மள்ளர்

மள்ளர் மூவேந்தர் மரபு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்....!அதுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மள்ளர்குலத்தில் உதித்த   #பாண்டிய மர...
20/12/2024

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்....!

அதுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மள்ளர்குலத்தில் உதித்த #பாண்டிய மரபு #வெண்ணிக்காலாடியின் புகழை போற்றுவோம்....!

#பாண்டியன்
#பள்ளன்
#காலாடி

20/12/2024

// #வயலில் #மள்ளர்களின் ஆர்பரிப்பு//

(தணிகைபுராணம் - 103)

" #வயலின்மள்ள ரார்ப்பொலி வரையின்மாமு ழக்கொலி புயறவழ்ந்து லம்பொலி போகுநந்தி நந்தினி பயிலுகின்ற பேரொலி பலவுமுள்ள டங்குற இயமியம்பு பேரொலி யெழுந்துமிக்கொ லிக்குமே".

(இ -ள்.)
வயலின்கண் #மள்ளர்கள் ஆரவாரிக்கின்ற ஒலியும், மலைக்கண் வாழும் விலங்குகளின் முழக்கத்தின் ஒலியும், மேகங்கள் தவழ்ந்துசென்று முழங்குகின்ற ஒலியும், பலவிடங்கட்கும் செல்லுகின்ற நந்தி நந்தினித் தடாகத்தின் அலைகள் மேல்மேல் நெருங்குதலால் உண்டாம் மிக்க ஒலியும் ஆகிய பல்வகை ஒலிகளும் தமக்குள் அடங்கும் படி பல்வகை வாத்தியங்கள் மேலோங்கி மிகுதியாக ஒலியா நிற்கும்.

(வி - ம்.) #மள்ளர், இவர் இக்காலத்துப் #பள்ளரென வழங்கப்படுவர். அவர்களால் வயல்களில் உழுதல், பிரம்படித்தல், விதைத்தல் முதலிய வேளாண்மைத் தொழில் செய்தற்கு உண்டாக்கும் பேரொலி. வரையின்மா, மலையில் வாழ்கின்ற சிங்கம் புலி கரடி யானை முதலிய விலங்குகள் முழக்கஞ்செய்யும் பேரொலி; இவ்வெல்லா வகை ஒலிகளும் அத் திருத்தணிகைக்கண், பல இல்லங்களினும் முழங்குகின்ற மங்கலவாத்திய ஒலியானும், தணிகைப் பெருமான், திருக்கோயிலின்கண் இடையறாது முழங்குகின்ற வாத்தியங்களின் பெருமுழக்கத்தானும், விழவுகாணும் பல்வகை ஒலிமிக்க வாத்திய முழக்கங்களானும் உள்ளடங்கி ஒன்று கலந்து மிக்கொலிக்கும் எனக் கொள்க.

20/12/2024

// #பாண்டிய குல சிங்கம் #வெண்ணிகாலாடி என்ற பெரிய #காலாடி//

" #அந்த வீரனை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். ஆனால் அவன் சாகவில்லை. மீண்டும் ஒருமுறை தூக்கிலிட்டார்கள். நீண்ட நேரம் தூக்குக் கயிற்றிலேயே தொங்கவிட்டார்கள். அப்போதும் அவன் சாகவில்லை. அதைக் கண்டு பரங்கியர் வியந்தனர். பயந்தனர். கோபம் கொண்டனர். மூன்றாம் முறையும் தூக்கிலிட்டனர். இம்முறை அவன் கால்களில் கனமான் வெடிகுண்டுகளைக் கட்டித் தொங்கவிட்டனர். நீண்ட நேரம் கழித்து வீரனின் உடல் தளர்ந்தது. உடல் அடங்கியது.
இவ்வளவிற்கும் அந்த வீரன் பரங்கியருக்கு விசுவாசியாக இருந்தவன்தான். ஆனால் வெள்ளையரின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்தான். விளைவு? நன்றி மறந்தவர்களின் வஞ்சகத்திற்குப் பலியானான். அம்மாவீரன் பெயர் #கான்சாகிப்.
போர் என்று வந்துவிட்டால் கான்சாகிப்பை வெல்லவே முடியாது என்று இருந்த காலம். சொந்த மண்ணில் மண்ணின் மைந்தர்கள் பலரைத் தோற்கடித்து வெள்ளையருக்குக் கப்பம் கட்ட வைத்தான். கான்சாகிப் படையெடுத்து வருகிறான் என்றால் சிற்றரசர்கள் பலர் ஓடி ஒளிந்த நேரம்.

