Madukkur Media

Madukkur Media மதுக்கூர் பகுதி செய்திகளை அறிந்துகொ? Madukkur is a Panchayat town in Thanjavur District in the Indian state of Tamil Nadu. It is 11 km from Pattukkottai.

It is a small town situated in southern part of Tamil Nadu. It is surrounded with number of villages. Being in the Cauvery River Delta Area the inhabitants’ main occupation is agriculture. As of 2001India census, Madukkur had a population of 15,171. Males constitute 47% of the population and females 53%. Madukkur has an average literacy rate of 72%, higher than the national average of 59.5%: male

literacy is 78%, and female literacy is 67%. In Madukkur, 12% of the population is under 6 years. Madukkur is historically an old region which has old Hindu temples around the villages like Kylaya Nathar temple Alathur. The following 33 villages are within the Madukkur Block. The important villages are
*Sirangudi
*vattagudi south and north
*Athivetti
*Alathur
*Kalayana Oodai
*Pulavanji
*Perriyakkottai
*Elankadu
*siramalekudi
*Kandiyankadu
*Kanniyalkurichi
*Karupur
*Kasangadu
*Silambavelangadu
*Keelakurichi
*MadhuKoor North
*Manangadu
*Muththakkuruchi
*Nemali
*Veppangulam
*Vikramam

Karuppur was recently selected as the Best Panchayat Village by the TN Govt. Most people belong to the Musuguntha Vellalar with considerable number of Kallar, Thevar and Mutharayar castes. There is a significant number of Chettyars, vellanchettiars, komatis, vaniya Chettiars and Muslims living in the township area. There is a coconut research station at Veppangulam which is run by Tamil Nadu Agricultural University, Coimbatore . STD Code - 04373. PIN Code - 614903. Vehicle - TN49. Bus Routes :-

* Pattukkottai to Mannargudi
* Mannargudi to Adhirampattinam

மின்தடை அறிவிப்பு 23/08/2023
21/08/2023

மின்தடை அறிவிப்பு 23/08/2023

22/07/2023

எதிர்வரும் 24.07.2023 திங்கட்கிழமை முதல் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு "பெயர் மாற்றம்" சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் நுகர்வோர்கள் உரிய வருவாய் ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நகர் மற்றும் வடக்கு மதுக்கூர் பிரிவை சார்ந்த நுகர்வோர்கள் சிவக்கொல்லையில் உள்ள பிரிவு அலுவலகத்திலும், புறநகர் (வாடியக்காடு), துவரங்குறிச்சி மற்றும் தாமரங்கோட்டை ஆகிய பிரிவுகளை சார்ந்த நுகர்வோர்கள் அந்தந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது தாங்கள் Online -லும் விண்ணப்பம் செய்யலாம்.

பெயர் மாற்றம் விண்ணப்பம் அலுவலகத்தில் இலவசமாக கிடைக்கும். பெயர் மாற்றம் கட்டணமாக ஒரு மின் இணைப்பிற்கு ரூ. 726/- செலுத்த வேண்டும் மின் கட்டணம் நிலுவையில் இருந்தால் அதனையும் சேர்ந்தது செலுத்த வேண்டும்.

பெயர் மாற்றம் செய்ய விரும்பும் நுகர்வோர்கள் நேரடியாக அலுவலகத்தில் அல்லது Online- ல் மட்டும் விண்ணப்பம் செய்யுமாறும் இடைத்தரகர் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நுகர்வோர்கள் பெயர் மாற்றம் முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக திரு.தீபக் ஜேக்கப் IAS நியமனம்.
16/05/2023

தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியராக திரு.தீபக் ஜேக்கப் IAS நியமனம்.

🌦 மதுக்கூரில் சட்டென்று மாறிய வா‌னிலை.. (புகைப்படங்கள்)
26/04/2023

🌦 மதுக்கூரில் சட்டென்று மாறிய வா‌னிலை.. (புகைப்படங்கள்)

Hi..

🚆 நம்ம பட்டுக்கோட்டையிலிருந்து 🌈குற்றாலம் செல்ல..
06/04/2023

🚆 நம்ம பட்டுக்கோட்டையிலிருந்து 🌈குற்றாலம் செல்ல..

Hi..

பட்டுக்கோட்டையில் இரயில்வே சரக்கு முனையம் துவக்க விழா.இன்று 06.02.2023 திங்கட்கிழமை பட்டுக்கோட்டை இரயில் நிலைய சரக்கு மு...
06/02/2023

பட்டுக்கோட்டையில் இரயில்வே சரக்கு முனையம் துவக்க விழா.

