இஸ்லாமிய தமிழ் செய்திகள்

  • Home
  • India
  • Madurai
  • இஸ்லாமிய தமிழ் செய்திகள்

இஸ்லாமிய தமிழ் செய்திகள் தமிழ் பேசும் நல்லுலகின் தகவல் கதம்பம
(10)

07/10/2023
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய நோன்புப பெருநாள் வாழ்த்துக்கள்.
21/04/2023

அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய நோன்புப பெருநாள் வாழ்த்துக்கள்.

பிறை அறிவிப்பு
21/04/2023

பிறை அறிவிப்பு

இதிலுள்ள இரண்டுமே பண்டிகை கால செய்திகள் தான். இரண்டிலுமே "ஆடுகள் விற்பனை"-தான். ஆனால் பண்டிகை மட்டுமே வேறு வேறு. ஒன்று "...
19/04/2023

இதிலுள்ள இரண்டுமே பண்டிகை கால செய்திகள் தான்.
இரண்டிலுமே "ஆடுகள் விற்பனை"-தான்.
ஆனால் பண்டிகை மட்டுமே வேறு வேறு. ஒன்று "தீபாவளிப் பண்டிகை, இன்னொன்று " ரம்ஜான் பண்டிகை"

தீபாவளிப் பண்டிகையின்போது ஆடுகள் விற்கப்பட்டதாக செய்தி வெளியிடும்போது அதில் ஒரே ஒருவர் கூட எந்த வித கருத்தும் சொல்லவில்லை.👇

https://m.facebook.com/story.php?story_fbid=6325620530833435&id=803317169730493&mibextid=Nif5oz

ரம்ஜான் பண்டிகைக்காக அதே ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. அது குறித்து அதே News7Tamil செய்தி வெளியிடுகிறான்.👇

https://m.facebook.com/story.php?story_fbid=6915559738506175&id=803317169730493&mibextid=Nif5oz

ஆனால் இதிலுள்ள கமெண்ட்ஸ்-களை ஒரு நிமிடம் சென்று பார்த்து வாருங்கள்.

எவ்வளவு வன்மம், காழ்ப்புணர்ச்சி.
ஜீவ காருண்யமிலிருந்து தொடங்கி, திருக்குறளின் புலால் உணவு உண்ணாமை வரை கருத்துக்கள் தூள் பறக்கிறது.

நம்மை சுற்றிலும் இவ்வளவு வன்மமும் மதக் காழ்ப்புணர்ச்சியும் மிக்க மக்கள்தான் வாழ்கின்றார்களா என்பதை நினைக்கும்போது வேதனை கலந்த கோபம்தான் வருகிறது.

ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தால் அதனால் மிகப்பெரிய அளவில் பயனடைவது முஸ்லிமல்லாத வியாபாரிகள்தான்.

தீபாவளிக்கு ஆடுகள் அமோகமாக விற்பனை ஆகும்போது வேடிக்கை பார்க்கும் சங்கிகள் முதல் ஜீவகாருண்ய ஜீவிகள் வரை, ரம்ஜானுக்கு ஆடுகள் விற்பனை என்றவுடன் முதல் வரிசையில் நின்றுகொண்டு இவ்வளவு வன்மத்தை கக்குகின்றீர்களே...

எவ்வளவு மோசமான மனிதர்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம்.

முஸ்லிம் என்றால் ஏன் இவ்வளவு வெறுப்புணர்வு, வன்மம், கசப்பு..

பதிவு - ரவனை இப்ராஹீம்

பெருநாள் பிறை சம்பந்தப்பட்ட அறிவிப்பு
19/04/2023

பெருநாள் பிறை சம்பந்தப்பட்ட அறிவிப்பு

11/04/2023

கிள்ளிக் கொடுத்ததையும் முழுசாக் கொடுக்காத மோடி அரசு!

