05/11/2024
சூடு, சொரணை வேண்டாமா தோழர்களே?
*அதிகாரப் பதவிகளில் பார்ப்பனர் அல்லாதார் வந்ததற்குப் பிறகுதான் லஞ்சமும் ஊழலும் உருவானதாகப் பேசுகிற பார்ப்பனத் திமிரும், தெனாவட்டும் எங்கிருந்து வருகிறது? சுதந்திர முதல் ஊழலான முந்திரா ஊழலின் ஊற்றுக் கண் யார்? இராணுவ இரகசியங்களை விற்ற அயோக்கியன் கூமர் நாராயணன் யார்? ஊழலை இண்டு இடுக்கு வரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் பட்டியல் வேண்டுமா?
* பார்ப்பனரல்லாதாரை ஊழல்வாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக அடையாளப்படுத்தும் ஆரிய இனத் திமிரை எப்போது நாம் உணர்வது?
* வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது பார்ப்பனர்களுக்காகச் சொன்னது என்று வாயடிக்கிறார்களே... அப்போது கருப்பாக இருக்கும் நாம் பொய் சொல்வோர் என்று பச்சையாக விஷத்தைக் கக்கும் அயோக்கியக் கும்பலின் மீது சுரணை உள்ளவருக்குக் கோபம் வர வேண்டாமா?
* தெலுங்கர்களைத் திட்டி விட்டார் என்று குஷியடையும் குபீர் திடீர் டுமீல் தேசியங்கள் குதிக்கின்றனவே?
* பார்ப்பனியத்தில் தமிழ்த் தேசிய உணர்வை வளர்ப்போம் என்று கருதும் கூலிக்கு மாரடிக்கும் சில்லறைகளின் செயல் "மலத்தில் அரிசி பொறுக்குகிற வேலை" அல்லவா?
* சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் யார் எதிரி என்று அடையாளப்படுத்தி எதிர் நிறுத்தும்போது, குறுக்கே விழுந்து புரளும் கூமுட்டைகளுக்கும், கூலிகளுக்கும், துரோகிகளுக்கும் சம்மட்டி அடி விழுவது எப்போது?
* இன்றைக்கும் "ஜாதி வேண்டும், ஜாதி இருக்கும்" என்று பேசுகிற கொழுப்பை, அடாவடியை, ஆதிக்க எண்ணத்தை, சமத்துவச் சிந்தனை உள்ளவர்களால் ஏற்க முடியுமா?
சிந்திப்பீர்! பார்ப்பன எதிர்ப்பு என்பது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் சுயமரியாதைக்கு அடிப்படை!
--- Prince Ennares Periyar