Mathura Calendar

Mathura Calendar Updates Daily -- Tamil Calendar Digital Version Updates Daily -- Tamil Calandar Digital Version
(1)

நான் ஜாக்கிரதை ஆமாம் நாம் ஒவ்வொருவரும் "நான் ஜாக்கிரதை" என்ற சொல்லை நம்மிடம் நாமே சொல்லி கொள்ள வேண்டும் ஏன் என்றால் நமக்...
21/12/2024

நான் ஜாக்கிரதை
ஆமாம் நாம் ஒவ்வொருவரும்
"நான் ஜாக்கிரதை"
என்ற சொல்லை நம்மிடம் நாமே சொல்லி கொள்ள வேண்டும்
ஏன் என்றால்
நமக்குள் பல மிருகங்கள் ஒளிந்து கொண்டு இருக்கிறது
எது எப்போ வெளிப்பாடு ஆகும்னு தெரியாது
நாய் என்றல் இரண்டு குணம் உண்டு
ஒன்று....
தெரியாதவர்களைக் கண்டால் குறைக்கும்
இன்னொன்று....
தெரிந்தவர்களைக் கண்டால் வால் ஆட்டும்
பாம்பு அதற்கு துன்பம் கொடுத்தால் சீறும்
இல்லை என்றால் ஒன்னும் செய்யாது
இப்படி தான் அணைத்து மிருகங்களும் இருக்கும்
அததற்கு என்று தனிப்பட்ட குணம் உண்டு
ஆனால் மனிதனுக்கு மட்டும்
அணைத்து மிருகங்களின் குணகங்களும் ஒன்றாக இருக்கும் பெருமை மனிதக்கு மட்டுமே உண்டு
அதனால் தான் மனித இயல் தனியாக இல்லை
விலங்கியல் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது
நான் நானிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
அப்பொழுது தான் நாம் பிறரிடம் தோழமையாக இருக்க முடியும்
மனித மனம் புகழுக்கோ, அதிகாரத்துகோ ஆசைப் பட்டால்
நான் என்ற தன்முனைப்பில் சிக்கி தவிடுபொடியாகிப் போகும் நிலை உண்டாகும்
"தான்" (சுயம் - சுத்த சைதன்யம் ) என்ற உன்னதம் புரியாமல் போகும்
நானை இழப்பதற்கு பதிலாக
தான் முழுமை என்ற தனித்துவத்தை இழக்க நேரிடும்
சர்கஸ் சாதனை காட்சிகளை நாம் பிரமித்து பார்க்கிறோமே
கம்பி மேல் நடக்கும் பெண்
வட்டதிற்குள் வண்டி ஓட்டும் நபர்
ஒற்றைச் சக்கரத்தில் வாகனம் ஓட்டும் சாதனை எல்லாம் எப்படி.....???
கம்பி மேல் நடக்கும் நபர்
தன் கவனம் முழுவதும் காலுக்கு கீழ் இருக்கும் கம்பியிலும்
மேலும் தன் கையில் இருக்கும் குச்சி மேலும் மட்டும் கவனம் இருப்பதால் தான்
அவர்கள் கீழே விழாமல் நடக்க முடிகிறது
கொஞ்சம் அவர்கள் நம்மை பார்த்து தானே இத்தனை பேரும் கையைத் தட்டுகிறார்கள் என்று நினைத்தால் கதை முடிந்துவிடும்
அப்போ அவர்கள் அவர்களின்மேல் ஜாக்கிரதையாக இருப்பதால் தான்
சமநிலை யோடு சாதிக்க முடிகிறது
பேருக்கும் புகழுக்கும் அடிமை பட்டால்
திறமையை வெளிப் படுத்த முடியாது
வேலையும் இல்லை
இதனையே சமஸ்கிருதத்தில்
" ஜாக்கிரதா அவசத்தா " என்று குறிபிடுகிறார்கள்
'நான் நானிடம் ஜாக்கிரதையாக இருப்போம்'
"தான்" என்ற உணர்வில் திளைத்திருந்து திகழ்வோம் 🔥
💥 நான் ஜாக்கிரதையில் : உள் முக பயணம் 💥

ஒரு ஊரில் ஒரு பால்காரன் பால் விற்றுப் பிழைத்து வாழ்ந்து வந்தான். கலப்படமற்ற, சுத்தமான, தரமான பால் விற்பதில் பிரசித்திபெற...
21/12/2024

