தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.அரசியல் சார்பற்றது

  • Home
  • India
  • Mannargudi
  • தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.அரசியல் சார்பற்றது

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.அரசியல் சார்பற்றது விவசாயத்தை காப்போம்

🌹🌹🌹🌹🌹🌹🌹தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக்குழு உயர் மட்ட குழு உறுப்பினர் விவசாயிகளுக்கான பெண் போராளி செ...
27/06/2022

🌹🌹🌹🌹🌹🌹🌹தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக்குழு உயர் மட்ட குழு உறுப்பினர் விவசாயிகளுக்கான பெண் போராளி செல்வி சுதாதர்மலிங்கம் அவர்களின் பிறந்தநாளில் தமிழக விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,
பி.ஆர்.பாண்டியன்💐💐💐💐

23/06/2022
பத்திரிகை ஊடக செய்தி அறிக்கை இடம்:திருவாரூர் நாள்:22.06.2022மேகதாது அணை அனுமதிக்கான விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை நிரா...
22/06/2022

பத்திரிகை ஊடக செய்தி அறிக்கை
இடம்:திருவாரூர்
நாள்:22.06.2022

மேகதாது அணை அனுமதிக்கான விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை நிராகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை திரும்பப் பெறவேண்டும்.மறுக்கும் பட்சத்தில் அறிக்கையை நிராகரித்து ஆணைய தலைவர் உத்தரவிட வேண்டும்
பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் திருவாரூரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் துணையோடு சதி செயலில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்கள் கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை ஏற்கக்கூடாது என திட்டவட்டமாக மூன்று கூட்டங்களில் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமலேயே சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கர்நாடகம் விண்ணப்பம் செய்திருந்தது. சுற்றுச்சூழல் துறை இன்று கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை தமிழகம் கேரளம் புதுச்சேரி மாநிலங்களிடையே ஒத்த கருத்தை உருவாக்கி ஒப்புதல் பெறாமல் அனுமதி அளிக்க இயலாது என விண்ணப்பத்தை பரிசீலிக்கவே முடியாது என நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசு கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திடம் இருந்து திரும்பப் பெற முன்வர வேண்டும்.
மறுக்கும் பட்சத்தில் ஆணைய தலைவர் அதனை நிராகரித்து உத்தரவிட வேண்டும்.

இது குறித்து தமிழக அரசின் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ள கூடுதல் தலைமை செயலாளரும், நீர்வளத்துறை செயலாளருமான
சந்தீப்சக்சேனா உடனடியாக ஆணையத்தில் முறையிட்டு நிராகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேற்கண்ட அறிக்கையை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.

இவன் என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர்

21/06/2022
``கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அத...
20/06/2022

``கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அதற்கான திட்டமிடல் ஏதும் இல்லாமல், யாருடைய ஆலோசனையில் திறந்தார்கள் என்று தான் தெரியவில்லை” - பி.ஆர்.பாண்டியன்

https://www.vikatan.com/government-and-politics/agriculture/pr-pandiyan-interview-regarding-various-agriculture-issues

முக்கியச் செய்திகள், சிறப்புப் பேட்டிகள், அலசல் கட்டுரைகளுக்கு Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய http://onelink.to/vikatan-app

``கடலில் போகும் தண்ணீரை கிராமப்புறங்களுக்கு கொண்டு போகிறோம் என்று எடுத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால், அதே நே.....

பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு இடம்:மன்னார்குடி நாள்:20.06.2022தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில,மாவட்ட,ஒ...
20/06/2022

பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு
இடம்:மன்னார்குடி
நாள்:20.06.2022

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிய, நிர்வாகிகள் அவசரக் கூட்டம்.மன்னார்குடியில்தலைவர் எல் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்குறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் இணைப்பு குழுத் தலைவர்
பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசிற்கு 2018ல் ஆணையம் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மத்திய அரசு தண்ணிச்சை போக்கோடு வழங்கப்பட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்யப்பட்டு தனி அலுவலகத்தில் தன்னாட்சி அதிகாரத்தோடு, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.அதனை முடக்கும் வகையிலும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கோடு தன் அரசியல் லாபத்திற்காக விருப்பத்திற்கு ஆணையத்தை அடிமைப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத அனுமதியின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு ஜல்சக்தி துறையின் மூலம் மறைமுக சதி செயலில் ஈடுபடுவது வெளிப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம

