Pattukkottaianz

Pattukkottaianz பட்டுக்கோட்டையின் அடையாளம் “பட்டுக்கோட்டையன்ஸ்”
(27)

24/01/2024

🔴LIVE :மதுரை ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் அரங்கம் துவக்க விழா நேரலை

24/01/2024

🔴 LIVE : மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நேரலை

24/01/2024

🔴LIVE :மதுரை ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் அரங்கம் துவக்க விழா நேரலை

22/01/2024

🔴LIVE: அயோத்தி ராமர் கோயில் திறப்பு - சிறப்பு நேரலை | Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir Live

19/01/2024

🔴 LIVE : | முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை |

Jallikkattu 2024

16/01/2024

🔴LIVE: பாலமேடு ஜல்லிக்கட்டு | Palamedu Jallikattu | பொங்கல் சிறப்பு தொடர் நேரலை

School-Ku Kilamba Matranungale 🤣👇
19/06/2023

School-Ku Kilamba Matranungale 🤣👇

18/06/2023

இருக்கும் போது ஒரு பொருளின் மதிப்பு தெரிவதில்லை இல்லாத போது தான் அதன் பெறுமதி தெரிகிறது...🥺🥺🥺

இளம் தம்பதி அடுத்தடுத்த நாளில் தற்கொலை: பட்டுக்கோட்டையை உலுக்கிய சம்பவம்பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தை சேர்...
18/06/2023

இளம் தம்பதி அடுத்தடுத்த நாளில் தற்கொலை: பட்டுக்கோட்டையை உலுக்கிய சம்பவம்

பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் (28). பிரிண்டிங் பிரஸ்சில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா (22). இருவருக்கும் கடந்த மே மாதம் 25ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல சதீஸ் வேலைக்கு செல்லும் நேரத்தில் கூட, சுவிதா வாட்ஸ் அப்பில், அடிக்கடி காதல் தொடர்பான மெஜேஸ் அனுப்பி வந்துள்ளார். பதிலுக்கு சதீசும் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இப்படி ஒரு நாளைக்கு குறைந்தது நுாற்றுக்கும் அதிகமான முறை இருவரும் மாறி மாறி முறை ஐ லவ் யூ என்ற மெசேஜ் மேல் மெசேஜ் அனுப்பி கொண்டுள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத காதலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சதீஸ் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு வந்துள்ளார். வேலைக்கு வந்த சில மணி நேரத்தில் சுவிதாவிடம் இருந்து சதீசுக்கு போன் வந்துள்ளது. அப்போது சதீஸை வீட்டிற்கு வர கூறி சுவிதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு நினைத்த நேரத்தில் வரமுடியாது என்று சதீஸ் தெரிவித்தாராம்.

பின்னர், மதியம் சுவிதா, சதீஸ்க்கு வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சதீஷிடம் கூறிவிட்டு சுவிதா வாட்ஸ் அப் வீடியோ காலை கட் செய்யாமல், மதியம் 3:45 மணிக்கு கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், உடனே தனது வீட்டுக்கு அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது சுவிதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனே சுவிதாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சதீஷ் சேர்த்துள்ளார். அங்கு சுவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சோகமாக இருந்த சதீஸ் நேற்று இரவு 8 மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு சதீஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு சதீஷ் வெளியேறினார்.

பின்னர், வீட்டிற்கு சென்று தனது மனைவி சுவிதா இறந்த அதே நேரமான மதியம் 3:45 மணிக்கு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., பொறுப்பு இலக்கியா நேரடியாக சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சுவிதாவின் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்த நாளில் அதீத காதலில் இளம் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போட்றா வெடிய 🔥🔥
17/06/2023

போட்றா வெடிய 🔥🔥

புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா 🚌நாள்:17.06.2023 ( சனிக்கிழமை)நேரம் : காலை 11 மணிஇடம் : புதிய பேருந்து நிலைய c...
17/06/2023

புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா 🚌
நாள்:17.06.2023 ( சனிக்கிழமை)
நேரம் : காலை 11 மணி

இடம் : புதிய பேருந்து நிலைய canal ரோடு ,பட்டுக்கோட்டை
வார்டு :1, நரியம் பாளையம்
விழாவிற்கு வருகை தரும் அனைவரும் வருக வருக!! 💐🙏

16/06/2023

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்👌👌👌 பாடல் மிரள விட்ட வாசிப்பு வாழ்த்துக்கள் நண்பா 🙏following all🙏video
Follow👉👉👉 Pattukkottaianz ....

#கோவில் #தமிழ் #வைரல் #கவிதை #பழனி #முருகன் #ஆட்டம் #மதுரை #தேவர்

15/06/2023

வாழ்த்துக்கள் நண்பா 👏👏
மாற்றத்தை ஏற்படுத்துவோம் அதிகமாக ஷேர் செய்வோம்...🤝🤝

🔴🔴அனைவரது மொபைல்களிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான செயலி.முழு விவரம்👉👉: https://www.youtube.com/watch?v=fwJ3PgMUEmsFo...
15/06/2023

🔴🔴அனைவரது மொபைல்களிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான செயலி.
முழு விவரம்👉👉: https://www.youtube.com/watch?v=fwJ3PgMUEms
Follow Pattukkottaianz

15/06/2023

தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா - 2023
நாள்: 17.06.2023 சனிக்கிழமை மற்றும் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலை: 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடம்: ARV தனலெட்சுமி மஹால், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