ஒரு ஊரில் ஒரு பால்காரன் பால் விற்றுப் பிழைத்து வாழ்ந்து வந்தான். கலப்படமற்ற, சுத்தமான, தரமான பால் விற்பதில் பிரசித்திபெற்ற அந்த பால்காரனுக்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்துக் கொண்டே சென்றனர்.
இப்படியிருக்க ஒரு நாள் இவனுக்கு ஒரு நப்பாசை தோன்றியது. தனது லாபத்தை இன்னும் அதிகரிக்க வழி பார்த்தான்.
முடிவாக பாலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தண்ணீர் கலந்து விற்பனை செய்தான்.
வழக்கம் போல் சந்தைக்கு சென்று பாலை விற்பனை செய்தான். வாடிக்கையாளர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை.
சில நாள் கழித்து பாதியளவு தண்ணீரை கலக்க ஆரம்பித்தான். வாடிக்கையாளர்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு இவன் மீது அவ்வளவு நம்பிக்கை.
அவன் எதிபார்த்தது போலவே இரு மடங்கு ஆதாயம் கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். லாபப்பணத்தோடு வீட்டிற்குச் செல்லும் வழியில், களைப்பாறவென ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்தான்.
அந்த நேரத்தில் ஒரு குரங்கு வந்து அவனது பணப்பையை எடுத்துக் கொண்டு மரத்தின் மீது சென்றது. கத்திக் கதறி குரங்கிடம் மன்றாடினான் பால்காரன் . பணப் பையைத் திருப்பித் தருமாறு கெஞ்சினான்.
குரங்கின் கையில் ஒரு பொருள் கிடைத்தால் எப்படி விளையாட்டுக் காட்டும் என்று தெரியும்தானே..! ஒரு பணக்காசை அவனிடமும் மறு காசை நதியிலும் மாறி மாறி வீசிமுடித்தது.
குரங்கு தன்னிடம் எறிந்த பணத்தை எண்ணிப் பார்த்தான். அங்குதான் ஆச்சரியம் அவனுக்காக காத்திருந்தது! கலப்படமற்ற பாலின் வருமானம் அவன் கையில் வந்து சேர்ந்திருந்தது.
அப்போதுதான் தப்புசெய்பவன் யாரும் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்தான். அவன் அண்ணாந்து பார்த்தவாறு பின்வரும் வாசகத்தை சொன்னான்:
“பாலுக்கான காசு பால்காரனிடம் வந்து சேர்ந்தது, தண்ணீருக்கான காசு தண்ணீரிடம் போய்ச் சேர்ந்தது!"
நாம் அநியாயமாக சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயும் சந்தேகமின்றி அநியாயமாக ஒருநாள் நம்மை விட்டுப்போகும்...
-பகிர்வு பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..! "பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண...
20/12/2024

பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!
"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது..!
ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!
பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது... "சோகமா" இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது..!
பொண்ணுங்க சிரித்தால் அழகா இருக்கும்... ஆனால் அந்த சிரிப்புக்குள் "ஆயிரம் கவலைகள்" இருக்கும்..!
"பெண்" ஒரு "அழகிய இசைக்கருவி"... இரைச்சல் வருகிறதே என்று "குறை" சொல்வது முட்டாள்தனம்... "இசைக்க" தெரியவில்லை என்பதை
அர்த்தம் கொள்ளலாம்.
கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண் ... பிடித்தவர்களிடம் மட்டும்..
தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு "அறிவும் திறமையும் அதிகம்" என்று தெரிந்த பின்... பெண் சந்தோசம் கொள்கிறாள்... ஆண் சந்தேகம் கொள்கிறான்..!
பெண்களுக்கு வீரமான ஆண்களை விட .. "அன்பான"ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம் மீது "பழி" சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை "போராடும் உறவுக்கு" பெயர்தான் "மனைவி"..!
யார் மீது கோபம் வந்தாலும் "அதை" பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம்...! ஆணின் "அன்பை உணராது" எந்த "பெண்ணும்" சந்தோஷமாக வாழ்ந்தது இல்லை... பெண்ணின் "உணர்வுகளை" புரிந்து கொள்ளாமல் "ஆண்கள்" இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை...!
பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை... அவளை "காதலித்தவனை" தவிர...!
ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு ...
ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்து விட முடியாது...!
தனக்கே வலித்தாலும் தன்னை "நேசித்தவர்களுக்கு" வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்..!
பெண்கள் ரோஜா செடி போன்றவர்கள்...
கல்லும் இருக்கும்... மண்ணும் இருக்கும் ... முள்ளும் இருக்கும்...
கல் கலையாவதும்... மண் மணமாவதும்...
முள் முளையாவதும்... பெண்களின் கைகளிலே தான் உள்ளது..!
உயிரை பெற்று எடுக்கும் பலத்தையே பெண்களுக்கு கொடுத்த இறைவன்... அழுகையை பலவீனமாக கொடுத்து அடிமையாக்கி விட்டான்..!
அழகென்றும்... அறிவென்றும்... கறுப்பென்றும்... சிகப்பென்றும்... அடையாளம் எத்தனை...? அனைத்திலும் சிறப்பு பெண்மை..!
கடவுள் எழுதிய கவிதை பெண்... ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்... !
உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான்... பெண் அதில் ஓடும் வற்றாத நதி ஆகிறாள்... அவள் போகும் இடமெல்லாம் பசுமை..
புகழ்..
வெற்றி..
மகிழ்ச்சி... !
ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான "அன்பான குணமே" காரணம்..!
பெண்களுக்கு மரியாதை கொடுப்போம்... நமது தாய் பெண் என்பதால்... இல்லை நாமும் சிறந்த "ஆண்களே" என்பதால்...!
கனவுகள் மெய்ப்பட வேண்டும்.🙏 அனைத்தும் ரசித்தது ❤️

