10/08/2024
சமீப காலங்களில் சமூக வளைதளங்ளில் நிறைய காணொளிகள் பார்க்கிறோம்...அதில் பலர் சிலருக்கு உதவி செய்வது போலவும் அவர் அதை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைவது மற்றும் சிறு குழந்தைகளுக்கு உதவிகள் செய்வது போலவும், அளவுக்கு அதிகமான காணொளிகளிகள் அதிகம் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது.
இவை அனைத்தும் எதேச்சையாக எடுக்கப்பட்ட காணொளிகள் அல்ல என்பதும் நாம் அனைவருக்கும் தெரியும்,இது போன்ற செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிரானது...இங்கு இருக்கும் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு குறையுடன் அதிகம் வாழ்கின்றனர்,உணவு இல்லாதவர்க்கும் அதை நாம் குறைகளாகவோ இயலாமையாகவோ பாரத்து உதவி செய்து விட்டு கடந்து போனால் மட்டும் அது உதவி ஆகும்,செய்த உதவிகளை காணொளி எடுத்து அதை பகிர்ந்து சுயஇன்பம் அடைவது ஒரு மனநோயாளியின் மனநிலை போன்றது இங்கு மனிதமும் இல்லை...இறையன்பும் இல்லை...மாற்றாக விளம்பரமாய் மட்டுமே தெரிகிறது.
மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும்,பேரிடர் காலங்களிலும் இன்னமும் கண்ணுக்கு தெரியாமல் உதவி புரிபவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர் இவை யாவுமே அவர்கள் விளம்பரத்திற்காக செய்ய முற்பட்டால் இந்த சமூக வளைதளங்கல் பத்தாது அவர்களில் எண்ணங்களில் என்றுமே மனிதநேயமும் இறையன்பும் மட்டுமே வெளிப்படுகிறது.
இது எனது தனிப்பட்ட கருத்து
வாழ்க மனிதநேயம்...