![வணக்கம். பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்பது எப்படி என்பதான பயிற்சி ஆப்த மித்ரா ( ஆ...](https://img4.medioq.com/463/208/975212814632083.jpg)
15/10/2024
வணக்கம். பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்பது எப்படி என்பதான பயிற்சி ஆப்த மித்ரா ( ஆபத்து கால நண்பன்) என்ற பெயரில் சென்ற ஆண்டு மத்திய மாநில அரசுகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது. இந்த ஆண்டு எதிர் வரும் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவும் அதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒரு நாள் பயிற்சி இன்று ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்ற இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயிற்சிகளை அளித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் கலை. இராம. வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், ஆப்த மித்ரா பயிற்சியாளர்கள், மாணவர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சி பெற்றனர்.