Ovalley Makkal Iyakkam

Ovalley Makkal Iyakkam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ovalley Makkal Iyakkam, Gudalur.

09/02/2024

*வயநாடு(விம்ஸ் மருத்துவமனை) ஆசாத் மூப்பன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (D.M.ASTER WIMS)நோயாளிகளை அழைத்துச் செல்ல வேண்டாம்.*

சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நோயாளியை வைத்து பேரம் பேசுவதைக் தான் அங்கு காண நேர்ந்தது. மூச்சுத் திணறலுடன் சென்ற நோயாளிக்கு மாரடைப்பு என்றும், உடனே ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்றும், அட்டாக் என்றும் சொல்லி முதலில் நோயாளியை பயமுறுத்தினார்கள். பிறகு நோயாளியுடன் சென்றவர்களையும் பயமுறுத்தும் அணுகுமுறை தான் அங்கு காண இயன்றது. நோயாளி மற்றும் நோயாளியுடன் செல்பவர்களை மூளைச் சலவை செய்வதும், அங்குள்ள ஒவ்வொரு ஊழியர்களை வைத்து நோயாளியையும் நோயாளியுடன் செல்பவர்களையும் பணத்திற்காக மூளைச்சலைவை செய்வதுதான் அங்கு அறங்கேறுகிறது. வயநாட்டில் உள்ள டாக்டர் மூப்பன்ஸ் மருத்துவக் கல்லூரியில் நோயுடன் வருபவர்களிடமும், நோயாளியுடன் வருபவர்களிடமும் கமிஷன் பேசும் வேலையை தான் அங்கு நடத்துகிறார்கள்.நோயாளியும் நோயாளியுடன் வருபவர்களும் தங்கள் விருப்பத்திற்கு அடிபணியவில்லை என்றால், வயநாடு ஆஸ்டர் விம்ஸ் மூப்பன்ஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை நிர்வாகம் எதிரிகளிடம் செயல்படுவதை போல நடந்து கொள்கிறது.அங்கு பணிபுரியும் செக்யூரிட்டி குண்டர்களை வைத்து நோயாளியையும் நோயாளியுடன் வருபவர்களையும் மிரட்டுவதும். அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. இது போல பல புகார்கள் விம்ஸ் வயநாடு மூப்பன்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீது ஏழுகிற போதெல்லாம் , தங்கள் நிர்வாகத்தின் மீது கெட்ட பெயர் வராமல் இருக்க இலவச மருத்துவ மூகாம்கள் என்ற நாடகத்தை நடத்தியும்,சில அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை என விளம்பரம் செய்வதும் அன்றாட நிகழ்வாக தற்போது மாறி உள்ளது.

எனவே விம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும்,நோயாளிகளுடன் இருப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..

ஏதேனும் மாற்று வழி இருந்தால் வயநாடு விம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதை இயன்றளவு கைவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்

*വയനാട് ഡോക്ടർ ആസാദ് മൂപ്പൻസ് മെഡിക്കൽ കോളേജിൽ ദയവ് ചെയ്ത് രോഗികളെ കൊണ്ടുപോകാതിരിക്കുക*

കഴിഞ്ഞ ദിവസം അഡ്മിറ്റ് ആയ പേഷ്യൻ്റിനെ വച്ച് വില പേശുന്ന കാഴ്ച്ചയാണ് അവിടെ കാണാൻ സാദിച്ചത്. ശ്വാസതടസ്സവുമായി വന്ന രോഗിയെ ഹാർട്ട് അറ്റാക് എന്ന് പറഞ്ഞ് ഉടനെ ആൻജിയോഗ്രാം ചെയ്യണം എന്നും അറ്റാക് ആണെന്നും പറഞ്ഞ് ആദ്യം രോഗിയെ പേടിപ്പിച്ചു. തുടർന്ന് ബൈ സ്റ്റാൻ്റർമാരെ പേടിപ്പിക്കുന്ന സമീപനമാണ് ഉണ്ടായത്. കൂടാതെ അവിടെ ഉള്ള ഓരോ സ്റ്റാഫിനേയും വിട്ട് രോഗിയോടും കൂട്ടിരിപ്പുകാരേയും ബ്രെയിൻ വാഷിംഗ് ചെയ്യുന്നു. രോഗവുമായി വരുന്നവരേയും അവരുടെ കൂട്ടിരിപ്പ്കാരേയും പറഞ്ഞ് പറ്റിച്ച് കമ്മീഷൻ പറ്റുന്ന രീതിയാണ് ഡോക്ടർ മൂപ്പൻസ് മെഡിക്കൽ കോളേജ് വയനാട്ടിൽ നടക്കുന്നത്. കൂടാതെ ഇവരുടെ ഇംഗിതത്തിന് വഴങ്ങിയില്ലെങ്കിൽ സെക്യൂരിറ്റി ഗുണ്ടകളെ ഉപയോഗിച്ച് വൈരാഗ്യ മനോഭാവത്തോടെ പെരുമാറന്നു. ഇത് നിത്യ സംഭവമാണ്. നിരവധി പരാതികൾ ഉയരുമ്പോൾ രാഷ്ട്രീയനേതാക്കൾക്കും പണവും പരസ്യവും നൽകി ചീത്തപ്പേര് വരാത്തവിധം കൈകാര്യം ചെയ്യുന്നത് നിത്യസംഭവമാണ്


Ma Subramanian
M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
Dr. Azad Moopen
Azad Moopen

13/01/2024
27/11/2023
09/10/2023

ஓவேலியின் பிரச்சினை தொடர்பாக பேசியதற்காக நன்றி

19/09/2023

பொதுமக்களிடம் பிச்சையெடுத்து சாலைகள் சீரமைக்கப்படும்.