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை வெளிப்படையாக அரங்கேற்றிக் கொண்டிருந்த பாஜக, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் கை வைத்திருக்கிறது.
ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் கிள்ளிக் கொடுக்க, அதையும் முழுசாகக் கொடுக்க மனமில்லாமல் இருக்கிறது ஒன்றிய சிறுபான்மைத்துறை அமைச்சகம்.

வழக்கமாக ஒதுக்கக் கூடிய நிதியை அப்படியே செலவழிப்பதில்லை என்பது தொடர்ச்சியாகவே இருக்கிறது

கடந்த 2017-18 பட்ஜெட்டில் ரூ.4195.48 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.4139.30 கோடி செலவு செய்யப்பட்டது.

2018-19 பட்ஜெட்டில் ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.3853.01 கோடி செலவிடப்பட்டது.

2019-20 பட்ஜெட்டில் ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.4505.10 கோடி செலவழிக்கப்பட்டது.
இப்படி ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யாமல் இருப்பது ஒருபுறம் என்றால், சில நேரங்களில் ஒதுக்கிய நிதியையே முழுசாக ஒன்றிய அரசு தருவதில்லை என்பது அடுத்த பிரச்னை

2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு ரூ.5029 கோடி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகையையும் முழுசாக தரவில்லை ஒன்றிய அரசு. ரூ.4005 கோடிதான் தந்தது. அதையாவது முழுசாகச் செலவழித்தார்களா என்றால் ரூ.3998.56 கோடிதான் செலவழிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டிலும் அப்படித்தான் ரூ.4810.77 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.4346.45 கோடி மட்டும் கொடுத்து, அதில் ரூ.4325.24 கோடி செலவழிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு (2022-23) இன்னும் மோசம். பட்ஜெட்டில் ரூ. 5020.50 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.2,612.66 கோடிதான் ஒன்றிய அரசு தந்தது. அதில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக ரூ.712.54 கோடிதான் செலவழித்திருக்கிறார்கள்.
இந்தப் புள்ளி விபரமெல்லாம் கற்பனை அல்ல. சிறுபான்மையினர் நலனுக்கு நிதி ஒதுக்கியது பற்றி சு. வெங்கடேசன் எம்பி கேள்வி கேட்டதற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்ருதி இராணி எழுத்து மூலமாக கொடுத்த பதில் இது.

06/04/2023

16 வது பிறையில் என்றுமே முழு நிலவு இருக்காது.

28/03/2023

தராவீஹ்.

எனதருமை முஸ்லிம் சமுதாயமே..புனித ரமழான் மாதத்தில் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் போய் சேர வேண்டிய உங்களின் சதகாக்களும் ஜகாத...
28/03/2023

எனதருமை முஸ்லிம் சமுதாயமே..

புனித ரமழான் மாதத்தில் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் போய் சேர வேண்டிய உங்களின் சதகாக்களும் ஜகாத்துகளும் நன்கொடைகளும் டிவி நிகழ்ச்சி விளம்பரத்திற்கான நோட்டிஸ்களாகவும் சுவர் விளம்பரங்களாகவும் மாறாமல் இருக்க உங்களது தான தர்மங்களை நேரடியாக ஏழை மக்களிடம் சென்று வழங்குங்கள்.

நீங்கள் அநாதைகளின் பொருட்களை கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.

அல்குர்ஆன். 4:2

மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் டேஷ்  அல்ல.. நான் காந்தி என சவால் விடுகிறார் ராகுல்.. உடனே கொதித்தெழுகிறது சங்கி கும்பல்.. ...
26/03/2023

மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் டேஷ் அல்ல.. நான் காந்தி என சவால் விடுகிறார் ராகுல்..

உடனே கொதித்தெழுகிறது சங்கி கும்பல்.. ஆஹா.. டேஷ் எப்போது மன்னிப்பு கேட்டார்.. அவர் பிரிட்டிஷாரிடம் "Clemency" தான் கேட்டார் "Apology" அல்ல என நீண்டதொரு விளக்கெண்ணெயும் தருகிறார்கள்.. அவர்களின் கோயபல்ஸ் பாரம்பரியப்படி...