அந்த இறுமாப்பில், கும்பினிப் படைக்குத் தலைமை தாங்கி, வெள்ளையருக்குக் கப்பம் கட்ட மறுத்த மாவீரன் #பூலித்தேவன்மேல் படையெடுத்து வந்தான். இரவோடு இரவாக பூலித்தேவனின் நெற்கட்டான்செவல் கோட்டையை முற்றுகையிட்டான். ஆயிரக்கணக்கான படைவீரர்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் என்று பெரும் படையை #நெற்கட்டான் செவலுக்கு அருகிலுள்ள காட்டில் பதுங்கியிருக்க வைத்தான்.
ஒற்றர்கள் மூலம் இச்செய்தி வந்தது முதலில் பெரிய #காலாடிக்குத்தான். வீறுகொண்டு எழுந்தான் #வெண்ணிக்காலாடி என்ற பெரியகாலாடி. பூலித்தேவனின் #வீரத்தளபதி அவன்.

கடந்த இரண்டு மாதமாக கும்பினியர் படை பூலித்தேவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போர் தொடுப்பதும் பூலித்தேவனால் விரட்டியடிக்கப்படுவதுமாக போர் ஒரு முடிவுக்கு வராமல் இருந்தது.
நெற்கட்டும் செவலைச் சுற்றியுள்ள பாளையக்காரர்களை தந்திரமாக பேசி, விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தான் கான்சாகிப். அப்படித்தான் நடுவக்குறிச்சிப் பாளையக்காரரை விலை கொடுத்து அடிமையாக்கிவிட்டான். பின்னர் அவர்கள் மூலமாக பூலித்தேவனுக்கு தொந்தரவு தரத் தொடங்கினான். ஆனாலும் மாவீரன் பூலித்தேவன் அசைக்கமுடியவில்லை. வெள்ளையருக்குக் கப்பம் கட்டவும் மறுத்து வந்தான்.

கடைசியாக கான்சாகிப் செய்த தந்திரம், பூலித்தேவன் படையில் உள்ள வீரர்களையே விலை பேசியதுதான். வெள்ளையர்களின் வெகுமதிக்கும் பரிசுப் பொருள்களுக்கும் வீரர்கள் அடிமையாகிவிடுவார்கள் என்றுதான் முதலில் கான்சாகிப் நினைத்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக இருந்தது பூலித்தேவனின் படைவீரர்களின் செயல்.
பூலித்தேவனின் இராணுவத்தில் இருந்த வீரர்கள் நாட்டுக்காக தங்கள் செங்குருதியைச் சிந்தத் தயாராக இருந்தனர். விடுதலை வேங்கைகளை விலை கொடுத்து வாங்கமுடியாமல் கோபமுற்றார்கள் வெள்ளையர்கள்.
தலைமைப் பொறுப்பில் இருந்த #பெரிய காலாடிக்கு, கும்பினியரின் ஆள் பிடிக்கும் செயல் கோபத்தை ஊட்டியது. இதை முளையிலேயே கிள்ளியெறிய நினைத்தான். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான்.
கடந்த இரண்டு மாதமாக போர் தொடுத்தும் பூலித்தேவனை வெல்ல முடியாமல் போன கான்சாகிப், இம்முறை இரவோடு இரவாக காடுகளில் பதுங்கியிருந்து, திடீர் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதை அறிந்து மன்னரிடம் விடைபெற்றுக் கொண்டு புயலாய்க் கிளம்பினான் பெரிய காலாடி.
மறைந்திருந்த எதிரிகள் மேல் கெரில்லாத் தாக்குதல் நடத்தினான். பெரிய காலாடியின் இந்தத் திடீர் தாக்குதலை எதிரிகள் எதிர்பார்க்கவில்லை. அவனது வேகத்தையும் வீரத்தையும் கண்டு #கும்பினியர் படை அஞ்சியது.
வெடிமருந்துக் கிடங்கை அழித்தான். பீரங்கிகளை செயலிழக்கச் செய்தான். துப்பாக்கி வீரர்கள், பெரிய காலாடியின் படை வீரர்களை எதிர்க்கமுடியாமல் பின்வாங்கினார்கள். கான்சாகிப்பின் படைவீரர்களால் தாக்கிப் பிடிக்க முடியவில்லை. பெரிய காலாடி இருக்கும்வரை பூலித்தேவன் படையை எதிர்த்து நிற்கக்கூட முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் மீண்டும் ஒரு #சூழ்ச்சி அரங்கேறியது.
அம்பினிப் படையைச் சேர்ந்த சில வீரர்கள் #மறைந்திருந்து, #பெரியகாலாடியை வெட்டினார்கள். அதில் ஒருவன் வெட்டியது பெரியகாலாடியின் வயிற்றில், வெட்டுப்பட்ட வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது. செத்தான் பெரியகாலாடி என்றே எதிர்கள் நினைத்தனர்.
ஆனால், கொஞ்சம்கூட தாமதிக்காமல், தான் கட்டியிருந்த #தலைப்பாகையை கழற்றி, வெறியில் வந்த குடல்களை வயிற்றுக்குள் தள்ளி, வயிற்றைச் சுற்றி கட்டினான். வெட்டிய வலி, கொட்டும் ரத்தம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை #பெரியகாலாடி.