குண்டு குழிகளை மூடகூட வக்கற்ற நெடுஞ்சாலைத்துறை "நகரம் முழுவதும் சாலைகளில் சவக்குழிகளை தோண்டிவைதுள்ளது, இதனை கண்டித்து கூடலூர் நகரம் சுங்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது......

23/07/2023

50 ரூபாய் மருத்துவ கட்டணம் 🎗️💥கூடலூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி , நமது கூடலூரில் புதிதாக துவங்கவுள்ள .. *ராயல் ஒன்*மெடிக்...
21/07/2023

50 ரூபாய் மருத்துவ கட்டணம் 🎗️💥

கூடலூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி , நமது கூடலூரில் புதிதாக துவங்கவுள்ள ..

*ராயல் ஒன்*
மெடிக்கல் சென்டர்

24 மணி நேர பல்நோக்கு & அவசர சிகிச்சை மருத்துமனை

நமது கூடலூருக்கு தரமான மருத்துவ சேவையை குறைவான கட்டணத்தில் அளிக்க முன்வந்துள்ளது.

💥பல்வேறு துறைகள்.
💥சிறப்பான சேவை
💥நல்ல மருத்துவர்கள்
💥குறைந்த கட்டணம்
ஆகியவை எங்கள் மருத்துவமனையின் சிறப்பு.

இம் மருத்துவமனையை கூடலூருக்கு வரவேற்கும் முறையில்

9610121014
என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து வாழ் நாள் முழுவதும் 50 ரூபாய் மருத்துவர் கலந்தாய்வு கட்டணம் என்ற சலுகையை பெறுங்கள்

மிஸ்டு கால் கொடுக்கும் முதல் 1000 நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் 50 ரூபாய்

மற்றவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு 50 ரூபாய்

உடனே முந்துங்கள்
9610121014

இது போக 3 வகையான அட்டைகள் உள்ளன அவற்றை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு மேலும் சலுகைகள் பெறலாம்

இத்தகவலை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களும் இச்சலுகை பெற உதவுங்கள்.

இப்படிக்கு ,
நிர்வாகம் .
ராயல் ஒன் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்; ஒப்புதலுக்கு புதிய கட்டுப்பாடு. தமிழக அரசு, மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் த...
11/07/2023

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்; ஒப்புதலுக்கு புதிய கட்டுப்பாடு.

தமிழக அரசு, மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த தொகையை பெறுவதற்கு புதிய ரேஷன் கார்டு பெறுவது, பெயர் நீக்கத்துக்கு ஏராளமானோர் முட்டி மோதுகின்றனர்.

இதையடுத்து அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1,000 ரூபாய் உரிமை தொகைக்கான விண்ணப்பம், ரேஷன் கடைகள் வாயிலாக கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

'ஒரு கார்டுக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்' என்பது உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு, ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைக்கு உணவு வழங்கல் துறையின், 'www.tnpds.gov.in' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன் வாயிலாகவே, மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பர்.

புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர், வேறு ரேஷன் கார்டில் இருக்கக் கூடாது;

மகளிர் உரிமை தொகை அறிவிப்பால், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க, இரு வாரங்களுக்கு முன் திருமணம் ஆனவர்கள் கூட பெற்றோரின் கார்டில் உள்ள தங்களின் பெயரை நீக்கி தருமாறு விண்ணப்பம் செய்கின்றனர்.

எனவே, உரிமை தொகை விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை, பெயர் நீக்கத்திற்கு விண்ணப்பித்தால், தாங்களாகவே ஒப்புதல் தராமல், உயரதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்பே, அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அறிவிப்புகூடலூர், பந்தலூர் தாலுகாவில் பருவமழை நிலவும் பட்சத்தில், தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடி...
08/07/2023

அறிவிப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பருவமழை நிலவும் பட்சத்தில், தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வன சரக அலுவலர்களிடம் பொதுமக்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எந்தவொரு அவசர தேவைக்கும் பொதுமக்கள் பின்வரும் வன சரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
1. கூடலூர் -9486036467
2. ஓவேலி - 94879 89499
3. நாடுகாணி -6381699287
4. பந்தலூர் - 86673 25758
5. சேரம்பாடி-9092320850
6. பிதர்காடு- 9342749789

இப்படிக்கு
மாவட்ட வன அலுவலர்
கூடலூர் கோட்டம்
கூடலூர்

08/07/2023

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் வைத்து நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் நீலகிரி மக்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதி இன்றும் காற்றில் தான் பறக்கிறது... முதலமைச்சர் கூறிய தொகையை ஓவேலியில் யானை தாக்கி இறந்த நபரின் குடும்பத்திற்கு பெற்றுக்கொடுக்க கூடலூரில் உள்ள திமுக + கூட்டணி கட்சியில் உள்ள யாராலாவது முடியுமா

