17/11/2024
உலகப் புகழ்பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள
#திருப்புள்ளிருக்கு_வேளூர் என்ற #வைத்தீஸ்வரன்_கோயில்
#வைத்தியநாதசுவாமி (வைத்தீஸ்வரர்)
#தையல்நாயகி (வைத்தீஸ்வரி)
#செல்வமுத்துக்குமாரசுவாமி
#அங்காரகன் என்ற #செவ்வாய்_பகவான் திருக்கோயில்
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றாகவும்,
நவகிரகங்களில் செவ்வாய் (அங்காரகன்)பரிகார தலமாகவும் உள்ள
#வைத்தீஸ்வரன்_கோயில் என்ற
#திருப்புள்ளிருக்குவேளூர்
#வைத்தியநாதசுவாமி
#தையல்நாயகிஅம்மன்
#செல்வமுத்துக்குமாரசுவாமி
திருக்கோயில் வரலாறு:
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.
மயிலாடுதுறைக்கும் சீர்காழிக்கும் இடையிலுள்ளது வைத்தீஸ்வரன் கோவில்.
இவ்வூருக்குப் புள்ளிருக்குவேளூர் என்ற பெயரும் உண்டு. "புள்' என்றால் பறவை. ஜடாயு என்னும் பறவை ராஜனும், ரிக்வேதமும், வேள் என்ற முருகப்பெருமானும், சூர் என்ற சூரியதேவனும் இவ்வாலய இறைவனை வழிபட்டதால் இவ்வூருக்குப் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் உருவானது.
மூலவர்:வைத்தியநாதசுவாமி (வைத்தீஸ்வரர்)
அம்மன்:தையல்நாயகி அம்மன்
தல விருட்சம்:வேம்பு
தீர்த்தம்:சித்தாமிர்தம்
ஆகமம் :காமிக ஆகமம்
புராண பெயர்:புள்ளிருக்குவேளூர்
ஊர்:வைத்தீஸ்வரன் கோயில்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
#பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம்
#தேவாரப்பதிகம்:
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
-திருஞானசம்பந்தர்
#அருணகிரிநாதர் அருளிய #திருப்புள்ளிருக்குவேளூர் திருப்புகழ்:
"எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமே வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
_அருணகிரிநாதர்
#புராண வரலாறு:
இவ்வாலயத்திலுள்ள குளக்கரையில் சதாநந்த முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது குளத்தில் வாழ்ந்த தவளை ஒன்றை பாம்பொன்று விழுங்க முயன்றது. அதைப்பார்த்த முனிவர், பாம்பும் தவளையும் இவ்வாலயக் குளத்தில் வாழக்கூடாதென்று சாபம் கொடுத்தார். அதுமுதல் இந்தக் குளத்தில் பாம்புகள், தவளைகள் வாழ்வதே இல்லையென்று பரவசத்துடன் கூறுகின்றனர் ஊர்மக்கள்.
இவ்வாலய இறைவனுக்கு வைத்தீஸ்வரர் என்ற பெயர் உருவாகக் காரணமானவர் நவகிரகங்களில் ஒருவராக விளங்கும் செவ்வாய் எனும் அங்காரகன். பரம்பொருளான இறைவனைவிட்டு உமாதேவியார் நீங்கியிருந்த காலத்தில், சிவபெருமான் யோகநிலையில் இருந்தார். அப்போது அவரது நெற்றிகண்ணிலிருந்து வியர்வைத் துளியொன்று பூமியில் விழுந்தது. அதிலிருந்து ஒரு குழந்தை உருவானது. அந்தக் குழந்தையை பூமாதேவி எடுத்து மங்களன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தாள்.
அந்த குழந்தை வளர்ந்து சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆரம்பித்தார். அவர் தவயோகநிலையில் இருக்கும்போது அவர் மீது தீப்பிழம்பு கொழுந்துவிட்டிருந்தது. இதனால் அவருக்கு வெண்குஷ்ட நோய் உருவானது. அப்போது அசரீரி குரல், "இளைஞனே, வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று அங்குள்ள குளத்தில் ஒரு மண்டலம் நீராடி, இறைவனை வழிபட்டால் உனது ரோகம் குணமாகும்' என்றது.
