Salem Smart City

Salem Smart City Just Now Tamil Nadu

25 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : அரசாணை வெளியீடு           #பள்ளி  #கல்லூரி  #விடுமுறை   https://www.dinamala...
23/10/2022

25 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : அரசாணை வெளியீடு
#பள்ளி #கல்லூரி #விடுமுறை

https://www.dinamalar.com/latest_main.asp

போன தீபாவளி நாளில்போய் வருகிறேன் என்றான்..!எங்கே என்று கேட்டேன்.டாஸ்மாக்கிற்குத்தான் என்றான்.நிறைமாதக் கற்பினியாய் இருக்...
23/10/2022

போன தீபாவளி நாளில்
போய் வருகிறேன் என்றான்..!
எங்கே என்று கேட்டேன்.
டாஸ்மாக்கிற்குத்தான் என்றான்.
நிறைமாதக்
கற்பினியாய் இருக்கிறேன்
நினைத்துப்பார் என்றேன்..!
இன்றுதான் கடைசி
இனிக் குடிக்கவே மாட்டேன்
இருப்பதைக் கொடு என்றான்.
இப்படி எத்தனையோமுறை
சொல்லிவிட்டாய்
என்னிடம் எதுவும் இல்லை
போ என்றேன்..!
பொய் சொல்லாதே
போனால் வரமாட்டேன் என்றான்.
போய்த் தொலை என்றேன்,
புள்ளைமீது சத்தியம்
இன்னைக்கோட கடைசி
இனிக் குடிக்கவே மாட்டேன் என்றான்.
மடியில் இருந்ததை
மறைக்காமல் எடுத்து
கைநிறைய கொடுத்தனுப்பினேன்.
கடைசி என்கிறானே
குடித்துத் தொலையட்டும்
இனியாவது இந்தச் சனியனை
விட்டுத்தொலைக்கட்டும் என்று
விரும்பித்தான் அனுப்பிவைத்தேன்..!
நல்ல நாளும் அதுவுமாய்
நரகாசூரனைக்
கொன்றுவிடப் போராடியதில்
போதை தலைக்கேறி
போய்ச்சேர்ந்தான்
என்று தூக்கி வந்தார்கள்,.!?
அழுதென்ன புறண்டென்ன
ஆண்பிள்ளை பிறந்தால்
அப்போதே
கொன்று விடுவதென
தீர்மானித்திருந்தேன்..!
பெண்ணாய் பிறந்ததால்
விட்டு வைத்திருக்கிறேன்.
பிற சிரமங்கள் நிறைய உண்டு,
பெண்ணுக்கு
இல்லாத கொடுமையா
இந்த நாட்டில்,,?
இருந்தாலும்
போதைப் பேயடித்துப்
போய்ச் சேர்ந்தான் என்ற
பெரும் பழி வராது பாருங்கள்,,!?

நண்பர்களுக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🙏
23/10/2022

நண்பர்களுக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🙏

அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
09/10/2022

அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சேலம் அய்யந்திருமாளிகை ஸ்ரீ மாரியம்மனுக்கு நவராத்திரி 8ம் நாள் சிறப்பு அலங்காரம்
03/10/2022

சேலம் அய்யந்திருமாளிகை ஸ்ரீ மாரியம்மனுக்கு நவராத்திரி 8ம் நாள் சிறப்பு அலங்காரம்

03/10/2022

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்! 🙏🏻☀வழிபாட்டு  #சுப  #நேரங்கள் விவரம்:-சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17...
03/10/2022

சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்! 🙏🏻☀
வழிபாட்டு #சுப #நேரங்கள் விவரம்:-

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள்
4-10-2022 செவ்வாய் கிழமை
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு செய்ய உகந்த சுப நேரங்கள் விவரம்:-

காலை 10.30 முதல் 11.00 மணி
வரை,

பகல் 12.00 முதல் 1.00 மணி
வரை,

மாலை 4.30 முதல் 6.00 மணி
வரை,

இரவு 7.00 முதல் 8.00 மணி
வரை,

குறிப்பு:- காலை 10.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை தொடர்ந்து 2.30 மணி நேரமும் நல்ல நேரம், வழிபட உகந்த உத்தம நேரம் ஆகும் .