Book your order soon, Sale ends soon, Limited stock available. Foe order contact 98943-82610
19/12/2024

Book your order soon, Sale ends soon, Limited stock available. Foe order contact 98943-82610

ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்க...
19/12/2024

ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?
தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக பிறர் பலவீனத்தை தனக்கு தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு கர்வம் கொள்ள மாட்டார்கள். பெருமை பேசுவதற்காக கடன் வாங்கி பொருட்கள் வாங்க மாட்டார்கள்.
நண்பர்களை குடும்ப விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஆலோசனை வேண்டுமானால் கேட்பார்கள். முடிவு எப்பொழுதுமே தன்னிடத்தில்.
குறைவாகப் பேசுவார்கள்.
புறம் பேசமாட்டார்கள். எப்படியும் சேரவேண்டியவரிடம் சேர்ந்து விடும் என்பதை அறிந்தவர்கள்.
அரசியல்வாதி/விளையாட்டு வீரர்கள்/ நடிகர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள். திறமையை மட்டுமே ரசிப்பார்கள்.
வியாபார தந்திரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். உழைக்காமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவரே தந்திரங்களில் சிக்குவார்கள்.
தோல்விக்குப் பிறகு துவண்டு போகாமல் உடனடியாக அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள். பிறரின் வெற்றியையும் அங்கீகரிப்பார்கள். அக்கறை கொள்வார்கள்.
பொழுதுபோக்கு கூட அவர்களுடைய லட்சியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். தினமும் தன் லட்சியத்தை நோக்கி ஒரு அடியாவது முன்னேறியிருப்பார்கள்.
தொலை நோக்கு பார்வை கொண்டவர்கள். பூங்காவில் அமர்ந்து இருந்தால் கூட, அருகில் இருக்கும் ரோஜாவை ரசிக்காமல், தூரத்தில் இருக்கும் ஆலமரத்தில் எத்தனை விழுதுகள் என்று எண்ணுவார்கள்.
லேசாக புருவம் நெறித்து, கண்கள் சுருக்கிய கூர்மையான பார்வை கொண்டவர்கள். முக்கியமாக ஏதோ யோசிக்கையில் கண்கள் மூடி யோசிப்பார்கள்.
படித்ததில் வியந்தது

வறுமை...ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை,"அண்ணா...! அம்மா 10 இட்லி...
18/12/2024

வறுமை...ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை,
"அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...
ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா , சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...
இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.
குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.
அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"
ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...
அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? 🤔குழந்தை பசியால் கேட்டிருக்கும்..
அதான் சார், அந்த அனுப்பி இருக்காங்க..
நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்....
நான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்"
நான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , தன் தாயுக்காக திருட போவான் அல்லது அந்த தாய் , தன் குழந்தை பசிக்காக , தவறான பாதைக்கு செல்வாள் ... ஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது என்றார்...

