Bhagavad Darishanam Tamil / பகவத் தரிசனம் தமிழ்

Bhagavad Darishanam Tamil / பகவத் தரிசனம் தமிழ் பகவத் தரிசனம், தமிழ் மாத இதழ்

ஹரே கிருஷ்ண (இஸ்கான்) இயக்கத்தின் பத்திரிகை.

கருணையின் மொத்த உருவம்:பகவத் கீதையை உரைத்த கிருஷ்ணர் முதலில் தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்; அவ்வாறு சரணடைந்தால் எல்லா...
25/03/2024

கருணையின் மொத்த உருவம்:

பகவத் கீதையை உரைத்த கிருஷ்ணர் முதலில் தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்; அவ்வாறு சரணடைந்தால் எல்லா பாவங்களையும் போக்கி விடுவதாக உறுதியளிக்கிறார். அதாவது, கிருஷ்ணர் கீதையில் ஒரு வகையான நிபந்தனையை விதிக்கின்றார். ஆனால் அதே கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக வரும்போது, நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்தால் போதும் என்று வேண்டுகிறார். கம்சனால் அனுப்பப்பட்டு கிருஷ்ணரால் கொல்லப்பட்ட பூதனை என்னும் அரக்கி கிருஷ்ணரின் கருணையினால் அவரது லோகத்தில் தாய்க்கு சமமான வாத்ஸல்ய பக்தியைப் பெற்றாள். பகவான் கிருஷ்ணரின் கருணையை வெளிப்படுத்தும் இத்தகவல், சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மன்னருக்கு உபதேசித்தபோதுதான் உலக மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் நவத்வீபத்தில் அசுர குணம் நிரம்பிய ஜகாய், மாதாய் என்னும் இரு தீயோர்களுக்கு சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண பிரேமையை வழங்கியதை அங்கிருந்த மக்கள் அனைவரும் கண்கூடாகக் கண்டனர்.

கிருஷ்ணரும் மற்ற அவதாரங்களும் செல்வத்தையும் முக்தியையும் கொடுப்பார்கள், பக்தியை அவ்வளவு எளிதில் கொடுத்துவிட மாட்டார்கள். பக்தனின் பக்திக்கு பகவானே அடிமையாகி விடுவார் என்பதே இதற்கு காரணம். ஆனால் சைதன்ய மஹாபிரபுவோ தான் அனுபவிக்கும் கிருஷ்ண பிரேமையை மூடி மறைக்காமல் அனைவருக்கும் விநியோகம் செய்தார். அதனால்தான் சைதன்ய மஹாபிரபுவை கடல் போன்ற கருணை கொண்ட மஹாவதான்யாய அவதாரம் என ஆச்சாரியர்கள் போற்றுகின்றனர்.

--------------
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அவதாரத் திருவிழா அனைத்து இஸ்கான் கோயில்களிலும் மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு ஆன்மீக ஆனந்தத்தை பெறுவீர்! அனுமதி இலவசம்!

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் வாழ்வையும் உபதேசங்களையும் விவரிக்கும் "ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்" எனும் நூலைப் படித்து ஆன்மீக ஆனந்தத்தை அடைவீர். இது இஸ்கான் கோயில்களிரும் கிடைக்கும்.

தொடர்பிற்கு: 98948 14553

பகவான் இராமர் மாமிசம் சாப்பிட்டாரா?இராமாயணத்தின் ஆதிமூலமான வால்மீகி இராமாயணம், 24,000 ஸ்லோகங்களுடன் 537 அத்தியாயங்களைக் ...
13/01/2024

பகவான் இராமர் மாமிசம் சாப்பிட்டாரா?

இராமாயணத்தின் ஆதிமூலமான வால்மீகி இராமாயணம், 24,000 ஸ்லோகங்களுடன் 537 அத்தியாயங்களைக் கொண்டதாகும். அவை 6 காண்டங்களாக சீரமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாமிசம் குறித்து இரண்டு குறிப்புகளும் சைவ உணவு குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகளும் காணப்படுகின்றன. 119 அத்தியாயங்களைக் கொண்ட அயோத்தியா காண்டத்தின் இருபதாம் அத்தியாயம், இராமர் வனவாசம் செல்ல இருப்பதைக் கேட்ட தாய் கௌசல்யையின் கதறலைப் பற்றி விவரிக்கிறது. அதன் இருபத்தி ஒன்பதாம் ஸ்லோகத்தில் இராமர் தனது தாயிடம் கூறுவது யாதெனில், “மாமிசத்தைத் தவிர்த்து, கிழங்குகள், பழங்கள், தேன் முதலியவற்றை ஏற்று, காட்டில் முனிவரைப் போல் பதினான்கு ஆண்டுகள் வசிப்பேன்.” இந்த ஸ்லோகத்தின் அடிப்படையில், பகவான் இராமர் அயோத்தியாவில் வசித்தபோது மாமிசம் சாப்பிட்டு வந்தார் என்றும், காட்டில் வசிக்கும்போது அவற்றைத் தவிர்க்க சத்தியம் செய்கிறார் என்றும் சிலர் ஊகிக்கின்றனர்.

வேதப் பண்பாட்டின்படி, ஒரு மகன் வீட்டை விட்டுத் தொலைதூரம் செல்லும்போது, தமது பெற்றோரிடம் நெறிமுறைகளை வழுவாமல் கடைப்பிடிப்பதாகவும் மதக்கோட்பாடுகளிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் உறுதி கூறுவது வழக்கம். விடுதியில் தங்கிப் படிக்கச் செல்லும் மாணவன் தனது பெற்றோரிடம், “விடுதியிலிருக்கும்போது மது அருந்தமாட்டேன்” என்று உறுதி கூறுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவனது உறுதியின் பொருள், வீட்டிலிருந்தபோது அவன் மது அருந்தி வந்தான் என்பதா? நிச்சயம் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதே போன்ற மனநிலையில்தான் பகவான் இராமர், தாம் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று தமது தாயிடம் உறுதி கூறுகிறார்.

