நம்ம புதூர்.

நம்ம புதூர். Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நம்ம புதூர்., Social Media Agency, Pudur.

புதூரின் கிராம தேவதை அன்னை வீரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழா புதன்கிழமை (12/06/2024) அன்று வெகு விமர...
11/06/2024

புதூரின் கிராம தேவதை அன்னை வீரகாளியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழா புதன்கிழமை (12/06/2024) அன்று வெகு விமரிசையாக நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு நம்ம புதூர். முகநூல் பக்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

மேலக்கரந்தை சாலையில் இரவு நேரங்களில் செல்வோர் கவனம்.நேற்று இரவு 8 மணியளவில் மேலக்கரந்தையில் இருந்து புதூர் நோக்கி இரு சக...
14/05/2024

மேலக்கரந்தை சாலையில் இரவு நேரங்களில் செல்வோர் கவனம்.

நேற்று இரவு 8 மணியளவில் மேலக்கரந்தையில் இருந்து புதூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர் மீது மேலக்கரந்தை - கீழக்கரந்தை இடையே உள்ள சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தடுக்க முயன்றதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், வண்டியை நிறுத்தாமல் ஓட்டி வந்து கீழக்கரந்தையில் உள்ள மக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

காயம்பட்ட புதூரைச் சேர்ந்த நபர் அரசு அதிகாரி என்றும், தினசரி அந்த வழியாக சென்று வருபவர் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு, மூன்று முறை இது போல நடந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

எனவே இரவு நேரங்களில் அந்த சாலைகளில் மேலக்கரந்தை வழியாக செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த மாதம் கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை லிஃப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்ற நபர் கத்தியைக் காட்டி மிரட்டி காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பணம், நகை மற்றும் கைபேசி யை பிடுங்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
எனவே இரக்கப்படுவதற்கு முன் சிந்தித்து செயல்படவும்.

இக்காலத்தில் "இரக்கபடுவோர் இழக்கப்படுவர்".

சாலைகளில் கவனம்.
உயிர் விலை மதிப்பில்லாதது.
இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவீர்.

நன்றி.

19/12/2023

தொடர் மழை காரணமாக தொடர்ந்து 3வது நாளாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(20/12/2023) விடுமுறை..

| |
| |
| |

18/12/2023

புதூர் இந்துநாடார் உயர்நிலைப்பள்ளி (பேட்ட ஸ்கூல்) பின்புறம் .

| |
| |
| |

18/12/2023

புதூர் குளக்கட்டாங்குறிச்சியில் உள்ள கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

| |
| |
| |

இன்று காலை வரை நமது மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு.  |   |     |   |    |   |
18/12/2023

இன்று காலை வரை நமது மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு.

| |
| |
| |

18/12/2023

நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் புதூர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ள அன்னப்ப குடிநீர் ஊரணி நிரம்பி மறுகால் பாய்ந்து தண்ணீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும்.

| |
| |
| |

இன்று முதல்..❤️
04/11/2023

இன்று முதல்..❤️

நமது பகுதியில் இருந்து முதல் முறையாக பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்து சேவை..❤️🔥
03/11/2023

நமது பகுதியில் இருந்து முதல் முறையாக பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்து சேவை..❤️🔥

01/10/2023

நம்ம புதூர் Instagram பக்கம் துவங்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவை எதிர்பார்த்து....❤️❤️

Address

Pudur

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம புதூர். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share