21/12/2024
⭕வாடகைத்தாய் கதைவிட்ட பாஜக முன்னாள் நகர தலைவர் மீது மூன்று பிரிவின் கீழ் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
முன்னாள் பாஜக நகரத் தலைவர் பாலசுப்பிரமணியனை கைது செய்யவும், பச்சிளம் குழந்தையை மீட்கவும் ரெண்டு தனிப்படைகள் அமைப்பு என போலீசார் தகவல்
கோவில்பட்டி பாஜக முன்னாள் நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் என்பவர், கணவனை விட்டு பிரிந்த, 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
தனக்கு குழந்தை இல்லை என்றும், நமக்கு குழந்தை பிறந்ததும் என்னுடைய மனைவியிடம் சொல்லி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறேன் என்று அந்த பெண்ணிற்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்ப்பமான அந்த பெண்ணிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த சில நாட்களில் ஜாதகம் சரியில்லை, குழந்தையை என் மனைவிடம் ஒப்படைத்து வீடு, சில மாதங்கள் கழித்து என் மனைவியிடம் பேசி ஒப்புதல் வாங்கி உன்னை முறையாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.
குழந்தை வாங்கி சென்ற பின்னர், அந்தக் குழந்தையை கூட கண்ணில் காமிக்காமல் இருந்துள்ளார். மேலும் குழந்தையை பார்க்கச் சென்ற அந்தப் பெண்ணை வரக்கூடாது என்று கூறியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதேபோன்று அந்த பாஜக நிர்வாகியின் சகோதரர் எனக்கு ஒரு ஆண் குழந்தை பெற்றுக் கொடு என்று அந்தப் பெண்ணிடம் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்தப் பெண் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் தனது பச்சிளம் குழந்தையை மீட்டு தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் மகளிர் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என்பதால் மீண்டும் அந்த பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
அந்த மனு மீது எவ்வித விசாரணையோ நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் இப்ப பிரச்சனை குறித்து பொதுவெளியில் வெளியே தெரிய வந்ததும், மட்டுமின்றி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வினர் -பகத்சிங் ரத்ததான கழகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்க, சென்னை தினமலர் நாளிதழில் இது குறித்து செய்தி வர கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் நேற்றிரவு மீண்டும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
ஏற்கனவே இரண்டு முறை புகார் அளித்த இந்த நிலையில் மீண்டும் புகார் பெறப்பட்டு 3 பிரிவின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
இந்த நிலையில் பாலசுப்பிரமணியனை கைது செய்யவும், குழந்தையை மீட்கவும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பெண்ணை ஏமாற்றி குழந்தையை பறித்தது மட்டுமின்றி, *வாடகைத்தாய்* என்று ஊர் முழுக்க வாய் கூசமால் அந்த பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பியது மட்டுமின்றி, காவல்துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் ஒத்துழைப்புடன் வலம் வந்தவர் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காலதாமதமான நடவடிக்கை, இனியாவது அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு காவல்துறை அந்தத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும்.
கோவில்பட்டியில் அடகு கடை வைத்திருக்கும் ஒருவரை வைத்து துப்பாக்கி வைத்து சுட்டு கொன்று விடுவோம் என்று அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர்
பாலசுப்பிரமணியன் மட்டுமின்றி அவரது தாயார், அவரது சகோதரர் ஆகியோரும் அந்த பெண்ணிற்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்
அந்தப் பச்சிளம் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
தனக்கு குழந்தை இல்லை, எனக்கு வாரிசு வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பெண்ணை ஏமாற்றி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி அந்தப் பெண்ணிற்கு பல்வேறு வகையிலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பாலசுப்பிரமணியுடன் சில காவல்துறை அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர். பல லட்சம் பணங்களும் கைமாறப்பட்டதாக வெளிப்படையாகவே காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண்மணி புகார் அளித்துள்ளார்