Tamilcheck

Tamilcheck daily new entertainment video

லைக் போட்டு போங்க
19/12/2024

லைக் போட்டு போங்க

13/12/2024
[சில்லரை விலைகள்] நாள் : 14 - 05 - 1950(விற்பனை வரி தனியாக செலுத்தவேண்டும்)சென்னை, மே 8-அன்றாட வாழ்க்கைக்கு அந்தியாவசியம...
12/12/2024

[சில்லரை விலைகள்] நாள் : 14 - 05 - 1950

(விற்பனை வரி தனியாக செலுத்தவேண்டும்)

சென்னை, மே 8-

அன்றாட வாழ்க்கைக்கு அந்தியாவசியமான பண்டங்களின்

விலைவாசி போக்கை குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வதற்கு உதவியாகச் சென்னை நகரின் நிவரத்தைக் கீழே பிரகரித்திருக்கிறோம்

இவையெல்லாம் அவ்வப்போது மாறுதலுக்குட்படக்கூடியவை.

எனவே இதில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போலவே சில பண்டங்கள் கிடைக்கலாம் அல்லது சற்று ஏறத்தாழவும் சில இடஙகளில் விற்கப்படலாம்.

இருப்பிலும் போதுவாக விலைகளின் ஓட்டத்தை உணர்த்துகொள்ள இது பயன்படும்.

இப்புதிய பகுதி இனி பிரதி இதழிலும் இடம் பெறும்.

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.2 ச...
12/12/2024

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…

1 இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.

2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

3 சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.

4 கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு.

5 உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

6 இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.

7 என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.

8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.

9 பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.

10 கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.

11 ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.

12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

13 போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

14 எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.

15 நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!

16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.

17 வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு.

18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

19 உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

20 புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

21 விவாதங்கள், மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.

22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டுவிடுவீர்கள்.

23 நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான். ஆனால், உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.

24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.

25 கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

மழை இறைவனின் வரம் என்பார்கள் ஆனால் இவர்களுக்கு அது ஒரு......... ஒரு தாயின் குடும்ப போராட்டம்
12/12/2024

மழை இறைவனின் வரம் என்பார்கள் ஆனால் இவர்களுக்கு அது ஒரு......... ஒரு தாயின் குடும்ப போராட்டம்

பெரு சிறு நகர ஹோட்டல்களில் எப்படி எல்லாம் ஏமாற்று வேலை நடக்குதுன்னு பாருங்க ....  #இட்லி: பொதுவாக இட்லி மெத்துனு இருக்கண...
28/11/2024

பெரு சிறு நகர ஹோட்டல்களில் எப்படி எல்லாம் ஏமாற்று வேலை நடக்குதுன்னு பாருங்க ....

#இட்லி: பொதுவாக இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித் தனியாதான் அரைக்கணும்.. அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்கே? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா… எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க..

#சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே… அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது..

#புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதில் கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா..

#சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. ‘ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி..

ஒரு முக்கியமான எச்சரிக்கை.…
தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்..

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக்கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க. சாதாரண மலிவான ஹோட்டல்களிலும் கையேந்தி பவன்களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்....

உணவை வியாபாரமாக செய்யும் தவறான முதலாளிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...

குளத்தோடு கோபித்துக் கொண்டு குளிக்க மாட்டேன் என்றாளாம் ஒருத்தி... குளம் ஒருபோதும் நாறாது...  ரஹ்மான் சார் நீங்க பாட்டு ப...
25/11/2024

குளத்தோடு கோபித்துக் கொண்டு குளிக்க மாட்டேன் என்றாளாம் ஒருத்தி...
குளம் ஒருபோதும் நாறாது...

ரஹ்மான் சார் நீங்க பாட்டு பாடுங்க

"துன்பம் தொலைந்தது இப்போ"

இசை தான் ரஹ்மானின் முதல் மனைவி

தேசத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த அழகிய தமிழ் மகன்.

அவருடைய பெயர் ரகுமான் என்ற ஒரே காரணத்திற்காக இன்று ஒரு தற்குறி கூட்டம் அவரை இழிவு படுத்தி வருகின்றது

😮♥️🙏🧁எனக்கு இன்று பிறந்தநாள் அண்ணா எனக்கு எல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா அண்ணா..?👇👇
22/11/2024

😮♥️🙏🧁எனக்கு இன்று பிறந்தநாள் அண்ணா எனக்கு எல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா அண்ணா..?👇👇

 # சார் சார் ராயன் படத்துக்கு பாட்டு மட்டும் தான் வாங்குனேன். பெரிய பாய் divorceக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சா...
20/11/2024

# சார் சார் ராயன் படத்துக்கு பாட்டு மட்டும் தான் வாங்குனேன். பெரிய பாய் divorceக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்.... 😂😂😂

கண் பார்வையற்ற பெண்ணான எனது பிறந்த நாள் இன்று... எங்களுக்கெல்லாம் வாழ்த்து கிடைக்குமா அண்ணா? இதுவே பெரிய நடிகை நடிகர்களு...
19/11/2024

கண் பார்வையற்ற பெண்ணான எனது பிறந்த நாள் இன்று... எங்களுக்கெல்லாம் வாழ்த்து கிடைக்குமா அண்ணா? இதுவே பெரிய நடிகை நடிகர்களுக்கு போஸ்ட் இருந்தால் வாழ்த்து நிறைய கிடைச்சிருக்கும்.