சுந்தர காண்டத்தின் முப்பத்தி ஆறாவது அத்தியாயத்தில், பகவான் இராமர் கடலைக் கடந்து இராவணனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்று சீதையிடம் ஹனுமான் உறுதியளிக்கின்றார். அப்போது இராமர் சீதையைப் பிரிந்து பெரும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியபோதிலும், மதுவிற்கோ மாமிசத்திற்கோ அடிமையானதில்லை என்று சீதைக்கு ஹனுமான் (ஸ்லோகம் 41) வெளிப்படுத்துகிறார்

மேலும் படிக்க...https://tamilbtg.com/did-lord-rama-ate-meat/

இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா?அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வ...
12/01/2024

இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா?

அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத காவியம். இராமாயணத்தைத் தழுவி எத்தனை எத்தனையோ காவியங்கள், தெருக்கூத்துகள், நாடகங்கள், கவிதைகள், வரைபடங்கள், மற்றும் திரைப்படங்களும் வந்துள்ளன. கலைஞர்கள் இவ்வாறு சுற்றிச்சுற்றி வருவதற்கு, இராமாயணம் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளதே காரணமாகும்.

இவர்களில் சிலர் (அல்லது பலர்) இராமாயணத்தின் தகவல்களை தங்களது மனதிற்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். அவ்வாறு இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாமா? இதைச் சற்று விவாதிக்கலாம்.

நவீன கால மனிதன் இராமாயணத்தை அணுகும்போது, அவனது சிந்தனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு விஷயங்களை இராமாயணத்தில் காண்கிறான். பத்து தலை கொண்ட இராவணன், மலைபோன்ற உடலைக் கொண்ட கும்பகர்ணன், பேசக்கூடிய குரங்குகள், கழுகுகள், கரடிகள், தூண்களின்றி கடலில் அமைக்கப்படும் பாலம், மலையைத் தூக்கிக் கொண்டு பறக்கும் ஹனுமான் என பல அசாத்தியமான விஷயங்கள் அவனுக்கு ஐயத்தைக் கொடுக்கின்றன. அந்த ஐயத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மேற்கத்திய ஆய்வாளர்கள் பலர் இராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை Mythology என்று சொல்கின்றனர். அதாவது, ஆதாரமில்லாத, உலக நடைமுறையினால் விளக்கமுடியாத, பாரம்பரிய நம்பிக்கை அல்லது கற்பனை என்கின்றனர். சுருக்கமாகக் கூறினால், இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.
உண்மையில், இராமாயணம் அவர்கள் கூறுவதைப் போன்ற கட்டுக்கதை அன்று; இஃது இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை வரலாற்றைக் கூறும் நூல். ஆயினும், நாத்திகர்களும் ஸநாதன எதிர்ப்பாளர்களும், கிணற்றுத் தவளையைப் போன்ற அறியாமையினால், இதனை ஒரு கட்டுக்கதையாகவே நினைக்கின்றனர்.

கட்டுக்கதையாக நினைப்பவர்கள் பெரும்பாலும் இராமாயணத்தில் அவ்வளவு ஆர்வம்காட்ட மாட்டார்கள். அதே சமயத்தில், இராமாயணத்தின் மீது ஆர்வம் செலுத்தும் “இந்து” சமயத்தினரிடையே [மேற்கூறியவர்களின் பிரச்சாரத்தினால்] “இராமாயணத்தின் காட்சிகள் காவியத்திற்காக மிகைப்படுத்தப்பட்டுள்ளன,” என்னும் கருத்து மெள்ளமெள்ள பரவி வருகிறது. அதாவது, “இராமர் உண்மையே, ஆனால் இராமாயணம் முழுமையான உண்மையல்ல” என்று நினைக்கின்றனர்.

அதாவது, இராமாயணத்திலுள்ள அமானுஷ்யமான செயல்களை இவர்கள் நம்புவதில்லை, அவை காவியத்திற்காகப் புனையப்பட்டவை என்று நினைக்கின்றனர். பண்டிதரும் பேச்சாளருமாக இருக்கும் பெயரளவு வைஷ்ணவர் ஒருவர் அண்மையில், “ஹனுமான் முதலான வானரர்கள் [மனிதர்களைப் போன்று] மொழியைக் கொண்டு பேசியிருக்க வாய்ப்பில்லை, ஜாடை மொழியிலும் வெற்று சத்தங்களைக் கொண்டும்தான் பேசியிருப்பார்கள்,” என்று கருத்து தெரிவித்திருந்தார். வானரர்கள் சாதாரண குரங்குகள் அல்லர் (பூவுலகிற்கு அப்பாற்பட்ட சரீரத்தைப் பெற்றவர்கள்) என்னும் அடிப்படை உண்மைகூட இவருக்குத் தெரியாதது வியப்பளித்தது. “சொல்லின் செல்வர்” என்று போற்றப்படும் ஹனுமானை (இன்றைய குரங்குகளைப் போல) பேசவியலாதவர் என்று நினைத்தல் பெரும் குற்றமாகும்.

இராமாயணத்தின் மீதான இத்தகு அவநம்பிக்கையின் காரணத்தினால், புனைவுகளை யார் புனைந்தால் என்ன என்று நினைக்கின்றனர். “வால்மீகியைப் போலவே நானும் எனது கற்பனை சக்திகளைக் கொண்டு இராமாயணத்தைப் புனைகிறேன்,” என்று எண்ணுகின்றனர்.
இவர்களின் இந்த அறியாமையே “இராமாயணத்தை நினைத்தபடி மாற்றலாம்” என்ற எண்ணத்திற்கு வித்தாகிறது. இதனால், இராமாயண கதையில் பல மசாலாக்களைச் சேர்க்கின்றனர்; தங்களது கற்பனைத் திறனைக் கொண்டு திரைக்கதை எழுதுகின்றனர்; சொற்பொழிவாளர்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக எதைஎதையோ திரிக்கின்றனர்; வரைபடக் கலைஞர்கள், கிராஃபிக்ஸ் டிசைனர்கள் முதலியோர் தத்தமது சுவைக்கு ஏற்றபடி கதையையும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் அமைக்கின்றனர். கொடுமை!

