07/08/2022
ஆகஸ்ட்-12: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு- வனத்துறை,களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்- சூழல் மேம்பாட்டு கோட்டம்.
அரும்புகள் அறக்கட்டளை - திருநெல்வேலி மற்றும் யானைகள் சூழுலகு:மதோற்கடம் இணைந்து நடத்தும்
'"மனித- யானை எதிர்கொள்ளல்
பிரச்சனைகளும் தீர்வுகளும்" என்னும் தலைப்பில் ஒரு
கலந்துரையாடல் ...
விவசாயிகள்- வனத்துறை- யானை ஆர்வலர்கள் - பழங்குடிகள் என அனைவரும் ஒரு வட்டமேசை அமர்வாக கலந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடல்.
ஒரு காலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள நெய்தல் நிலம் வரை வாழ்ந்து வந்த யானைகளின் வாழிடம் இன்று முற்றிலும் சிதைந்து போயுள்ளது.
பண்டையாகாலங்களில் வாழ்ந்த யானை இனங்களின் வாழிட வேறுபாடும் கவனிக்கத் தக்கவை. சேற்றுநிலம் சதுப்பு புல்வெளிகள் , ஊசியிலைக்காடுகள், பாலை, புல் புதற்காடுகள், கடற்கரைக்காடுகள், ஆற்றுப் படுகைகள், உயர்ந்த மலைகள் என பன்முக எல்லா வகை மாறுதல்களையும் ஏற்று வாழும் தகவமைப்பு யானைகள் பெற்றிருந்தன.
கடந்த 5 கோடி ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் அழிந்து போன சுமார் 150 வகையான யானை மூதாதையர்களின் பிரதிநிதிகளாக எஞ்சிப் பிழைத்திருக்கும் இன்றைய யானைகள் மானிடரின் செயற்கைப் பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வேளையில் யானைகளின் வாழிட அழிப்பைக் குறித்தும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்.வாருங்கள் ஒன்று கூடுவோம் இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறைகளுக்காக...
நாள்: 12.08.2022 (வெள்ளிக் கிழமை)
நேரம் : காலை 10 - மாலை 3 மணி வரை.
இடம்: காஸ்ட் தொண்டு நிறுவனம்,
பூதத்தான் குடியிருப்பு.
( திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி- களக்காடு சாலை)
தொடர்புக்கு:
இராஜ. மதிவாணன். அரும்புகள்-
94875 26003.
ஆற்றல் பிரவீண் குமார்- 9790388452