இன்று 06.02.2023 திங்கட்கிழமை பட்டுக்கோட்டை இரயில் நிலைய சரக்கு முனயத்திலிருந்து சரக்கு போக்குவரத்து துவங்க உள்ளது.

கண்ணால் கணினியை இயக்கலாம்.. பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்ற...
11/01/2023

கண்ணால் கணினியை இயக்கலாம்.. பட்டுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..

தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்கள் அறிவியல் கண்காட்சி பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 10.11.2022 அன்று 12 மணியளவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.ஸ்ரீவித்யா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 7,500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 கல்வி நிறுவனங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்களுடைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1,065 போஸ்டர்கள், திட்ட ஆய்வுகளை கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாரட்டி துணைவேந்தர் பாராட்டினார்.

இந்நிலையில் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் கிஷோர் மற்றும் சிவ மாரிமுத்து ஆகிய இரண்டு மாணவர்களும் இணைந்து கணினியைத் தொடாமலேயே கண்ணாலேயே இயங்க வைக்கும் கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய மாணவர்கள், ‘நாங்க இருவரும் புதுசா எதாச்சும் கண்டுபிடிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தினோம். அப்போது தான் பைத்தான் என்ற கோடிங் பற்றி தெரிந்து கொள்வதற்காக யூடீபில் பார்த்து கற்றுக் கொண்டோம். பின்பு மாற்று திறனாளிகள் மற்றும் பல இடங்களில் நல்ல விஷயத்திற்காக பயன்படும் வகையில் இந்த ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். இது முழுக்க முழுக்க எங்களின் தனிப்பட்ட கோடிங் ஆகும். இதை செய்ய ஒரு மாதம் காலம் ஆனது.

ஆரம்பத்தில் எரெர்ஸ் இருந்தாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இதை சரி செய்து உருவாக்கியுள்ளோம். இதை ஏடிஎம் மையம் மற்றும் ராணுவ பாதுகாப்பிற்காக கூட பயன்படுத்தலாம். ஏடிஎம் மையங்களில் திருட வரும் தனிப்பட்ட மனிதனின் தரவுகளை விழித்திரை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க உதவும். மேலும் இதை மேம்படுத்தி தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் வகையிலும் புது விதமான வசதிகளுடன் உருவாக்குவோம் என்று கூறினார்கள்.

🌪️மாண்டஸ் புயல் 🌧️🌴தென்னை விவசாயிகள் கவனத்திற்கு🌴▶️
08/12/2022

🌪️மாண்டஸ் புயல் 🌧️
🌴தென்னை விவசாயிகள் கவனத்திற்கு🌴

▶️

மாண்டஸ் புயல் 🌴 தென்னை விவசாயிகள் கவனத்திற்கு 🌴 மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனரின் வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி சந்திப்பு - அகஸ்தியம்பள்ளி வரையிலான ரயில் அகலப்பாதை பணிகள் முடிவுற்று , ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திர...
11/10/2022

திருத்துறைப்பூண்டி சந்திப்பு - அகஸ்தியம்பள்ளி வரையிலான ரயில் அகலப்பாதை பணிகள் முடிவுற்று , ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு அபய் குமார் ராய் தலைமையில் வருகின்ற 21.10.2022 முதல் 22.10.2022 வரை அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறயிருக்கிறது. அந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்ற பின் இந்த பாதை போக்குவரத்துக்கு திறக்கப்படும். இந்த பாதையின் மூலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மற்றும் திருத்துறைப்பூண்டி - காரைக்குடி பாதையில் அதிகமான சரக்கு போக்குவரத்து நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பாதை முடிந்த பிறகு தான் திருவாரூர் - காரைக்குடி பாதையில் பயணிகள் ரயில் அதிகம் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

🩸🫀🩸இரத்தம் தேவை🩸🫀🩸அருட்செல்விW/o.,சுப்ரமணியன்.Pமதுக்கூர்Blood Group: O+VEHaspital: மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் Canta...
09/10/2022

🩸🫀🩸இரத்தம் தேவை🩸🫀🩸

அருட்செல்வி
W/o.,சுப்ரமணியன்.P
மதுக்கூர்

Blood Group: O+VE
Haspital: மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்
Cantact: ஆறுமுகம் 7373926691

பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பேரூந்தில் 61 வயது முதியவர் தவறவிட்ட ₹25,000 -ஐ உரியவரிடம் ஒப்படைத்த நடத்த...
29/09/2022

பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பேரூந்தில் 61 வயது முதியவர் தவறவிட்ட ₹25,000 -ஐ உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர் முருகேசன்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 1...
09/09/2022

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

பொதுமக்கள் நலன் கருதி வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடக்கிறது.