தமிழக அரசு அனைத்துக்கட்சி குழு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தில்லி செல்ல உள்ளதாகவும், மத்திய ஜனசக்தி துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் வரைவு திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக வெளியிட்டுள்ள முதலமைச்சரின் அறிவிப்பு ஏற்க இயலாது. காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடரப்பட்ட வழக்கை ஏற்று சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உரிய வாக்கெடுப்புடன் கூடிய அங்கீகாரத்துடன் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே தான் ஆணையம் முடிவு எடுக்க முடியும்,மத்திய அரசின் பிரதிநிதியாக இடம்பெறுவர் பார்வையாளராக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டுப்பட வேண்டும்.அவ்வாறு கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில் ஆணையம் மத்திய அரசிடம் உதவி கோரினால் உதவிட வேண்டும்.மத்திய அரசும் மறுக்கும் பட்சத்தில் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என தெளிவாக உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கர்நாடகம் முதலமைச்சர் தன் மாநில அரசியல் லாபத்திற்காக மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டவிரோதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையின் மூலமாக ஜல் சக்தி துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்து வலியுறுத்துவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமின்றி.
ஆணையத்தை முடக்கும் சதி செயலுமாகும்.
இந்நிலையில் தமிழக அரசும் ஜல் சக்தி துறை அமைச்சர் மூலமாக ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த போவது ஏற்கத்தக்கதல்ல.இது கர்நாடகாவின் ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடும்.
எனவே இதனை மறுபரிசீலினை செய்து மத்திய அரசே கர்நாடகாவில் அரசியல் லாப நோக்கத்திற்காக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு செயல்படுவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது அண்டை மாநில உறவுகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கு எதிரானது. எனவே ஆணையத்தை அச்சுறுத்தும் மேகதாது அணை கட்டுவதற்காண சட்ட விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும்.இச்செயலால் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். அத்தீர்மானத்தை அனைத்துக்கட்சி குழு மத்திய அரசிடம் வழங்கி வலியுறுத்த முன்வர வேண்டும்.
ஆணையத்தில் பெரும்பான்மை கருத்தை மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உருவாக்க தமிழக முயற்சிக்க வேண்டும்

மேகதாது அணை கட்ட சட்டவிரோதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தில்
கொண்டுவரப்படவுள்ள கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை கேரள மாநிலத்தின் ஆதரவை பெற்று பெரும்பான்மை மாநிலங்களின் கருத்தின் அடிப்படையில் நிராகரித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் தூண்டுதலால் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட அனுமதிக்கும் நோக்கோடு வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும்,மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தும் விதமாக வரும் ஜூன் 23ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூரில் நடத்துவது. அன்று காலையில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

விவசாயிகள் நலன்தான் வணிகர்களின் நலனாக இருக்க முடியும் எனவே இதுவரையிலும் இல்லாத வகையில் சட்டவிரோதமான நடவடிக்கை மூலம் மீட்ட காவிரி உரிமையை அபகரிக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் தங்களே முன்வந்து கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கடந்தாண்டு குறுவை பயறுக்கு காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் விவசாயிகளால் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அறுவடை காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த ஆண்டும் இதுவரையிலும் குருவை காப்பீடு செய்ய எந்த நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்ய தமிழக வேளாண்துறை முன்வரவில்லை. இதனால் இந்த ஆண்டும் விவசாயிக்கு காப்பீடு திட்டம் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு தமிழ்நாட்டிற்கென தனி காப்பீட்டு திட்டத்தை தொடங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார்,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன், செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன்,தஞ்சாவூர் மாவட்ட கௌரவ தலைவர் திருப்பதிவாண்டையார்,தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி, திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் எம் கமல் ராமன், துணை செயலாளர் திருமருகள் சேகர்,உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதனை தங்கள் ஊடகம் பத்திரிகையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

இவன்,
என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர்.

