Kovai - Nilgiri News 24x7

Kovai - Nilgiri News 24x7 இயன்றதை செய்வோம்
இல்லாதவருக்கே


உங்கள் ஆதரவு தேவை லைக் செய்து ஷேர் செய்யுங்கள் தமிழின் நன்றிகள் ♥
(1)

90% fail to answer!Comment your answer
20/11/2024

90% fail to answer!
Comment your answer

சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்கு...
09/11/2024

சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவுந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எறியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக மீட்கப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தில் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம். இவர் தமிழ்நாட்டின்  முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார்...
09/11/2024

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார்.

இவர் தற்போது தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்க துறையின் செயலாளராக உள்ளார்.

தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு, கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

09/11/2024
கூடலூர் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத...
09/11/2024

கூடலூர் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர், எருமாடு ,ஸ்ரீ மதுரை, பாடந்துறை ஆகிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 12மணிக்கு நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா ராமச்சந்திரன் கலந்துகொண்டு கூடலூர் அரசு பள்ளியில் 3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டப்பட்ட 14 பள்ளி அறைகளை பார்வையிட்டார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை கா. ராமச்சந்திரன் கூறுகையில் :- நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தோட்டத் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வாழக்கூடிய பகுதி என்பதால் உதகையில் தற்போது மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி மக்களின் நலன் கருதி முதலமைச்சர் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை கூடலூர் பகுதியில் அமைத்திட 100 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி தலைவி பிரமிளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கீர்த்தனா, பொதுப்பணித்துறை அதிகாரி ரமேஷ் ,கூடலூர் சட்டமன்ற திமுக பொறுப்பாளரும் பொறியாளர் அணி மாநில துணை செயலாளருமான பரமேஸ்குமார்,நகர செயலாளர் இளஞ்செழியன், நகரமன்ற உறுப்பினரும் திமுக மகளீர் அணி துணை அமைப்பாளருமான வெண்ணிலாசேகர் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

09/11/2024

"நீலகிரியில் வன உரிமைச் சட்டம் – 2006 அமல்படுத்துதல் குறித்து பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் கலெக்டர் தலைமையில் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பனியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டாரங்களிலும் வசித்து வருகின்றனர்
இவர்களில் பெரும்பாலான மக்கள் வனங்களை ஒட்டியே வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு என்று அரசு தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கான உரிமைகளையும் அறிவித்துள்ளது. வன உரிமை சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு, அதில், பல்வேறு உரிமைகளை அறிவித்துள்ளது
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில், வன உரிமைச் சட்டம் – 2006 அமல்படுத்துதல் தொடர்பான பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் கேர்ன்ஹில் கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது: வன உரிமைச் சட்டத்தின் படி, பல்வேறு சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், தனி மனித உரிமை, சமூக உரிமை, வளர்ச்சிப்பணி உரிமை உட்பட பல உரிமைச் சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபோன்ற சட்டங்களை பழங்குடியின மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ளும் பட்சத்தில் நமக்கான உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ளவும், நமக்கான தேவைகளை கேட்டு பெறவும் முடியும். மேலும், தனிமனித உரிமை பெற்றுள்ள பழங்குடியின மக்களுக்கு அடுத்த கட்டமாக சமூக உரிமை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர்களுக்கு கடனுதவிகள் வழங்க ஏதுவாக வங்கியாளர்களுக்கு தனியாக வன உரிமைச் சட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழங்குடியின மக்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணிபுரிய விருப்பம் குறைவாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் அருகிலுள்ள மாவட்டமான கோவை மாவட்டத்தில்தான் உள்ளது
நீலகிரி மாவட்டத்திலிருந்து 3 மணி நேரம் பயண தொலைவுதான் என்பதால் அங்கு சென்று பணிபுரியும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்
இந்நிகழ்வில், வன உரிமைச் சட்டம் 2006 மாநில அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன், பழங்குடியினருக்கு வன உரிமைச்சட்டம் குறித்து பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி வனக்கோட்டம்) கௌதம், ஊட்டி ஆர்டிஓ சதீஸ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சக்திவேல், டாக்டர் தருண் சோப்ரா மற்றும் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்."

"வனத் துறை சாா்பில் குறைதீா் கூட்டம் கூடலூரில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்க...
09/11/2024

"வனத் துறை சாா்பில் குறைதீா் கூட்டம் கூடலூரில் உள்ள மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தாா். இதில், தேயிலை வாரிய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சளிவயல் ஷாஜி, செயலாளா் ஆனந்த ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்து பேசியதாவது:

கூடலூரில் பிரிவு-17 நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு எந்த சலுகைகளையும் வழங்கக்கூடாது என்று

இந்திய தேயிலை வாரியத்துக்கு மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தின் சாா்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டது. வனத் துறையின் அந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக தேயிலை வாரியம் பிரிவு-17 நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அளித்து வந்த உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கவில்லை. இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வனத் துறை சாா்பில் தேயிலை வாரியத்துக்கு அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் சிறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புகளின் நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்."

ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை காணப்படும் நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும...
09/11/2024

ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை காணப்படும் நிலையில் குளிர் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி மழை 2 மாதங்களுக்கு பெய்தது. இந்த 2 மாதங்களும் ஊட்டியில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டால், அவ்வப்போது மேக மூட்டம், சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

கடந்த 2 நாட்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று ஊட்டியில் காலை முதலே மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால், காலை, இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பள்ளி செல்லும் சிறு குழந்தைகளும் குளிரால் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை நேரங்களில் மேக மூட்டம் அதிகள் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க சிரமத்திற்குள்ளாகினர்.

குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடும் மூடுபனி காணப்பட்டதால் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் இயக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழையுடன் மூடு பனி காணப்பட்டது.

இந்நிலையில் குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை கடும் மூடு பனி காணப்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். இந்த மூடுபனியினால் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

மேகமூட்டமான காலநிலை காரணமாக கோத்தகிரி, மஞ்சூா் பகுதிகளில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால...
09/11/2024

மேகமூட்டமான காலநிலை காரணமாக கோத்தகிரி, மஞ்சூா் பகுதிகளில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் உள்ளனா்.

நீலகிரியில் கடந்த சில நாள்களாக மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே பசுந்தேயிலை அரும்பு துளிா்விட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால், தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவுவதால் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். டிசம்பா் மாதம் முடியும் வரை பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் தேயிலை ஏல மையத்திலும். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளின் தேயிலை துாள் டீசர்வ் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது.

தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தேயிலை ஏலங்கள் கடந்த, 4 வாரங்களாக தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. ஏறுமுகமாக இருந்த விலை, சரிந்து வருவதுடன், வரத்தும், விற்பனையும் குறைந்து வருகிறது.

குன்னுார் ஏல மையத்தில் நடந்த, 44வது ஏலத்திற்கு, '18.52 லட்சம் இலை ரகம்; 5.11 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 23.62 லட்சம் கிலோ வந்தது. மொத்தம், 16.73 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 143.17 ரூபாய் என இருந்தது.

இலை ரகத்தில் ஆர்த்தோடக்ஸ்,132.82 ரூபாய்; சி.டி.சி., 144.72 ரூபாய் எனவும்; டஸ்ட் ரகத்தில் ஆர்த்தோடக்ஸ், 132.73, ரூபாய்; சி.டி.சி, 138.01 ரூபாய் எனவும் இருந்தது. சில குறிப்பிட்ட இலை ரகங்களுக்கு, 146.96 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்தது. 70.81 சதவீதம் விற்பனையாகி, 29.19 சதவீதம் தேக்கம் அடைந்தது.

மொத்த வருமானம், 23.96 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 3.68 கோடி ரூபாய் குறைந்தது; 41வது ஏலத்தை ஒப்பிடுகையில், 9.68 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது.

விலை சரிவு மற்றும் காலநிலை பாதிப்பு காரணமாக தேயிலை விவசாயிகள் கவல அடைந்து உள்ளனர்

கனிமலைக் கந்தவேளே காப்பது நீ ஐயா!கதியே நீயென்றால் பதியே சரணம் ஐயா!கந்தா கதிர்வேலாகாத்தருள்வாய் சிவபாலா!
09/11/2024

கனிமலைக் கந்தவேளே
காப்பது நீ ஐயா!
கதியே நீயென்றால் பதியே
சரணம் ஐயா!
கந்தா கதிர்வேலா
காத்தருள்வாய் சிவபாலா!

08/11/2024

கோவை-யில் குட்டிகளுடன் போருக்கு செல்வது போல, விவசாய நிலத்தில் விறுவிறு என்று சென்ற யானை கூட்டம்..

08/11/2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர், எருமாடு ,ஸ்ரீ மதுரை, பாடந்துறை ஆகிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

08/11/2024

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தபால் நிலையம் அருகில் பராமரிப்பின்றி இருந்த பொது கழிப்பிடம் அகற்றம் பொதுமக்கள் வரவேற்பு

08/11/2024

10 நாட்களாக வழிந்தோடும் கழிவு நீர் கவலைபட யாரும் இல்லை என அனைத்து தரப்பினரும் பெரும் அதிருப்தி

Address

Ooty

Telephone

+19843495533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kovai - Nilgiri News 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kovai - Nilgiri News 24x7:

Videos

Share


Other Media/News Companies in Ooty

Show All