அமுதகும்ப மலர்க் கரத்தாள் மகாலட்சுமி அருள்நோக்கின் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் .

புரட்டாசி 18 ம் நாள் 5-10-2022 புதன்கிழமை விஜயதசமி திருநாள் சுப நேரங்கள் :-

காலை 9.00 முதல் 10.00 மணி
வரை,

பகல் 1.30 முதல் 3.00 மணி
வரை,

மாலை 4.00 முதல் 5.00 மணி
வரை,

இரவு 7.00 முதல் 10.00 மணி
வரை,

குறிப்பு:- காலை 9.00 முதல் பகல் 12.00 மணி வரை வழிபாடு செய்ய உகந்த உத்தம நேரமாகும் .

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் மேய உணர்விக்கும் நமது அன்னை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் .

ஆதியாய் அந்தத்தின் அந்தமாய் பல்லுயிர்க்கும் அருள் கூட்டும் சத்தியாம் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் .

| |

அதிகாலையில் எழுவது மிகவும் சிறப்பான செயல்.அதிகாலையில் உடலும், சிந்தனைகளும் உற்சாகமாக இருக்கும்.Five AM Club என்று ஒன்று ...
03/10/2022

அதிகாலையில் எழுவது
மிகவும் சிறப்பான செயல்.

அதிகாலையில் உடலும்,
சிந்தனைகளும் உற்சாகமாக இருக்கும்.

Five AM Club என்று ஒன்று உண்டு.
அதில் மானசீகமாக இணைந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே
மனதளவில் ஒரு instruction.

நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பேன் என்று நமக்குள்ளேயே
ஒரு சங்கற்பம்.

அதிகாலையில் சுமார்
ஒரு மணி நேரம் உங்கள் நேரம்.

யாரும் குறுக்கிட மாட்டார்கள்.

உடற்பயிற்சி ,தியானம், நற்சிந்தனைகள் என்று வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

ஒரு மாதம் கழித்து பார்த்தால் உங்கள் வாழ்வியல் முன்னேற்றத்தை பார்த்து
நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த 5 மணி Clubல் இணைய முதல் நாள் இரவே நம்மை தயார் செய்து கொள்ளுங்கள்.

இரவு உணவு உண்டவுடன் சிறு குறு நடை

தூங்கப் போவதற்கு முன் Relaxஆக ஒரு சாய்வு நாற்காலியில் பத்து நிமிடம் உட்காருங்கள்.

கண்களை மென்மையாக மூடி உடலை தளர்த்தி கொள்ளுங்கள்.

சில நிமிடங்கள் ஆழ்ந்து சுவாசியுங்கள். பிரபஞ்ச சக்தி சுவாசத்தின் வழியே உங்கள் உடல் முழுவதும் பரவி உங்களை உடல் நலத்தில், சிந்தனையில் மேன்மையுற செய்கிறது என்று உறுதியாக நம்புங்கள்.

நான் புத்துணர்ச்சியோடும், விழிப்போடும், ஆர்வத்தோடும் காலையில் விரும்பிய நேரத்தில் ( 5 மணிக்கு) எழுவேன் என்று உங்களுக்குள் குறைந்தது 20 முறையாவது சொல்லி கொள்ளுங்கள்.

அதிகாலையில் எழுவதால் நம் வாழ்வு எப்படி எல்லாம் சிறக்கும், அன்றைய நாளை அழகாக திட்டமிடலாம், செய்யும் செயல்களை நாள் முழுவதும் சிறப்பாக செய்யலாம் என்பது போல positive thoughts நேர்மறை எண்ணங்களை பரவ விடுங்கள்.

இது ஒரு நல்ல Auto suggestion.

