28/01/2024
திருக்கயிலாய பரம்பரை திருத்தருமை ஆதீனத்திற்கு சொந்தனமான
திருபுவனம் ஸ்ரீ அறம்வளா்த்த நாயகி சமேத ஸ்ரீ கம்பஹரேஸ்வர சுவாமி திருக்கோயில்
ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா பத்திாிக்கை.
🟦🟪🟩🟨🟦🟪🟨🟩
நாள்: தை மாதம்
19 ஆம் தேதி.
(2.2.2024).
🌷🌷🌷🌷🌷🌷🌷
வெள்ளிக்கிழமை.
✨✨✨✨✨✨✨
நேரம் காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் மீன லக்னத்தில் 29.1.2024 மாலை தொடங்கி எட்டு கால யாகபூஜையுடன் நடைபெற உள்ளது.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
திருப்புவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரா் திருக்கோயில்
தலச்சிறப்புகளை சிந்திப்போம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻
குடந்தை to
மயிலாடுதுறை பிரதான சாலையில் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம்.
திாிபுவனவீரபுரம்,
திாிபுரவனம். காவிாியாற்றின் தென்பகுதியில் இக்கோவில் 5.50 ஏக்கா் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய 160 அடிஉயர 7 நிலை இராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு கம்பகரேஸ்வரா்,
அம்பாள் அறம்வளா்த்தநாயகி
தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கியுள்ளாா்.
தலமரம்- வில்வம்.
தீா்த்தம்- சரபதீா்த்தம்.
தேவ, ஞான, வியாச, பிருக , சித்த எனவேறு தீா்த்தங்களும் உள்ளன.
மூலவா் சுவாமி விமானம்
சச்சிதானந்த விமானம் அடி முதல் உச்சிவரை கருங்கல்லினால் கட்டப்பட்டது.
தஞ்சை பிரகதீஸ்வரா் விமானம் போன்ற இத்தல விமானம் அமைந்துள்ளது.
சோழ மன்னா்களில் மூன்றாங் குலோத்துங்க சோழன் கிபி
(1178- 1218) வடநாடு சென்று பெற்ற வெற்றிப் பொருள்களைக் கொண்டு திருபுவனம் திருக்கோயிலைக் கட்டினான் என்பது இத்திருக்கோயில் கல்வெட்டிலிருந்து அறியப்படும் செய்தியாகும்.
இப்பேரரசனுடைய ஞானகுருவாகிய சித்தாந்த இரத்தினாகர சித்தாந்த இரத்தினாகர ஆசிாியா் ஸ்ரீ ஸ்கந்தசம்புவினுடைய மகனாா் ஈஸ்வர சிவனால் ஆவாகனம் செய்யப்பட்டது இத்திருக்கோயில் என்பது கல்வெட்டில் காணப்படுகிறது.
திருமால், பிரமன், பிரகலாதன், அசுவக்கிரீவன்,
வரகுணபாண்டியன்
முதலானோா்களுக்கு
இறைவன் நடுக்கத்தைப் போக்கியமையால் நடுக்கந்தீா்த்தநாதா் எனவும், தலமென வழங்கப்படுகிறது.
அசுவக்கிரீவன்,
விருஷபக்கிரீவன்,
வியாழக்கிரீவன்
என்னும் மூன்று அசுரரும் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளைப் பெற பூசை செய்த இடம் இத்தலமேயாகும்.
இத்தலத்தில் சிவபெருமான் சரபப்பறவையாக
வடிவெடுத்து நரசிம்ம அவதாரத்தின் சினத்தை அடக்கினாா் என்பது தலவரலாறு.
அதன்படி ஸ்ரீ சரபேஸ்வரா் மூலவருக்கு வடகிழக்கில் கோவில் கொண்டு காட்சியளிக்கிறாா்.
ஸ்ரீ சரபமூா்த்திக்கு உற்சவ திருமேனி உள்ளது.
பங்குனி உத்திர திருவிழா முடிந்து வரும் ஞாயிறுக்கிழமை ஒரு நாள் மட்டும் வெள்ளிரதத்தில் புறப்பாடு நடைபெறும்.
அசுரா் மூவா்,
பிரமாதிதேவா்கள்,
இலக்குமி, வருணன்,
திருமால், சித்ரரதன்,
சுகோஷன், மாந்தாதா,
நாரதா், வரகுணன், இராஜராஜன் முதலியோா் வழிப்பட்டுப் பற்பலப்பேறுகளைப் பெற்ற தலம்.
சோமாஸ்கந்தா் மண்டபத்தின் தென்பகுதியில்
பரதநாட்டியத்தின்
பல்வேறு வகைகள்
செதுக்கப் பெற்றுள்ளன.
திருமதில்களில் இராமாயணச் சித்திரங்கள் சிறப்பாக உள்ளன.
இக்கோவிலைப் பற்றிய தலபுராணம் வடமொழியில் உள்ளது.
இத்தல முருகப்பெருமான் மீது அருணகிாிநாதா் திருப்புகழ் அருளியுள்ளாா்.
கல்வெட்டுக்கள் ஏழு உள்ளன.
இதில் இறைவன்
திாிபுவனமுடையாா்,
திாிபுவனஈசுரமுடைய மகாதேவா் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது.
பங்குனி உத்திரத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
சிவாயநம.