வாழ்த்துகிறோம்..தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக தலைஞாயிறு P.கமல்ராம் தேர்வு செய்யப்பட்...
20/06/2022

வாழ்த்துகிறோம்..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக தலைஞாயிறு
P.கமல்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
தொடர்புக்கு 9943195162

பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு:இடம் நந்தனம் - சென்னை,நாள்:18.06.2022ஜூன் 23 மத்திய அரசு, ஆணையத்தை கண்டித்து காவி...
18/06/2022

பத்திரிகை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு:
இடம் நந்தனம் - சென்னை,
நாள்:18.06.2022

ஜூன் 23 மத்திய அரசு, ஆணையத்தை கண்டித்து காவிரி டெல்டாவில் விவசாயிகள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி மேகதாது வரைவுத் திட்ட அறிக்கையை தீயிட்டுக் கொளுத்துவோம்
பி.ஆர்.பாண்டியன்
அறிவிப்பு

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் இன்று சென்னையில் தமிழக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாண்புமிகு கா துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:.

காவிரி பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக துரோகம் இழைக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு 2018ல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு மேகதாது அணை கட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவிற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து 2018 இல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ஓடி வரும் உபரிநீர் கர்நாடகம் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததால் அணை கட்ட முடியாது என தீர்ப்பில் காட்டிய பின்நிலுவையில் உள்ளது.நடுவர் மன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக சட்ட விரோதமாக முயற்சி எடுப்பது அதற்கு இந்திய அரசு துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்போது கர்நாடக சட்ட விரோதமாக தயாரித்து கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வேன் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆணையத் தலைவர் சவால் விடுவது மத்திய அரசின் அரசியல் அழுத்தத்தின் காரணத்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே காவிரி தமிழக உரிமையை பறிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக சதி செயலில் ஈடுபடுகிறது இதனை எதிர்த்து கடந்த 7ம் தேதி தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவசரஅவசரமாக ஆணையத் தலைவர் அவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சவால் விடுவது ஒருதலை பட்சமானது. தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் சதிக்கு துணை போவதாக அமையும். இதனை கண்டித்து வருகிற 23-ஆம் தேதி ஆணையக் கூட்டம் நடைபெறும் அதேநாளில் காவிரி டெல்டா விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கர்நாடகாவில் வரைவு திட்ட அறிக்கை நகலை தீயிட்டுக் கொளுத்துவோம்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு,காவிரி உரிமை மீட்புக்கான போராட்டத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டக் களத்தில் இருந்தார்கள். விவசாயிகளுடைய ஒருங்கிணைப்பில் போராட்டங்களை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கு ஏற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக பாஜக கூட்டணி இருப்பதால் தமிழகத்தில் காவிரி உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டக்களத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆணையம் மூலமாக மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு சதி செயலில் ஈடுபட்டுள்ளது எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் கட்டமைத்து தீவிரப்படுத்தி நாள்தான் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும் என அவரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.

சென்னை மண்டல செயலாளர் சைதை சிவா உடன் இருந்தார் பெரிய தங்கள் ஊடகம் பத்திரிகை வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்.

இவன் என் மணிமாறன் செய்தித்தொடர்பாளர்

https://www.bbc.com/tamil/india-61825944
17/06/2022

https://www.bbc.com/tamil/india-61825944

'அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையில் நடுநிலையோடு தன்னாட்சி அதிகாரத்துடன் .....

டெல்லி காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய  டெல்லி காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய உறுப்பினர் கோபால்ராய் அவர்க...
16/06/2022

டெல்லி காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய டெல்லி காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணைய உறுப்பினர் கோபால்ராய் அவர்களிடம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தோம்.

09/06/2022

இளைஞர்கள் மாணவர்களை காக்க கஞ்சா ஒழிக்க வேண்டுமானால் ஆளும் அரசியல்வாதிகள் மது ஆலைகளை மூட முன்வரவேண்டும்

Address

103/F NEW BYY PASS Road
Mannargudi
614001

Telephone

9443279657

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.அரசியல் சார்பற்றது posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.அரசியல் சார்பற்றது:

Videos

Share

Category