ஆழ் மனதில் Sub conscious Mindல்
நன்றாக பதிந்து விடும்.

உங்களை சிறப்பாக வழிநடத்தும்.

நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு
நம் நாளை தொடங்குவோம்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்தவுடன் நினைத்து கொள்ளுங்கள் :

மனோகர் உங்களுடன் காற்றின் வழியே கை குலுக்கி உங்களை 5 AM Clubக்கு உங்களை வரவேற்கிறார் என்று.

முயற்சித்து பார்க்கலாம்
பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
வாழ்வை இனிமையாக்கி கொள்ளலாம்.

நல்ல மாற்றங்களை வாழ்வில்
வசப்படுத்தி கொள்ளலாம்.

அதிகாலை நேர இயற்கையின்
மாற்றங்களை ரசிக்கலாம்.

சூரிய உதயம், வான மகளின் சதிராட்டங்கள், பறவைகளின் இனிய உற்சாக குரல்கள்.
நல்ல Ozone காற்று. நம்முள் மூழ்கி முத்தெடுக்க அருமையான தருணம்.

Welcome to 5 AM club 👍


மண்ணைப் பிளந்துவிதைமுளைக்ககாத்திருப்புதேவை!கருவை சுமந்துசேயைப் பெற்றெடுக்கதாயின் காத்திருப்புதேவை!கரு கொண்ட மேகம்குளிர்வ...
03/10/2022

மண்ணைப் பிளந்து
விதை
முளைக்க
காத்திருப்பு
தேவை!

கருவை சுமந்து
சேயைப் பெற்றெடுக்க
தாயின் காத்திருப்பு
தேவை!

கரு கொண்ட மேகம்
குளிர்வித்து மழை
பொழிய காத்திருப்பு
தேவை!

கற்பனையை கனவு
கண்டு உரு கொடுக்க
காத்திருப்பு
தேவை!

படித்துவிட்டு பணியில்
சேர பதிவு செய்து
காத்திருப்பு
தேவை!

முயற்சியுடன் பயிற்சி
செய்து வெற்றி பெற
பொறுமையுடன்
காத்திருப்பு
தேவை!

காசு வாங்கி ஓட்டளித்து
தோற்றுப் போன
மக்கள் அடுத்த
தேர்தல் வரை
காத்திருப்பு
தேவை!

காதலியை கைப்பிடிக்க
காலம் கனியும்வரை
காத்திருக்கும்
தேவை!

காலங்கள் மாறும்
காட்சிகளும் மாறும்
காத்திருப்போம்
கடைசி வரை!

இப்படிக்கு உங்கள் : உதயகுமார் 🌹🌹

03/10/2022
நாளை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தொடர்ந்து விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. உழைத்துக் கொடுத்த உற்பத்தி பொருள்களுக்கும், உற்ப...
03/10/2022

நாளை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தொடர்ந்து விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. உழைத்துக் கொடுத்த உற்பத்தி பொருள்களுக்கும், உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கும், கல்விக்கண் திறந்த சரஸ்வதிக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி நாளை கொண்டாடப்பட உள்ள பூஜைக்காக பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது.கடைவீதியில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவிலான பூக்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் கடை வீதியில் வாழைமரம் விற்பனை சூடு பிடித்தது. சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பொரிகடலை விற்பனை களைகட்டியது. செவ்வாய் பேட்டையில் உள்ள கடைகளில் பொரிகடலை இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் செவ்வாய்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் ஆங்காங்கே போக்குவரத்தை சீர் செய்தனர்.

நாளை நடைபெறும் பூஜைக்காக ஒட்டுமொத்த மக்களும் சேலம் கடை வீதியில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தது. பார்ப்பதற்கு திருவிழா கோலமாக ஆக இருந்தது என்றால் அது மிகை அல்ல.