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்த...
18/12/2024

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
1. போனது போய்விட்டது ஆனது ஆகிவிட்டது, இனி என்ன நடக்க வேண்டும்? அதைப் மட்டும் பேசு.
2. நல்ல வேளை இதோடு முடிந்ததென திருப்திப்படு.
3. உடைந்தால் என்ன? வேற வாங்கி விடலாம்.
4. பேரூந்து போய்விட்டால் என்ன? அடுத்த பேரூந்து வரும்.
5. பணம் தானே போனது. கை கால் இருக்கு. மனதில் தெம்பு இருக்கு, சம்பாதித்து விடலாம்.
6. செல்கிறவர்கள் ஆயிரம் சொல்வார்கள் எல்லாமே சரி என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான், அப்படித்தான் பேசுவான், அதையெல்லாம் கண்டுகொள்ளலாமா? ஒதுங்கி விடு அப்போதுதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சின்ன விஷயம். இதற்கு போய் கவலைப்படுவது.
9. கஷ்டம் தான், ஆனால் முடியும்.
10. நஷ்டம் தான், ஆனால் மீண்டு வந்துவிடலாம்.
11. இதில் விட்டதை அதில் எடுத்து விட மாட்டேனா?
12. விழுந்தால் என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
13. விழுந்தது விழுந்தது தான். எழுந்திருக்க வழியை தேடு.
14. உட்கார்ந்தே இருந்தால் என்ன அர்த்தம்? எழுந்திரு, நடக்க வேண்டியதைப் பார்.
15. இவன் இல்லையென்றால் என்ன வேற ஆளே இல்லையா?
16. இந்த வழி இல்லை என்றால் வேற வழி இல்லையா?
17. இப்போதும் முடியவில்லையா? சரி. இன்னொரு முறை முயற்சி செய்.
18. இது மிகவும் கஷ்டம், கொஞ்சம் யோசித்தால் வழி கிடைக்கும்.
19. முடியுமா? என்று நினைக்காதே. முடியும் என்று நினை.
20. கிடைக்கவில்லையா? விடு, காத்திரு இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம் கதையைப் பார்.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிந்து போன கதை.
24. சும்மா யோசித்துக் கொண்டே இருக்காதே. குழப்பம் மட்டுமே மிஞ்சும், வேகமாக வேலையை ஆரம்பி.
25. ஆஹா இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யாரிடமும் நான்கு மடங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.
26. உலகத்தில் யார் அடிபடாதவன்? யார் ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கிறான்.
27. ஊரில் ஆயிரம் பிரச்சினை. என் பிரச்சினையை நான் தீர்த்தால் போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது அதன் வழியில். என் வேலை வேற வழியில்.
29. எப்போதுமே ஜெயிக்க முடியுமா? அப் அப்போது, தோற்றால் என்ன பெரிய தவறா?
30. அவனை ஜெயித்தால் தான் வெற்றியா? நான் தான் தினம் வளர்கிறேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நன்றாக தூங்கி விட்டேன் பரவாயில்ல. இனிமேல் விழித்திருந்தால் போதும்.
32. நான்கு காசு பார்க்கும் நேரம். கண்ட பேசி காலத்தை கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே,
வீழ்வது கேவலமில்லை, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.
உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள். வெற்றி நமதே.

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்...
17/12/2024

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.
அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.
அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’
இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.
`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.
மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.
அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.
`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.
அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன்.
அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.
நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!
எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்.....

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந...
17/12/2024

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.
பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது,
‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.
பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம்
என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும்,
பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம்
அவருக்கு இருந்தது.
அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ?என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.
இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும்,
இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன்
84வது வயதில் கடந்த 2020 மே 19ம் தேதியன்று காலமானார்.......
பகிர்வு

யாரால் எதைச் சுமக்க முடியும் என்றும்,  நம்மால் தாங்க முடிந்த அளவு மட்டுமே  சுமையைத் தர ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். மேல...
16/12/2024