ஏற்கனவே ஆங்கிலத்தில் நாம கொஞ்சம் வீக்.. இதென்ன புது வரலாற்று செய்தியாக இருக்கே.. நான் சாகும் வரை பல்லியும், கரப்பானும் கலந்து தரும் அசைவ உணவை சுவைத்துக் கொண்டு சிறையில்தான் இருப்பேன் என டேஷ் சொல்லி விட்டாரோ.. அந்த வீரத்தைதான் ஆங்கிலத்தில் Clemency என்கிறார்களோ என ஒரு அய்யம்.

நம்ம கூகுள் ப்ரோவிடம் கேட்டேன். "அடப் போங்க பாஸ்.. Clemency ன்னா தண்டனைக் கைதிக்கு இரக்கம், கருணை இதெல்லாம் காட்டி விடுதல செய்யுறது.. இல்லன்னா தண்டனைய குறைக்கிறது" அப்படீன்னான்... அதுக்கு தண்டனைக் கைதி எனக்கு கருணையும் இரக்கமும் காட்டுங்க எசமான்.. அப்படீன்னு கூழைக் கும்பிடு போட்டு எழுத்து மூலமா விண்ணப்பிக்கனுமே...😳

எங்க டேஷ் கொடுத்த கடிதத்தில் Apology-யெல்லாம் கேக்கல... அது Clemency-தான் அப்டீன்னு சங்கிங்க கூவுறதுலயும் அர்த்தமிருக்கு.. பூவ பூ-ன்னும் சொல்லலாம் புய்ப்பமுன்னும் சொல்லலாம். அவரு புய்ப்பமுன்னு சொல்லியிருக்காரு போல..😆

ரமழான் - 2023பிறை - 01
24/03/2023

ரமழான் - 2023
பிறை - 01

இன்று தெரிந்த பிறை இரண்டாவது நாளின் பிறை என ஷாபான் 30 ல் நோன்பு வைத்த நிறைய அறிவா(வீ)ளிகளின் பதிவுகளைப் பார்க்க முடிகிறத...
23/03/2023

இன்று தெரிந்த பிறை இரண்டாவது நாளின் பிறை என ஷாபான் 30 ல் நோன்பு வைத்த நிறைய அறிவா(வீ)ளிகளின் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.

பிறை பார்க்கச் சொல்லும் ஹதீஸ்களுக்கு கண்ட கண்டவனெல்லாம் விளக்கம் சொல்றேனு கிளம்பினால் இப்படித்தான்.

பிறை விஷயத்தில் மார்க்கம் சொல்லும் எதையும் இவர்கள் அறியாமல் வெறும் ஹதீஸின் மொழிபெயர்ப்பை மட்டும் பின்பற்றிப் போனதனால் ஏற்படும் முட்டாள் தனமான உளறல்கள் இவை.

ஒரு ஹதீஸை இங்கு பதிவு செய்கிறேன்.

அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்று கூடினோம்.

அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர்.

பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை" என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது பிறை" என்று கூறினர்" என்று சொன்னோம்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்" என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

நூல் - முஸ்லிம் 1984.

பிறை எந்த நாளில் தென்படுகிறதோ அந்த நாளுக்குரியது தான் என்று ரசூலுல்லாஹ் கூறியதை இந்த அறிவாளிகளுக்கு யார் எடுத்துச் சொல்வதோ ??!!

நல்ல வேலை. இன்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் இல்லை. இருந்திருந்தால் இதைச் சொன்னதற்கு இன்று அரசு காழியை வசைபாடுவது போல அவரையும் இவர்கள் வசை பாடியிருப்பார்கள்.

நமக்கு இன்று தான் முதல் பிறை. நபி ஸல் அவர்கள் கூறிய படி இன்று தெரிந்தது தான் முதல் பிறை. அது பெரியதோ சிறியதோ எப்படியாயினும் சரியே..

