆதஸ்ஜகாத்த வலம் யஹ்ஸ இல்லல்லாஹ்’’ மஸ்ஜித்களை நிர்வாகிக்ககூடியவர்களாக யார் இருக்க வேண்டும் தெரியுமா?

‘மன் ஆமன பில்லாஹி வல்யவ்மில் ஆகிரி’ அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருக்க வேண்டும், மறுமை நாளின் மீது அச்சம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
‘வஅகாமஸ் ஸலாத்த’ தொழுகையை பேணி தொழுபவராக இருக்க வேண்டும்.
‘வஆதஸ்ஜகாத்த’ அல்லாஹ் கொடுத்த நிஹ்மத்துகளை கொண்டு ஜகாத் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
‘வலம் யஹ்ஸ இல்லல்லாஹ்’ அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும்.

மொத்தம் 5 தகுதிகள். இந்த 5 தகுதிகளை பெற்று நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் யார் என்று பார்த்தால் 100 ல் 5 பேர் கிடைப்பார்களா என்பது சந்தேகம் தான். இது எதார்த்தம். நான் யாரையும் குறை சொல்லவில்லை . இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் முத்தவல்லிகள். பல மஸ்ஜித்களை நிர்வாகம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள். உங்கள் நினைவூட்டலுக்காக உங்களிடம் சொல்ல வேண்டியது என் கடமை. ஒரு மஸ்ஜிதை நிர்வாகிக்கக்கூடியவர்களின் தகுதி இந்த 5ம் தான். பள்ளிவாசல் நிர்வாகம் பெரும்பாலும் யாருக்கு போகின்றது என்று சொன்னால் நல்ல பணபலம், அவருக்கு பின்னாடி படை பலம் இருக்கா என்பதெல்லாம் மக்களின் அளவீடாக இருக்கிறது.

அல்லாஹ் சொன்ன இந்த 5ல் எது குறைந்தாலும் அந்த குறையை நிவர்த்தி செய்து கொண்டு நிர்வாகத்தை தொடர்ச்சி ஆக்கி கொள்ளுங்கள். இதை சொல்லுவது என்னுடைய கடமை.

[ வேலூர் மஸ்ஜித்களின் முத்தவல்லிகள் கூட்டமைப்பான வேலூர் மஸாஜித் அசோசியேஷன் சார்பாக, அதன் தலைவர் V.K.அப்துல் அலீம் சாஹெப் தலைமையில், S.முஹம்மத் அத்ஹர் சாஹெப், A.G.ஷம்ஸுத்தீன் நாஸிர் உமரி சாஹெப், A.முஹம்மத் சர்வர் சாஹெப், சையத் அஹ்மத் சாஹெப் ஆகியோர் முன்னிலையில் 26.09.2021 ஞாயிறு இரவு 7 மணிக்கு வேலூர் டிட்டர்லைன் உசேன்புரா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...]

#வக்பு #வக்ஃப்

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when Piraimedai Tamil Fortnightly - பிறைமேடை மாதமிருமுறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piraimedai Tamil Fortnightly - பிறைமேடை மாதமிருமுறை:

Videos

Share

Category