யாரால் எதைச் சுமக்க முடியும் என்றும், நம்மால் தாங்க முடிந்த அளவு மட்டுமே சுமையைத் தர ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். மேலும் அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான் - விளக்கும் எளிய பக்தி கதை*
ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.
மிகவும் ஏழ்மையான பெண் ஒருத்தி பகவான் கிருஷ்ணர் மீது மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள், கிருஷ்ணா, உன் மீது பக்தி செலுத்துவதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள்.
கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது கேட்பார், அதை செய்யலாம் என்று கருதித்தான் அவள் கேட்டாள். ஆனால் அவள் அதிர்ச்சியடையும் விதமாக ஒரு கோணிப்பையை அவளிடம் தந்த கிருஷ்ணன், நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா! அது போதும்! இன்னொரு விஷயம், நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது! என்றார்.
திகைத்துப் போனாள் அந்தப் பெண்.
பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால், அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே! என்று எரிச்சல் தோன்றினாலும், வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்டபோதும், கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை.
ஆனால், நிஜமாகவே அவள் சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார். ஒருநாள், போதும் நீ சுமந்தது. மூட்டையை இறக்கி வை! என்று சொன்ன கிருஷ்ணர், மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவல் செய்ய, முடிச்சு, தானே அவிழ்ந்து மூட்டை பிரிந்தது.
அதில், விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்! சிறுநகை தவழ சொன்னார், பகவான்.
சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண், கிருஷ்ணா! என்னை மன்னித்துவிடு! அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன்.
உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்துகொண்டிருந் திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறைசொல்லி யிருக்கவே மாட்டேன்! என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அப்போதும், அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.
இறைவன், ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் உங்களிடம்தான் இருக்கிறது.
யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். எனவே உங்களால் தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான்.
அதுமட்டுமல்ல, அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். இறைவனை நம்புங்கள்! சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும். அதுவே பொக்கிஷமாக மாறும்!
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்*

படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள்...!!!ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு...!!!ரொம்ப தூரத்தில...
15/12/2024

படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள்...!!!
ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு...!!!
ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு...!!!
ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு...!!!
சரின்னு அடுத்த இரண்டாவது மரத்துக்கிட்டே போய் அந்தக்குருவி கேட்டுச்சு...!!!
இடம்தானே தாராளமா இருந்துக்கோனு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்...!!!
ஒரே மாசம்தான் ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது...!!!
ஆனால் குருவிக்கு இடம் கொடுத்த இரண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது...!!!
முதல் ஆலமரத்தைப் பார்த்த குருவி அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது...!!!
ஆனால் வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா...!!!
என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...!!!
ஏய் குருவியே நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது...!!!
இப்படி தான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை...!!!
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு...!!!
நம் மகிழ்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு...!!!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்...!!!
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்
சீர் செய்யும் பெற்றோர்களும்
சகோதரர்களும் கூட தியாகிகள்தான்...!!!
சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும்
அது நம் நன்மைக்காகவே இருக்கும்
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது...!!!

எனது நண்பன்**"""""""""""""""""""""""""""""""""""""""""""""""””"""”""""**நான் சமீபத்தில் ஒருவரிடம் நட்பை வளர்த்துக் கொண்ட...
14/12/2024

எனது நண்பன்*
*"""""""""""""""""""""""""""""""""""""""""""""""””"""”""""*
*நான் சமீபத்தில் ஒருவரிடம் நட்பை வளர்த்துக் கொண்டேன்.
அவரைப்பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். அந்த நண்பன் எனது பிரச்சனைகளையும், சந்தோஷங்களையும், துக்கங்களையும் காதுகொடுத்துக் கேட்பான்.
நான் பேச விரும்பும்போது
நான் வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன் என்று ஒருநாளும் கூறியதில்லை.
சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியாமல் வாழ்க்கையை நேருக்கு நேர் சந்திக்கத் தேவையான துணிவினை பெற்றுக்கொள்ள எப்போழுதும் உதவுவான்.
நான் அவனிடம் பெரும் ஆலோசனைகள் எப்போதும் நன்மையாகவே அமைகின்றன.
ஏனெனில் அவன் ஞானத்துடனும், பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் இருக்கிறான்.
அவன் அறிவுரைகளைத் கேட்கத் தவறிய போது ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க மேலும் அடக்கத்துடனும், நேர்மையுடனும் அவன் கூறும் கூடுதல் அறிவுரைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.*
*எவ்வளவு தவறுகள் செய்தாலும் கூட என்னுடைய அந்த நண்பன் என்னை விட்டு விலகுவதில்லை.
இரவு பகல் என்று பாராத எல்லா நேரங்களிலும் எனக்கு உதவ எப்பொழுதுமே தயாராய் இருக்கிறான். நான் பேசும்போது ஒரு நாளும் குறுக்கிட மாட்டான்.
என்னதான் தாறுமாறாக உளறிக்கொட்டினாலும் பொறுமையுடன் கேட்பான்.
சில நேரங்களில் அவனுடன் பேசும்போது என் பிரச்சனைகளுக்காண வடிவில் கொண்டு வந்து அவரிடம் கூறும்போது அவை எவ்வளவு சிறியன, முக்கியத்துவம் அற்றன என்று உணர்கிறேன்.
என் நண்பனின் அறிவுரைகளை கேட்கும்போது மென்மையான
என்னை வழிநடத்துவதாக நான் உணர்கிறேன்.
அவன் பேச்சைக் கேட்காத போது
அவன் காயமுறுகிறான். ஆயினும் ,ஒருபோதும் கோபமடைவதில்லை.*
*நான் பணியிலிருக்கும் போதும், வீட்டிலிருக்கும் போதும் என் நண்பன் எப்போதும் என் கூடவே இருக்கிறான். எங்கு சென்றாலும் என் கூடவே வருகின்றான்.
நான் புரிந்து கொண்ட உயர்ந்த சக்தி எனது நண்பன்.
நான் புரிந்து கொண்ட இறைவன் அவன்*
*ᴄᴏʟᴏʀᴀᴅᴏ sᴘʀɪɴɢs, ᴄᴏʟᴏʀᴀᴅᴏ.*
*நம்பிக்கைக்கு வந்தோம்*
*பக்கம் 107*