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

குளச்சலால் குழப்பம் தேவையில்லை.ரமழான் மாத முதல் பிறை தமிழகத்தில் பார்க்கப்பட்டதாக சில அமைப்புகள் மூலம் அறிவிப்பு செய்யப்...
22/03/2023

குளச்சலால் குழப்பம் தேவையில்லை.

ரமழான் மாத முதல் பிறை தமிழகத்தில் பார்க்கப்பட்டதாக சில அமைப்புகள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமை அன்று தான் நோன்பு நோற்க உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் இந்த பிறைகளால் குழப்பங்கள் ஏற்படுவது பொதுமக்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் இந்த பிறை விஷயத்தில் இவ்வளவு குழப்பமோ சிரமமோ தேவையில்லை.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று கட்டளையிட்ட நபியவர்களே

الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون

"மக்கள் எதனை நோன்பு என முடிவு செய்கிறார்களோ அதுதான் நோன்பு. எதனை பெருநாள் என்று முடிவு செய்கிறார்களோ அதுதான் பெருநாள் என்றும் கூறியுள்ளார்கள்.

எனவே கேரள கடற்கரையோரம் உள்ள ஒரு ஊரில் பிறை தென்பட்டது என்ற ஒரு வீடியோவை வைத்து நாம் புலம்ப தேவையில்லை.

ஆனால் பொது மக்களுக்கு இதில் பல்வேறு கேள்விகள் ஏற்படலாம்.

1. ஏன் காழி அறிவிக்க வேண்டும்??

பிறை என்பது இஸ்லாமிய வணக்க வழிபாடுகளோடு‌ இணைந்த மிக முக்கிய விஷயம். எனவே மார்க்கம் அதனை முடிவு செய்வதை அவரவர்கள் கடிகாரத்தைப் பார்த்து தொழுவது போல தனித்தனி நபர்களிடம் தரவில்லை. மாறாக சமுதாயத்தின் தலைவர்களிடம் அதனை வழங்கியுள்ளது.

நபி ஸல் அவர்கள் காலத்தில் நபியவர்கள் தான் பிறை அறிவிப்பை செய்வார்கள்.
அதன் பிறகு கலீஃபாக்கள், பிறகு கலீஃபாக்கள், இஸ்லாமிய அரசர்களின் அவையில் உள்ள அரசு நீதிபதிகள் என இதற்கென பொறுப்பான நபர்கள் தான் அதனை முடிவு செய்து அறிவிப்பார்கள்.

"இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் :

மக்கள் பிறையைத்தேடினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து நான் பிறையைப் பார்த்தேன் என்று சாட்சிக் கூறினேன் அப்போது நபி அவர்கள் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
நூல்: சுனன் அபீதாவூத் 2342"

இன்று இந்த கேள்வியைக் கேட்கும் இயக்கத்தினர் கூட பிறை அறிவிப்பை "தலைமையக அறிவிப்பு" என்று தான் அறிவிக்கின்றனர்.

ஆனால் இன்று இஸ்லாமிய அரசு இங்கு இல்லை.

எனவே அரசு காஜி என்பவர் தமிழக முஸ்லிம்களின் மார்க்க விஷயங்களுக்காக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி என்ற அடிப்படையில் சமுதாயத்தின் பொறுப்பாளர் என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளார். எனவே நாம் அவரின் அறிவிப்பை ஏற்கிறோம்.

2. தமிழகத்தின் பகுதி தானே குளச்சல்.. அதன் பிறையை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை??

இவ்வருடம் மட்டுமல்ல கடந்த காலங்களிலும் கூட குளச்சலில் மட்டுமோ அல்லது நாகர்கோவில் பகுதியில் மட்டுமோ பார்க்கப்பட்ட பிறைகளை தமிழக அரசின் தலைமை காழி ஏற்றுக் கொள்ளவில்லை

உதாரணம் ஒரு பத்திரிகை செய்தி
https://www.hindutamil.in/amp/news/tamilnadu/130735-.html

அதற்கான காரணமும் இருக்கிறது.

