Hello Madurai Tv

Hello Madurai Tv News | Videos | Photography | Story | Interview | Memes | Reels | Culture | Sport | Pets | Tourism | Promotion - 9566531237

01/02/2025

கேன்சர் நோய் அறிகுறிகள் | CANCER SYMPTOMS | Madurai Homeyopathy | Madurai Dr.S.B.Nisha

எந்த பக்கம் எடுத்தாலும் நா அப்டித்தான்யா 😊 நம்ம முக அமைப்பு அப்டி தனது தனித்த இனிக்கும் தமிழ் பேச்சால் உலகத் தமிழர்களைக்...
26/01/2025

எந்த பக்கம் எடுத்தாலும் நா அப்டித்தான்யா 😊 நம்ம முக அமைப்பு அப்டி

தனது தனித்த இனிக்கும் தமிழ் பேச்சால் உலகத் தமிழர்களைக் கட்டிப்போட்ட ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களை 2018 ஆம் ஆண்டு ஹலோ மதுரை மாத இதழின் நேர்காணலுக்காக மதுரையில் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். உயரம் என்ற உச்சத்தை எவரிடமும் காண்பிக்கத் தெரியாத எளிமையானவர் என்பதை முதன் முறையாகவே அவருடன் கலந்துரையாடலில் கண்டு கொண்டேன்.

அவரது ஏழ்மையான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஏற்றமிகு அடைந்த பிறகும், எளிமையாக எப்படி இன்றும் இவரால் இருக்க முடிகிறது ? பழக முடிகிறது ? என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன் என்பதில் கர்வமுண்டு.

இலக்கியத்தை மட்டும் மையமாகக் கொண்ட பட்டிமன்றம் நடத்தப்பட்ட காலகட்டம் முதல் பின்னாளில் சனரஞ்சகமாக மாறியது குறித்து அவர் கூற கூற இன்று ஒரு நாள் போதுமா ? என்றபடி அன்றைய நாள் இருந்தது.

தனது வாழ்வின் அத்தனை அனுபவங்களையும், மறைக்காமல் மொட்டு மலர்வதைப்போல் கூறிக்கொள்ள, மிக அருமையாக மாலையாக அவரது வாழ்வை கட்டுரையை எழுதி வெளியானது.

நேர்காணலுக்கு இடையில் ஐயாவின் மனைவி அவர்கள் தேனீர் அளித்து புன்னகையுடன் வரவேற்றார்கள். இவதான்யா எனக்கு எல்லாமே என்று அவர் கூறி அறிமும் செய்துவைத்தார். சமீபத்தில் அவர் இறப்புச் செய்தி அறிந்து கலங்கினேன். 🥲

நேர்காணல் முடிந்த பிறகு, புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியதும் அதனால் என்ன எடுக்கலாம் என்றதும், வீட்டுக்குள் சில கிளிக் எடுத்தாலும் வெளிச்சம் பற்றாக்குறை காரணமாக ஐயா வெளியே வர முடியுமா ?எடுக்கலாமா ? என்றேன். அதுக்கென்னையா வந்துட்டாப் போச்சு என்றார்.

வீட்டு முற்றத்தில் சில படங்களை எடுத்தேன். ஐயா... அப்டி, இப்டி என்று பல போஸ் கொடுக்கச் சொல்லி எடுக்க, பின் நான் கேமராவை பார்க்க, அதை அவர் கவனிக்க , தம்பி "எந்த பக்கம் எடுத்தாலும் நா அப்டித்தான் யா " நம்ம முக அமைப்பு அப்டியா" என்று நகைச் சுவையாக புன்னகைத்தார் மல்லிப் பூ வாய் 😍

அதில் சில நிழற்படங்கள் ஞாபகமாய்.

அழகு என்பது நிறத்திலோ, உருவத்திலோ இல்லை. உள்ளத்தில் உள்ளது என்பதை ஐயாவிடம் பழகியவர்கள் அறிவார்கள்.

தன் பேச்சால் தமிழோடு மதுரைக்கும் பெருமை சேர்த்த ஐயா சாலமன் பாப்பையா அவர்களை வணங்குகின்றேன். 🙏

#சாலமன்பாப்பையா

25/01/2025

வாழைப்பழம் இனிப்பு அப்பம் செய்யும் முறை | Banana Appam Recipe | MADURAI SVS

மார்கழி மாயவன், ஆயர்குலத் தலைவன், சீதையின் காதலன், நீல நிறக் காவலன் - எங்கள் மா மதுரை போற்றும் அந்தர வானத்து எம்பெருமான்...
21/01/2025

மார்கழி மாயவன், ஆயர்குலத் தலைவன், சீதையின் காதலன், நீல நிறக் காவலன் - எங்கள் மா மதுரை போற்றும் அந்தர வானத்து எம்பெருமான் "கூடலழகன்"

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்

#கூடலழகர்பெருமாள்

Happy Pongal
13/01/2025

Happy Pongal

நீரற்ற தெப்பக்குளத்தில் நீயும் நானும் சேர்ந்து நேரம் கழித்த நினைவுகள் நெஞ்சில் நீலப் பஞ்சாய் மிதக்கிறது, அதை நீ அறிவாயோ ...
11/01/2025

நீரற்ற தெப்பக்குளத்தில் நீயும் நானும் சேர்ந்து நேரம் கழித்த நினைவுகள் நெஞ்சில் நீலப் பஞ்சாய் மிதக்கிறது, அதை நீ அறிவாயோ ? மீண்டும் வருவாயோ ?