உங்கள்  பாதங்களின்  அடிப்பகுதியில் *தேங்காய் எண்ணெயை*   பயன்படுத்திப் பாருங்கள்....என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்ட...
13/12/2024

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் *தேங்காய் எண்ணெயை* பயன்படுத்திப் பாருங்கள்....
என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை ....
ஒரு முறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு முதியவரின் அறிமுகம் கிடைத்ததாகக் கூறினார். அம்முதியவர் "நான் தினமும் தூங்கும் முன் என் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். மேலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றும் கூறியிருக்கிறார் .
ஒரு நாள் என் தாத்தா அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கிய போது இரவில் தூங்க முடியாமல் அறைக்கு வெளியே சென்று அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பதை பார்த்த, வெளியே உட்கார்ந்திருந்த முதிய காவலாளி ஒருவர், "என்ன விஷயம்?" என்று கேட்க, என்னால் தூங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்! அவர் சிரித்துக்கொண்டே, "உங்களிடம் *தேங்காய் எண்ணெய்* இருக்கிறதா?" என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று சொன்னதும், அவர் சென்று தேங்காய் எண்ணெயைக் கொண்டு வந்து, "உங்கள் கால்களின் பாதங்களை இதைக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்" என்றிருக்கிறார். அவ்வாறே அவர் செய்த பின்னர் நன்றாக தூங்கி விட்டாராம்.
அவர் சொன்னபடி நானும் இரவில் தூங்குவதற்கு முன் என் கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து பார்த்தேன். *உண்மையாகவே நன்றாக தூங்கவும் சோர்வு நீங்கவும் செய்கிறது*.
எனக்கு *வயிற்று பிரச்சினை* இருந்தது. என் *கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ்* செய்த பிறகு, எனது வயிற்று பிரச்சினை *2 நாட்களில்* குணமாகியது.
உண்மையில்! இந்த செயல்முறை *ஒரு மந்திர விளைவை* கொண்டுள்ளது
நான் பல ஆண்டுகளாக இந்த தந்திரத்தை கையாண்டு வருகிறேன். இது எனக்கு *மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் இளம் குழந்தைகளின் கால்களை தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்கிறேன், இது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும்* வைத்திருக்கிறது.
இரவில் தூங்குவதற்கு முன் தினமும் 2 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயுடன் என் கால்களின் பாதங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்ததிலிருந்து
என் கால்களில் எப்போதும் இருந்த வீக்கத்தினால் ஏற்பட்ட வலியும் சோர்வும் நீங்கின,
தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த *2 நாட்களில், என் கால்களின் வீக்கம் மறைந்தது.*
இது ஒரு அற்புதமான விஷயம்.
💐 *நிதானமான தூக்கத்திற்கான தூக்க மாத்திரைகளை விட இந்த முனற சிறந்தது.*💐 இப்போது நான் ஒவ்வொரு இரவும் என் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் தூங்குகிறேன்.
என் தாத்தாவின் *காலில் இருந்த எரிச்சல் உணர்வும், தலைவலியும்* நீங்கின.
*தைராய்டு பிரச்சனை* இருந்த ஒருவர் கூறுகையில், என் கால்கள் எல்லா நேரத்திலும் வலித்துக் கொண்டே இருக்கும். தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்ய ஆரம்பித்தபின் அவ்வலி நீங்கி இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.
வேறொருவர் கூறுகையில் "எனக்கு *பன்னிரண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூல நோய்* இருந்தது. என் நண்பர் என்னை ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார். தேங்காய் எண்ணெயை கைகளின் உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க அவர் பரிந்துரைத்தார்: *நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில்* விட்டு தூங்கச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.
அவர் கூறியபடி பின்பற்றத் தொடங்கிய பின் எனது *மலச்சிக்கல்* பிரச்சினையையும் தீர்த்தது. என் உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக உணர்கிறேன். *குறட்டையை* கூட தடுக்கிறது.
கால்களில் *கொப்புளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி* கூட இந்த மசாஜால் குறைகிறதாம்.
எல்லா இடங்களிலும் அனைவருக்கும் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது தேங்காய் எண்ணெய்.
"நீங்கள் *தேங்காய் எண்ணெயை* மட்டுமே பயன்படுத்த வேண்டும் எஎன்பதில்லை.... மாறாக *கடுகெண்ணெய், நல்லெண்ணெய்* போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யுங்கள்.
உங்கள் *வாழ்நாள்* முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் *இயற்கையின்* அற்புதத்தை பாருங்கள்.
நம் கால்களின் பாதங்களில்.
*பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில்* *சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.*
*ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன. பாதங்களை அழுத்தி மசாஜ்* செய்வதன் மூலம் அவ்வுறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.
*கால் ரிஃப்ளெக்சாலஜி* என்றும்
இது கூறப்படுகிறது. *கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.*
தயவுசெய்து இந்த தகவலை *உங்கள் நண்பர்களுடன்* முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.❤️❤️🤝🤝 ❤️❤️🤝🤝🙏🙏