ஒரு நாய் அதை வளர்க்கும்பெண்ணுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது, அவள் தன் குழந்தையை அதனுடன்விட்டுவிட்டு பல வேளைகளில் வெள...
03/10/2022

ஒரு நாய் அதை வளர்க்கும்
பெண்ணுக்கு மிகவும்
விசுவாசமாக இருக்கிறது,
அவள் தன் குழந்தையை
அதனுடன்
விட்டுவிட்டு பல வேளைகளில்
வெளியில் செல்கிறாள்.

நாயுடன் உறங்கும்
குழந்தையை
அவள் எப்போதும்
கண்டு கொள்வதில்லை.
அவளும் நாயை நம்பினால்
ஆனால்,

ஒரு நாள் மிகவும் சோகமான
சம்பவம்
ஒன்று நடந்தது.

வழக்கம் போல் அந்த பெண்
இந்த விசுவாசமான நாயை வீட்டில்
குழந்தையுடன் விட்டு விட்டு
கடைக்கு சென்றார்.

அவள் திரும்பி வந்தபோது, ​​
ஒரு பயமுறுத்தும் காட்சியைக்
கண்டாள்,
அது அவளுக்கு ஒரு
முழுமையான
குழப்பமாக இருந்தது.

குழந்தை தன் தொட்டிலில்
இல்லை அதன் சூப்பி
போத்தல் அதை உடைந்து
அதை
சுற்றியிருந்த துணி துண்டு,
துண்டாக
கிடந்தது மேலும்
படுக்கையறை முழுவதும்
இரத்தம் படிந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த பெண்,
பயந்து தனது குழந்தையைத்
தேடிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, அந்த விசுவாசமான
நாயை
கண்டாள் அது தன் சுவையான
உணவை முடித்தது போல் இரத்தம்
தோய்ந்த
தன் வாயை நக்குவதைக்
கண்டாள்.

நாய் தனது குழந்தையை
சாப்பிட்டதை
பெண் உறுதி செய்து கொண்டாள்.

அதிகம் யோசிக்காமல் தன்
குழந்தையை ருசித்த நாயை
கட்டையால் அடித்தாள்
நாய் செத்து மடிந்தது.

பின்னர் அவர் தனது
குழந்தையின்
உடலின் பாகங்களைத் தேடினாள்.

அப்போது கட்டிலின் கீழ்
ஒரு மூலையில் குழந்தை
படுத்துக்கொண்டு
வேடிக்கை பார்த்தவாறு
இருந்ததையும்
அதன் மறு புறம் பாம்பு
ஒன்று
கிழிந்த நிலையில் கிடந்ததையும்
அந்த பெண் கண்டார்.

அங்கு பாம்புக்கும் நாய்க்கும்
கடும் சண்டை
கொடூரமான பாம்பிடம்
இருந்து குழந்தையை
காப்பாற்ற நாய் போராடியதையும்
அவள் அதை புரிய நேரமாகியது.

ஏனென்றால் அவள்
தனக்கு வந்த கோபத்தாலும்,
நிதானமற்ற
தன்மையாலும்
விசுவாசமான நாயைக்
கொன்றாள்.

இனி அவள் கண்ணீர்
விடுவதை அந்த விசுவாசமான
நாய் அறியப்போவதில்லை.

அது போல் உண்மையை
சரிவர அறியாமல் எத்தனை
முறை கடுமையான
வார்த்தைகளால்
மற்றவரை தூற்றுகின்றனர் மற்றும்
அவர்களைப் பற்றி
பொய்களைப் பரப்புகின்றனர்.

வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம்
காட்டிக்கொடுக்கின்றனர்.

"சூழ்நிலையை அணுகுவதற்கு
எப்பொழுதும் பொறுமையாக
இருப்பதே சிறந்தது.”

மேலும் தீர விசாரிக்காது
சில விடயங்களை அவசரப்பட்டு
நம்புதலும் கூடாது.

