09/12/2024
வங்கியில் இவ்வளவு மோசடியா? இந்த கோடீஸ்வர பெண் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும்?
வியட்நாமை சேர்ந்த ட்ரோங் மை லான் . அந்நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஷெய்கன் கமர்ஷியல் வங்கியில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்திய ட்ரோங், ஷெல் நிறுவனங்கள் மூலம் 44 பில்லியன் டாலர் கடனை பெற்றிருக்கிறார்.
இதில் 27 பில்லியன் டாலர் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், 12 பில்லியன் டாலர் கையாடல் செய்யப்பட்டதாகவும் இந்த மோசடி குறித்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ட்ரோங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வியட்நாம் சட்டத்தின்படி, அவர் கையாடல் செய்த தொகையில் 74 சதவீதம் அதாவது 9 பில்லியன் டாலரை திருப்பி செலுத்தினால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்.