*இது சிக்கதாசம்பாளையமா??? இல்லை குப்பதாசம்பாளையமா???*
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தை உள்ளடக்கிய பகுதி நமது சிக்கதாசம்பாளையம் கிராமம் பெயரளவிலே இது சிக்கதாசம் பாளையமாக இருந்தாலும் ஊர் முழுக்க குப்பை பரவி உள்ளதால் இதனை குப்பதாசம்பாளையம் என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம்.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டு செல்வபுரம் பகுதியில் எல் இ எஃப் பள்ளி அருகில் தான் இந்த அவல நிலை. ஒவ்வொரு முறையும் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்களிடம் புகார் தெரிவித்தால் கடந்த ஆண்டு வரை புகார் தெரிவித்த பின்பாவது வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து குப்பையை அள்ளி சுத்தம் செய்து கொடுத்து கொண்டிருந்தனர் ஆனால் புதிதாக வந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அவர்களிடம் எவ்வளவு முறை புகாரை தொலைபேசியில் தெரிவித்த
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..அனைவரும் இந்தியர்களே 🔥🔥
கோவை- மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் விதிமுறைகளை மீறினால் இந்த எண்ணிற்கு 9384808314 புகார் செய்யுங்கள் . ஒரு மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) உறுதியளித்துள்ளார்
1. ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறுதல்
2. அதிவேகமாக ஓட்டுதல்
3. பேருந்து ஓட்டும் போது செல்போனில் பேசுதல்
4. படியில் தொங்கி கொண்டு பயணம் செய்தல்
5. Bonnet மேல் ஆட்களை அமர வைத்து அஜாக்கிரதையாக பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல்
6. Air horn , அதிக சத்தத்தில் பாட்டு போடுதல்
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் கோவை- மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளால் ஏற்படும் விபத்து குறித்து உரிய அறிக்கை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட போக்குவரத்து இணை இயக்குநரை கேட்டுள்ளார் .
இது குறித்த புகார் அளிக்க வேண்டிய எண்;9384808314 ( மேட்டுப்பாளையம் RTO)
1. ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறுதல்
2. அதிவேகமாக ஓட்டுதல்
3. பேருந்து ஓட்டும் போது செல்போனில் பேசுதல்
4. படியில் தொங்கி கொண்டு பயணம் செய்தல்
5. Bonnet மேல் ஆட்களை அமர வைத்து அஜாக்கிரதையாக பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல்
6. Air horn , அதிக சத்தத்தில் பாட்டு போடுதல்
காரமடை , ஒன்னிப்பாளையம் Akshara garden பகுதியில் இரண்டு டாஷ் வகையை சேர்ந்த நாய்கள் தெருவில் சுற்றித்திரிந்து வந்திருந்தன தற்போது அது ஒன்னிபாளையத்தில் உள்ள எங்கள் வீட்டில் உள்ளது உரிமையாளர்கள் யாராவது இருந்தால் அதை வந்து எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்
தொடர்புக்கு : 9080230180
மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு பகுதியில் தூய்மைப்பணி மேற்கொள்ளாததை பற்றி புகார் கூறிய வாலிபரை தாக்கிய கவுன்சிலரின் கணவர் Collector Coimbatore M. K. Stalin Udhayanidhi Stalin அன்னூர் - Annur Karamadai @top fans
சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். எதிரே வந்த காரில் வந்தவர்கள் சத்தி பண்ணாரி அம்மன் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள். காரை அக்சரா என்ற மாணவி ஓட்டியுள்ளார். பொறுப்பற்ற முறையில் அதிவேகமாக காரை ஓட்டி 4 பேரின் இறப்பிற்கு காரணமான இந்தப் பெண் மற்றும் உடன் இருந்த 3 மாணவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தி பண்ணாரி அம்மன் கல்லூரி வருடா வருடம் பொங்கல் விழா நடக்கும். கடந்த வருட பொங்கல் விழாவின் (2024) போது கல்லூரி மாணவர்கள் செய்த அட்டூழியம் இந்த வீடியோவில். இது போன்ற ஒழுக்ககேடான செயல்களை கல்லூரி நி்ர்வாகம் கண்டிக்காததன் விளைவு ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 உயிர்களை காவு வாங்கியுள்ளது
மேட்டுப்பாளையம் கல்லார் பழங்குடியினர் கிராமம் MP நிதியின் கீழ் தத்தெடுக்கப்படும் என்று நீலகிரி பாஜக வேட்பாளர் டாக்டர் L.முருகன் அவர்கள் உறுதி கூறினார்