நன்றி.💐

படித்ததில் பிடித்தது

கார சுண்டல்களின் சுவையை மேலும் கூட்டுவது எப்படி?  |   |
03/10/2022

கார சுண்டல்களின் சுவையை மேலும் கூட்டுவது எப்படி?

| |

தெரிந்து கொள்வோம்ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி ?
03/10/2022

தெரிந்து கொள்வோம்
ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி ?

🚩திருப்பதி தங்குமிடம்.🚩திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை கா...
03/10/2022

🚩திருப்பதி தங்குமிடம்.

🚩திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.

🚩Tirumala Sri Kasimath,
Ring road, Near S.V.Meseum,
Tirumala - 517507 (A.P)
Ph : 0877-2277316
திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.

ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மண்டபம் : 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை
Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்
Ph : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்
Ph: 0877-2277269, 2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ,
Ph : 0877 222 77370
ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி
Ph : 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம்
Ph : 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்
Ph : 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட்
Ph : 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி
Ph : 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்
Ph : 0877 222 77240
கர்நாடகா விருந்தினர்
மாளிகை
Ph : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள்
Ph : 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம்
Ph : 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015
வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?
நிபந்தனைகள் :
******
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !🚩🇮🇳
🙏 ௐ நமோ நாராயணா....!
🤲

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா.தங்க கவச அலங்காரம் .
07/09/2022

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா.தங்க கவச அலங்காரம் .

04/08/2022

தயவு செய்து மெதுவாக ஓட்டவும்
அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது

மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பிறகு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். அப்போது தங்களை யா...
17/07/2022

மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசத்தை முடித்த பிறகு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். அப்போது தங்களை யாரும் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களது ஆயுதங்களை விராட தேச எல்லையில் உள்ள ஒரு மயானத்தில் #வன்னி மரத்தின் அடியில் ஒளித்து வைத்துவிட்டுச் சென்றனர்.
ஓராண்டுக்கு பிறகு தங்களது ஆயுதங்களை எடுத்து, சுத்தப்படுத்தி, நெருப்பில் வாட்டி, புதுப்பித்து பூஜை செய்த நாள் ஆடி முதல் தேதி என்று கருதப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதத்தில் சேலம் மாவட்டத்தில் தொன்று தொட்டு தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 18 நாள் நடைபெற்ற மகாபாரதப் போரின் தொடக்க நாளாக ஆடி ஒன்றும் முடியும் நாளாக ஆடி 18ம் கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருக்கும் முன்னோரின் ஆயுதங்கள் மற்றும் சிறிய செப்புத் திருமேனிகளை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து வழிபாடு நடத்தப்படும். ஆடி 18 அன்று கவுரவர்களை வெற்றிகொண்ட பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஆற்றில் கழுவி தங்கள் பாவங்களை போக்கினர். அதுபோல சேலம் மாவட்ட மக்கள் கூடுதுறை, கல்வடங்கம், பூலாம்பட்டி, மேட்டூர் என காவிரிக்கு சென்று நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். ஆடி ஒன்று முதல் ஆடி பதினெட்டு வரை வன்னியர் வீட்டில் அசைவம் இருக்காது. திருமணமான புது ஜோடிக்கு பெண் வீட்டில் தலையாடி என்ற பெயரில் தடபுடல் விருந்து நடைபெறும். எனக்கு தெரிந்து மழவர்நாட்டின் சேலம் மாவட்டம் முழுதும், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களின் வெகு சில பகுதிகளில் மட்டுமே தேங்காய் சுடும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. மழவர்நாட்டின் பாரம்பரிய விழாக்களில் முக்கியமானது இந்த ஆடி 1.

