Muthupet.org முத்துப்பேட்டை செய்திகள்

  • Home
  • India
  • Muthupet
  • Muthupet.org முத்துப்பேட்டை செய்திகள்

Muthupet.org முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் சுமார் 100,000 மக்கள் வசித்து வருகின்றனர். பேரும்பாலானோர் முஸ்லிம்களே .

இன்றைய தினகரன் நாளிதழில்
03/01/2024

இன்றைய தினகரன் நாளிதழில்

நேற்று முத்துப்பேட்டை அருகில் ஜாம்புவானோடை பகுதியில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பான விழிப்புணர்வு பதிவு!இந்த கொள்ளை வழக்க...
22/10/2023

நேற்று முத்துப்பேட்டை அருகில் ஜாம்புவானோடை பகுதியில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பான விழிப்புணர்வு பதிவு!

இந்த கொள்ளை வழக்கில் பிடிபட்ட நால்வரில் ஒருவன் நமது பகுதியில் ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்பவர்களில் ஒருவன். பொருட்களை டெலிவரி செய்வதுடன் நோட்டமிட்டு கொள்ளை அடிக்க முயற்சியும் செய்தது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் உஷாராகி கொள்ளுங்கள். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

08/05/2023

12 ஆம் வகுப்பு தேர்வு முடித்துள்ள மாணவ மாணவிகளே நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே கட் ஆப் மதிப்பெண் ( Cut-off Mark ) தெரிந்து கொள்வதற்கு எங்கள் முத்துப்பேட்டை உதவும் உள்ளங்கள் குழுமம் சார்பாக செய்யக்கூடிய இந்த இலவச சேவையை பெற்று பயனடைந்து கொள்ளுங்கள்...

Who Need Free Cut-off Mark Consultation Please WhatsApp Your Mark Statement ( or ) Send Your Register Number and Date of Birth Details to This Number 080981 66941

04/04/2023
முத்துப்பேட்டை தாலுக்கா புதிய உதயம்
04/04/2023

முத்துப்பேட்டை தாலுக்கா
புதிய உதயம்

முத்துப்பேட்டை அருகே ஈசிஆர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் அதிரையை சேர்ந்த இரு வாலிபர்கள் மரணம்! இன்னா லில்லாஹி வ இன்னா இலை...
07/08/2022

முத்துப்பேட்டை அருகே ஈசிஆர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் அதிரையை சேர்ந்த இரு வாலிபர்கள் மரணம்!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அவர்களின் மறுமை வாழ்க்கை சிறக்க துஆ செய்வோம்!

25/07/2022
திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி  ஒதுக்கீடு ========...
07/05/2022

திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியை நவீன சுற்றுலாத் தளமாக மேம்படுத்த ரூ 4 கோடி ஒதுக்கீடு
====================================
தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழகத்தில் மிக பெரிய சதுப்புநில பகுதியாக உள்ள முத்துப்பேட்டை அலையாத்திகாடு பகுதிகளை நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்திட கோரிக்கை வைத்து பேசி இருந்தேன்

எனது கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை எண் 29 படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் பகுதியை ரூ 4 கோடி மதிப்பீட்டில் நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்திட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளை காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுக்காகவும் வசதிகளுடன் கூடிய நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்தபடும் என்பது குறிப்பிடதக்கது.

எனது கோரிக்கை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசிற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

30/04/2022
 #திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணும் பணி கோவிலூர் அருள்மிகு பெரிய...
22/02/2022

#திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணும் பணி கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில்

முதல் சுற்று 4-வார்டு கள் முடிவு

வார்டு-1
எஸ்டிபிஐ 39
திமுக 566 நாம்தமிழர்கட்சி 6 அதிமுக 311
சுயேட்சை 106
* சிவகுமார் திமுக வெற்றி*

