Kayal News

Kayal News காயல்பட்டிணம் நகரின் செய்திகளை உடனு?

02/12/2024

காயல்பட்டினம் - இந்து மயானம் இடிப்பு - நகராட்சியை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு.

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள...
02/12/2024

காயல்பட்டினம் KSC விளையாட்டு மைதானம் மறு திறப்பு விழா
திறந்து வைப்பவர்: அமைச்சர் அண்ணாச்சி அனிதா R இராதாகிருஷ்ணன் அவர்கள். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :*சட்ட...
24/11/2024

காயல் ஐக்கிய பேரவையின் நட்சத்திர கவுன்சிலர் அஜ்வாத் சஸ்பெண்ட்:-

இது பற்றி கவுன்சிலர் அஜ்வாத் வெளியிட்டுள்ள அறிக்கை :

*சட்டவிரோத அநீதிக்கு துணைப் போகாதீர்கள்!*

*அல்லாஹ்விற்கே அஞ்சி நடங்கள்!!*

▶️ காயல்பட்டினம் நகராட்சி கூட்டத் தொடர்களில் எனது வார்டுக்கும், ஊருக்கும், தேவையான நியாயமான எனது கோரிக்கைகளை தொடர்ந்து புறந்தள்ளிக் கொண்டு இருந்தது நகராட்சி நிர்வாகம்.

▶️ கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை காயல்பட்டினம் பேரூந்து நிலையத்திற்கு சூட்ட தீர்மானம் நிறைவேற்ற நான் கோரியபோது, நகராட்சியின் தலைவர் முத்து முஹம்மது, 10வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் (எ) சுகு ஆகியோர் என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்தால் நகர்மன்றத்திலேயே என்னை தாக்குவதற்கு முற்பட்டனர்.

▶️ இப்போது என்மீது உண்மைக்குப் புறம்பான பல பழிகளை சுமத்தி, அடுத்த 2 நகராட்சி கூட்டத் தொடர்களில் பங்கெடுக்கச் செய்ய முடியாமல் என்னை தற்காலிக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளார்கள்.

▶️ இதற்கு உறுதுணையாகவும், அறியாமலும் சில உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். என் பக்கம் நீதி உள்ளதை நேரடி சாட்சியாகக் கண்ட கவுன்சிலர்கள், மேலிட அழுத்தத்திற்கு(!) ஆட்பட்டு எனக்கு எதிராக கையெழுத்து போட்டிருந்தால், அவர்கள் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்.

▶️ பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த எனக்கே, தளபதியாரின் திராவிட மாடல் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இன்று எனக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம் எச்சரிக்கை!!

▶️ எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஏதாவது ஒரு குறை இருந்தாலே ஐக்கியப் பேரவையை கேட்கலாம் என்று சொன்ன ஐக்கியப் பேரவை நிர்வாகமே! இன்று உங்களின் நட்சத்திர வேட்பாளர் & கவுன்சிலரான எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசிடமும், நீதிமன்ற பரிகாரமும் அல்லாது நான் யாரிடம் போய் முறையிடுவது?

▶️ ஐக்கியப் பேரவை நிர்வாகமே! எனக்குத் துணைத் தலைவர் பதவி தருவதாக நீங்கள்தானே வாக்குறுதி கொடுத்தீர்கள்! அதை நீங்களே மீறி விட்டீர்களே! இன்று காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நகராட்சி உறுப்பினராகிய என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதற்கும் ஐக்கிய பேரவைதான் பின்னின்று தூண்டுகிறதா? அதனால்தான் எனக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறதா? இது நியாயம்தானா?

------
மக்களால் நான்!
மக்களுக்காகவே நான்!!

என்றும் மக்களின் தொண்டனாய்...

A.A.அபூபக்கர் அஜ்வாத்.
6 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்,
காயல்பட்டினம் நகராட்சி.