#சேலத்தின்ஆடிதமிழகத்தின்உயிர்நாடி #ஆடித்திருவிழா

  || கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது |    |   |   |
16/07/2022

|| கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது | | | |

🙏💱 *நல்ல தூக்கத்தை பெற வேண்டுமா?* 💚❤️ஒரு மனிதனின ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. ஆனால் தற்காலத்தில் பெரும்பா...
05/07/2022

🙏💱 *நல்ல தூக்கத்தை பெற வேண்டுமா?* 💚❤️

ஒரு மனிதனின ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று. ஆனால் தற்காலத்தில் பெரும்பாலானோர் தூக்கத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

நைட் ஷிஃப்ட் செல்கிறவர்கள் தூக்கம் சூழலால் கெட்டுப்போனாலும், இரவில் வீட்டில் இருப்பவர்களும் தூக்கத்தை அலட்சியம் செய்கின்றனர். தூக்கு கெடுவதற்கு பெரும்பாலும், கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களே காரணம்.

தூக்கம் ஒழுங்காக இல்லாவிட்டால் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளும், உடல்நல பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கான சிறந்த வழிகள்:

ஸ்மார்ட்போன், டி.வி. லேப்டாப் போன்ற எந்த வகையான மின்னணு சாதனங்களையும் தூங்குவதற்கு முன்பு பார்க்கக்கூடாது. இந்த சாதனங்கள் அனைத்தும் நீல ஒளியை வெளியிடுகின்றன. இது தூக்கத்தை பாதிக்கச்செய்யும் தன்மை கொண்டது.

படுக்கையறை சூழலை உறங்குவதற்கு ஏதுவாக உருவாக்க வேண்டும். அது குளிர்ச்சியாகவும்,சுத்தமாகவும், இருட்டாகவும், சத்தமில்லாமலும் அமைந்திருக்க வேண்டும். இவை நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி காலையிலும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். அதனை கடைப்பிடிக்கும்போது எழுந்திருக்க வேண்டிய நேரத்தை உடல் அறிய உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.

காபி, டீயில் கலந்திருக்கும் காபின் விழிப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டது. எனவே, தூங்க செல்வதற்கு முன்பு டீ மற்றும் காபியை தவிர்க்கவும். மேலும், தூங்குவதற்கு முன்பு எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும்.

சேலம் ஏற்காட்டில் எடுத்த புகைப்படங்கள்
04/07/2022

சேலம் ஏற்காட்டில் எடுத்த புகைப்படங்கள்

1 .உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும்.வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 2. காலையில் வெறும் வயிற்றில...
22/06/2022

1 .உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும்.வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம்.

3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.

4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.

5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம்.

7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
மதிய உறக்கம் வேண்டாம்.

8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும்.

9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள்.

10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.

11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம்.

12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .

13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.

14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை.
கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.
கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .

15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்

🌴🌻🍀 🧚🥀    நீ தேடும் ஆணும் நான் தேடும் பெண்ணும் நாமல்ல அவர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்.. மலை உச்சியில் பாறைப் பிளவில் பெர...
19/06/2022

🌴🌻🍀 🧚🥀

நீ தேடும் ஆணும்
நான் தேடும் பெண்ணும்
நாமல்ல
அவர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள்..

மலை உச்சியில்
பாறைப் பிளவில்
பெருங்காற்றில்
ஆடி ஆடி நிற்கும்
சிறுமலர் போல ..

ஆனால்
நாமிருவரும் சேர்ந்து
அவர்களைத் தேடிப்போகலாம் ..

யார் கண்டது
பயணம் நீள்கையில்
அந்த அறிய மலராய்
நீயும் நானுமே கூட
ஆகிவிடலாம் ..

நம்மிடமே இருக்கு மருந்து - எட்டு போட்டால்
19/06/2022

நம்மிடமே இருக்கு மருந்து - எட்டு போட்டால்

*பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 🦜1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவ...
18/06/2022

*பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 🦜

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜
2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜
3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜
4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜
5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜
6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜
7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜
8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜
9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜
10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜
11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜
12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.🦜
13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.🦚
14.பறவைகள் கூடுதலாக கூடுகள் கட்டி வாடகைக்கு விடுவதில்லை.
இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦉🦜🦢. *அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்*.

Address

Salem
636007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Smart City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share