வணக்கம் தமிழ்நாடு I Vanakkam Thamizhnadu

வணக்கம் தமிழ்நாடு I Vanakkam Thamizhnadu செய்திகளை வெளிப்படையாகவும், நேர்மையோடும், சமூகப் பொறுப்புணர்வோடும் வெளியிடும் இணைய செய்தி ஊடகம்.

சனநாயக நாட்டில், ஊடகம் ஒரு சமூக அங்கம். அந்த ஊடகம், சமூகப் பொறுப்புணர்வோடும், சமூகத்தின் வாழ்வியலையும் மனித உறவுகளையும் சிதைக்காமல், தொடர்பியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு, தமது பாரபட்சமற்ற நேர்மையான செயல்பாட்டின் மூலம் மக்களை தெளிவுப்படுத்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடும் உயர்ந்த லட்சிய நோக்கோடு செயலாற்றிட வேண்டும்.

இம்மாபெரும் லட்சியத்தை நெஞ்சிலேற்றி, தமிழ்ச்சமூக மாற்றத்தின் மக்கள் ஊடகமாக இயங்கிட

“வணக்கம் தமிழ்நாடு” எனும் புதிய இணையச் செய்தி ஊடகத்தை துவங்கியுள்ளோம்.

இவ்வூடகம், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக செய்திகளென மக்களின் வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதாரம், திரைக்கலை, மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், ஆன்மிகம், வரலாறு, அரசியல், அறிவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளையாட்டு போன்ற அனைத்துதரப்பு மக்களோடும் தொடர்புள்ள நிகழ்வுகள், எண்ணங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள், அதிகாரமிக்க தனி நபர்கள் மற்றும் அரசுகள் சார்ந்த அமைப்புகள் என பெறப்படும் செய்திகளை ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடுவோம்.

மேலும், வள்ளுவன் கூறிய வாய்மையின் வழிநின்று, உண்மைக் குரலாய், உரிமைக் குரலாய் துல்லியமாகவும், வெளிப்படையாகவும், எந்தவொரு அதிகாரத்திற்கும் அடிபணியாமல், பாரபட்சமற்று நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையோடும், சமூகப் பொறுப்புணர்வோடும் செயலாற்றி, ஊடக சனநாயகத்தின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பணியாற்றுவோம் என்ற உறுதியை உள்ளத்தூய்மையுடன் தருகிறோம்.

ஆகவே, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் “வணக்கம் தமிழ்நாடு” ஊடகத்தோடு இணைந்து ஆதரிக்க வேண்டுகிறோம்.

வாய்மையே வெல்லும்.!!

Address

Kallakurichi

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919994951863

Website

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் தமிழ்நாடு I Vanakkam Thamizhnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வணக்கம் தமிழ்நாடு I Vanakkam Thamizhnadu:

Share

Nearby media companies