மேலும் படிக்க...https://tamilbtg.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae/

01/01/2024

பாரத பாரம்பரியத்தில் புது வருடம்:

பாரத பாரம்பரியத்தில், புதிய நாள் என்பது சூரிய உதயத்துடன் தொடங்குகின்றது; அதாவது, நமது சுற்றுச்சூழலில் இருள் ஒழிந்து ஒளி பிறக்கும்போது, அது புதிய நாளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இன்று பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மேற்கத்திய வழக்கத்திலோ புதிய நாள் என்பது இரவு 12 மணிக்கு தொடங்குகின்றது. இரவு 12 மணிக்கு எந்தவொரு மாற்றமும் சுற்றுச்சூழலில் நிகழாதபோது, அதனை புதிய நாள் என்று உரைத்தல் அறிவுப்பூர்வமானதல்ல.

அதுபோலவே, புது வருடம் என்பதும் பாரத பாரம்பரியத்தில் ஏதேனும் ஒரு சுற்றுப்புற காலநிலையின் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டது. சித்திரை மாதம் பிறக்கும்போது நம்முடைய காலநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை ஒவ்வொருவராலும் உணர முடிகிறது. ஆனால் ஜனவரி முதல் தேதியன்று ஏதேனும் மாற்றம் ஏற்படுகின்றதா? நிச்சயமாக இல்லை.

எப்படிப் பார்த்தாலும், புது வருடம் என்பது மகிழ்ச்சிக்கோ கொண்டாட்டத்திற்கோ உரித்தான நாள் அல்ல. பிறப்பு, இறப்பு, நோய், முதுமை என்னும் துன்பங்களில் சிக்கியுள்ள நமக்கு இந்த புத்தாண்டு எவ்வித மாற்றத்தையும் தரப்போவது இல்லை. வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் புரிந்து கொண்டு நாம் செயல்பட்டால், நாம் வாழும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு வருடமும் பயனுள்ளதாக அமையும்; இல்லாவிடில், நமது வாழ்வில் எத்தனை புது வருடங்களைப் பார்த்தாலும், அவற்றால் பயனில்லை.

25/12/2023

கிருஷ்ணரும் கிறிஸ்துவும்:

கிறிஸ்து, “நான் கடவுளின் மகன்” என்று கூறுகிறார்; கிருஷ்ணரோ, “நான் கடவுள்” என்று கூறுகிறார். கடவுளுக்கும் கடவுளின் மகனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நாங்கள் அனைவரையும் மதிக்கின்றோம். உங்களது தந்தைக்கு மதிப்பளித்தால், உங்களுக்கும் நான் மதிப்பளிப்பேன். உங்களது தந்தையை நான் அவமதித்தால், நீங்கள் என்னிடம் திருப்தியடைவீர்களா? இல்லை. இதுவே எங்களது தத்துவம்.

“நான் கிருஷ்ணரின் சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகருடைய சேவகன்,” என்று சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அதுபோல, கிருஷ்ணரை முழுமையாக நேசிக்கும் எவரும் இயேசு கிறிஸ்துவையும் நேசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை முழுமையாக நேசிப்பவன் கிருஷ்ணரையும் நேசிக்க வேண்டும். “ஏன் கிருஷ்ணரை நேசிக்க வேண்டும்? நான் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நேசிப்பேன்,” என்பது அறிவீனம்.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/if-you-do-not-have-a-name-for-god-tell-the-name-of-krishna/

23/12/2023

ஞான வாள் பகவத் கீதை வயதானவர்களுக்கா? By Sri Giridhari Das June 2, 2013 0 144 Share Facebook Twitter Pinterest WhatsApp Must read தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும் February ...

மழை வெள்ளமும் பிறவி, மரணம் என்கிற ஸம்ஸார வெள்ளமும் : மழை வெள்ளத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குபவர்களையும் உயிரைக் காப்பா...
08/12/2023

மழை வெள்ளமும் பிறவி, மரணம் என்கிற ஸம்ஸார வெள்ளமும் :

மழை வெள்ளத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குபவர்களையும் உயிரைக் காப்பாற்றுபவர்களையும் பல்வேறு மக்கள் போற்றுகின்றனர், அது நன்மையே. ஆயினும், வெள்ள நிவாரணத்தைப் போற்றும் மக்கள் ஸம்ஸார நிவாரணத்தைப் போற்றுவதைப் பற்றி சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. பிறவி, மரணம் என்கிற ஸம்சார வெள்ளத்தில் சிக்கியிருக்கிற எண்ணற்ற ஜீவன்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின்படி ஆன்மீக ஞானத்தை (பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற) புத்தகங்களின் ரூபத்தில் விநியோகம் செய்யும் நிவாரணப் பணியாளர்களான பக்தர்களைப் போற்ற தயங்குகின்றனர். சாதாரண வெள்ளத்திலிருந்து மக்களை விடுவிப்பவர்கள் நிச்சயம் சிறப்பானவர்கள், ஆனால் அவர்களைக் காட்டிலும் ஸம்சார வெள்ளத்திலிருந்து மக்களை விடுவிப்பவர்கள் எண்ணிலடங்காத மடங்கு சிறந்தவர்களாவர்.

மக்களை ஸம்சார வெள்ளத்திலிருந்து விடுவிப்பதற்கான எளிய மருந்து ஹரி நாம ஸங்கீர்த்தனம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நமக்கு எளிமையாக உபதேசித்த ஆன்மீக மருந்து–ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரமாகும். இதனை நாம் தினமும் உச்சரித்தால் துன்பமயமான சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் வாழ்ந்து, இறுதியில் ஆனந்தமயமான வாழ்வினை அடையலாம்.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/rain-floods-lessons-to-know/

இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க, பகவத் தரிசன சந்தாதாரராவீர்
https://tamilbtg.com/sub/
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும் 9894814553
பகவத் தரிசனம் படியுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனத்தை அடையுங்கள்...

