Vanakkam sivagangai

Vanakkam sivagangai சிவகங்கை மாவட்ட செய்திகள், சமூகசேவைகள், குறை-நிறைகளுக்கு இணைந்திருங்கள் வணக்கம் சிவகங்கை
(144)

சமூக சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட "வணக்கம் சிவகங்கை" முகநூல் பக்கம், உங்களின் நல் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நமது பக்கத்தின் மூலம் சிவகங்கை மாவட்ட செய்திகள், குற்றங்கள், குறைகள், நிறைகள், விழிப்புணர்வு செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் வெளியிடுகிறோம். எங்களின் நோக்கம் சிவகங்கை மாவட்டத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வது மட்டுமே... தொடர்ந்து அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி..

22/11/2024

சிவகங்கை: பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதம்
சிவகங்கை, மேலூர் சாலையில்
அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த மாதம் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளை
கண்டித்ததை தொடர்ந்து
அவர்களது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துள்ளனர்.
நவம்பர் 21 அன்று பள்ளியில் இருந்து டிசி வாங்கிச் செல்ல ஒரு மாணவியின் தாய் வந்துள்ளார். அப்போது
ஆசிரியர்கள் மாணவிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியை அறிவுரை கூறியுள்ளார். இதை தவறாக புரிந்து கொண்ட பயிற்சி ஆசிரியை தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த உறவினர்களை சமாதானம் செய்து வெளியேற்றினர். இது தொடர்பாக ஆசிரியர்கள் முதன்மை கல்வி
அலுவலரிடம் நேரில் சந்தித்து
ஆலோசனை பெற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க
சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னங்கடா இந்த குளுரு குளுருது... உங்க ஏரியா எது.. அங்க climate எப்படினு comment பண்ணுங்க frnz😍🙏🏼🙏🏼🙏🏼         😎  💪💪💪⚔️⚔️...
21/11/2024

என்னங்கடா இந்த குளுரு குளுருது... உங்க ஏரியா எது.. அங்க climate எப்படினு comment பண்ணுங்க frnz😍🙏🏼🙏🏼🙏🏼

😎 💪💪💪⚔️⚔️⚔️

20/11/2024

நம்ம சிவகங்கையில் தற்போது 😍👇🏼🙏🏼🙏🏼

 #அவசியம்_படித்து_பகிரவும் வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிர...
18/11/2024

#அவசியம்_படித்து_பகிரவும்

வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம பார்ப்போம்...

i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை இறந்து போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.

vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.

வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..

எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை
(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?

x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.

xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம் நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை பயன்படுத்திக் கொண்டால் மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.

UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.

xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.

வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும் மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

படித்ததில் பிடித்தது🙏🏼

அது ஒரு காலம் 😍😄🙏🏼
18/11/2024

அது ஒரு காலம் 😍😄🙏🏼

முக்கிய அறிவிப்பு: இன்று (18/11/2024) சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் மதிப்புமிகு மாவட்ட ஆட்சி...
18/11/2024

முக்கிய அறிவிப்பு: இன்று (18/11/2024) சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதால் மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின்படி எந்தெந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறதோ அந்த பகுதியில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் வருகை தந்து விட்டால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவித்து மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மழை பெய்யாத பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். *முதன்மைக் கல்வி அலுவலர் சிவகங்கை*

மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
17/11/2024

மகிழ்ச்சி 🙏🏼🙏🏼

Address

Sivagangai
630561

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakkam sivagangai:

Videos

Share


Other Sivagangai media companies

Show All