 #பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்? எந்த நேரத்தில், எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்?கார்த்திகை தீபத் திரு...
12/12/2024

#பரணி_தீபம்
வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
எந்த நேரத்தில், எப்படி விளக்கு ஏற்றினால் பாவம் தீரும்?
கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிவ பெருமான் சன்னதியில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டு, பிறகு அதிலிருந்து 5 தீபங்கள் ஏற்றப்படும். பிறகு மீண்டும் அந்த 5 தீபங்களும் ஒன்றாக்கப்பட்டு, ஒரே தீபமாக மாற்றப்படும். இதற்கு பரணி தீபம் என்று பெயர். ஏகன் அநேகன் என்ற பஞ்சபூத தத்துவத்தை உணர்த்துவதே பரணி தீபம் ஆகும்.
கோவிலில் மட்டுமல்லாது வீடுகளிலும் திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் பரணி தீபம் ஏற்றப்பட வேண்டும். இதற்கு என்ன காரணம், பரணி தீபம் ஏற்றும் முறை எப்படி வந்தது, வீட்டில் பரணி தீபம் ஏற்றுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்,
கார்த்திகை மாதமே தீபங்களுக்குரிய மாதமாகும். இந்த மாதம் முழுவதும் வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் திருக்கார்த்திகை துவங்கி மூன்று நாட்கள் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். உண்மையில் திருக்கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபம், திருக்கார்த்திகை அன்று தீபம், திருக்கார்த்திகைக்கு மறுநாள் பாஞ்சராத்திர தீபம் என மூன்று நாட்கள் விளக்கு ஏற்றுவதே சரியான முறையாகும். இதில் பரணி தீபம் எமதர்ம ராஜாவிற்காகவும், திருக்கார்த்திகை தீபம் சிவ பெருமானுக்காகவும், பாஞ்சராத்திர தீபம் பெருமாளுக்காவும் ஏற்றுகிறோம்.
பரணி தீபம் எதற்காக ஏற்றப்படுகிறது?
சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி தந்த திருநாளையே திருக்கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் ஜோதி வடிவமாக தோன்றி பெருமாள் உலகை காத்ததை போற்றும் வகையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுவதும் தெரியும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள் என்பது தெரியும். ஆனால் வீடுகளில் எதற்காக பரணி தீபம், அதுவும் எமதர்ம ராஜாவிற்காக ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் வரும். எமன் என்றால் அனைவருக்கும் பயம் தான் வரும். அவரை எதற்காக வழிபட வேண்டும் என்று கேட்க தோன்றும். இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
பரணி தீபம் தோன்றி கதை
நசிகேதன் என்பவரின் தந்தை யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகம் நடத்தும் போது தேவர்களுக்கு அவர்கள் வேண்டிய பொருட்களை தானமாக கொடுத்து வந்தார். இதை கண்டு குழப்பமடைந்த நசிகேதன் தனது தந்தையிடம் சென்று, "எதற்காக இப்படி தேவர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படியே கொடுத்தால் எனக்கு என்று கடைசியில் என்ன இருக்கும்? விட்டால் யாராவது வந்து கேட்டால் என்னையும் தானமாக கொடுத்து விடுவீர்கள் போலவே" என கோபமாக கேட்டுள்ளான். இதை கேட்ட அவரது தந்தை, "ஆம். உன்னையும் தானமாக கொடுக்க போகிறேன்" என்றார். இதை கேட்டு மேலும் கோபமடைந்த நசிகேதன், "என்னை யாருக்கு தானமாக கொடுக்க போறீர்கள்?" என கேட்க, அவரது தந்தையோ, "எமனுக்கு உன்னை தானமாக கொடுக்கிறேன்" என கூறி தானமாக கொடுத்து விட்டார்.