Hare Krishna Kirtan in AR Rahman's house.
04/12/2023

Hare Krishna Kirtan in AR Rahman's house.

Please Like & Subscribe and then select the "Black Bell Icon" next to it, to receive notifications when New Videos are released for your viewing pleasure. T...

மனதை நண்பனாக்கும் பயிற்சிகள்:மனதின் மூலமாக தனது புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களை “கோஸ்வாமி” எனவும், புலன்களைக் கட்டுப்பட...
22/11/2023

மனதை நண்பனாக்கும் பயிற்சிகள்:

மனதின் மூலமாக தனது புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களை “கோஸ்வாமி” எனவும், புலன்களைக் கட்டுப்படுத்தாமல் புலன்திருப்திக்காக மட்டுமே வாழ்பவர்களை “கோதாஸர்கள்” எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. களங்கப்பட்ட மனது நம்முடன் இருந்து கொண்டு, நமக்கு உதவி செய்யாததால், அதனை “துரோகி” (கூடவே இருந்து குழி பறிப்பவன்) என்றும் கூறலாம். மனதைக் கட்டுப்படுத்த கோஸ்வாமிகள் வழங்கியுள்ள முறைகளை மூன்றாகப் பகுக்கலாம்.

“மனதை ஒருவன் காலையில் எழுந்தவுடன் செருப்பாலும், இரவு உறங்கச் செல்லும் முன் துடைப்பத்தாலும் நூறு முறை அடிக்க வேண்டும்,” என்று ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் கோஸ்வாமி கூறுகிறார். புத்திசாலித்தனத்தால் மனதை அடித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அரசியல் வழிமுறைகளான சமாதானம், பேதம், தானம் இவை யாவும் மனதிற்கு ஒத்துவராது; தண்டனை எனும் அடக்கு முறையினாலேயே மனதை ஒழுங்குபடுத்த முடியும்.

மனதின் தூண்டுதல்களை ஒருவர் பொறுத்துக்கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும். உதாரணமாக, உடலில் அரிப்பு ஏற்படும்போது, அதனைப் பொறுத்துக்கொள்வதே நலம், சுகமாக உள்ளது என்று நினைத்து சொறியும்போது, விளைவுகள் மோசமாகும்.

மேற்கூறிய இரண்டு வழிமுறைகளைவிட முக்கியமானது பக்தி யோகத்தில் ஈடுபடுவதாகும். மனம் உட்பட அனைத்து புலன்களையும் நாம் பகவான் கிருஷ்ணரது சேவையில் உபயோகிக்கும்
போது, அவை தாமாகவே தூய்மையடைகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ மஹாராஜர் இந்த வழிமுறைகளைக் கற்பித்துள்ளார். மனதை பகவானது தாமரைத் திருவடிகளிலும், கண்களை அவரது திருவுருவத்தை தரிசிப்பதிலும், காதுகளை அவரது லீலைகளைக் கேட்பதிலும், நாவினை அவரது பிரசாதத்தைச் சுவைப்பதிலும், நாசியினை அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்கள் மற்றும் துளசியை நுகர்வதிலும், தொடு உணர்வை அவரது தூய பக்தர்களை அரவணைப்பதிலும், கை-கால்களை அவரது சேவைகளில் ஈடுபடுத்துவதன் மூலமாகத் தூய்மைப்படுத்த முடியும்; ஏனெனில், நமது உடல், மனம், புலன்கள் ஆகியவை அனைத்திற்கும் உரிமையாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே.

மேலும் படிக்க...https://tamilbtg.com/07022022-2-2-2/?preview_id=30156&preview_nonce=c30cd0a0ea&post_format=standard&_thumbnail_id=30161&preview=true

இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க, பகவத் தரிசன சந்தாதாரராவீர்
https://tamilbtg.com/sub/

மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும் 9894814553
பகவத் தரிசனம் படியுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனத்தை அடையுங்கள்...

எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்காதவர்:(ஸ்ரீல பிரபுபாதர் மறைவு நாள்  - நவம்பர் 17)ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியமான தன்மை...
17/11/2023

எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்காதவர்:
(ஸ்ரீல பிரபுபாதர் மறைவு நாள் - நவம்பர் 17)

ஸ்ரீல பிரபுபாதரின் முக்கியமான தன்மை, அவர் எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்க மாட்டார். குரு, சாது, சாஸ்திரத்தின் மூலமாக பெறப்பட்ட அறிவில் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பிரச்சாரம் ஜனங்களை திருப்தி செய்வதற்காக இருக்கவில்லை, ஜனார்தனரை திருப்தி செய்வதற்காக இருந்தது. “உண்மையைச் சொன்னால் மக்களுக்கு கசக்கும்” என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. உண்மையை உரக்கச் சொல்வோம் உலக மக்களின் நன்மைக்காக என்ற முடிவில் எப்போதும் வலுவாக இருந்தார். அதனாலேயே உண்மையை விரும்பிய உண்மையான மக்கள் மட்டும் பிரபுபாதரை அணுகினர்; அவராலும் அவர்களை உண்மையான பக்தர்களாக கிருஷ்ணரிடம் அர்ப்பணிக்க முடிந்தது.

தவறை தவறு என்று கூறுவதற்கு பிரபுபாதர் ஒருபோதும் தயங்கியதில்லை. பெரியபெரிய விஞ்ஞானிகளாக இருக்கட்டும், தலைவர்களாக இருக்கட்டும், அலுவலர்களாக இருக்கட்டும், பெயரளவு ஆன்மீக குருமார்களாக இருக்கட்டும்—பிரபுபாதர் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. அவரது ஆணித்தரமான கருத்துகள் சில சமயங்களில் அவரது சில மேலோட்டமான சீடர்களுக்கும் சிரமமாக இருந்தன; போலி சீடர்கள் வெளியே செல்வதற்கு அவை வழிவகுத்தன.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/20210108-2/

பாரெங்கும் பக்தியைப் பரப்பப் பாடுபட்ட பிரபுபாதரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அனைவரும் பரமபதம் அடைய முடியும். (ஸ்ரீல பிரபுபாதரின் முழு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், இஸ்கான் கோவில்களில் கிடைக்கும். பக்தர்கள் வாங்கி படித்து பயன்பெறுதல் நலன்.)