15/05/2023

13/05/2023 கேரளாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் பாப்பநாடு அரசுப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.
கேரளாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் பாப்பநாடு அரசுப்பள்ளி மாணவர்கள்
12 வயதுக்கு உட்பட்ட நடைபெற்ற கராத்தே குமிதே பிரிவில் பாப்பாநாடு சங்கரன் தெருவை சேர்ந்த D.கார்த்திகேயன் அவர்களது மகன் K. பாரகெவின் அவர்கள் முதலிடம் (அரசு மேல்நிலை பள்ளி - பாப்பாநாடு),
மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட கராத்தே குமிதே பிரிவில் பாப்பாநாடு,சுவிகரா தெருவை சேர்ந்த மஹேந்திரன் ரேணுகா அவர்கள் மகள் M. ஜனனி
முதலிடம் (M.M.A higher secondary school, பாப்பாநாடு ) பெற்று பெருமை சேர்த்தனர்.
Follow for more updates
https://www.facebook.com/Nammapattukkottai360

14/05/2023

#பட்டுக்கோட்டை #அறந்தாங்கி முக்கம் கடைத்தெருவில் கடைக்குள் புகுந்து ஊழியரைத்தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி #பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மேலும் பட்டுக்கோட்டை ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகின்றதென்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

14/04/2023

நம்ம நாடியம்மன் கோவில் திருவிழா

ஆமா அதான் ஒரத்தநாட்லையே இறக்கிவிட்டுரோமே!!👌🤣🤣🤣Follow & Support🙏👉 Pattukkottaianz
25/11/2022

ஆமா அதான் ஒரத்தநாட்லையே இறக்கிவிட்டுரோமே!!👌🤣🤣🤣

Follow & Support🙏👉 Pattukkottaianz

Tag Your Friends 🤣🤣🤣🤣 Mindvoices
21/11/2022

Tag Your Friends 🤣🤣🤣🤣 Mindvoices

16/11/2022

2018-ல் கஜா புயலின் ருத்ர தாண்டவத்திற்கு பிறகு
பட்டுக்கோட்டை- மதுக்கூர் ரோடு.

நகரம் முழுவதும் துயரத்தின் அழுகுரல் ஒலித்த சமயம்

வீடியோ: முத்து சிவா

02/11/2022

மின்னோளியில் #தங்கம் போல் ஜொலிக்கும் #நம்மபெரியகோயில் 😍 #நம்மதஞ்சாவூர்
(Exclusive FHD Video)

மாமன்னர் இராஜ ராஜ சோழன் 1037 வது சதயவிழாவை முன்னிட்டு பெரியகோயில் வண்ணவிளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .

Pc - Swamy Fine Arts Studio

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்புமேலும் விரிவடைய விரும்புகிறேன்.1. பஸ்ஸில் பயணம் ச...
28/10/2022

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ??? 😡😡😡

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....😡😡😡😡
அது போக குவாட்டர் பாட்டிலுக்கு 5ரூபாய் கூடுதல் விலை... இதில் வரும் கமிஷனில் மேல் மட்டம் வரை பங்கு...

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா..?? 🤨🤨🤨

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக 28 நாளில் மக்கும் பயோ பிளாஸ்டிக் கண்டுபிடித்த  #தஞ்சாவூர்  மாவட்டம்  #பாப்பாநாடு அரசுப்பள்...
27/10/2022

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக 28 நாளில் மக்கும் பயோ பிளாஸ்டிக் கண்டுபிடித்த #தஞ்சாவூர் மாவட்டம் #பாப்பாநாடு அரசுப்பள்ளி மாணவி அர்ச்சனா!!! இது போன்ற கிராமப்புற இளம் விஞ்ஞானிகளை அரசு ஊக்கப்படுத்தி அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள் அர்ச்சனா!!

Tag  Your Friends மணிக்கூண்டு to போஸ்ட் ஆபிஸ் ரோடு Right Now!!🤣🤣🤣என்னையா இவ்ளோ கூட்டமா இருக்கே.Follow Pattukkottaianz   ...
22/10/2022

Tag Your Friends
மணிக்கூண்டு to போஸ்ட் ஆபிஸ் ரோடு Right Now!!🤣🤣🤣

என்னையா இவ்ளோ கூட்டமா இருக்கே.

Follow Pattukkottaianz

 #பட்டுக்கோட்டை அடுத்த மனோரா கடற்கரையில் சிறுவர் பூங்கா மற்றும் படகுசவாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.வி...
21/10/2022

#பட்டுக்கோட்டை அடுத்த மனோரா கடற்கரையில் சிறுவர் பூங்கா மற்றும் படகுசவாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க ஏதுவான இடம்.

#பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை PAPCMS -ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் திரு. முருகேஸ்வரன் என்பவரின் ரேஷன் கடையில்  அப்பகுதியை சேர்ந்த ந...
19/10/2022

பட்டுக்கோட்டை PAPCMS -ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் திரு. முருகேஸ்வரன் என்பவரின் ரேஷன் கடையில் அப்பகுதியை சேர்ந்த நபர் தவறவிட்ட ரூபாய் 50 ஆயிரம் பணத்தை உரிய நபருக்கு நேர்மையுடன் ஒப்படைத்த பணியாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது #பட்டுக்கோட்டையன்ஸ் #குழு

04/10/2022

செயற்கை கோள் தயாரிக்கும் திறனாய்வு இரண்டாம் கட்ட தேர்வில் #பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் #வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களோடு மக்களாக சின்ன பழுவேட்டரையர் தஞ்சை மண்ணில்.
30/09/2022

மக்களோடு மக்களாக சின்ன
பழுவேட்டரையர் தஞ்சை மண்ணில்.

கனமழை காரணமாக இன்று(01.09.2022)/தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.      ...
01/09/2022

கனமழை காரணமாக இன்று(01.09.2022)/தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pattukkottaianz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Pattukkottai

Show All