94 Memes
(20)
Address
Palani
624601
Website
Alerts
Be the first to know and let us send you an email when 94 Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
Category
வரதமாநதி அணை
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம்,பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ளது வரதமா நதி அணை. கொடைக்கானல் வட்டத்திலுள்ள வடகவுஞ்சி மலைக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொய்யா வெளிப்பகுதியிலும், வடகவுஞ்சி மலைக் கிராமத்தின் வடபகுதியில் உள்ள மேல் பள்ளம் பகுதியிலும் உருவாகும் ஒடைகள் (இணையும்) கூட்டாறு என்ற இடத்தில் இணைந்து நதியாகி மேற்கு நோக்கி சுமார் 19 கி.மீ.தூரம் ஓடி வரதா பட்டிணம் என்ற இடத்தில் சவரி குன்றுக்கும், தட்டைப்பாறைக்கும் இடையில் வரதமா நதியின் குறுக்கே 1978ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது வரதமா நதி அணை.
சிறப்பு:
இந்த அணை அய்யம்புள்ளி, ஆயக்குடி, பழனி, பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களின் சுமார் 1750 ஹெக்டேர் (4325 ஏக்கர்) நிலங்களுக்கு பாய்ச்சல் ஆதாரமாகிறது. இந்த அணையின் உபரி நீர் வரத்தாறு என்ற பெயரில் வடக்காக ஓடி சண்முகா நதியுடன்கலக்கிறது. இந்த அணையிலிருந்து பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் சேமிப்புக் கிடங்கில் தேக்கி வைத்து குடிநீர் வினியோகிக்கப் படுகிறது.