பரணி தீபம் ஏற்ற காரணம்
தந்தை தானமாக கொடுத்ததால் உயிருடனேயே எமலோகத்திற்கு சென்றான் நசிகேதன். அங்கு மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு பயமும், குழப்பமும் அடைந்த நசிகேதன், அது பற்றி எமதர்ம ராஜாவிடம் பலவிதமான கேள்விகள் கேட்கிறான். "மனிதர்கள் பூமியில் தான் பல விதமான துன்பங்கள் என்றால் இங்கும் அவர்களுக்கு துன்பம் தானா?" என கேட்கிறான். அதற்கு பதிலளித்த எமதர்ம ராஜா, அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ற தண்டனை என்றார். இது போன்ற துன்பங்களில் இருந்து விடுபட என்ன தான் தீர்வு என்று கேட்கிறான். அவனுக்கு தர்மங்களை எடுத்துச் சொல்கிறார் எமதர்மராஜா. மனிதர்கள் தெரியாமல் செய்த பாவங்கள் தீருவதற்கு என்ன செய்ய வேண்டும் என எமதர்ம ராஜா கூறி வழிகளில் ஒன்று தான் பரணி தீபம்.
பரணி தீப நன்மைகள்
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று எவர் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ அவரும், அவரது முன்னோர்கள் மற்றும் சந்ததியினர் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, யமவாதனை இன்றி நலமுடன் வாழ்வார்கள் என்றார். அது மட்டுமல்ல, மார்கழி மாதம் என்பதை தேவர்களின் விடியற்காலை என சொல்லப்படுவதால் அதற்கு முன்பு வரும் கார்த்திகை மாதம் அவர்களுக்கு இருளாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவதால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கி, தேவர்களின் அருள் கிடைக்கும். குறிப்பாக மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
இந்த ஆண்டு பரணி தீபம் டிசம்பர் 12ம் தேதியன்று வியாழக்கிழமை வருகிறது. டிசம்பர் 12ம் தேதி காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 மணி வரை பரணி நட்சத்திரம் உள்ளது. யமதர்ம ராஜாவிற்கு பிரியமான பரணி நட்சத்திரம் அன்று, நாம் வாழும் போதும், வாழ்க்கைக்கு பிறகும் துன்பம் இல்லாமல் வாழ மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்ற வேண்டும். இது பஞ்சபூத தத்துவத்தையும் உள்ளடக்கியதாகும். உலகில் உள்ள பஞ்சபூதங்களும், நம்முடைய உடலில் உள்ள பஞ்சபூதங்களும் ஒழுங்காக செயல்பட குறைந்தபட்சம் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பூலத்தில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பார்த்தவாறு வட்டவடிவமாக 5 நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் தீபங்களுடன் சேர்த்து இந்த ஐந்து தீபங்களையும் ஏற்ற வேண்டும். மனைப்பலகையில் கோலமிட்டு, அதன் மீதும் இந்த விளக்குகளை ஏற்றலாம்.
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்

Address

12/1, Ahimshapuram 2nd Street Extension, SELLUR
Madurai
625002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 2pm

Telephone

9944274992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathura Calendar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathura Calendar:

Share