மேலும் தொடர்புக்கு: 9894814553

தீபாவளியில் தெய்வீக லீலை:உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கய...
11/11/2023

தீபாவளியில் தெய்வீக லீலை:
உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கயிற்றை எடுத்துவந்து, கிருஷ்ணரின் இடுப்பைச் சுற்றி உரலில் கட்டிப் போட முயற்சி செய்தாள். ஆனால் அந்த கயிறு இரண்டு அங்குல இடைவெளியை ஏற்படுத்தியது. கயிறு சிறியதாக உள்ளது என்று எண்ணிய யசோதை வீட்டிலிருந்து மற்றொரு கயிறை எடுத்து வந்தாள். ஆனால் அதுவும் இரண்டு அங்குலம் சிறியதாக இருந்தது. இரண்டு கயிற்றையும் சேர்த்துக் கட்டினாள், ஆயினும், இரண்டு அங்குலம் சிறியதாகவே இருந்தது. வீட்டிலிருந்த எல்லா கயிற்றையும் ஒன்றாக சேர்த்து கட்டினாள், இடைவெளி அப்படியே இருந்தது. கிருஷ்ணரின் இடுப்பு வழக்கம்போல சிறியதாகவே இருந்தது, யாருக்கும் எதுவும் புரியவில்லை.

இதுவே கிருஷ்ணரின் புரிந்துகொள்ளவியலாத (அசிந்திய) சக்தியாகும். கிருஷ்ணர் தனது பக்தர்களுடன் ஆனந்தமாக இருப்பதற்காக புரியும் லீலைகளை அவரது பக்தர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். விஞ்ஞான ஆராய்ச்சியினால் புரிந்துகொள்ள முயற்சித்தால் ஏமாற்றமும் தடுமாற்றமும்தான் மிஞ்சும்.

இறுதியில், யசோதையின் தீராத முயற்சியைக் கண்ட கிருஷ்ணர், அவள் மீது கருணை கொண்டு தன்னைக் கட்டிப் போடுவதற்கு அனுமதித்தார். யசோதையும் கிருஷ்ணரைக் கட்டிவிட்டாள். ஆனால் உண்மை என்னவெனில், கிருஷ்ணரைக் கட்டிப் போட்டவை யசோதையின் வீட்டிலிருந்த கயிறுகள் அல்ல, அவளது இதயத்திலிருந்த தூய அன்பு என்னும் கயிறே.

தீபாவளித் திருநாளில் நிகழ்ந்த இந்த லீலையில், இரண்டு அங்குல இடைவெளி எதைக் குறிக்கின்றது என்பதற்கு ஆச்சாரியர்கள் பின்வரும் விளக்கம் கொடுக்கிறார்கள்: (1) பக்தர்களின் விடா முயற்சி, (2) பகவானின் காரணமற்ற கருணை. இந்த இரண்டும் அவசியம். பக்தித் தொண்டை பயிற்சி செய்யும் பக்தர்களிடம் விடா முயற்சி இருக்க வேண்டும், அதைக் காணும் இறைவன் தனது காரணமற்ற கருணையைப் பொழிவார். அப்போது பக்தனால் பக்குவநிலையை அடைய முடியும்.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/damodar-lila/

தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்கள்
https://tamilbtg.com/iskcon-temples-tamilnadu/

இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க, பகவத் தரிசன சந்தாதாரராவீர்
https://tamilbtg.com/sub/

09/11/2023
09/11/2023

ஹரே கிருஷ்ண
பகவத் தரிசனம் நவம்பர் மாத இதழ் ஓர் பார்வை..

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பகவத் தரிசனத்தின் சந்தாதாரராவீர்
https://tamilbtg.com/sub/

பகவத் தரிசனம் மாத இதழின் புத்தகம் உங்களின் பார்வைக்கு (Flip Book)
https://tamilbtg.com/sub/ -df_29819/1/

பல ஆன்மீக தகவல்களுடன் உங்கள் பகவத் தரிசனம்.
இன்றே சந்தாதாரராவீர்...
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும் 9894814553
பகவத் தரிசனம் படியுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனத்தை அடையுங்கள்...

தாமோதர மாதமும் தாமோதர பூஜையும்தமிழில் சித்திரை, வைகாசி என்று மாதங்கள் இருப்பதைப் போன்று, சமஸ்கிருதத்திலும் மாதங்கள் உண்ட...
28/10/2023

தாமோதர மாதமும் தாமோதர பூஜையும்

தமிழில் சித்திரை, வைகாசி என்று மாதங்கள் இருப்பதைப் போன்று, சமஸ்கிருதத்திலும் மாதங்கள் உண்டு. அவற்றில் மிகவும் விசேஷமானதாக கருதப்படுவது கார்த்திக் மாதம் (தமிழில் வரும் கார்த்திகை மாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது). சிறப்பு மிக்க கார்த்திக் மாதம்(தாமோதர மாதம்), 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து நவம்பர் 27ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

கார்த்திக் மாத மகிமைகளில் சில
கார்த்திக் மாதத்தில் மேற்கொள்ளப்படும் விரதங்கள் அதிக பலனைக் கொடுக்கக்கூடியவை; தூய்மைப்படுத்தும் விரதங்களில் அவை தலைசிறந்ததாகக் கருதப்படுகின்றன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு கார்த்திக் மாதம் மிகவும் பிரியமானதாகும். மாதங்களில், பகவான் கிருஷ்ணர் மார்கஷீர்ஷ மாதமாகத் திகழ்வதைப் போல, ஸ்ரீமதி ராதாராணி அதற்கு முந்தைய மாதமான கார்த்திக் மாதமாகத் திகழ்கிறார். இது ராதாராணியின் மாதம் என்பதால், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும்.