உண்மையிலுமே குளச்சல் தமிழகததின் ஒரு பகுதி தான் என்றாலும் பூகோள அமைப்பில் குளச்சல் தமிழகத்தின் பூகோள அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்டது.

முதலாவது

தமிழகத்தின் அனைத்து கடலோர ஊர்களும் கிழக்கு நோக்கிய கடற்கரைகளைக் கொண்டிருக்கும்போது நாகர்கோவிலுக்கு மேற்கே உள்ள ஊர்கள் அனைத்தும், அவை தமிழக எல்லைக்குள் வந்தாலும் மேற்கு நோக்கிய கடற்கரையை கொண்டவை. அதாவது இந்திய பெருங்கடலும் அரபிக் கடலும் இணையக்கூடிய பகுதிகளை தாண்டி இருக்கக்கூடிய ஊர்கள் அரபிக் கடலின் கடற்கரையைக் கொண்டவை. அதில் குளச்சலும் ஒன்று.

இரண்டாவது

உண்மையில் குளச்சல் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே ஒரு காலத்தில் கேரளத்தில் ஒரு பகுதியாகவே இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகும் கூட 1956 வரை கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. பிறகு தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. காரணம் அதன் அமைப்பு.

மூன்றாவது

புவியியல் அடிப்படையில் குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் முதலிய ஊர்களெல்லாம் கேரளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன.

புவி வரைபடத்தில் (Satellite Map) பார்த்தால் கூட கேரளாவிற்கென்ற புவியியல் அமைப்பு (மலைத் தொடர்ச்சி, கடற்மட்ட உயரம்) நாகர்கோவில் பகுதி வரை தொடர்வதை பார்க்க முடியும்.

கேரளாவின் கடற்கரைகளைப் போன்றே கடற்மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரமான (MSL - Mean Sea Level) ஊர்கள் இவை.

சாதாரணமாக நீண்ட அரபிக்கடற்பகுதியும் கடற்மட்டத்திலிருந்து உயர்ந்த நிலமும் (சராசரி MSL உயரம் 1150 மீட்டர்) கொண்ட கேரள மாநிலத்தில் நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு நாள் முன்பு பிறை தெரிவது இயல்பே..

எனவே, அதிகமான காலங்கள் கேரளாவிற்கு பிறை தென்படும் போது அதன் தொடர்ச்சியாக குளச்சல் நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் தென்படுவது இயற்கையே. ரமழான் பிறை மட்டுமல்ல மற்ற மாதங்களின் பிறைகளும் இங்கு ஒரு நாள் முன்பே தென்பட்டுள்ளன.

எனவே மாநிலம் எல்லையில் இருந்தாலும் பூகோள அமைப்பில் அது மற்ற தமிழகத்தின் பகுதிகளுக்கு மாற்றமாக இருக்கும் காரணத்தால் வெறுமனே குளச்சலில் அல்லது அதன் சுற்று வட்டாரத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு வேறு எங்குமே பார்க்கப்படாத பிறையை முழு தமிழகத்திற்கும் ஏற்றுக் கொள்வது சாத்தியமாகாது.

அதாவது தமிழகத்தின் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள 950 கிலோமீட்டர் நீளத்துக்கும் பல்வேறு இஸ்லாமிய ஊர்கள் வழிநெடுக இருந்தும், எண்ணிலடங்கா மக்கள் பிறையைத் தேடியும், தகவல்களை உடனுக்குடன் பரப்ப வழிகள் இருந்தும் கூட மாநிலத்தில் மட்டுமல்ல நாட்டிலேயே எங்குமே பிறை தெரியாத போது புவியியல் அமைப்பில் வேறுபட்டிருக்கும் ஒரு ஊரின் பிறையை வைத்து ஒன்னரை லட்சம் ச.கிமீ கொண்ட முழு தமிழகத்திற்கும்‌ பிறையை முடிவு செய்வது சரியாகுமா ?