23/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகளின் விபரம்:இன்று 24.11.24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மா...
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் புதிய நிர்வாகிகளின் விபரம்:

இன்று 24.11.24 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தேர்தல் காயல்பட்டினம் KMT ஹாஸ்பிடல் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி பேரவையின் 61 செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை kMT diamond ஹாலில் வைத்து நடைபெற்றது. முடிவில் கீழ்கண்ட 11 நபர்கள் 2024-27 பருவ காலத்திற்கான பேரவையின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க பட்டனர்.

தலைவர் :
M.K. முஹ்யத்தீன் தம்பி (துரை) அவர்கள்

துணைத்தலைவர்கள் :

M.A.துணி முஹம்மது உமர் அவர்கள்

S.I.முஹம்மது ஷாபி அவர்கள்

வாவு M.M.முஹம்மது சம்சுத்தீன் அவர்கள்

M.S.முஹம்மது நூஹ் அவர்கள்

V.D.சதக் தம்பி அவர்கள்

பொதுச்செயலாளர்:

A.A.C.நவாஸ் அஹ்மது அவர்கள்

இணைச் செயலாளர்கள்:

M.A.S.செய்யிது அபூதாஹிர் (அபு) அவர்கள்

A.J.சொளுக்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் அவர்கள்

M.K.ஜாஹிர் ஹூசைன் அவர்கள்

பொருளாளர்:

S.M.முஹம்மது தாஜூத்தீன் அவர்கள்

ஆகியோர் செயல்படுவர். தேர்தல் அதிகாரிகளாக நகரின் பிரதான கல்வி கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டனர். தேர்தல் ஏற்பாட் டை சகோதரர்கள் MOS அன்சாரி, மஹ்மூத் சுல்தான், பொறியாளர் மொகிதீன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தல் இன்று(24-11-24)  காலை KMT மருத்துவமனையில் நடைபெற்றது.
24/11/2024

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகக் குழு தேர்தல் இன்று(24-11-24) காலை KMT மருத்துவமனையில் நடைபெற்றது.

04/11/2024

காயல்பட்டிணம் நகராட்சியில் பரபரப்பு

கவுன்சிலர் அஜ்வாத் அவர்களை அடிக்க பாய்ந்த தலைவர் முத்து முஹம்மது மற்றும் கவுன்சிலர் சுகு.
------
28/10/2024. அன்று மாலை.4.00. மணி அளவில் காயல்பட்டினம் நகராட்சி மன்ற அரங்கில் வைத்து நகரமன்ற சாதாரண கூட்டம் நடந்த கூட்டத்தில் நட்சத்திர கவுன்சிலர் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப். அவர்களுடைய பெயரை வைப்பதற்கு தீர்மானம் கொடுத்து இருக்கின்றார்கள் அதை நிராகரித்த ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற தலைவருக்கும் ஐக்கிய பேரவையால் துணைத் தலைவர் என்று சொல்லப்பட்ட நட்சத்திர கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்பொழுது ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நட்சத்திர கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்து காவல்துறையால் மன்றத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் இப்பொழுது நட்சத்திர கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சலசலப்பு ஏற்பட்டது இதற்கு ஐக்கிய பேரவை நல்லதொரு முடிவு எடுக்குமா காயல்பட்டினம் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு

03/11/2024

காயல்பட்டிணம் நகராட்சியில் பரபரப்பு

கவுன்சிலர் அஜ்வாத் அவர்களை அடிக்க பாய்ந்த தலைவர் முத்து முஹம்மது மற்றும் கவுன்சிலர் சுகு.
------
28/10/2024. அன்று மாலை.4.00. மணி அளவில் காயல்பட்டினம் நகராட்சி மன்ற அரங்கில் வைத்து நகரமன்ற சாதாரண கூட்டம் நடந்த கூட்டத்தில் நட்சத்திர கவுன்சிலர் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப். அவர்களுடைய பெயரை வைப்பதற்கு தீர்மானம் கொடுத்து இருக்கின்றார்கள் அதை நிராகரித்த ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற தலைவருக்கும் ஐக்கிய பேரவையால் துணைத் தலைவர் என்று சொல்லப்பட்ட நட்சத்திர கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்பொழுது ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் ஐக்கிய பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நட்சத்திர கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்து காவல்துறையால் மன்றத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் இப்பொழுது நட்சத்திர கவுன்சில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சலசலப்பு ஏற்பட்டது இதற்கு ஐக்கிய பேரவை நல்லதொரு முடிவு எடுக்குமா காயல்பட்டினம் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு

10/10/2024

நமது *கே எம் டி மருத்துவமனை* க்கு இன்று வருகை தரக்கூடிய சிறப்பு மருத்துவர்களின் விவரம். *(10.10.2024)*

1.*Dr Ganesan MD.,DM., Cardio ( Cardiology)* - இருதய நோய் சிகிச்சை நிபுணர்.
நேரம்: 05:00PM to 06:00PM

2.*Dr. Ranjith MS (General Surgeon)* பொது அறுவை சிகிச்சை நிபுணர்
நேரம்: 03:30PM to 04:30PM

3.*Dr . Manikandan MD (Gen. Medicine)., DM., DNS (Medical Oncology)*
நேரம்: 02:00PM to 03:00 PM

4.*Dr.Mohamed Noohu Bariz MS.,( General Surgery), M Ch (Urology)*-சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்
நேரம் : 7:00 PM - 8:00PM

5.*Dr. Shankar Avudayappan M.D., D.M., (Nephro)*
சிறுநீரக நோய் நிபுணர்
நேரம்: 11:00PM

மேற்காணும் மருத்துவர்களின் ஆலோசனை குறித்த மேலதிக விபரம் மற்றும் அவர்களின் வருகை நேரத்தை நீங்கள் வருமுன் மீண்டும் உறுதி செய்துகொள்ள கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்....

*(10.10.2024)*

*(9489659860)*
*(04639 280308)*

காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் தேர்வு சம்பந்தமாக காயல்பட்டினத்தில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் மக்கள் கூட்டமைப்பு ச...
09/09/2024

காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் தேர்வு சம்பந்தமாக காயல்பட்டினத்தில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் மக்கள் கூட்டமைப்பு சார்பாக வெளியிடப் பட்டுள்ள போஸ்டர்.

காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் தேர்வு சம்பந்தமாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர், முஹியத்தீன் பள்ளி நிர்வ...
09/09/2024

காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவர் தேர்வு சம்பந்தமாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர், முஹியத்தீன் பள்ளி நிர்வாகத்தினருக்கு கொடுத்த வாக்குறுதி கடிதம்.

அமைச்சர் அண்ணாச்சி ஆர் ராதா கிருஷ்ணன் அவர்களுடன் காயல்பட்டிணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் சந்திப்பு. நகரின் முக்க...
09/09/2024

அமைச்சர் அண்ணாச்சி ஆர் ராதா கிருஷ்ணன் அவர்களுடன் காயல்பட்டிணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் சந்திப்பு. நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசனை !

காயல்பட்டிணம் நகராட்சி  துணைத் தலைவர் த்கேர்வு சம்பந்தமாக கோரிக்கை மனுவை காயல்பட்டிணம் நகராட்சி 6 வது வார்டு கவுன்சிலர் ...
09/09/2024

காயல்பட்டிணம் நகராட்சி துணைத் தலைவர் த்கேர்வு சம்பந்தமாக கோரிக்கை மனுவை காயல்பட்டிணம் நகராட்சி 6 வது வார்டு கவுன்சிலர் அஜ்வாத் அவர்கள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகி ஆதம் சுல்தான் அவர்களிடம் கொடுத்தார்கள்.

Address

Kayalpatnam
628204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayal News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Kayalpatnam media companies

Show All