தாமோதர பூஜை
கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் (கோவிலுக்குச் செல்ல இயலாதோர் இப்பத்திரிகையின் அட்டைப்படத்தைக்கூட உபயோகிக்கலாம்). அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய இதர வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/karthik-month-damodara-pooja/

தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்கள்
https://tamilbtg.com/iskcon-temples-tamilnadu/

இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க, பகவத் தரிசன சந்தாதாரராவீர்
https://tamilbtg.com/sub/

கிருஷ்ணருக்கும் இராமருக்கும் உள்ள வேற்றுமைஇராமரும் கிருஷ்ணரும் ஒரே நபர்கள், ஆனால் வேறுபட்ட ரூபத்தையும் வேறுபட்ட தன்மைகளை...
24/10/2023

கிருஷ்ணருக்கும் இராமருக்கும் உள்ள வேற்றுமை

இராமரும் கிருஷ்ணரும் ஒரே நபர்கள், ஆனால் வேறுபட்ட ரூபத்தையும் வேறுபட்ட தன்மைகளையும் வெளிப்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில், இவர்கள் இருவருக்கும் இடையில் (அதாவது, இருவராகத் தெரியும் ஒருவருக்கு இடையில்) சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன.

இராமர், கிருஷ்ணர் ஆகிய இருவருமே இரண்டு திருக்கரங்களுடன் தோற்றமளித்தபோதிலும், கிருஷ்ணரின் கையில் புல்லாங்குழலும் இராமரின் கையில் வில்லும் அம்பும் துணையாக இருந்தன. கிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழலானது அவர் அனுபவிப்பாளர் என்பதையும், இராமரின் கையில் இருக்கும் வில்லும் அம்பும் அவர் முதன்மையான பண்பாளர் என்பதையும் காட்டுகின்றன. ஸ்ரீ இராமர், மர்யாத புருஷோத்தமர், அதாவது, சீரான நடத்தையை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுள் என்றும், ஸ்ரீ கிருஷ்ணர், லீலா புருஷோத்தமர், அதாவது லீலைகளை அனுபவிக்கும் முழுமுதற் கடவுள் என்றும் அறியப்படுகின்றனர். ஸ்ரீ இராமர் தனது பக்தர்களிடம் எப்போதும் கண்ணியமாக நடந்து கொள்ளும் சுபாவம் கொண்டவர், கிருஷ்ணரோ தனது பக்தர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகும் சுபாவம் கொண்டவர்.

மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீ இராமர் உதாரணமாகத் திகழ்ந்தார். மன்னர், புதல்வர், சகோதரர், கணவர், எஜமானர் என எல்லா உறவுகளிலும் ஸ்ரீ இராமரின் நடத்தை சீரானதாக இருந்தது. வேறுவிதமாகக் கூறினால், ஸ்ரீ இராமர் தன்னைக் கடவுள் என்று காட்டிக் கொள்ளாமல், மனிதருள் ஒருவராக வாழ்ந்து, மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரோ தான் கடவுள் என்பதையும், மனிதனைப் போலத் தோன்றினாலும் மனிதர்களுக்கான விதிகளுக்குத் தான் உட்பட்டவன் அல்ல என்பதையும் வெளிப்படுத்தினார். பௌதிக உலகத்தைச் சார்ந்த எந்தவொரு விதியும் கடவுளுக்கு கீழ்ப்பட்டதே என்றும், விதிகளை வகுப்பவன் இறைவனான தானே என்றும் தனது வசீகரமான லீலைகளின் மூலமாக அவர் தெரிவித்தார். முழுமுதற் கடவுள் தான் செய்ய விரும்புவதை செய்யக்கூடிய பூரண சுதந்திரம் கொண்டவராக இருத்தல் வேண்டும்; கிருஷ்ணர் அதனை நிரூபித்தார்.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/accepting-rama-forgetting-krishna-is-this-right/

வால்மீகி இராமாயண புத்தகம் படிக்க...
https://tamilbtg.com/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

இதுபோன்ற பகவத் தரிசன கட்டுரைகளைப் படிக்க இன்றே சந்தாதாரராவீர்... பகவான் கிருஷ்ணரின் கருணையை அடையுங்கள்...
https://tamilbtg.com/sub/

பகவத் தரிசன புத்தகம் பார்க்க...(Online Flip Book)
https://tamilbtg.com/sub/ -df_29819/1/

மேலும் விவரங்களுக்கு 9894814553

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ...
23/09/2023

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்தபின்னர், அதற்கு அடுத்த அஷ்டமியன்று (இவ்வருடம் செப்டம்பர் 23அன்று) இந்நன்னாள் வருகிறது, இவ்விழாவானது கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

மேலும் படிக்க...
https://tamilbtg.com/srimati-radharanis-greatness/

அகிலத்தை மாற்றிய அபய்:அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில், கௌர் மோக...
08/09/2023

அகிலத்தை மாற்றிய அபய்:

அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில், கௌர் மோகன் தே மற்றும் ரஜனி என்போரின் நன்மகனாய் பிறந்தார்.
(இன்று ஸ்ரீல பிரபுபாதரின் அவதாரத் திருநாள்)
---------------------

பக்திவேதாந்த சுவாமியின் நீண்ட நாள் கனவு நனவாக, 1965, ஆகஸ்ட் 13ம் நாள் கல்கத்தாவிலிருந்து ஜலதூதா என்ற சரக்குக் கப்பலில் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

பல சிரமங்களைத் தாண்டி அமெரிக்க மண்ணில் இறங்கிய பக்திவேதாந்த சுவாமியிடம் பணமும் இல்லை, ஆட்களும் இல்லை; இடது பக்கம் செல்ல வேண்டுமா வலது பக்கம் செல்ல வேண்டுமா என்பதைக் கூட அறியாதவராய் இருந்தார், எனினும் எல்லாவற்றையும் அறிந்த கிருஷ்ணரை அவர் அறிந்திருந்ததால், அவர் துணிவுடன் இருந்தார்.