11 வகையான ஆவணங்கள்

எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச்செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6 (பி) -யை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, தபால், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு உள்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தை வழங்கலாம்.

எனவே வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இரட்டை பதிவற்ற 100 சதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலை ஏற்படுத்துவதற்கு தங்களது முழு பங்களிப்பும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

🇮🇳வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?

▶️ https://youtu.be/RtsxJ8vbUFo

🏍️ காணவில்லை01.09.2022 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் மேல சூரியத்தோட்டத்தில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிரு...
01/09/2022

🏍️ காணவில்லை

01.09.2022 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் மேல சூரியத்தோட்டத்தில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போய்விட்டது.

Hero Splendor+ (2018 Model) TN 49 CZ 2092 கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் தொடர்புக்கு:
முகமது சுல்தான்
77085 94700

பட்டுக்கோட்டை வழியாக இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரயில் கால அட்டவணை.
20/07/2022

பட்டுக்கோட்டை வழியாக இயங்கும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரயில் கால அட்டவணை.

செகந்திராபாத் - ராமேஸ்வரம் (வழி திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி) சிறப்பு ரயில் இயக்கம்...07685 செகந்திராபாத் ராமேஸ...
20/07/2022

செகந்திராபாத் - ராமேஸ்வரம் (வழி திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி) சிறப்பு ரயில் இயக்கம்...

07685 செகந்திராபாத் ராமேஸ்வரம் வண்டி புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் (09.30) , திருவாரூர் (15.25), பட்டுக்கோட்டை (16.52), காரைக்குடி (19.10) வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

07686 ராமேஸ்வரம் செகந்திராபாத் வண்டி வெள்ளிக்கிழமைகளில் காலை 08.50 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி (12.05), பட்டுக்கோட்டை (13.13), திருவாரூர் (15.15), சென்னை எழும்பூர் (21.50) வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு வண்டிக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 10 முதல் 1 மணி வரை மின்தடை
15/07/2022

இன்று காலை 10 முதல் 1 மணி வரை மின்தடை

நாளை (15/06/2022) மின்தடை அறிவிப்பு...
14/06/2022

நாளை (15/06/2022) மின்தடை அறிவிப்பு...

08/04/2022

🇮🇳✈🇦🇪 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிரந்தரமாக சேவை வழங்குகிறது. பயணிகளின் தேவையை பொறுத்து படிப்படியாக சேவைகள் அதிகரிக்கப்படும்.

02/04/2022

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது..?

பள்ளிக்கல்வித்துறை தகவல்

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு, மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 10ம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ந் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது. இதை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இளைஞர்கள் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெற வாய்ப்பு... 🚍🚚🚛🚘
28/03/2022

இளைஞர்கள் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெற வாய்ப்பு... 🚍🚚🚛🚘

22/03/2022

⚠️காவ‌ல்துறையின் எச்சரிக்கை செய்தி..
☎️1️⃣9️⃣3️⃣0️⃣

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனவுத்திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் சிறப்புற செயல்படவும், பிற சுகாதார நலப்பணிகளை ...
21/03/2022

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனவுத்திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் சிறப்புற செயல்படவும், பிற சுகாதார நலப்பணிகளை ஒருங்கிணைக்கவும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரின் அறிவுரைப்படி, நமது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் ஆலோசனையின் பேரில் மதுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் Tamilnadu Population Health Registry-ல் பதிவு செய்யப்பட்டு தனித்துவ சுகாதார அடையாள எண் Unique Health ID வழங்கும் பணி திங்கள்கிழமை 21.03.2022 முதல் நடைபெற்று வருகின்றது. சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும் குடும்ப அட்டை (Smart Card) எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

14/03/2022

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான்-ஆதார் இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்.

இணையம் மூலம் இணைக்கலாம்:

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க https://eportal.incometax.gov.in/iec/foservices/ #/pre-login/bl-link-aadhaar என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

குறிப்பு : சில ஆதார் கார்டில் பிறந்த வருடம் மட்டுமே இருக்கும். அவர்கள் மட்டுமே கீழே உள்ள முதல் Box-ல் (I have only year of birth in Aadhaar card) ✔ செய்யவும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்:

எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஏற்கனவே உங்கள் கார்டு இணைந்துள்ளதா என பரிசோதிக்க:

https://eportal.incometax.gov.in/iec/foservices/ #/pre-login/link-aadhaar-status

|

ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருட்டு..! மதுக்கூரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்...
11/03/2022

ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சம் திருட்டு..!