திமுக கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த போது யானை தாக்கி திமுக கவுன்சிலர் மற்றும் அவரது மகன் இறந்தபோது தேர்தல் நேரத்தில் எடுத்த அழுத்தமான முடிவால் அன்று வெற்றி கிடைத்தது மக்களுக்கு.இப்போது ஆளும் கட்சி திமுகவாக உள்ளது அப்போது வைத்த கோறிக்கையை இப்போது திமுக வைக்குமா..இப்போது வாயை திறப்பார்களா 25 லட்சம் கொடுக்க வேண்டும் என இப்போது போராட்டம் நடத்துவார்களா இல்லை வழக்கம் போல ஏமாற்று நாடாகம் தானா

*தமிழக அரசு அறிவித்த** *கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் படிவம்*
08/07/2023

*தமிழக அரசு அறிவித்த**
*கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் படிவம்*

08/07/2023

தொடர் மின்வெட்டுக்கு மின்சார வாரியத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே காரணம்.
ஓவேலி மக்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா...?
கடுமையாக விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி.

கூடலூர் நிலப்பிரச்சனையை தீர்த்து தருவதாக திமுகவினரால்  2006 ல் அனுப்பப்பட்ட கடிதம்2006 முதல் 2010 திமுக தான் தமிழகத்தை ஆ...
07/07/2023

கூடலூர் நிலப்பிரச்சனையை தீர்த்து தருவதாக திமுகவினரால் 2006 ல் அனுப்பப்பட்ட கடிதம்
2006 முதல் 2010 திமுக தான் தமிழகத்தை ஆட்சி செய்தது... கூடலூரின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இளித்துரை ராமசந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.அன்று அவர் கதர்வாரியத் அமைச்சராக பதவி வகித்தார் இருந்தும் கூட அன்று திமுக கூறியதை செய்யவில்லை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை அதற்கு பிறகு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக வும் கூடலூர் நிலப்பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரவில்லை தற்போது மீண்டும் திமுக அட்சி அமைந்துள்ளது இந்த முறையாவது திமுக தலைவர் இன்றைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார இல்லை 2006 போல் ஏமாற்றுவது மட்டும் தான

07/07/2023

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் வைத்து நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் நீலகிரி மக்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அள்ளி அளித்த தேர்தல் வாக்குறுதி இன்றும் காற்றில் தான் பறக்கிறது.

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்திற்கு முதலமைச்சர் கூறிய 10லட்சம் என்ற தொகையை ஓவேலியில் யானை தாக்கி இறந்த நபர்களின் குடும்பத்திற்கு பெற்றுக்கொடுக்க கூடலூரில் உள்ள திமுக + கூட்டணி கட்சிகளில் யாராலாவது .முடியுமா???????????

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்ட மன்ற தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள்.இன்றும் நிறைவேற்றப்படாத காற்றில் மட்டுமே பறந்து கொண்டிருக்கும் வாக்குறுதிகள்

திமுக கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த போது யானை தாக்கி திமுக கவுன்சிலர் மற்றும் அவரது மகன் இறந்தபோது தேர்தல் நேரத்தில் எடுத்த அழுத்தமான முடிவால் அன்று வெற்றி கிடைத்தது மக்களுக்கு.இப்போது ஆளும் கட்சி திமுகவாக உள்ளது அப்போது வைத்த கோறிக்கையை இப்போது திமுக வைக்குமா..இப்போது வாயை திறப்பார்களா 25 லட்சம் கொடுக்க வேண்டும் என இப்போது போராட்டம் நடத்துவார்களா இல்லை வழக்கம் போல ஏமாற்று நாடாகம் தானா இனியும்

M. K. Stalin

Chief Minister of Tamil Nadu

07/07/2023

ஒவேலி பேரூராட்சியில் பெறியசோலை மாங்கமரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் வாட்ச் டவரிற்கு மின் இணைப்பு கொடுக்க இறக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள்

ஓவேலி பேரூராட்சியில் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க தடை உள்ளது என்கிற போது வாச் டவர்றிற்கு மட்டும் மின் இணைப்பு வழங்க தடை இல்லையா....எந்த உத்தரவு யாருடைய உத்தரவின்படி தற்போது வாச்டவரிற்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.... ஓவேலி பேரூராட்சியில் புதிய குடியிருப்புகளை கட்ட தடை எனும்போது புதிதாக வாச்டவர் அமைக்க மட்டும் தடை இல்லையா

மாதம் ரூ. 1000 உதவித் தொகை யார் யார் பெற முடியும்..?
07/07/2023

மாதம் ரூ. 1000 உதவித் தொகை யார் யார் பெற முடியும்..?

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (07.07.2023) ஒரு நாள் மட்டும் உதகை, குந்த...
07/07/2023

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (07.07.2023) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

Address

Gudalur
OVALLEY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovalley Makkal Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Gudalur media companies

Show All