20/09/2022
கொங்கு மக்கள் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது விருந்தோம்பலும், அடுத்து நிற்பது நன்றி விசுவாசமும்தான். பிரிவினை புத்தி அவர்களின் ரத்தத்திலேயே இருக்காது என்பது வரலாறு. அதுவே அவர்களின் பாரம்பரிய சொத்து.
இன்று அந்த பெருமைமிகு மக்களின் பாரம்பரிய சொத்தையே அழித்து ஒழிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், அரசியல் அரிப்புவாதிகள்.
முதலில், செய்நன்றி கொன்று அழியா அவப்பெயரை தேடிக்கொண்டார், திரு எடப்பாடி கே.பழனிசாமி. இப்போது, பிரிவினைக்கு வித்திட்டு, தான் பிறந்த குலத்தின் பெருமையையே குழி தோண்டி புதைக்க தயாராகி விட்டார் திரு செங்கோட்டையன்.
ஆக, கொங்கு மக்களின் பாரம்பரிய புகழை அழித்து ஒழிக்க எதிரிகள் கூட நினைத்ததில்லை. காரணம், அந்த மக்களின் பண்பாடு அப்படி.
இப்போது வீட்டுக்குள்ளேயே இரண்டு கிணறுகள். என்ன செய்வது?
காலம்தான் கவனிக்க வேண்டும்!