மதுக்கூரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஸ்கூட்டரில் வைத்து இருந்த ரூ.5 லட்சத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது62). இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஆவார். இவரது மகன் டாக்டர் நரேஷ்குமார் மதுக்கூர் பஸ் நிலையம் அருகில் சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 11. 30 மணியளவில் மதுக்கூர் மெயின் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ.5 லட்சத்தை தனது குடும்ப தேவைக்காக வேணுகோபால் எடுத்துள்ளார். அதனை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார்.

ரூ.5 லட்சம் திருட்டு:

பின்னர் டீ குடிப்பதற்காக மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் ஹெல்மெட் அணிந்தபடி அங்கு வந்துள்ளனர். அவர்கள், வேணுகோபாலின் ஸ்கூட்டரில் இருந்த பணத்தை திருடினர்.

இதுகுறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் வேணுகோபால் புகார் செய்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது சந்தேகத்துக்குரிய வகையில் 4 பேர் ஹெல்மெட்வுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு:

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியின் பணத்தை திருடிச் சென்றவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காகவே அவர்கள் திட்டமிட்டு ஹெல்மெட் அணிந்து வந்து இருந்தார்களா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

நாளை (09/03/2022) மின் தடை..
08/03/2022

நாளை (09/03/2022) மின் தடை..

மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் திமுக -வை சேர்ந்த திருமதி....
04/03/2022

மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் திமுக -வை சேர்ந்த திருமதி. வகிதா பேகம் அவர்கள் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள்.

மேலும் மதியம் 2.30 மணிக்கு நடைபெற்ற பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் திமுக -வை சேர்ந்த திரு. ராசுக்கண்ணு அவர்கள் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள்.

03/03/2022
மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.
02/03/2022

மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

22/02/2022

🗳 நகர்புற உள்ளாட்சி தேர்தல் 🗳

👆மதுக்கூர் பேரூராட்சி தேர்தல் முடிவுகள்👆

🗺வார்டு : 0️⃣8️⃣

🧭பகுதிகள் :
நூருல் இஸ்லாம் தெரு
பெருநாள் கொல்லை
சிரமேல்குடி ரோடு
புதுத்தெரு (வடக்கு பகுதிகளை உள்ளடக்கியது)

🗳 வேட்பாளர்கள் மற்றும் பதிவான வாக்குகள் :

1) ஹாஜராபானு நாகூர்கனி (சுயேட்சை) 37

2) சிராஜ்நிஷா முஹம்மது யூனுஸ் (திமுக) 61

3) பாத்திமா ஷகியா இத்ரீஸ் (காங்கிரஸ்) 59

✔4) ஷஹானா இலியாஸ் (மமக) 186

5) ஷர்மிளா பர்வீன் ராஷிக் (சுயேட்சை) 35

22/02/2022

🗳 நகர்புற உள்ளாட்சி தேர்தல் 🗳

👆மதுக்கூர் பேரூராட்சி தேர்தல் முடிவுகள்👆

🗺வார்டு : 0️⃣2️⃣

🧭பகுதிகள் :
மேலசூரியதோட்டம்

🗳 வேட்பாளர்கள் மற்றும் பதிவான வாக்குகள் :

1) ஜான்தனசேகரன் (காங்கிரஸ்) 37

2) ராமச்சந்திரன் (திமுக) 270

✔3) ஆனந்த் (அதிமுக) 302

4) ஜபருல்லாஹ் (சுயேட்சை) 107

5) ராசிக் (மமக) 79

6) நரேஷ் குமார் (அமமுக) 8

7) அறிவழகன் (பாஜக) 10

22/02/2022

🗳 நகர்புற உள்ளாட்சி தேர்தல் 🗳

👆மதுக்கூர் பேரூராட்சி தேர்தல் முடிவுகள்👆

🗺வார்டு : 0️⃣1️⃣

🧭பகுதிகள் :
படப்பைக்காடு

🗳 வேட்பாளர்கள் மற்றும் பதிவான வாக்குகள் :

1) CP.பெரமையன் (திமுக) 312

✔2) ராசுக்கண்ணு (சுயேட்சை) 515

26/01/2022

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ''சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 641 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.

மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 4 இறுதிநாள். பிப்வரி 5ம்தேதி வேட்பு மனு பரிசீலனை. வேட்பு மனுவை திரும்ப பெற பிப்ரவரி 7ம்தேதி கடைசி நாள். பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

80,000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

ஒரு வாக்கு சாவடிக்கு 4 பேர் வீதம், 1.33 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுவர்.

சொத்து, குற்றவியல் விபரம் போன்றவற்றை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் முடிந்த 30 நாட்களில் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

💠வேட்பு மனு வைப்பு தொகை:

ஆதி திராவிடர் பழங்குடி - பேரூராட்சி ரூபாய் 500
நகராட்சி ரூபாய் 1000
மாநகராட்சி ரூபாய் 2000

மற்றவர்

பேரூராட்சி ரூபாய் 100
நகராட்சி ரூபாய் 2000
மாநகராட்சி ரூபாய் 4000

💠செலவீனம்:

பேரூராட்சி - 17,000

முதல் நிலை பேரூராட்சி \ நகராட்சி - 34,000

மாநகராட்சி - 85,000

சென்னை மாநகராட்சி - 90,000

💠மறைமுக தேர்தல்:

மேயர் - 21

நகராட்சி - 138

பேரூராட்சி - 490

மொத்தம் - 1298

09/01/2022

பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்ததால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிவிப்பு..!

பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்தால் 1800 5993 5430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னென்ன பொருட்கள்..?

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள 21 பொருட்களின் விவரம் வருமாறு:-

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
பாசிப்பருப்பு - 500 கிராம்
நெய் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 100 கிராம்
மிளகாய்தூள் - 100 கிராம்
மல்லித்தூள் - 100 கிராம்
கடுகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
புளி - 200 கிராம்
கடலைபருப்பு - 250 கிராம்
உளுத்தம்பருப்பு - 500 கிராம்
ரவை - 1 கிலோ
கோதுமை மாவு - 1 கிலோ
உப்பு - 500 கிராம்
கரும்பு - 1 (முழுமையானது)
துணிப்பை - 1

நண்பர்களே நம்முடைய YouTube சேனலுக்கு Subscribe தாருங்கள்...
https://youtube.com/channel/UCd8sKlcJaY05B4lzkiH0N8Q

கண்ணணாறு புதிய பாலத்தில் இன்று (08/01/2022) முதல் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.https://meesho.com/invi...
08/01/2022

கண்ணணாறு புதிய பாலத்தில் இன்று (08/01/2022) முதல் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
https://meesho.com/invite/STCUHCX20168

05/01/2022

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு..

05/01/2022

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு..!

அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

●பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

●9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

●உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

31/12/2021

தமிழகத்தில் ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!
புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் பின்வருமாறு:-

🔊 சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்றபொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

🔊 மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

🔊 அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது.

🔊 அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்...

📌 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

📌 வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

📌 உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

📌 பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

📌 திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

📌இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

📌 துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

📌 கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

📌 உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

நம்முடைய YouTube சேனலை Subscribe பண்ணுங்க..
https://www.youtube.com/channel/UCd8sKlcJaY05B4lzkiH0N8Q

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா பிடிபட்டது..!தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்...
26/12/2021

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா பிடிபட்டது..!

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் உடனடியாக 10581 என்ற எண்ணிலோ அல்லது 9498410581 என்ற WhatsApp எண்ணிலோ புகார் தொிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுக்கூரில் கண்காணிப்பு கேமராக்கள் நாளை துவக்கம்..! மதுக்கூரில் வர்த்தக சங்கம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமர...
23/12/2021

மதுக்கூரில் கண்காணிப்பு கேமராக்கள் நாளை துவக்கம்..!

மதுக்கூரில் வர்த்தக சங்கம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் துவங்க விழா நாளை டிச.24 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை MLA அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைக்க உள்ளார்கள்.

மேலும் மாலை 3 மணிக்கு இலவச சித்தா மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

📢🅰️DVERTℹSEⓂ️ENT
https://meesho.com/invite/STCUHCX20168

Address

Madukkur Interstate Located At 10°29′N 79°24′E/10. 48°N 79. 4°E/10. 48; 79. 4. It Has An Average Elevation Of 3 Metres (9 Feet)
Madukkur
614903

Alerts

Be the first to know and let us send you an email when Madukkur Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Madukkur media companies

Show All