சரி, அதனை தமிழகத்தினுடைய பகுதியாகவே வைத்துக் கொண்டாலும் இன்று வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது குளச்சலில் பிறை பார்த்தவர்கள் கூறும் கூற்றை வைத்து பார்க்கையில் அதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

1. குளச்சலில் உண்மையில் பிறை தெரியும் போது அதற்கு அருகாமையில் சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மண்டைக்காடு, லெமூர், இனயம், தேங்காய்பட்டினம் போன்ற இஸ்லாமிய ஊர்களில் கடற்கரை ஓரப்பகுதிகளில் ஏன் அந்த பிறையை வேறு யாரும் பார்க்கவில்லை?

2. பிறை பார்த்ததாக சொல்லும் நபர் 5 நொடிகள் மட்டுமே பிறை தெரிந்ததாக சொல்லுகிறார். மேகமூட்டமே இல்லாத நிலையில் அது எப்படி ஐந்து வினாடிகள் மட்டும் பிறை தெரியும் ?

3. குளச்சல் பகுதியில் கூட அப்பள்ளியின் அந்நிர்வாகிகளை தவிர வேறு யாரும் ஏன் அந்த பிறையை பார்க்க முடியவில்லை ?

4. கடற்கரைக்குச் சென்றவர்கள் தாங்கள் கடற்கரைக்கு சென்ற நேரத்தை குறிப்பிடுகிற போது நேரங்கள் முன்னுக்கு பின் முரணாவது ஏன்?

5. அவர்களிடம் நம்பிக்கைக்காக சத்தியத்தை கேட்கும் போது அதற்கு அவர்கள் தயாராக இல்லை.

மேலும் தங்கச்சிமடம் பகுதியில் பார்த்ததாக கூறப்பட்ட போது உண்மையில் அங்குள்ள வேறு யாரும் பிறையை பார்க்கவில்லை என்பது விசாரிக்கையில் தெரிய வருகிறது.

ஆக, இத்தகைய பல்வேறு முரண்பாடுகள், சந்தேகங்களோடு பிறையை உறுதிப்படுத்த முடியாது. எனவே தான் ஷஃபான் 30 என பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நபி வழியான "பிறை பார்த்து நோன்பு வையுங்கள்!! என்பதையே நாமும் ஏற்கிறோம். அதனையே பின்பற்றுகிறோம். ஆனால் இச்சூழலில் அந்த ஹதீஸின் தொடர்ச்சியான

"பிறை மறைக்கப்பட்டால் முப்பது நாள்களாக) அதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.’ (புகாரி 1906)
என்ற அடிப்படையை பின்பற்றுகிறோம்.

எனவே, தமிழகத்தில் முதல் பிறை வியாழன் பின்னேரம் தான் துவங்குகிறது. இதில் எந்த சந்தேகமோ, சங்கடமோ தேவையில்லை.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

ரமழான் மாத முதல் பிறை அறிவிப்பு
22/03/2023

ரமழான் மாத முதல் பிறை அறிவிப்பு

குஜராத் 2002 படுகொலை.ஊரின் மதிப்புமிக்க நபர். மெஹ்பூப் மன்சூரிதனது 18 குடும்ப உறுப்பினர்களையும் படுகொலையில் இழந்தார். கு...
02/03/2023

குஜராத் 2002 படுகொலை.

ஊரின் மதிப்புமிக்க நபர். மெஹ்பூப் மன்சூரி

தனது 18 குடும்ப உறுப்பினர்களையும் படுகொலையில் இழந்தார். குடும்பத்தின் அனைத்து பெண்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

அவரது சகோதரர், அவரது 3 மகன்கள், 1 பெண் குழந்தை, அவரது மனைவியின் தாய், உட்பட அனைவரும் இறந்தனர்.

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட அவருடைய 3 மகன்களின் வயதுகள் 10, 8, & 6. மட்டுமே. அவருடைய பெண்ணுக்கு வயது 12.

மறக்க முடியுமா..!!!

26/02/2023

BJP ஆளும் கர்நாடக மாநிலத்தில் திட்டமிட்டு இஸ்லாமிய வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

26/02/2023

26/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே!