வார்டு 2
திமுக 405
நாம் தமிழர் 48
பாஜக 204
அதிமுக 185
திமுக லட்சுமி வெற்றி

வார்டு 3
திமுக 174
பாஜக 35
அதிமுக 223
அமமுக 83
* செந்தில்குமார் அதிமுக வெற்றி*

வார்டு-4
எஸ்டிபிஐ 58
திமுக 321
அதிமுக 152
* சுல்தான் திமுக வெற்றி*

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணும் பணி

இரண்டாம் சுற்று 8-வார்டு கள் முடிவு

வார்டு 5
சுயேச்சை 114 சுயேச்சை154
எஸ்டிபிஐ 241
அதிமுக 11
திமுக 479
திமுக நஜிமா வெற்றி

வார்டு 6
எஸ்டிபிஐ 58
திமுக 464
அதிமுக 32
திமுக ஐயப்பன் வெற்றி

வார்டு 7
திமுக 256
சுயேட்சை 28
பாஜக 96
அதிமுக 138
திமுக பாலசுப்பிரமணியன் வெற்றி

வார்டு 8
எஸ்டிபிஐ 311
சுயேட்சை 28
காங்கிரஸ் 174
சுயேட்சை 60
அதிமுக 19
எஸ்டிபிஐ மெகருன்னிசா வெற்றி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி 18-வார்டு களுக்கான மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

மூன்றாம் சுற்று 12 வார்டுகள்

வார்டு 9
சுயேட்சை 8
எஸ்டிபிஐ 172 சுயேட்சை64
சுயேட்சை12
அதிமுக 8
சுயேட்சை26
காங்கிரஸ் 175
காங்கிரஸ் சரிபாபேகம் வெற்றி

வார்டு10
அதிமுக 8
சுயேட்சை 32
எஸ்டிபிஐ 151
திமுக 239
சுயேட்சை 2
திமுக அபுபக்கர் சித்திக் ஜெ வெற்றி

வார்டு 11
அதிமுக 405
காங்கிரஸ் 392
அதிமுக தேவி வெற்றி

வார்டு 12
சுயேட்சை 9
சுயேட்சை 52
எஸ்டிபிஐ 302
திமுக 179
முஸ்லிம் லீக் 6
அதிமுக 16
சுயேட்சை 38
சுயேட்சை 140
எஸ்டிபிஐ தமீம் அன்சாரி வெற்றி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணும் பணி நான்காம் கட்ட முடிவுகள்

நான்காம் சுற்று 16 வார்டுகள் முடிவு

வார்டு 13
அதிமுக 10
திமுக 383
எஸ்டிபிஐ 258
சுயேட்சை 26
திமுக மும்தாஜ் பேகம் வெற்றி

வார்டு 14
அமமுக 29
திமுக 229
அதிமுக 78
எஸ்டிபிஐ 291
எஸ்டிபிஐ ஜெகபர் அலி வெற்றி

வார்டு 15
காங்கிரஸ் 183
அதிமுக 31
எஸ்டிபிஐ 235
அமமுக 128
எஸ்டிபிஐ பெனாசிரா வெற்றி

வார்டு 16
எஸ்டிபிஐ 144
திமுக 219
அதிமுக 429
அதிமுக செல்வராணி வெற்றி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18-வார்டு களுக்கான வாக்கு எண்ணிக்கை முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி மகளிர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கை பணி
ஐந்தாம் சுற்று 18 வார்டுகள் முடிவு

வார்டு 17
எஸ்டிபிஐ 27
அதிமுக 178
விசிக 85
திமுக 289
திமுக தமிழழகன் வெற்றி

வார்டு 18
திமுக 247
பாஜக 405
பாஜக சிவா வெற்றி
வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்றது.

#நியூஸ் #முத்துப்பேட்டை #வாரியர்ஸ்

Address

Muthupet

Alerts

Be the first to know and let us send you an email when Muthupet.org முத்துப்பேட்டை செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muthupet.org முத்துப்பேட்டை செய்திகள்:

Videos

Share