புதிதாய்ப் புறப்பட்ட வீரன்போல், மீண்டும் வாளைச் சுழற்றினான். எதிரிகளின் தலைகளை சீவி எறிந்தான். இம்முறை அவனது மூர்க்கத்தனத்தைக் கண்டு கான்சாகிப்பின் கும்பினிப் படை வீரர்கள் புறமுதுகிட்டு ழுடினர். #வெற்றிவாகை சூடினான் பெரிய காலாடி.
#எவராலும்_வெல்லமுடியாது என்று இறுமாப்புக் கொண்டிருந்த #கான்சாகிப்பை முதன்முதலாக தோற்றோட வைத்தான் பெரிய காலாடி. கும்பினியர் முகாமை முற்றிலும் அழித்து நாசம் செய்தான். அந்த வெற்றிச் செய்தியை மன்னர் பூலித்தேவனிடம் கூறி, குதிரையேறி விரைந்து வந்தான்.
வெற்றிச் செய்தியை மாவீரன் பூலித்தேவனிடம் வந்து கூறிக்கொண்டிருந்தான் அவன் வயிற்றில் இருந்து செங்குருதி வழிந்து வந்ததை கண்டு துணுக்குற்றான் மன்னன். அவனை அப்படியே #வாரி அணைத்துக்கொண்டான். தன் கடைசி சொட்டுக் குருதியையும் வடித்து, அந்த மண்ணை செந்நிறமாக்கி வீரமரணம் அடைந்தான் பெரிய காலாடி.
அவனது வீரத்தைப் பாராட்டி, அவனுக்கு வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தினான் மன்னன் பூலித்தேவன்.

அவன் போரிட்டு வென்ற இடத்தை " #காலாடி_மேடு' என்று பெயரிட்டு, சரித்திரத்தில் இடம்பெறச் செய்தான்.
தாய் நாட்டிற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து, இந்த பூமிக்காக குருதி சிந்தி, இந்த பூமியையே செம்மண்ணாக்கி வீரமரணம் எய்திய பெரிய காலாடியை,

," #கடமை_வீரனப்பா #காலாடி_வீரனப்பா... #
#சூராதி சூரனப்பா...
#சூழ்ச்சியில் வல்லவனப்பா... தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா... தார்வேந்தன் #பூலி பட்டயம் பெற்றானப்பா...'

என்று அவன் புகழைப் பேசிக் கொண்டிருக்கிறது " #பூலித்தேவன் சிந்து'.

வீரத்தளபதிக்கு 259 வது வீர வணக்கம்.

20/12/2024

" #வயல்கள் தோறும் #கயல்கள் துடிக்கும்"
- திருவேட்டை நல்லூர் அய்யனார் #பள்ளு.

