05/07/2021
*குமரிமாவட்டம் முழுவதும் 92 ரோந்து வாகனங்கள்....*
*உடம்பில் கேமரா பொருத்திய ரோந்து காவலர்கள்.....*
*தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்....*
#கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. வெ. பத்ரி நாராயணன் IPS* அவர்கள் தான் பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
❇️அதன் தொடர் நடவடிக்கையாக இன்று மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் , உடனுக்குடன் குற்ற சம்பவ இடங்களை சென்று விசாரணை செய்யவும் மாவட்டம் முழுவதும் *92* ரோந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வாகனங்கள் மற்றும் உடலில் கேமரா பொருந்திய காவலர்களை நியமித்து அதனை இன்று தொடங்கி வைத்தார்.
❇️மேலும் அவர் பேசுக்கையில் இந்த ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரம் செயல்படும் என்றும், பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கவும், குற்ற சம்பவங்கள் பற்றிய தகவல் சேகரிப்பதற்கும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கும், குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற பகுதிக்கு இந்த ரோந்து வாகனங்கள் விரைந்து செல்லும் என்றும், காவலர் உடையில் கேமரா பொருத்தபட்டுள்ளதால் ஏதேனும் குற்ற சம்பவ இடத்திற்கு ரோந்து செல்லும்போது சம்பவ இடத்தின் உண்மையான நிலவரம், பற்றி உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் *திரு.ஈஸ்வரன்* மற்றும் *திரு. சுந்தரம்* ஆகியோர் கலந்து கொண்டனர்.