இந்தியாவில் கலாச்சாரம் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வந்த பக்திவேதாந்த சுவாமி, பவுரியில் அதற்கு நேர்மாறான சூழலில் வசிக்க நேர்ந்ததுஶீஇளைஞர்களும் யுவதிகளும் போதை வஸ்துக்கள், மாமிச உணவு, தகாத பாலுறவு, சூதாட்டம் என பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பகவான் சைதன்யரின் கருணையால் அனைவரும் கிருஷ்ண பக்தர்களாக முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், பக்திவேதாந்த சுவாமி, திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் அங்கு வருபவர்களுக்கு பகவத் கீதை மற்றும் பாகவதத்திலிருந்து உரையாற்றினார். இவற்றைக் கேள்விப்பட்ட பல இளைஞர்கள், அங்கு வந்து பாடவும் அவருடைய உரைகளைக் கேட்கவும் ஜபம் செய்யவும் ஆரம்பித்தனர். ஹிப்பிகளை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிய பக்திவேதாந்த சுவாமியின் சாதனையை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி செய்திகள் வெளியிட்டன.காலப்போக்கில், பக்திவேதாந்த சுவாமி, வகுப்புகள் நடத்த உகந்த இடமாகக் கருதப்பட்ட நியூயார்க்கின் லோயர் ஈஸ்ட் சைடிற்கு தனது பணிகளை மாற்றினார். அங்கு சொற்பொழிவுகளும் பஜனைகளும் நடைபெற பலர் வந்து போக ஆரம்பித்தனர். அவர்களில் பலர் பக்திவேதாந்த சுவாமியிடம் தீட்சை பெற்று சீடர்களாயினர். அங்கிருந்த ஒரு பூங்காவில் சுவாமியும் அவரது சீடர்களும் மிகப்பெரிய கீர்த்தனை ஒன்றை நடத்த, அன்றிலிருந்து சொற்பொழிவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. இவ்வாறு அமெரிக்க மண்ணில் கிருஷ்ண பக்தி வேரூன்றத் தொடங்கியது.

படிப்படியாக அகிலத்தையே மாற்றினார் அபய்(இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர்: அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் )...

மேலும் படிக்க...
https://tamilbtg.com/about-us-2/prabhupad/

(ஸ்ரீல பிரபுபாதரின் முழு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், இஸ்கான் கோவில்களில் கிடைக்கும். பக்தர்கள் வாங்கி படித்து பயன்பெறுதல் நலன்.)

07/09/2023
யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்ப...
06/09/2023

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில் யசோதைக்கும் பிறந்தார் என்பது தெரியாத துணுக்கு.
கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் மகனாகப் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரியும்போது, அவர் விருந்தாவன கிருஷ்ணராகத் திகழ்கிறார். மதுராவிலும் துவாரகையிலும் அவர் வாசுதேவ கிருஷ்ணராகத் திகழ்கிறார். இஃது என்ன இரண்டு கிருஷ்ணர்? இரண்டு கிருஷ்ணர் இல்லை, ஒரே கிருஷ்ணர்தான், ஆனால் பாவம் வேறு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் வெளிப்படுத்தும் பாவமும் இதர இடங்களில் வெளிப்படுத்தும் பாவமும் வேறுபட்டவை. கிருஷ்ண லீலையை அறிந்தவர் எவரும் இதனை எளிதில் உணரலாம். விருந்தாவன கிருஷ்ணர் "ஸ்வயம்-பகவான் கிருஷ்ணர்” என்றும், மதுராவிலும் துவாரகையிலும் இருக்கும் கிருஷ்ணர் “வாசுதேவ கிருஷ்ணர்” என்றும் அறியப்படுகின்றனர்.
அதன்படி, அந்த வாசுதேவ கிருஷ்ணர் தேவகியின் மகனாகவும், விருந்தாவன கிருஷ்ணர் யசோதையின் மகனாகவும் ஒரே சமயத்தில் தோன்றினர் என்று உயர்ந்த பக்தர்கள் கருத்துரைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, வசுதேவர் சிறையிலிருந்து வெளியேறிய தருணத்தில், யசோதை பெண் குழந்தையை இரண்டாவதாகப் பெற்றாள். இவ்வாறு. கிருஷ்ணரும் யோக மாயையும் விருந்தாவனத்தில் யசோதைக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வந்த வசுதேவர் அங்கிருந்த யசோதையின் பெண் குழந்தையை மட்டுமே பார்த்தார், அவரிடம் இருந்த ஒருவித பதட்டத்தினால், அருகிலிருந்த மற்றோர் ஆண் குழந்தையை அவர் பார்க்கவில்லை. வசுதேவர் கிருஷ்ணரை வைத்துவிட்டு யோகமாயையைத் தம்முடன் எடுத்துக்கொண்டு உடனடியாகப் புறப்பட்டார். அதன் பின்னர். வசுதேவரால் கொண்டு வரப்பட்ட கிருஷ்ணரும் யசோதையின் மகனாகத் தோன்றிய கிருஷ்ணரும் ஒரே உருவில் இணைந்து கொண்டனர்.
இவ்வாறாக, கிருஷ்ணர் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் அவதரித்தார்.
ஆதாரம்: ஹரிவம்ஸ புராணம் 2.4.11 ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் லகு-பாகவதாம்ருதம் 1.5.452-456.ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கோபால-சம்பூ (மூன்றாவது அத்தியாயம்) ஸ்ரீல பிரபுபாதரின் பாகவத விளக்கவுரை 10.3.47.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, என்ன செய்ய வேண்டும்?முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் பிறப்பற்றவர். ஆயினும், அவர் நம்மை விடுவிப்பதற்காக இ...
05/09/2023

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, என்ன செய்ய வேண்டும்?

முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் பிறப்பற்றவர். ஆயினும், அவர் நம்மை விடுவிப்பதற்காக இந்த ஜடவுலகில் பிறக்கின்றார். அப்போதுகூட அவரது பிறப்பு சாதாரண மனிதர்களைப் போன்றது அன்று. அவர் தம்முடைய தெய்வீக சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். அவரது செயல்கள் அனைத்தும் தெய்வீகமானவை. சில நேரங்களில் கிருஷ்ணரின் செயல்கள் ஒரு சிறு குழந்தையின் செயல்களைப் போல தோன்றலாம். ஆனால், நாம் அவரை ஒருபோதும் வெறும் குழந்தையாக எண்ணி விடக் கூடாது. அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று பகவத் கீதை (4.9) கூறுகிறது.
அந்த தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு கிருஷ்ண ஜெயந்தி ஒரு மிகச்சிறந்த நன்னாளாகும். இன்றைய தினத்தில் நாம் நமது நாள் முழுவதையும் கிருஷ்ணரின் நினைவில் கழிக்க வேண்டும். அன்றாட வாழ்வின் போராட்டத்தில் கிருஷ்ணரை மறந்து வாழும் நாம் இந்த ஒரு நாளையாவது கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

இதற்கு உதவுவதற்காக, எல்லா இஸ்கான் கோயில்களிலும் வழக்கம்போல இந்த வருடமும் பிரம்மாண்டமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்த்தப்படுகிறது. மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம், கிருஷ்ண நாம பஜனை, கிருஷ்ண கீர்த்தனம், கிருஷ்ண லீலைகளின் உபன்யாசங்கள், கிருஷ்ணர் சார்ந்த நாடகங்கள் அல்லது கலை நிகழ்ச்சிகள், வெகு சிறப்பான அபிஷேகம், ஆரத்தி முதலியவை மட்டுமின்றி, விழாவிற்கு வரும் அனைவருக்கும் சிறப்பான கிருஷ்ண பிரசாதமும் வழங்கப்படுகிறது. மறுநாள் ஸ்ரீல பிரபுபாதர் தோன்றிய தினத்திற்கான திருவிழாவிலும் பங்குகொள்ளுதல் வேண்டும்.

பகவத் தரிசன வாசகர்கள் இந்நாள் முழுவதும் கோயிலுக்குச் சென்று பல்வேறு சேவைகளில் ஈடுபடலாம். இயன்ற பக்தர்கள் நள்ளிரவு வரை உபவாசம் இருக்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் “கிருஷ்ணர்” புத்தகத்தைப் படித்தல் சாலச் சிறந்தது. மேலும் விவரங்களுக்கு தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோயிலைத் தொடர்புகொள்ளவும்.

தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்கள்
https://tamilbtg.com/iskcon-temples-tamilnadu/

03/09/2023

பகவத் தரிசனம்
No.1 தமிழ் வைஷ்ணவ மாத இதழ்

இது ஹரே கிருஷ்ண இயக்கத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை.
செப்டம்பர் மாத இதழில்..

ஸ்தாபக ஆச்சாரியரின் உரை: ஸ்ரீமத் பாகவதத்தின் அவசியம், அதன் உயர்நிலை, கிருஷ்ணரின் சப்த
அவதாரமான பாகவதம், பாகவதம் தோன்றிய வரலாறு, பாகவதத்தை யாரிடமிருந்து கேட்க வேண்டும், யாரிடமிருந்து கேட்கக் கூடாது முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதர் இங்கு விளக்குகிறார்.

தலைப்புக் கட்டுரை: ஹரே கிருஷ்ண /ஹரே ராம
முதலில் எது வர வேண்டும்? இது குறித்த பல கேள்விகளுக்கு பகவத் தரிசன ஆசிரியர், சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையில் பதிலளிக்கிறார்.

சிறப்பு கட்டுரை: உலகெங்கிலும் எண்பதிற்கும் மேற்பட்ட விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஒரே பக்தர் இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் மட்டுமே. இவர் வழிபட்ட விக்ரஹங்களில் சிலர் இவரது வழிபாட்டை ஏற்பதற்காக விருப்பத்துடன் இவரைத் தேடி வந்துள்ளனர்; இது தொடர்பாக, பல சுவையான சம்பவங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தலையங்கம் - பிரபுபாதரின் பூரண நம்பிக்கை

ஸ்ரீமத் பாகவத சுருக்கம் - பகவான் வாமனதேவர் பலி மஹாராஜரிடம்
யாசித்தல்

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் - வாழ்வின் குறிக்கோளை அறிதல் கட்டாயம்

படக்கதை - ஸ்ரீ கிருஷ்ணரின் வைபவம்

மேலும் பல ஆன்மீக தகவல்களுடன் உங்கள் பகவத் தரிசனம்.

இன்றே சந்தாதாரராவீர்...
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும் 9894814553
பகவத் தரிசனம் படியுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனத்தை அடையுங்கள்

வைஷ்ணவ நாள்காட்டி வாட்ஸ்அப் குரூபில் இணைய
https://chat.whatsapp.com/I5f8V0LwEKk17ZlJh1oKCk
கண்ணனின் குறள் வாட்ஸ்அப் குரூபில் இணைய
https://chat.whatsapp.com/IXHlR84EeCTBvCgzgZd1mn
ஆன்மீகம் அறிவோம் வாட்ஸ்அப் குரூபில் இணைய
https://chat.whatsapp.com/F6a48Rlf0oDIXJMjFaccdY
தீர்த்த ஸ்தலங்கள் வாட்ஸ்அப் குரூபில் இணைய
https://chat.whatsapp.com/CG7su64guiFLFG1GxLAoz9

பகவத் தரிசனம் மாதந்தோறும் உங்கள் இல்லம் தேடி வர தொடர்புகொள்க
9894814553

twitter.com/tamilbtg
youtube.com/tamilbtg
www.tamilbtg.com

Address

Mathura Surakapuram, Vayaloor (Post)
Sriperumbudur
602105

Alerts

Be the first to know and let us send you an email when Bhagavad Darishanam Tamil / பகவத் தரிசனம் தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhagavad Darishanam Tamil / பகவத் தரிசனம் தமிழ்:

Videos

Share

Category


Other Sriperumbudur media companies

Show All

You may also like