#கயல் - #பாண்டியரின் கொடியில் இருக்கும் மீன்.

20/12/2024

* #மடையர்கள்*
👨‍🦲👨‍🦲👩🏻‍🦲👨‍🦲👩🏻‍🦲👨‍🦲👩🏻‍🦲
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.

அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்.

இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.

மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.

ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்

மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும்.

அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள்.

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.

இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

இனி யாரையாவது மடையா என திட்டும் முன் யோசியுங்கள்..!!!!

உங்களை யாராவது மடையன் என்று சொன்னால் காலரை உயர்த்தி நான்தான் எனக் கூறுங்கள்!!!

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல... ,

20/12/2024

மள்ளர்குல பாண்டியர் மரபு வெண்ணிக்காலாடிக்கு புகழ் வணக்கம்...!

#பாண்டியன்
#காலாடி

20/12/2024
19/12/2024
19/12/2024
13/12/2024

நீ பொட்டு வச்ச தங்க குடம்...!

#இம்மானுவேல்சேகரன்
#உரப்புளி

12/12/2024
11/12/2024

"யாரு? உங்க சிஸ்டரா. ?"

"இல்ல சார், என்னோட Wife சார்."

"ஓஹோ wife ah!! ?"

"Marriage ஆய்டுச்சா உங்களுக்கு ?"

"ஆமாம் சார்"

"அவுங்களுக்கும் Marriage ஆயிடுச்சா?"

"ஆய்டுச்சி சார்"

"அவுங்க வீட்டுக்கார் எங்க?"

"தெரியாம உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டேன் சார். என்னை உட்டுடுங்க சார்"

11/12/2024

பாண்டியர் யார்.? Who are pandyar ?

10/12/2024

#தமிழ் மண்ணில் வளம் கொழிக்கும் மருத நிலத்தை உருவாக்கி,

இம் மண்ணை #பண்படுத்தி,

#நன்செய் உற்பத்தியை பெருக்கி,

உபரியை #மூலதனமாக்கி,

அம் மூலதன முதலீட்டைக் கொண்டு #தொழில் செய்து,

உலக வரைபடத்தில் தன் #கால்படாத நிலமே இல்லை என்கிளவில் உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த
#தென் புலக் காவலர்களான #பாண்டிய #குடும்பமார்களின் இன்றைய நிலை???

உழைத்து உழைத்து நாங்கள் ஓடாய் இருப்பதும்?,

இங்கே வரவன் போரவனெல்லாம் கோடிகளிலும், மாட மாளிகைகளிலும் புரல்வதுமாக இருப்பதும்?,

இவ்வுலகிற்கு அரசாட்சி முறை எனும் குடும்பு முறையை கற்றுக்கொடுத்த எங்களை இளிச்சவாயர்கள் என்று இங்கே சிலர் நினைக்கின்றன்ர் போலும்???

இந்த #கருணா, #வைகோ உள்ளிட்ட தமிழின பகை சக்திகள் இத்தனை நாள் இல்லாமல் இன்றைக்கு #தமிழர்களின் எழுச்சியை பார்த்து பதறுகிறார்கள் என்றால்?,

அது யாருடை எழுச்சியை பார்த்து என்பது எங்களுக்கு புரியாமலில்லை???

#வடுகர்களுக்கு மட்டுமல்ல,
#குடும்பர் எனும் #பள்ளர்களின் வீழ்ச்சியில் கிடைத்தவரை லாபம் என வடுகர்களுக்கு #காட்டிக்கொடுத்து பலனடைந்தவன்களுக்கும்?,

#இனி பலனடையளாம் என நப்பாசையில்
#பள்ளர்களை #தாழ்த்தப்பட்டவர்கள், #தலித்கள் என கதைத்து ஒடுக்க முயற்சிக்கும் ஏனையோருக்கும் நான் சொல்லிக்கொள்வது?,

இனி #தமிழர் அரசியல் என்பது #குடும்பர்களின் கண்ணசைவில் தான் நடக்கும்???

தடுக்க முடிந்தால் #தடுத்து பாருங்கள்???

#செல்வா_பாண்டியர்.
தலைவர்,
#தமிழர்_நடுவம்.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when மள்ளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share