அதன்படி அக்காரகன் இங்குவந்து சித்திரக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். சிவனது அம்சத்தில் உருவான அங்காரகனின் நோயைத் தீர்ப்பதற்காக பார்வதிதேவி தைலப் பாத்திரத்தில் சஞ்சீவி வேர்களையும் வில்வ மரத்தடி மண்ணையும் கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்க, அதை அவர் அரைத்து மருந்தாகி வைத்தியராக மாறி அங்காரகன் உடலில் பூசினார். அங்காரகனுக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோய் குணமானது. அங்காரகன் தவத்தை மெச்சிய சிவபெருமான், அவரை நவகிரகங்களில் மூன்றாவது கிரகமாக அமைய வரமளித்தார். தென்கிழக்குநோக்கி அங்காரகனை வணங்குவது மரபு.
அங்காரகன் பற்றிய வேறு சில புராணக் கதைகளும். அதன்படி பரத்துவாச முனிவருக்குப் பிறந்தது மங்களன் எனும் குழந்தை. அதை பூமாதேவி எடுத்து வளர்த்தாள். உரிய வயது வந்ததும் பரத்துவாச முனிவரிடம் மங்களனை ஒப்படைத்தாள். முனிவர் மங்களனுக்கு பல கலைகளையும் கற்பித்தார். மங்களனின் நடவடிக்கைகள் முனிவருக்கு பாசத்தை உருவாக்கியது. சிவனைநோக்கித் தவமிருக்குமாறு முனிவர் மங்களனுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி மங்களன் தவம்செய்ய, சிவபெருமான் அவருக்கு கிரகபதவி வழங்கினார் என்றும் கூறினார்.
அடுத்து, தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை உருவாக்கி அனுப்பிவைத்தார். வீரபத்திரர் தட்ச சம்ஹாரம் முடித்தும் அவரது கோபம் தனியவில்லை. இதனால் உலகம் நடுங்கியது. அதை கண்டு அஞ்சிநடுங்கிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் வீரபத்திரரின் கோபத்தைத் தணித்தார். அதனால் வீரபத்திரர் அழகாக உருமாறினார். அவரை அங்காரகனாக மாற்றினார் சிவபெருமான் என்கிறது மச்சபுராணம். வீரபத்திரர் அம்சம் என்பதால் செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது சிறந்தது. அதிலும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து செவ்வாய் என்கிற அங்காரனை வழிபட்டால் மிகச்சிறந்த பலன் கிடைக்குமென்று கூறப்படுகிறது.
ாறு:
அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.
1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .
3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.
தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.
தலபெருமை:
1.சித்தாமிர்த தீர்த்தம்:
இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.
2.புள்ளிருக்கு வேளூர்:
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – இருக்கு என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.
3.நோய் தீர்க்கும்
திருச்சாந்து:
4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு “திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.
வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.
#செவ்வாய் தோஷ நிவர்த்தி:
இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.
செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.
#சடாயுகுண்டம்:
இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.
#செல்வ_முத்துக்குமாரர்:
வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் “செல்வ முத்துக்குமாரர்’ என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.
முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும். மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும்.
மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி மேற்கு பார்த்த சந்நிதி. இங்கு தரப்படும் வில்வம், விபூதி, புற்றுமண் தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது. செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது. தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.
#புராண_செய்தி:
இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.
இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.
இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.
இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..
#மூலவர் காட்சி மற்றும் செவிவழிச் செய்திகள் (ஐதீகங்கள்):
இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.
இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.
இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.
இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..
#மூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள்:
கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.
#வைத்தீஸ்வரன் கோவில் அமைப்பு
இந்த கோயிலின் கிழக்கில் பைரவ மூர்த்தியும், தெற்கில் விநாயகர், மேற்கில் வீரபத்திரர், வடக்கில் காளி ஆகியவர்கள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
ஐந்து பிரகாரங்கள் கொண்ட இந்த கோவில், ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது.
ிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது. மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும்.
தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.
செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
#மூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள்:
ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.
மேலும், ஆடிப்பூரம், நவராத்திரி, கிருத்திகை, தை மாதத்தில் முத்துக்குமார சுவாமிக்குத் திருவிழா, பங்குனி பெருவிழா பங்குனி உத்திரத்தின் போது நாய் ஓட்டம், நரி ஓட்டம் இந்த நிகழ்விற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
குழந்தையான முருகப்பெருமானை மகிழ்விக்க இங்கு யானை ஓட்டம் என்ற விளையாட்டு காட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது. வைத்தீஸ்வரன் கோவில், அருள்மிகு செவ்வாய் ஸ்தலம் என்பதால் செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் இந்த தளத்திற்கு வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.
#சங்கப்பாடல் குறிப்பு:
வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.
ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தலமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.
#வைத்தீஸ்வரன் கோவில் பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தளத்திற்கு வந்து, திருக்குளத்தில் நீராடி அதன்பின் உடுத்திய உடையும் அங்கேயே விட்டுவிட்டு புதிய உடையை உடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அங்கிருக்கும் விநாயகர், செவ்வாய், சிவன், அம்பாள் ஆகியோர் அனைத்தையும் வழிபட்டு வர அனைத்து தோஷங்களும் நீங்கும்.
மூலஸ்தான அங்காரகன் பிரகாரத்திற்குச் சென்று பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பின்னர் அவருக்குப் பிடித்த துவரை சாதம் செய்து நைவேத்தியம் செய்து, யாருக்குத் தோஷம் உள்ளதோ அவர்கள் கைகளால் பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை அளிக்கச் செவ்வாய் தோஷம் நீங்கும்.
#வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியம்
நாடி ஜோசியத்தின் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவில், அகத்தியர் அருளிய நாடி ஜோசியத்தை நம்பி இந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். மேலும் இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் வசீகரிக்கக் கூடிய சக்தி இந்த கோயில்களுக்கு உள்ளதால், நாடி ஜோசியம் பார்த்து பலன் பெற்றவர்களும் உள்ளனர்.
இந்த கோவிலுக்கு சுமார் 5000 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோவிலில் ஆறுகால பூஜைகள், ஜாம பூஜையின்போது செல்வத்துக்குமார சுவாமிக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
#கல்வெட்டு:
தமிழ் ஆண்டு சகம் 1814 (கி.பி.1891 ஜூன் 26) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (கி.பி. 1767) ராசாமகாராசர் காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (கி.பி.1770) துளசாமகாராசர் காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (கி.பி. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
#திருவிழா:
தைமாதம் – தை செவ்வாய் – 10 நாட்கள் திருவிழா – செல்வமுத்துக்குமரர் சுவாமிக்கு இந்த திருவிழா சிறப்பாக நடைபெறும் – பத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா பங்குனி – பிரம்மோற்சவம் – 28 நாட்கள் – பஞ்சமூர்த்தியும் அபிசேக ஆராதனைகளோடு சுவாமி புறப்பாடு. ஐப்பசி – கந்த சஷ்டி – 6 நாள் விழா வைகாசி – மண்ணாபிசேக, மண்டலாபிசேக கிருத்திகை உள்ளிட்ட மாதாந்திர கிருத்திகைகளும் இத்தலத்தில் சிறப்பாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
#வைத்தீசுவரன்:
வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.
இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.
இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில்
சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.
#வைத்தீஸ்வரன் கோவில் நடை திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் மதியம் ஒன்று முப்பது மணி வரை நடை திறந்திருக்கும். அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்படுகிறது.
#செல்லும் வழி:
இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறையை அடையலாம்.
இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
பதிவுகள்: துருவ நட்சத்திரம் சந்தோஷ் பெப்பி 🙇🙏🏻
திருச்சிற்றம்பலம்🙏
ஓம் நமசிவாய🙏