தாங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த நமது இஸ்லாமிய தமிழ் செய்திகள் பக்கம் இறைவன் அருளால் இன்று மீண்டது.

இன்ஷா அல்லாஹ் நமது பதிவுகள் இனி தொடரும்.

தங்களது துஆக்களை வேண்டுகிறேன்.

நன்றி. வஸ்ஸலாம்.

இன்ஷா அல்லாஹ் நாளை..
21/10/2022

இன்ஷா அல்லாஹ் நாளை..

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை அறிக்கை.
20/06/2022

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை அறிக்கை.

“வெறுப்பரசியலை வேரறுக்க சிறப்பு கவன ஈர்ப்பு கூட்டம். ”

பிறை அறிவிப்பு.
01/05/2022

பிறை அறிவிப்பு.

தமிழகத்தில் பிறை பார்க்கப்படாததால் இன்ஷா அல்லாஹ் வருகிற 03/05/2022 அன்று பெருநாள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
01/05/2022

தமிழகத்தில் பிறை பார்க்கப்படாததால் இன்ஷா அல்லாஹ் வருகிற 03/05/2022 அன்று பெருநாள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

01/05/2022

தமிழகத்தில் எங்கேனும் பிறை பார்க்கப்பட்டதா???

  திரைப்பட விவகாரத்தில் ஜமாஅத்துல் உலமா சபை கண்டன அறிக்கை
16/04/2022

திரைப்பட விவகாரத்தில் ஜமாஅத்துல் உலமா சபை கண்டன அறிக்கை

இனிய ரமழான் துவங்கியது.
02/04/2022

இனிய ரமழான் துவங்கியது.

ரமழான் மாத முதல் பிறை தமிழகத்தில் பார்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
02/04/2022

ரமழான் மாத முதல் பிறை தமிழகத்தில் பார்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இன்று தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளாகும்.
02/04/2022

இன்று தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளாகும்.

பிறை பற்றிய அறிவிப்பு

பிறை பற்றிய அறிவிப்பு
29/03/2022

பிறை பற்றிய அறிவிப்பு

ஹிஜாப் - தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கண்டன அறிக்கை
16/03/2022

ஹிஜாப் - தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கண்டன அறிக்கை

முஸ்லிம்களின் உணவு, உடை, கலாச்சாரத்தின் மீது புறவாசல் வழியாக போர் தொடுப்பதை சங்கிகள் கையிலெடுத்துள்ளனர்.  அதன்  ஒரு பகுத...
05/02/2022

முஸ்லிம்களின் உணவு, உடை, கலாச்சாரத்தின் மீது புறவாசல் வழியாக போர் தொடுப்பதை சங்கிகள் கையிலெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதிதான் மாணவிகள் முக்காடு அணிந்து வகுப்பறைக்குள் வரக்கூடாது என்ற கர்நாடக மாநில உடுப்பி கல்லூரியின் நிர்வாக அறிவிப்பு.

இது தான் பாஜக. இது தான் இவர்களின் கொள்கை.நாட்டை பிளவுபடுத்தி துண்டாடத் துடிக்கும் மிருகம் இவர்கள். இவர்கள் தான் நாட்டின்...
05/02/2022

இது தான் பாஜக. இது தான் இவர்களின் கொள்கை.

நாட்டை பிளவுபடுத்தி துண்டாடத் துடிக்கும் மிருகம் இவர்கள். இவர்கள் தான் நாட்டின் சாபக்கேடு..

05/02/2022

ஓ இஸ்லாமியச் சமுதாமே!
விழித்துக்கொள்!
இன்று இந்தப் பிரச்சனையை நாம் கண்டுக் கொள்ளாமல் போனால் நாளை இதே போல் நம் மாநிலத்திலும் நடக்கும் அதில் நம் வீட்டுப் பிள்ளைகளும் பாதிக்கப்படும்.....
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அரசு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when இஸ்லாமிய தமிழ் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to இஸ்லாமிய தமிழ் செய்திகள்:

Videos

Share