மதுரை தெப்பக்குளம் | Madurai Teppakkaulam



HelloMadurai Ramesh Hello Madurai

10/01/2025

மதுரையில் மருத்துவர்கள் நடத்தும் முதியோர் இல்லம் 🧝தனித்தனி அறையுடன் கூடுதல் வசதிகள் 🏠🛌 மூன்று வேளையும் சிறப்பு உணவு 🥘 சிறந்த பராமரிப்பு வழங்கும் லெட்சுமி கட்டண முதியோர் இல்லம் 😍

❤️

09/01/2025

உறுதுணை கட்டண முதியோர் இல்லம் 🏠 குடும்பத்துடன் வீட்டில் இருக்கும் மனநிலையை ஏற்படுத்தும் இல்லம் 🧝 எந்த நிலையில் இருக்கும் முதியவர்களும் சேர்த்துக் கொள்ளப்படும் 🛌 சிறப்பு உணவு 🥘 நர்சிங் கேர் வசதி 🧑‍⚕️ Madurai Uruthunai Old Age Home

❤️

மலைக்கு முன்னும், மழைக்குப் பின்னும், மின்னும் அழகெங்கிலும் சொல்லும் இவை யாவும் இயற்கையின் வண்ணம்~~~மழை-யில் நனைந்த மதுர...
08/01/2025

மலைக்கு முன்னும், மழைக்குப் பின்னும், மின்னும் அழகெங்கிலும் சொல்லும் இவை யாவும் இயற்கையின் வண்ணம்~~~

மழை-யில் நனைந்த மதுரை திருப்பரங்குன்றம் மலை !!

07/01/2025

அதிகம் பரவி வரும் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் காய்ச்சல் 😣 வருவதற்கான முக்கிய காரணங்கள் 🧐 எப்படி கண்டுபிடிப்பது 🤔 ஹோமியோபதியில் தடுக்கும் வழிமுைறகள் 🌿 மதுரை ஹோமியோபதி மருத்துவர் Dr.S.B.Nisha

மதுரையின் மனமெங்கும் பரவிக்கிடக்கும் மணலெங்கிலும் மல்லிகை வாசம் நிறைந்திருக்கும் மார்கழி மழைக்காலத்தில், மாயக் கண்ணன் கு...
06/01/2025

மதுரையின் மனமெங்கும் பரவிக்கிடக்கும் மணலெங்கிலும் மல்லிகை வாசம் நிறைந்திருக்கும் மார்கழி மழைக்காலத்தில், மாயக் கண்ணன் குழல் ஊதும் குரலெங்கிலும் மலைக் காற்று வருடும் பேரின்பம்~~~

05/01/2025

சரித்திர நாயகன் பி.ஆர். பெரிய செவலை வரலாறு 😍 கடைசி வரை யாரும் நெருங்க முடியாத காளை 🤘 சிங்கப் பார்வை செவலை 🤗 மதுரை ஐல்லிக்கட்டு பேரவைத் தலைவரின் இரண்டாவது செல்லப்பிள்ளை 🥳

🐂 🔥

Wish you Happy New Year 2025 ⚡️💥🎂💰🌾
01/01/2025

Wish you Happy New Year 2025 ⚡️💥🎂💰🌾

31/12/2024

காது வலியால் அவதியா 😨 காதில் அடிக்கடி சீல் வடிகிறதா 🦻 காது சவ்வில் ஓட்டை பிரச்சனையா 🥵 நிரந்தர தீர்வு தரும் ஹோமியோபதி மருத்துவம் 🌿☘️ ஹோமியோபதி மருத்துவர் Dr.S.B.Nisha

கூட்டத்தில் எத்தனைபேர் இருந்தால் என்ன ?ஆட்டம் எப்போதும் தனியாகத்தான்~~~பொங்கலுக்கு தயாராகும் கொம்பு 💪
25/12/2024

கூட்டத்தில் எத்தனைபேர் இருந்தால் என்ன ?
ஆட்டம் எப்போதும் தனியாகத்தான்~~~

பொங்கலுக்கு தயாராகும் கொம்பு 💪

13/12/2024

Health Mix | Distributor | Our Clint Madurai Famous Foods | Video Shooting | Video Editing | Content Writing | Voice Over | Business Promotion | Hello Madurai

Address

Nagamalai Puthukottai
Madurai
625001

Telephone

+919566531237

Website

http://www.tamilvivasayam.com/, http://www.hellomaduraitv.com/

Alerts

Be the first to know and let us send you an email when Hello Madurai Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Madurai Tv:

Videos

Share