நான் தயாரித்த படத்தில் உங்களுக்கு காதல் அரும்புகிறது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதற்குப் பிறகு உங்கள் தற்போதைய கணவர் அ...
17/11/2024

நான் தயாரித்த படத்தில் உங்களுக்கு காதல் அரும்புகிறது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதற்குப் பிறகு உங்கள் தற்போதைய கணவர் அப்போதைய என் இயக்குனர், உங்கள் புது காதலர் படத்தை முடிப்பதற்கு எவ்வளவு தாமதம் செய்தார் என்பது உங்களுக்குத் தெரியாததா? அதனால் எனக்கு ஏறத்தாழ பத்து கோடிக்கு மேல் பட்ஜெட் எகிறியது.

ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஒரு பைசா கூட நான் செலவு செய்ய மாட்டேன் என்று நான் உறுதியாக நின்றவுடன், நீங்கள் உங்கள் பணத்தை செலவு செய்து அந்தப் படத்தை முடிப்பதற்கு முயற்சி செய்தீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?

அந்தப் படத்தால் விக்னேஷ்சிவனுக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. தொழில் ரீதியாகவும், இல்வாழ்க்கை ரீதியாகவும். படமும் வெற்றி பெற்றது. எனக்கு அதில் பெரிய லாபம் ஏதுமில்லை.

போகட்டும். உங்கள் கல்யாணத்துக்கு எத்தனையோ பேரை அழைத்தீர்கள். என்னை அழைத்தீர்களா? ஏன் அழைக்கவில்லை. சரி விடுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு NOC வேண்டும். அதை உங்கள் இருவரில் யாராவது ஒருவர் முறையாக என்னிடம் பேசினீர்களா?

என் நண்பரிடம் எனக்கே தெரியாமல் 'ஒரு NOC மெயில் அனுப்பிவிடுங்கள்' என்று விக்னேஷ்சிவன் கேட்டிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

அவர் எப்படி எனக்குத் தெரியாமல் அனுப்புவார். அவர் என்னிடம் வந்து சொல்லிவிட்டார். இனி அனுமதி கொடுக்கவே கூடாது என்ற முடிவுக்கு நானும் வந்துவிட்டேன்.

இப்போது அனுமதியின்றி நீங்கள் பயன்படுத்திவிட்டு, அதற்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பிய என்னை குற்றவாளி ஆக்கி ஏதேதோ ஜெர்மானிய வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி guilt ஆக்கப் பார்க்கிறீர்கள்.

ஒரு சின்ன வீடியோ துணுக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுப்பதில் எனக்கு என்ன ஆனந்தம் வந்துவிடப் போகிறது.?

பிரச்சனை NOC இல் இல்லை. அது முறையாக கேட்கப்படவில்லை என்பதில் தான்.

எவ்வளவோ பார்த்துவிட்டேன். இந்த ஜாலக்கான லெட்டர் என்னை என்ன செய்துவிடும் ? பார்க்கலாம். நல்லா இருங்கள்.

spread love! ராகவேந்திராய நமஹ !

- நடிகர் தனுஷ்

 #இவங்கல்லாம்_இன்னமும்_இருக்காங்களா? 1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்க...
16/11/2024

#இவங்கல்லாம்_இன்னமும்_இருக்காங்களா?

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க

2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க

4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்

5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க

6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க

7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்

8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.

9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்

10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!

குமரி முதல் கிழவி வரை ஹை மேக்கப்,தாலி அறுத்தல், முதலிரவு தடுத்தல்,சோற்றில் விஷம் வைத்தல்,வேலைக்காரி to வீட்டுக்காரி,சின்...
16/11/2024

குமரி முதல் கிழவி வரை ஹை மேக்கப்,
தாலி அறுத்தல், முதலிரவு தடுத்தல்,
சோற்றில் விஷம் வைத்தல்,
வேலைக்காரி to வீட்டுக்காரி,
சின்னையா to புருசன் சார்,
1 பொண்ணு, 1 காதலன் Vs 1 புருசன்,
1 புருசன், 2 மனைவி Vs 1 கள்ளக்காதலி,
சடங்கு சம்பிரதாயம் பண்ற உருட்டல்,
நடனம் / சமையல் / கோலப் போட்டி,
மொன்னை பரிகார பூஜைகள்,
இது எதுவும் வேகாட்டி...
கையாலாகாத 4 சீரியலின் மெகா சங்கமம்,
கதையில்லாத கதை,
மட்டமான காட்சியமைப்பு,
முட்டா மூடத்தன பிற்போக்கு வசனங்கள் என
பரிணமித்து கடைசியில்...

இப்போது Soft பார்n பக்கம் கரை ஒதுங்கிய தமிழ் சீரியல்கள்... ரைட் ரா டேய்...😹😹

90's கிட்ஸ் நாங்க பாத்த
சித்தி, மெட்டி ஒலி, கோலங்கள், மர்மதேசம், ராஜராஜேஸ்வரி, திருமதி.செல்வம் மாதிரி யதார்த்தமான நல்ல கதையம்சம் கொண்ட தொடர்கள் எல்லாம் இனிமேல் வர வாய்ப்பே இல்ல போல... 😢

Address

Koripalaiyam
Madurai
625002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilcheck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category